இன்சுலின் சுரப்பை தூண்டும் 10 உணவுகள்

Top 10 Foods to improve insulin production

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு  இயல்பான அளவைவிட அதிகமாக இருப்பதைதான்  சர்க்கரை நோய் என்று சொல்கிறோம். சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம், வேகமான வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன், மன அழுத்தம் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்னவென்றால் கணையத்திலிருந்து இயற்கையாகச் சுரக்கக்கூடிய இன்சுலின் அளவு குறைவாக இருப்பதும் சுரக்கக்கூடிய இன்சுலின் சீராக வேலை செய்யாமல் இருப்பதும் தான் சர்க்கரை ஏற்படுவதற்கான முக்கியமான காரணம். இன்சுலின் சுரப்பை தூண்டும் 10 உணவுகள்

ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சர்க்கரையை குறைப்பதற்கு மருத்துவர்கள் செயற்கையாக இன்சுலின் ஹார்மோனைப் பரிந்துரைப்பதுண்டு. ஆனால் இயற்கையாகவே தினசரி நாம் சாப்பிடக்கூடிய ஒரு சில உணவுகளுக்கு இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தவும் இன்சுலின் சீராக வேலை செய்ய வைக்கத் தக்க ஆற்றலும் உண்டு. அப்படி இயற்கையான முறையில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்த உதவக்கூடிய 10 சிறந்த உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று:  வெந்தயம்

நம் எல்லோர் வீடுகளிலும் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் வெந்தயம். வெந்தயம் ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தவும் கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்தக்கூடியது எனப் பல ஆய்வுகளில் நிரூபணம் செய்திருக்கிறார்கள். வெந்தயத்தில்  எலக்ட்ரோமேனன் எனும் ஒரு வகை சாலிபில் பைபர் அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் வெந்தயத்தில்  25 கிராம் டைட்டரி பைபர் இருக்கிறது.

இது குடலில் ஒரு ஜெல்போல் படிந்து இரத்த சர்க்கரை அளவு வேகமாக ஏறுவதை தடுக்கும். இதன் மூலமாகச் சர்க்கரை அளவையும் நன்கு கட்டுப்படுத்தக்கூடியது வெந்தயம். இந்த வெந்தயத்தை எப்படி எடுத்துக்கலாம் என்றால்  வெந்தயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊறவைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய வெந்தயத்தையும் அந்த நீரையும் சேர்த்து சாப்பிட்டு வர இன்சுலின் சீராக வேலை செய்வதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் இருக்கவும் உதவி செய்யும்.

இன்சுலின் சுரப்பை தூண்டும் 10 உணவுகள்

இரண்டு: பாகற்காய்

பொதுவாகக் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை சர்க்கரை நோயாயாளிகளுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் மிகவும் ஏற்றதொரு காய் பாகற்காய். பாகற்காயில் செரட்டின் வயசின் பாலிபெப்டைட், பிட்டர் மெலோன் கொண்ட ஆன்ட்டி டயபடிக் சப்ஸ்டன்ஸ் அதிகம் நிறைந்திருக்கிறது. இது நேரடியாகவே கணையத்தில் இருக்கக்கூடிய செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். இதன் மூலமாக இரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தக்கூடியது பாகற்காய். ரத்தத்தில் அதிக சர்க்கரையினால் அவதிப்படுகிறவர்கள் வாரம் இரண்டு மூன்று நாட்கள் பாகற்காயை சாப்பிட்டு வர இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

மூன்று: லவங்கப்பட்டை

சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தக்கூடிய இலவங்கப்பட்டைக்கு  இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு. இலவங்கப்பட்டை சின்னமால்டிகைடு, சின்னமேட், சின்னமிக் ஆசிட் போன்றவை நிறைந்திருக்கிறது. இது கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்கள் சேதமடையாமல் தடுப்பதோடு பீட்டா செல்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இன்சுலின் வேலை செய்யாத நிலையில் சொல்லக்கூடிய இன்சுலின் ரெசிஸ்டன்ஸையும் குறைக்கக்கூடியது லவங்கபட்டை. டைப் டு சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறவர்கள் தினசரி சாப்பிடக்கூடிய தேனீரில் ஒரு துண்டு லவங்கப்பட்டை சேர்த்து குடித்து வர ரத்த சர்க்கரை நன்கு கட்டுப்படும்.

நான்கு :ஆப்பிள் செட் வினிகர்

இன்சுலின் சுரப்பை தூண்டும் 10 உணவுகள்

ஆப்பிள் வினிகர் என்றால் ஆப்பிள் பழங்களை அரைத்து பல நாட்கள் புளிக்கவைத்து பெர்மண்டேஷன் பண்ணப்பட்டு பெறக்கூடிய சாறு தான் ஆப்பிள் செட் வினிகர். ஆப்பிள் செட் வினிகர் இயற்கையாகவே அசிட்டிக் ஆசிட் அதிக அளவில் இருக்கும். இதில் இருக்கக்கூடிய அசிட்டிக் ஆசிட் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் சர்க்கரை ஆக மாறும் வேகத்தைக் குறைப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை சேரும் வேகத்தைத் தாமதப்படுத்தும்.

மேலும் இது உடலில் பிஹெச் அளவை சமநிலைப்படுத்துவதோடு அல்கலைன்டி என்று சொல்லக்கூடிய காரத்தன்மையை அதிகப்படுத்தும். இதன் மூலமாகக் கணையத்தில் இன்ப்ளமேஷன் உண்டாவதை தடுப்பதோடு இன்சுலின் சென்சிடிவிட்டியும் அதிகப்படுத்தும். இது மட்டுமில்லாமல் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய இதய ரத்த நாள அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது ஆப்பிள் செட் வினிகர்.

ஐந்து: மஞ்சள்

இதையும் படிக்கலாமே: மாதுளம் பழத்தின் வியக்கவைக்கும் நன்மைகள்

தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய மஞ்சள் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. மஞ்சளில் குறுக்குமின் என்னும் பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பிராப்பர்டீஸ் நிறைந்து இருக்கிறது. இது இன்சுலின் சென்சிடியை இன்க்ரீஸ் பண்றது மட்டுமில்லாமல் இன்சுலின் புரொடக்ஷனையும் அதிகப்படுத்தும். இது மட்டுமில்லாமல் ஆவரேஜ் பிளட் குளுக்கோஸ் லெவல் என்று சொல்லக்கூடிய HbA1c குறைக்கக்கூடியது மஞ்சள். சர்க்கரை நோயினால் அவதிப்படுறகிறவர்கள் மஞ்சளை உணவுகளில் சேர்த்துக் கொள்வது மட்டுமில்லாமல் தினசரி பாலில் சிறிது மஞ்சள் மிளகு சேர்த்து குடித்து வரக் கணையத்திலிருந்து இன்சுலின் சீராகச் சுரக்கும்.

ஆறு:  கொழுப்பு நிறைந்த மீன்கள்

பொதுவாக மீன்களில் ஹெல்தி பேட் என்று சொல்லக்கூடிய ஈபிஏ மற்றும் டிஎச் என்னும் ஒமேகா 3 பேட்டி யாசிட் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இது கணையத்தில் இன்பர்மேஷன் உண்டாவதை தடுப்பதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்தும். மீனிலிருந்து கிடைக்கக்கூடிய இந்த மத்தி, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது.  சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறவர்கள் வாரம் இரண்டு மூன்று நாட்கள் மீன் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் இன்சுலின் சுரப்பை  அதிகப்படுத்தலாம்.

ஏழு:  நட்ஸ் அன்ட் சீட்ஸ்

நட்ஸ் அண்ட் சீட்ஸில் ஹெல்த்தி பேர்ட்ஸ் என்று சொல்லக்கூடிய விட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 பேட்டியாசின் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இது இன்சுலின் சென்சிடிவிட்டியை இம்ப்ரூவ் பண்ணவும் இன்சுலின் சீராகச் சுரக்கவும் உதவி செய்யும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள் என்று சொல்லக்கூடிய குரோமியம் மெக்னீசியம் டைட்ரிஃபைபர் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமான இன்சுலின் ரெசிஸ்டன்ஸை குறைத்து இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்தும். இதன் மூலமாக ரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்கவும் உதவக்கூடியது நட்ஸ் அண்ட் சீட்ஸ்.

எட்டு: பச்சை காய்கறிகள்

ரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்த உதவுக்கூடிய உணவுகளில் மிகவும் முக்கியமானது பச்சைக் காய்கறிகள். அதிலும் நான் ஸ்டார்ச் வெஜிடபிள் என்று சொல்லக்கூடிய கீரைகள், வெண்டைக்காய், பாகற்காய், கோவக்காய், கொத்தவரங்காய், குடைமிளகாய் போன்ற பச்சை காய்கறிகள் சர்க்கரை நோயாளிக்கு மிகவும் நல்லது. இந்த பச்சை காய்கறிகளில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ சி இ அயன் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்ஸ் குரோமியம் மெக்னீசியம் போன்ற சத்துகள்  கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சேதம் அடைவதை தடுப்பதோடு இன்சுலின் சுரப்பையும்  அதிகப்படுத்தும். பச்சைக் காய்கறிகளில் ஸ்டார்ச் என்னும் மாவுச்சத்து மிகவும் குறைவு. அதேசமயம் நார்ச்சத்து மிக அதிகம் என்கிறதுனால் ரத்த சர்க்கரை அளவை எந்த விதத்திலும் ஏற்றாது.

ஒன்பது: ஓட்ஸ்

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் கோல்கிரீன்ஸ் என்னும் முழு தானியங்களைச் சாப்பிட பரிந்துரை செய்வதுண்டு. அந்த வகையில் கோதுமைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது ஓட்ஸ்.  ஸ்டீல் கட் ஒர்டஸ், ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஒர்டஸ் என மூன்று வகையான ஒட்ஸ் இருக்கிறது. இதில் இன்ஸ்டன்ட் ஒட்ஸ் அல்லது குயிக் குக்கிங் என்று சொல்லக்கூடிய ஓட்ஸ்  அதிகம் பிராசஸ் பண்ணப்பட்டு கிடைக்கக்கூடியது. இன்ஸ்டன்ட் ஒர்டஸ்னுடைய குக்கிங் டைம்மும் டைஜெஸ்ட் டைமும் மிகவும் குறைவு இதனுடைய கிளைசெமிக் 79க்கும் அதிகம். டயபடிஸ் பிரச்சனை இருக்கிறவர்கள் இன்ஸ்டன்ட் ஓட்ஸ்  பயன்படுத்தக் கூடாது. இதற்குப் பதிலாக ஸ்ட்ரீட் கட் ஒர்டஸ் மற்றும் ரோல்டு ஓட்ஸ்  எடுத்துக்கலாம்.

இதனுடைய கிளைசைமின்டெக்ஸ்  42 க்கும் குறைவுதான் மேலும் ஒரு சில பீட்டா குல்கன் என்னும் சாலிபுல் பைபர் இருக்கு 100 கிராம் ஓட்ஸ்ல 10 புள்ளி 6 டயட்ரிபைபர் இருக்கிறது. இது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு  வேகமாக ஏறுவதை தடுக்கும் இது மட்டுமில்லாமல் இதில் இருக்கக்கூடிய பிற நுண்ணூட்ட சத்துக்கள் உடலில் மெட்டபாலிசத்தை சீர்படுத்துவதோடு இன்சுலினையும் சீராக வேலை செய்ய வந்து உதவி செய்யும்.

பத்து: கிரீன் டீ

கிரீன் டீயில் அதிகப்படியான பாலிபினால் மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்து இருக்கிறது.  இது கணையத்தில் இன்ஃப்ளமேஷன் உண்டாவது தடுப்பதோடு இன்சுலின் சீராக இருக்கவும் உதவி செய்யும் இது மட்டுமில்லாமல் கிரீன் டீயில் இஜிசிஜி என்னும் பயோ ஆக்டிவ் காம்பனன்ட் அதிக அளவில் இருக்கு தி இன்சுலின் ரிசப்டட் சீராக வேலை செய்யவும் செல்களுக்குள் குலுகோஸ் செல்வதற்கும் மிகவும் உதவி செய்யும். இதன் மூலமாக இன்சுலின் ரெசிஸ்டன்ஸையும் தடுக்க கூடியது கிரீன் டீ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *