(Foods Rich in Vitamin B Complex Tamil)
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நமது உடலில் எலும்புகள், தசைகள், நரம்புகள் எனஅனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் நாம் சாப்பிட்ட உணவு உடலில் எனர்ஜியாகக் கன்வெர்ட் ஆகறதுக்கும் மிகவும் அவசியமான சத்து வைட்டமின் பி காம்ப்ளக்ஸ். இந்தப் பி காம்ப்ளக்ஸ் விட்டமின் என்றால் என்ன என்றால் தயாமின், நியாசின், ரிபோபிளமின், பான்டோதெனிக் ஆசிட், பெரிடாக்சின், பயோடின், ஃபோலேட்,. கொபாலமின் இந்த எட்டு வகையான பி விட்டமின்ஸ் சேர்ந்த கூட்டு கலவைதான் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்.
இந்தப் பி காம்ப்ளக்ஸ் விட்டமின் நம் உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் கருவில் வளரக்கூடிய குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும் நரம்பு மண்டலம் சிறப்பாக வேலை செய்யவும் மற்றும் ஆண் பெண் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது என நம் உடலில் பல முக்கிய பணிகளுக்குப் பி காம்ளக்ஸ் வைட்டமின் தேவை.
இந்தப் பி காம்ப்ளக்ஸ் விட்டமின் உடலில் குறைவாக இருந்தால் வாய் புண், தலை சுற்றல், அதிக சோர்வு, தலைமுடி உதிர்வு எனச் சாதாரண பிரச்சனைகள் முதல் அனிமியா, கேன்சர், ஹார்ட் அட்டாக் எனப் பல ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாகத்தான் உடல் நல குறைவு ஏற்படும் போதும் சரி கர்ப்ப காலங்களில் சிகிச்சை எடுக்கும் போதும் சரி மெடிக்கல் கேம் நடத்தும்போது கூட மிக எளிதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடிய ஒரு வைட்டமின் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தான்.
இன்றைக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களுடைய பயன்கள் என்ன மற்றும் பி காம்ப்ளக்ஸ் விட்டமின் நிறைந்த உணவுகள் என்ன என்பதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
ஒன்று: விட்டமின் பி1 சொல்லக்கூடிய தயாமின்
நாம் சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாகவும் அவை நம் உடலில் எனர்ஜியாக மாறுவதற்கும் மிக அவசியமான சத்து தயாமின். தயாமின் சத்து உடலில் குறைவாக இருக்கும்போது பசியின்மை, ஜீரணமின்மை, உடல் எடை இழப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகறதுக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த விட்டமின் பி1 என்று சொல்லக்கூடிய தயாமின் எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்றால் மீன், மாட்டு ஈரல், பருப்பு வகைகள் மற்றும் கீரைகள் போன்றவற்றில் நல்ல அளவில் இருக்கிறது.
இரண்டு: விட்டமின் பி2
கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான சத்து விட்டமின் பி2. மேலும் இது உடலில் புதிய சிகப்பு அணுக்களை உற்பத்தி செய்வதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது இருக்கிறது. விட்டமின் சி 2 உடலில் குறைவாக இருந்தால் காயங்கள் ஆறுவதற்கு அதிக தாமதம் உண்டாகும். எப்போதும் சோர்வாக இருப்பது உதடுகளில் வெடிப்பு உண்டாவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த விட்டமின் பி2 என்று சொல்லக்கூடிய ரிபோளோவின் எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்றால் பால், பச்சை பயிறு, கீரைகள், முட்டை போன்ற உணவுகளை நல்ல நல்ல விட்டமின் பி2 இருக்கிறது.
மூன்று: விட்டமின் பி3 சொல்லக்கூடிய நியாசின்.
உடலில் ஹெச்டிஎல் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறதுக்கும் மூளை சிறப்பாக வேலை செய்யவும் மிக அவசியமான சத்து நியாஸின். நியாஸின் சத்து உடலில் குறைவாக இருக்கும்போது எப்போதும் டிப்ரஷன் என்று சொல்லக்கூடிய மன அழுத்தம் அதிகமாக இருப்பது, ஞாபக மறதி, பசியின்மை போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இது மட்டுமில்லாமல் டெர்மினிட்டிஸ் என்னும் சருமம் சார்ந்த தொந்தரவுகள் உண்டாகும். நியாஸின் சத்து உடலில் குறைவாக இருப்பதற்கான ஒரு முக்கியமான காரணம் விட்டமின் பி3 என்று சொல்லக்கூடிய நியாஸின் சத்து. நியாஸின் சத்து எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்றால் கோட் லிவர் என்று சொல்லக்கூடிய ஆட்டு ஈரல், மீன், வேர்க்கடலை போன்றவற்றில் நல்லளவிலான நியாஸின் இருக்கிறது.
நான்கு: விட்டமின் பி5 செய்யக்கூடிய பேன்டோதெனிக் ஆசிட்
விட்டமின் பி5 மேக்ரோ நியூட்ரிசன் சொல்லக்கூடிய கார்போஹைட்ரேட் புரோட்டின் செரிமானம் ஆவதற்கு மிக உதவியாக இருக்கிறது. இருதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஆர்த்ரைடீஸ் போன்ற பிரச்சினைகள் வராமலும் தடுக்கக்கூடியது. உடலில் குறைவாக இருக்கும்போது மசில் ஸ்கிரான்ஸ் என்று சொல்லக்கூடிய தசை பிடிப்பு உண்டாவது, கால்கள் மரத்து போறது, அடிக்கடி வாந்தி வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் உண்டாகறதுக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த விட்டமின் பி5 என்று சொல்லக்கூடிய பேன்டதெனிக் ஆசிட் எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்றால் மஷ்ரூம் என்று செல்லக்கூடிய காளான்கள், பால், சர்க்கரை வள்ளி கிழங்கு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் இந்த விட்டமின் பி5 நல்ல அளவில் இருக்கிறது.
ஐந்து: விட்டமின் பி6 என்று சொல்லக்கூடிய பெரி டாக்சின்
மூளை மற்றும் தண்டுவட நரம்பு ஆரோக்கியமாக இருக்கிறதுக்கும் உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும் கருவில் வளரக்கூடிய குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் பெரி டாக்சின் என்று சொல்லக்கூடிய விட்டமின் பி6 மிக உதவியாக இருக்கிறது இந்த விட்டமின் பி6 உடலில் குறைவாக இருக்கும்போது தலை முடி உதிர்வு வாய்ப்புண், மன அழுத்தம் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும். இந்த விட்டமின் பி6 எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்றால் மீன், முருங்கைக்கீரை, கருப்பு உளுந்து மற்றும் செவ்வாழைப்பழம் போன்ற உணவுகளில் பெரிடாக்சின் என்னும் விட்டமின் பி6.நல்லளவில் இருக்கிறது.
ஆறு: விட்டமின் பி7 என்று சொல்லக்கூடிய பயோட்டின்
தலைமுடி சருமம் நகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் சீராக வேலை செய்றதுக்கும் ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறதுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது இந்தப் பயோட்டின். இந்தப் பயோட்டின் உடலில் குறைவாக இருக்கும்போது தலை முடி அதிகமாக உதிர்வது நகங்கள் எளிதில் உடைந்து போவது சருமங்கள் அரிப்பு எரிச்சல் முகப்பரு போன்ற பிரச்சினைகள் வந்து உண்டாவது தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகள் வெளிப்படுத்தும் இந்த விட்டமின் பி7 என்று சொல்லக்கூடிய பயோட்டின் முட்டையின் மஞ்சள் கரு சிக்கன் லிவர் மற்றும் வாழைப்பழம் போன்ற உணவுகளில் நல்ல அளவிலான பயோட்டின் சத்து இருக்கிறது.
ஏழு: விட்டமின் பி9 என்று சொல்லக்கூடிய போலிக் ஆசிட்
கருவில் வளரக்கூடிய குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும் உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும் ட்ரைகிளிசரைடு என்னும் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறதுக்கும் இருதய ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஹோமோ சிஸ்டின் அளவை குறைக்கிறதுக்கும் உதவக்கூடியது இந்த ஃபோலேட் என்னும் போலிக் ஆசிட்.
இந்தப் போலிக் ஆசிட் உடலில் குறைவாக இருக்கும்போது மவுத் சோர்ஸ் என்னும் வாய்ப்புண் உண்டாவது, நாக்கு சிவந்து காணப்படுவது, அதிக சோர்வு, அனிமியா, பசியின்மை போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த விட்டமின் பி9 எனும் போலிட் எந்தெந்த உணவுகள் அதிகமாக இருக்கிறது என்றால் பச்சைபயிறு, கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்ற பீன்ஸ் வாங்கிக்கணும். அனைத்து விதமான கீரைகள் மற்றும் சொல்லக்கூடிய மாட்டு ஈரல் போன்றவற்றில் இந்தப் போலிக் ஆசிட் நல்ல அளவில் இருக்கிறது.
எட்டு: விட்டமின் பி12 சொல்லக்கூடிய கொபாலமீன்
உடலில் புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் அனிமியா என்ற ரத்த சோகை வராமல் தடுக்கவும் டிஎன்ஏ டேமேஜ் என்னும் மரபணுக் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறதுக்கும் மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக வேலை செய்யவும் மிகவும் உதவியாக இருக்கிறது விட்டமின் பி12. இந்த விட்டமின் பி12 உடலில் குறைவாக இருக்கும்போது அனிமியா என்ற ரத்த சோகை உண்டாகும்.
பசியின்மை உடல் எடை இழப்பு மற்றும் அதிக சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இந்த விட்டமின் பி12 பெரும்பாலும் அசைவ உணவுகளில் அதிக அளவில் இருக்கிறது. மீன், கோழி. மீட், முட்டை போன்ற அசைவ உணவுகளிலும் சைவ உணவுகளில் டைரி ப்ராடக்ட்ஸ் என்று சொல்லக்கூடிய பால் சார்ந்த உணவுகளில் இந்த விட்டமின் பி12 நல்ல அளவில் இருக்கிறது.
இன்றைக்கு பி காம்ப்ளக்ஸ் விட்டமின் என்றால் என்ன? பி காம்ப்ளக்ஸ் விட்டமினுடைய பயன்கள் என்ன? இந்த விட்டமின்ஸ் நிறைந்த உணவுகள் என்ன என்பதை பற்றி விரிவா பார்த்தோம்.
நன்றி.