ஆயுளை அதிகரிக்கும் 7 அற்புத விதைகள்.

7 Healthy Seeds for Good Health

தினமும் நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் எனப் பலவிதமான உணவுகளைச் சாப்பிடுகிறோம். அதே சமயம் அந்தக் காய்கறிகள் பழங்களில் இருக்கக்கூடிய விதைகளின் நன்மைகள் அறியாததுனால் எளிதாகத் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் சமீப காலமாக உடல் ஆரோக்கியத்தை சற்று மேம்படுத்தனும் என்று நினைக்கிறவர்களும் தினசரி டயட் பாலோ பண்றவர்களும் தேர்வு செய்வது விதைகள் தான். ஆயுளை அதிகரிக்கும் 7 அற்புத விதைகள்

அப்படி இந்த விதைகளில் என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது என்றால் இதிலே இருக்கக்கூடிய சத்துக்கள் மற்றும் மருத்துவ குணத்தினை தாண்டி மிக மிகக் குறைவான அளவு இந்த விதைகளைச் சாப்பிட்டாலே போதுமானது என்பதுதான்.

ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் புரோட்டின் பைபர் போன்ற சத்துக்களில் 30 லிருந்து 50 சதவீதம் வரை இந்த விதைகள் மூலமாகவே எளிதாகப் பெற முடியும். இன்றைக்கு  நம் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரக்கூடிய விதைகள் என்னென்ன அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று: ஆளி விதை

ஆளி விதைகளில் அதிகப்படியான நார்ச்சத்து புரதம் மற்றும் ஆல்பா லினோலெனிக் ஆசிட் என்னும் ஒருவகை ஒமேகா 3 நிறைந்து இருக்கிறது. இது நம் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும். ரத்தத்தில் இருக்கக்கூடிய எல் டி எல் என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்த குழாய்கள் அடைப்பு ஏற்படாமலும் மாரடைப்பு வராமலும் பாதுகாக்க கூடியது ஆளி விதைகள்.

இதில் இருக்கக்கூடிய லிட்னென்ஸ் என்னும் ஒருவகை ஆன்டிஆக்சன் உடலில் இருக்கக்கூடிய நச்சு கழிவுகளான பிரியடிக்கல்ஸை வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்

விதைகளைத் தினசரி உணவில் எப்படி எடுத்துக்கணும்.

வருத்து பொடி செய்த ஆளி விதைகளை நீர்மோருடன் கலந்தோ அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்தோ சாப்பிட்டு வரலாம்.  சாப்பாட்டின் மீது தூவியோ சப்பாத்தி மாவு பிசையும்போது சேர்த்தோ இந்த ஆளி விதையைச் சாப்பிட்டு வரலாம்.

இரண்டு: சியா விதைகள்

ஆயுளை அதிகரிக்கும் 7 அற்புத விதைகள்

இதையும் படிக்கலாமே: வைட்டமின் பி complex நிறைந்த உணவுகள்

சியா விதைகள்  ஆளி விதைகள் மாதிரிதான் கிட்டத்தட்ட அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் மாதிரி தான் இதிலும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக டயட்ரிப்பைபர் என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் இருக்கு. ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் 10.6 கிராம் நார்ச்சத்து இருக்கு இது ரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது மட்டுமில்லாமல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக ஏறுவதை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் சியா விதைகளைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் இந்தச் சியா விதைகளை எப்படி எடுத்துக்கலாம். சியா விதைகளை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய சியா விதைகளை அதன் ஜெள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். ஆயுளை அதிகரிக்கும் 7 அற்புத விதைகள்

மூன்று: பூசணி விதைகள்

பூசணி விதைகளில் பாஸ்பரஸ், சிங், மெக்னீசியம் மோனோஅன்சாட்டுரேட்டட் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்களும் அதிக அளவில் நிறைந்து இருக்கு. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்  இதன் மூலம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது பூசணி விதைகள். சிறுநீர் கசிவு பிராஸ்டேட் வீக்கம் போன்ற சிறுநீரக மன்றம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படாமல் பாதகக் கூடியது பூசணி விதைகள்.

நான்கு: சூரியகாந்தி விதை

ரிபைன் பண்ணப்பட்ட சூரியகாந்தி எண்ணையை அதிகம் சமையலில்  நாம் அனைவருமே  பயன்படுத்தியிருப்போம். ஆனால் சூரியகாந்தி விதையைப் பலரும்  சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஒரு அவுன்ஸ் சூரியகாந்தி விதையில்  ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் ஈ யில் 47 சதவீதம் விட்டமின் ஈ இருக்கு. விட்டமின் ஈ உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கண் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கும். மேலும் சூரியகாந்தி விதையில் மோனோஅன்சாட்சுரேட்டட் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கு. இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு இறுதி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அது மட்டுமில்லாமல் தலைமுடி ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் கூட மிகவும் நல்லது சூரியகாந்தி விதைகள்.

ஐந்து:  பப்பாளி விதை

பப்பாளிப்பழம் நாம் எல்லோரும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் பப்பாளி பழத்தை விடவும் அதன் விதையில் தான் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம். பப்பாளி விதையில்  அதிகப்படியான பாலிபினால், பிலோவனைட்  மற்றும் டானின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கு. இது நம் உடல் பீரியாடிக்கல்ஸினால் சேதமடையாமல் தடுப்பதோடு கேன்சர் வராமல் பாதுகாக்கக்கூடியது பப்பாளி விதைகள்.

இது மட்டுமில்லாமல் கர்பைன் என்னும் அல்கனாய்ட் காம்பவுண்ட் இந்தப் பப்பாளி விதையில் அதிக அளவில் இருக்கு. இது நம் உடலில் இருக்கக்கூடிய பாக்டீரியாவை அழிப்பதோடு indusine parase ன்னு சொல்லக்கூடிய குடல் புழுக்களையும் வெளியேற்றும் அது மட்டுமில்லாமல் செரிமான உறுப்பின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக்கூடியது இந்தப் பப்பாளி விதைகள்.

ஆறு: திராட்சை விதை

திராட்சை பழத்தைச் சாப்பிடும்போது அதன் விதையை எளிதாக மென்று துப்பிவிடுவோம். ஆனால் திராட்சை பழத்தை விடவும் அதன் விதைகளில் தான் சத்துக்கள் அதிகம் எனப் பலருக்கும் தெரியாது. திராட்சை பழத்தில் வைட்டமின் இ, பாலிப்பினால் மற்றும் பிரோஆந்தோசைனின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது. பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் விடவும் 10 லிருந்து 20 மடங்கு அதிக ஆண்டி ஆக்சிடென்ட் திராட்சை விதையில் இருக்கு.

ரத்த அழுத்தத்தைச் சீராக்கும் தோடு ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க  உதவி செய்யும் மற்றும் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பைக் குறைத்து இறுதய ஆரோக்யத்தை  மேம்படுத்தும். மேலும் ஆக்கிரட்டிசெஸ்னால் உண்டாகக்கூடிய பல்வேறு நாள்பட்ட நோய்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க கூடியது இந்தத் திராட்சை விதைகள்.

ஏழு: முருங்கை விதை

முருங்கை விதையில் முருங்கை இலை, காய், பட்டை இவை அனைத்தையும் விடவும் முருங்கை விதையில் தான் சத்துக்கள் அதிகம். முருங்கை விதையில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட், மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி, பி காம்ப்ளக்ஸ் விட்டமின் என ஏராளமான சத்துக்கள். இதில் இருக்கக்கூடிய கால்சியம் எலும்புகளை வலுவாக்கும்.

முருங்கை விதை இரும்புச்சத்து ரத்தசோகை வந்து நீக்கும் மேலும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக ஆண்களின் பால்யல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல ஒரு தீர்வைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *