காலையில் எழுந்ததும் முதலில் செய்யும் 8 தவறுகள்

(Morning Mistakes in Tamil)

அதிகாலையில் எழுந்து நாள் முழுவதும் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும், வெற்றி பெற்ற மனிதனாக உலா வர வேண்டும் என்று நம் அனைவருக்கும் ஆசை இருக்கும்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் காலையில் எழுந்தது முதல் சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக எந்த வேலையும் செய்யத் தோன்றாமல் இருக்கும். மனதளவிலும் உடலளவிலும் மன இறுக்கத்துடன் எந்தவித சந்தோசமும் இல்லாமல் ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 இதற்கு என்ன காரணம் என்றால் பொதுவாக நாம் காலையில் எழுந்ததும் முதல் ஒரு மணி நேரம் நாம் என்னென்ன செய்கிறோம் என்னென்ன பார்க்கிறோம் என்னென்ன கேட்கிறோம் என்பதை பொறுத்துதான் அன்றைய நாள் முழுவதுமே இருக்கும் என்று  சைக்காலஜிஸ்ட் சொல்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் காலையில் எழுந்ததும் நம்மை அறியாமலேயே நாம் செய்யக்கூடிய சில தவறுகளினால் அன்றைய நாள் முழுவதும் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் இதே பழக்கம் தொடர்ந்தால் வாழ்க்கை முழுவதும் எந்தவித மன நிம்மதியும் இல்லாமல் இருந்துவிடுவோம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கை பாதிக்கப்படும் அளவிற்கு காலையில் எழுந்ததும் நாம் செய்யக்கூடிய எட்டு தவறான பழக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ஒன்று: அலாரத்தை நிறுத்துவது


இதையும் படிக்கலாமே: கிட்னியை பாதுகாக்கும் ஏழு வகையான உணவுகள் உணவுகள்

நம்மில் பலரும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும் என்று கடிகாரத்தில் அலாரம் செட் பண்ணி இருப்போம். ஆனால் அலாரம் அடித்ததுமே அதை ஸ்மூஸ் பண்ணிட்டு திரும்பவும் தூங்க ஆரம்பிச்சுடுவோம். இப்படி திரும்பத் திரும்ப அலாரத்தை ஸ்மூஸ் பண்ணும்போது நாம் எழுந்திரிக்கணும் என்று நினைத்த நேரத்தைவிட லேட்டாகவே எந்திரிப்போம். இதனாலேயே ரொம்ப லேட் ஆயிட்டேன் என்று சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருப்போம். காலையிலேயே ஏற்படக்கூடிய இந்த மனநிலை நாம் ஒரு லேசி அதாவது சோம்பேறியான மனநிலைய நமக்குக் கொடுக்கும்.

 இதற்குப் பதிலாகக் காலையில் சரியான நேரத்துக்கு எழும்புவதற்கு என்ன பண்ணலாம் என்றால் இரவு தூங்கும்போது நாளைக்கு இந்த வேலைகள் இருக்கிறது. காலையில் ஐந்து மணிக்கு எந்திரிக்கணும் என்று சொல்லி உங்களுடைய மனதில் நினைத்துக் கொண்டு படுத்தீர்கள் என்றால் சரியான நேரத்திற்கு உங்களால் எழும்ப முடியவில்லைஎன்றாலும் சிறிய நேர வித்தியாசத்தில் எழும்ப முடியும். நாளடைவில் சரியான நேரத்திற்கு உங்களால் எழும்ப முடியும்.அதுவே பழக்கமாக மாறி தொடர்ந்து காலையில் சரியான நேரத்திற்கு உங்களால் எழும்ப முடியும்.

இரண்டு: காலையில் செல்போனை எடுத்து பார்ப்பது.

காலையில் எழுந்ததும் நம்மில் பலரும் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு செல்போனை எடுத்து நோண்ட ஆரம்பிக்கிறது. youtube facebook instagram என்று சோசியல் மீடியாவில் வந்திருக்கின்ற எல்லா போஸ்டையும் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். ஒரு நிமிடத்தில் பாத்திடலாம் என்று நினைத்து ஒரு மணி நேரத்தை வீணடித்திருப்போம்.இது ஒரு தவறான நிலையை நமக்கு  உண்டு பண்ணும். அது மட்டுமில்லாமல் தேவையில்லாத எல்லா செய்திகளையும் நாம் படிக்கும்போது அது மூளைக்கு ஓவர் லோடாகவும் இருக்கும். மன அளவிலும் ஒரு ஸ்ட்ரெஸ் ஆன மனநிலையலயும் நமக்குக் கொடுக்கும். அதனால் அந்த நாள் முழுவதும் ஸ்ட்ரெஸ்சா இருக்கிறதுக்கும் இதுவும் ஒரு காரணம். இன்னும் காலையில் மொபைல் போனில் எக்ஸ்போஸ் ஆகும்போது அதிலிருந்து வரக்கூடிய அதிகப்படியான வெளிச்சம் நமது கண்களையும் பாதிக்கும். அதனால் கூடுமானவரைக்கும் காலையில் ஒரு மணி நேரம் போனை தொடாமல் இருப்பது மிகவும் நல்லது.

மூன்று: பெட்ஷீட்டை மடிக்காமல் இருக்கிறது

நம்மில் எத்தனை பேர் படுத்த பெட்ஷீட்டை நாமலே மடித்து வைக்கிறோம். இரவு முழுவதும் படுத்த பெட்சீட்டை நாம் மடித்து வைக்கவில்லை என்றால் அது ஒரு அலட்சியமான மனநிலையை கொடுக்கும். சோ இதற்குப் பதிலாக நாம் படுத்த பெட்ஷீட்டை நாமே ப்ராப்பரா மடித்து வைத்தோம் என்றால் ஒரு பெர்பெக்ட்டான ஃபீல் காலையிலேயே  நமக்குக் கிடைக்கும். காலையிலேயே நாம் செய்யக்கூடிய முதல் வேலையே பெர்பெக்டா செய்தோம் என்றால் அந்த நாள் முழுவதுமே எந்த ஒரு விஷயத்தையும் பர்ஃபெக்ட்டா செய்ய முடியும். செய்யக்கூடிய வேலை சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருந்தாலும் அதைப் பெர்பெக்டா பண்ணக்கூடிய மனநிலை வேண்டும். அதனால் நாம் படுக்கின்ற பெட்ஷீட்டை நாமளே மடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்க வேண்டும்.

நான்கு:காலையில் எழுந்தவுடனே காபி குடிக்கும் பழக்கம்

பலரும் காலையில் எழுந்தவுடனே காபி குடிக்கும் பழக்கத்தை  வைத்திருப்பார்கள். இது ஒரு முற்றிலும் ஒரு தவறான பழக்கம் இது. காலையில் வெறும் வயிற்றில் நாம் காபி குடிக்கும்போது அது மன அளவிலும் உடல் அளவிலும் ஒரு சோர்வான மனநிலையை உண்டாக்கும். அது மட்டுமில்லாமல் உடலில் டாக்ஸின்ஸையும்  அதிகரிக்கும். இதற்குப் பதிலாக ஒரு கிளாஸ் லைட் ஹாட் வாட்டர் குடித்தோம் என்றால் அது வயிற்றில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமில்லாமல் உடலில் இருக்கக்கூடிய டாக்சினையும் வெளியேற்றும். பிளட் சர்குலேஷன்  சீராக இருக்கும். ஹார்ட் ப்ராப்ளம் ஸ்கின் டிசீஸ் கான்ஸ்டிபேஷன் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். நாள் முழுவதும் உடம்பு சூடாகாமல் நல்ல எனர்ஜிக்காகவும் ஹாப்பியாவும் இருக்கறதுக்கும் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

ஐந்து: காலையில் சூரிய ஒளி உடம்பில் படாமல் இருப்பது.

நம்மில் பலரும் காலையில் சூரிய ஒளியை பார்த்திருக்க மாட்டார்கள். லேட் மார்னிங் தான் பார்ப்பார்கள் இதுவும் ஒரு தவறான பழக்கம். காலையில் வரக்கூடிய  சூரிய ஒளியில் நம்முடைய உடம்பை எக்ஸ்பிரஸ் பண்ணும்போது மூளையில் ஹேப்பி ஹார்மோன்ஸ் ப்ரோடுஸ் பண்ணும் இதே நாள் முழுவதுமே நாம் சந்தோஷமாக இருப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அது மட்டுமில்லாமல் நம்முடைய உடம்பை பயாலஜிக்கல் கிளாக்கியம் ஆக்டிவேட் பண்ணும் இதன் மூலமாக நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளும் சீராக இயங்குறதுக்கும் ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் இந்தச் சூரிய ஒளி.எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கறதுக்கும் விட்டமின் டி யும்  ரொம்பவே ஈஸியா கிடைக்கும். நாள் முழுவதும் நல்ல ஒரு பாசிட்டிவ் எனர்ஜியா இருக்கணும் என்றால் மார்னிங் சன் லைட்ல எக்ஸ்போஸ் பண்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

ஆறு: காலையில் எழுந்ததும் சிறிய நேரம் ஓய்வு


இதையும் படிக்கலாமே: ஹீமோகிளோபின்  அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 வகையான உணவுகள்

காலையில் எழுந்ததுமே எந்த ஒரு ரிலாக்சேஷனும் இல்லாமலும் பரபரப்பாக அடுத்த வேலைக்குப் போக ஆரம்பிப்பது இதுவும் ஒரு தவறான பழக்கம். காலையில் எழுந்ததுமே  குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும். எந்த மாதிரியான ஓய்வு எடுக்கலாம் என்றால்ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் மெடிடேஷன் பண்ணலாம். யோகா தியானம் போன்ற விஷயங்கள்  முயற்சி பண்ணலாம். அமைதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்து பாசிட்டிவ் விஷயங்களைத் திங்க் பண்ணலாம். ஐ காண்ட் டூ என்றால் இதைச் செய்ய முடியும்,

நான் நல்லா இருக்கிறேன், நான் நல்லா வருவேன், ஐ கேன் அச்சுத கோல் இப்படியொரு பாசிட்டிவ் விஷயங்களை உங்களுடைய மனதில் நீங்கள் சொல்லிக்கிட்டே இருக்கணும். சோ இது ஒரு பாசிட்டிவான வைப்ரேட்  உங்களுடைய மூளையில் கிரியேட் பண்ணி வைத்தால் நாள் முழுவதுமே  நீங்கள் ஆக்டிவா செயல்படுவதற்கு  உங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். அது மட்டுமில்லாமல் உடலுக்கும் சின்ன சின்ன ஸ்டிச்சிங் எக்ஸிபிஷன் பண்ணலாம். இது அந்த டே ஃபுல்லா உடலளவில் எந்தச் சோர்வும் இல்லாமல் இருக்கறதுக்கு ரொம்பவே ஹெல்புல்லா இருக்கும்.

ஏழு: காலை உணவைத் தவிர்ப்பது

நம்மில் பலரும் வேலைப்பலுவின் காரணமாக அவசர அவசரமாகக் காலை உணவைப் பலரும் தவிர்த்து விடுவோம். இது ஒரு தவறான பழக்கம் நாள் முழுவதுமே நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சிறப்பாகச் செயல்படுவதற்கும் மிகவும் இனிமையாக ஒன்று என்றால் காலை உணவு. காலை உணவை நாம் தவிர்த்தோம் என்றால் அந்த நாள் முழுவதும் எனர்ஜி இருக்காது. பிளட் சுகர் அளவு குறைந்து ரொம்பவே டயர்டா  பீல் பண்ணுவோம். இதனால் நம்மால் ஃபோக்கஸ் பண்ணி எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. நாம் செய்யக்கூடிய வேலையையும் பாதிக்கும். சோ காலை உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.

எட்டு: சுடு தண்ணீரில் குளிப்பது

காலையில் எழுந்ததுமே பலரும் ஹாட் வாட்டரில் குளிப்பார்கள். இதுவும் ஒரு  தவறான பழக்கம். இயற்கையாகவே காலையில் நமது உடல் ரொம்பவே  சூடாக இருக்கும். இந்த உடல் சூட்டை குறைப்பதற்காகத் தான் காலையில்  குளிக்கிறோம். இதுக்கு பதிலாக நாம் ஹாட் வாட்டர்ல குளிச்சோம் அப்படின்னா இன்னுமே உடல் சூடு  அதிகரித்து உடல் சூட்டினால் உண்டாகக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். சோ காலையிலேயே ஹாட் வாட்டர்ல குளிக்கிறதை தவிர்க்கணும். இதற்குப் பதிலாகச் சாதாரண தண்ணீரில் குளித்தோம் அப்படின்னா உடல் பிரஷ் ஆவுறது மட்டுமில்லாமல் மனமும்  பிரஷாக இருக்கும். அந்த டே ஃபுல்லாவே பிரஷா பீல் பண்றதுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *