Top 10 Vegetables for Weight Loss Tamil
ஒபிசிட்டி
ஒபிசிட்டி என்றால் ஒருவர் தன் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இல்லாத படிக்கு உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமனாக இருப்பதை தான் ஒபிசிட்டி ஓவர் வெயிட் அதிக உடல் பருமன் என்று சொல்கிறார்கள்.
உடல் எடையை குறைக்கும் காய்கறிகள்
இந்த உடல் பருமன் உண்டாவதற்கு மாறி வரக்கூடிய அதிக கலோரிகள் நிறைந்த உணவு பழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, அதிகமான அழுத்தம் மற்றும் மரபு ரீதியான காரணங்கள் என பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் நம் உடலுக்கு தேவையான கலோரிகளை விட அதிக அளவிலான கலோரிகளை உணவின் மூலமாக எடுத்துக் கொள்வதோடு அன்றைய நாள் முழுவதும் எடுத்துக்கொண்ட அதிகப்படியான கலோரிகளை பயன்படுத்தாமல் இருப்பது தான் முக்கியமான காரணம்.
இதில் கலோரிகள் என்றால் நாம் சாப்பிட்ட ஒவ்வொரு உணவும் உடலில் மெட்டபாலிசம் அடைந்து எனர்ஜியாக மாறும் திறன் தான் கலோரிகள். ஒரு நாளைக்கு பெண்களுக்கு 2000 கலோரிகளும் ஆண்களுக்கு 2500 கலோரிகளும் தேவை. இது ஒவ்வொருத்தருடைய தினசரி வேலையை பொருத்து மாறுபடும்.
உடல் எடையை குறைக்க தினசரி சாப்பிடக்கூடிய கலோரிகளை விட குறைந்த கலோரிகளை எடுத்துக் கொண்டாலே மிக எளிமையான முறையில் உடல் எடையை படிப்படியாக குறைக்க முடியும். கலோரிகளைப் பொறுத்த வரைக்கும் நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகள் பழங்கள், தானியங்கள் சிறுதானியங்கள் என பல வகையான உணவுகள் இருந்தாலும் அதில் காய்கறிகளில் தான் கலோரிகள் மிக மிக குறைவாக இருக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவக்கூடிய கலோரி குறைந்த 10 காய்கறிகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
காய்கறிகளை பொறுத்த வரைக்கும் எந்தெந்த காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறதோ அந்தந்த காய்கறிகளில் எல்லாம் கலோரி குறைவாக இருக்கும்.
வெண்பூசணி
100 கிராம் வெண்பூசணியில் 13 கலோரிகளும் 96% நீர்ச்சத்தும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் மூன்று கிராம் வரைக்கும் டயட்ரி பைபர் என்னும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு பாடி டீடாக்ஸ் வெஜிடபிளாகவும் பயன்படுத்துவார்கள்.
உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணியை ஜூஸ் ஆக குடித்து வந்தால் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேறுவது மட்டும் இல்லாமல் உடல் எடையும் வேகமாக குறையும். இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
உடல் எடையை குறைக்க தினசரி வெண்பூசணி எடுத்துக்கிறது மிகவும் நல்லது
| இதையும் படிக்கலாமே: |
|---|
| தினை அரிசியின் மருத்துவ பயன்கள் |
இரண்டு: சுரைக்காய்
100 கிராம் சுரக்காயில் 14 கலோரிகளும் 96% நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இது நம் உடம்பில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைத்து உடல் எடையை நன்கு குறைக்க உதவி செய்யும். இது ஒரு சிறந்த டைருட்டிக்காகவும் வேலை செய்யும். இது சிறுநீரை பெருக்கி சிறுநீர் வழியாகவே உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
சிறுநீரகங்கள் சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கக்கூடிய ஆற்றல் இந்த சுரைக்காய்க்கு உண்டு.
உடல் எடையை குறைக்கும் காய்கறிகள்
மூன்று: வெள்ளரிக்காய்
100 கிராம் வெள்ளரிக்காயில் 15 கலோரிகளும் 95% நீர்ச்சத்தும் நிரம்பி இருக்கிறது. உடல் எடை குறைவதற்கு உடலில் மெட்டபாலிசம் சீராக இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர்ச்சத்து பாடி மெட்டபாலிசத்தை சீர் செய்வதோடு உடல் எடையையும் நன்கு குறைக்க வழிவகுக்கும். சோ உடல் எடையை குறைக்க டயட் ஃபாலோ பண்றவர்கள் தினசரி வெள்ளரிக்காயை பச்சையாக எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் உடல் எடை நன்கு குறையும்.
நான்கு: முள்ளங்கி
100 கிராம் முள்ளங்கியில் 16 கலோரிகளும் 95% நீர்ச்சத்தும் நிரம்பி இருக்கிறது. உடல் எடையை குறைக்க உதவக்கூடிய டயட்ரி பைபர் மற்றும் கிளைக்கோஸ் இனோலேட்ஸ் போன்ற பினாலிக் காம்போனன்ட்ஸ் நல்ல அளவில் இருக்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவி செய்வது மட்டும் இல்லாமல் டைப் டு சர்க்கரை நோய் வராமலும் பாதுகாக்கும்.
| இதையும் படிக்கலாமே: |
|---|
| ஆயுளை அதிகரிக்கும் 10 உணவுகள் |
ஐந்து: தக்காளி
100 கிராம் தக்காளியில் 19 கலோரிகளும் 95% நீர்ச்சத்தும் இருக்கிறது லைக்கோபின் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது.
100 கிராம் தக்காளியில் 12 மில்லி கிராம் லைக்கோபின் இருக்கிறது. அதிக உடல் இருக்கக்கூடிய பலருக்கும் ஹார்ட் பீட் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது இந்த தக்காளி. தக்காளி உடல் எடையை குறைக்க உதவி செய்வது மட்டுமில்லாமல் இறுதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
உடல் எடையை குறைக்கும் காய்கறிகள்
ஆறு: சௌசௌ
100 கிராம் சௌசௌவில் 19 கலோரிகளும் 94.2% நீர்ச்சத்தும் நிரம்பி இருக்கிறது. இது உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய கொழுப்புகளை கரைப்பதோடு ரத்தத்தில் இருக்கக்கூடிய ட்ரைகிளைசெரைட் என்னும் கெட்ட கொழுப்பையும் கரைக்கும்.
இதன் மூலமாக ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருப்பதோடு உடல் எடையையும் நன்கு குறைக்கக்கூடியது சௌசௌ. உள் உறுப்புகளையும் கொழுப்புகள் படிவதை தடுப்பதோடு பேன்டிலிவர் என்னும் கொழுப்பு களிரனை வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த சௌசௌக்கு உண்டு.
ஏழு: கீரைகள்
பொதுவாக எல்லா வகையான கீரைகளிலுமே நல்லளவிலான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. 100 கிராம் கீரையில் 23 கலோரிகளும் 93% நீர்ச்சத்தும் நிரம்பி இருக்கிறது.
உடல் எடையை நன்கு குறைக்க தேவையான நார்ச்சத்து 100 கிராம் கீரையில் 2.2 கிராம் டைட்ரி பைபர் என்னும் நார்ச்சத்து நிரம்பி இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பது மாத்திரம் இல்லாமல் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். குறிப்பாக பசலைக்கீரை மற்றும் முருங்கைக்கீரை இந்த இரண்டுமே உடல் எடையை குறைக்க மிகவும் நல்லது.
| இதையும் படிக்கலாமே: | CLICK HERE |
|---|---|
| இரும்புச்சத்து அதிகம் உள்ள 10 உணவுகள் | click here |
எட்டு: சிலுவை காய்கறிகள்
கேபேஜ் காலிபிளவர் பிரக்கோலி போன்ற காய்கறிகள் குருசிபெரஸ் காய்கறிகள் 100 கிராம் கேபேஜ் மற்றும் காலிபிளவரில் 25 கலோரிகளும் 92% நீர்ச்சத்தும் இருக்கிறது. 100 கிராம் பிரக்கோலியில் 34 கலோரிகளும் 92% நீச்சத்தும் இருக்கிறது. உடல் எடையை குறைக்க டயட் ஃபாலோ பண்றவங்களுக்கு மிகவும் ஏற்ற காய்கறி. அரிசி சாதத்துக்கு பதிலாக கேபேஜ் ரைஸ் காலிபிளவர் ரைஸ் என இதனை பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்வதற்கு ஏற்ற ஒரு காய்கறி.
உடல் எடையை குறைக்க டயட் பாலோவ் பண்றவங்க தினசரி இந்த குருசிபுரஸ் காய்கறிகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக உடல் எடையை நன்கு குறைக்கலாம்.
ஒன்பது: வெண்டைக்காய்
100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகளும் 92% நீர்ச்சத்தும் இருக்கிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து நிரம்பி இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான வளவளப்பு தன்மை குடலின் உட் சுவர்களில் படிந்து கொழுப்புகள் குடலில் சேர்வதை தடுக்கும்.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருப்பதோடு உடல் எடையையும் நன்கு குறைக்க உதவி செய்யும். உடல் எடையை குறைக்க டயட் ஃபாலோ பண்றவர்கள் முதல் நாள் இரவே நான்கைந்து வெண்டைக்காயை நீலவாக்கில் கீரி தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெண்டைக்காய் ஊரிய நீரிணை காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை நன்கு குறையும்.
பத்து: மஞ்சள் பூசணி
100 கிராம் மஞ்சள் பூசணியில் 26 கலோரிகளும் 88 லிருந்து 90% நீர்ச்சத்தம் இருக்கிறது. மஞ்சள் பூசணியை கொஞ்சம் சாப்பிட்டாலே பசி உணர்வை நன்கு கட்டுப்படுத்தும். இதன் மூலமாக இடையிடையே சாப்பிடுவது தடுக்கப்படுவதோடு கலோரியும் குறையும். இதன் மூலமாக உடல் எடையும் நன்கு குறைக்க உதவும் மஞ்சள் பூசணி.