நாம் அனைவரும் இரவில் தூங்கும் போது தான் அதிகமாக கனவு காண்கிறோம். அந்த கனவுகள் எல்லாமே ஞாபகத்தில் இருப்பதில்லை. சில கனவுகள் ஞாபகத்தில் இருக்கும். சில கனவுகள் ஞாபகத்தில் இருக்காது. இந்த ஞாபகத்தில் இருக்கும் கனவுகள் தெளிவாக ஞாபகத்தில் இருக்கும். கனவுகள் தான் பலிக்கும். தெய்வ சக்தி உள்ளவர்க்கு வரும் கனவுகள்
சில கனவுகள் நல்லதாக இருக்கலாம். சில கனவுகள் கெட்டதாக இருக்கலாம். ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறதாக சொப்பன சாஸ்திரத்தில் அதாவது கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் அதெல்லாம் நடக்கும். சில கனவுகள் அப்படியே நடக்கும். இன்றைக்கு கனவு கண்டுட்டு நாளைக்கு நடக்குமா அப்படின்னா அப்படியெல்லாம் நடக்காது. சில நாட்கள் கழித்து கூட அந்த கனவுகள் பலிக்கும். பெரும்பாலும் தெய்வ சக்தி உள்ளவர்களுக்கு என்ன மாதிரியான கனவுகள் வரும் அப்படிங்கறத பார்க்கலாம்.
தெய்வ சக்தி உள்ளவர்க்கு வரும் கனவுகள்
சில சமயம் நம்மிடம் நல்ல சக்தியும் தீய சக்தியும் பேசும். நல்ல சக்தி நமக்கு வர இருக்கக்கூடிய நல்லதையும் கெட்டதையும் சொல்லும். தீய சக்தி நம்மை கனவில் பயமுறுத்தும். தெய்வ சக்தி இருப்பவர்களுக்கு அதாவது நல்ல சக்தியானது நம்மிடம் பேசுகிறது என்றால் அவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், அதிகம் யோசிக்க கூடியவர்களாகவும், அடிக்கடி வேண்டுதல் வைப்பவர்களாகவும், குலதெய்வத்தோட ஆசி பெற்றவர்களாகவும், இஷ்ட தெய்வத்தோட அருள் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இந்து சொப்பன சாஸ்திரத்தின் படி கடவுளை அடிக்கடி கனவு காண்றோம் என்றால் அதுக்காக பயப்பட வேண்டாம். நீங்கள் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் திருப்தியாகவும் இருக்கிறதை அது குறிக்கிறது. அதேபோல இறந்து போன நம் முன்னோர்கள் தாய் தந்தையர் அவர்களை கனவில் கண்டினாலும் அதற்காக பதட்டப்பிடாதீர்கள். அதெல்லாம் தெய்வ அம்சம் உள்ளவர்களுக்கு அதாவது இறைசக்தி உள்ளவர்களுக்கு தான். நம்முடைய முன்னோர்கள் நம்முடைய கனவில் உனக்கு இந்த கஸ்டம் வர போகிறது நல்லது நடக்க போகிறது அப்படின்னு சில வழிகளில் அவர்கள் கனவில் காட்டுவார்கள்.
தெய்வ சக்தி உள்ளவர்களுக்கு வரக்கூடிய கனவுகள்
யானை
யானை உங்களுடைய கனவில் வந்தது என்றால் உங்களை சுற்றி இருக்கக்கூடிய ஏதாவது பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது என்பதை காட்டுகிறது. உங்களுக்கு நல்லதே நடக்கும் அப்படிங்கறதை காட்டுகிறது. ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் எல்லாம் விலகும் அப்படிங்கறதை காட்டுகிறது. உங்களுக்கு யாராவது எதிரிகள் கோர்ட் கேஸினால் அலைந்து கொண்டு இருக்கின்றீர்கள் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் வருகிறதா அவர்களால், அப்படின்னா அந்த எதிரிகள் எல்லாம் பலம் இழந்து போவார்கள். வெற்றி உங்களுக்கே அப்படிங்கறதை தான் அது குறிக்கிறது.
கோவில்
கனவில் கோவிலை பார்க்கிறது கோவிலில் இருக்கக்கூடிய விக்ரஹங்களை பார்க்கிற மாதிரி கனவு கண்டீர்கள் என்றாலும் கோவிலுக்கு உள்ளே நுழையிறது மாதிரி கனவு கண்டீர்கள் என்றாலும் உங்களுடைய புதிய முயற்சிகள் யாவுமே வெற்றி அடையும் என்று அர்த்தம். கோவில் கோபுரத்தை கனவில் கண்டீர்கள் என்றால் நீங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
அதேசமயம் பாலடைந்த கோவில் அல்லது சிதிலமடைந்த சிற்பம் மாதிரி கனவில் வரக்கூடாது. அந்த மாதிரி கனவில் வந்தது அப்படின்னா உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் பெரிய நஷ்டம் ஏற்படப்போவதை குறிக்கிறது. நல்ல அருமையாக பார்க்க அழகாக அற்புதமாக இருக்கக்கூடிய கோவில் அந்த கோவிலில் இருக்கக்கூடிய விக்ரஹம் இது மாதிரி தான் கனவில் வரணும். அதுதான் நல்லது.
அது மாதிரி கனவில் வந்த இந்த காவல் தெய்வங்கள் எல்லாம் இருக்கு இல்ல காத்தவராயன் கருப்புசாமி சுடலை சாமி முனியாண்டி மாடன் வீரன் இப்படி காவல் தெய்வங்கள் எல்லாம் இருக்கு பெண் தெய்வங்கள் மாரியம்மன் துரோபதி அம்மன் இதெல்லாம் இருக்கு இல்லையா இந்த காவல் தெய்வங்கள் எல்லாம் நம்முடைய கனவில் வந்தது அப்படின்னா சகல ஐஸ்வர்யங்களும் உங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அந்த சாமி உங்களுடைய கனவில் காட்டுகிறது.
எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்பட போகிறது அப்படின்னு காவல் தெய்வம் காட்டுகிறது. அதே சமயம் இந்த சலங்கை ஒலி கேட்கும் பாருங்க விடியற்காலை அந்த பிரம்ம முகூர்த்தத்தில் கூட சில சமயம் நமக்கு நேரடியாகவே காட்டும். கனவில் அல்லது நேரடியாகவே அது எல்லாருக்கும் கேட்காது. தெய்வ சக்தி உள்ளவர்களுக்கு மட்டும் அது கேட்கும். அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கும் தெய்வ சக்தி இருக்கிறது என்பதை காட்டுகிறது.
கனவிலும் அந்த காவல் தெய்வங்கள் நமக்கு ஏதாவது வரப் போகும் ஆபத்தையும் காட்டும். அதாவது நாய் துரத்துற மாதிரி கனவு கண்டீர்கள் அப்படின்னா அந்த பைரவர் காவல் தெய்வமாக இருக்கக் கூடிய பைரவர். அதேபோல நாய்க்கடிக்கிற மாதிரி கனவு வருகிறது என்றால் உங்களுக்கு வரப் போகின்ற கஷ்டத்தை, ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது அப்படின்னு உங்களுக்கு அந்த தெய்வம் உணர்த்தும்,
இறந்துபோன முன்னோர்கள்
கனவில் இறந்து போன முன்னோர்கள் எல்லாம் வருகிறார்கள் என்றாலும் அவர்கள் இறை சக்தி உள்ளவர்கள் என்று அர்த்தம். இறந்து போனவர்கள் எங்கே இறைசக்தி எங்கே அப்படின்னு யோசிக்காதீர்கள். இறந்து போன நம்முடைய முன்னோர்களும் தெய்வமாக இருக்கக்கூடியவர்கள் தான். எல்லாருக்குமே இறந்து போனவர்கள் எல்லாம் கனவில் வருவதில்லை. தெய்வசக்தி உள்ளவர்களுக்கு மட்டும்தான் அதிகம் கனவில் இறந்து போன முன்னோர்கள் வந்து வரப் போகின்ற ஆபத்தை உணர்த்துவார்கள்.
லிங்கம்
உங்களுடைய கனவில் லிங்கத்தை கனவில் கண்டீர்கள் அப்படின்னா உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரப்போகிறது அப்படின்னு அர்த்தம். பணமும் உங்களுக்கு அங்கீகாரமும் கிடைக்க போகிறது அப்படின்னு அர்த்தம். நல்ல காலம் வரப்போகிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
கோவில்
ஒரு கோவிலில் சாமி கும்பிடுகின்ற மாதிரி கனவு வருகிறது அப்படின்னா அந்த தெய்வத்தோட அருள் உங்களுக்கு கிடைக்கிறதாக அர்த்தம். அந்த கோவிலுக்கு நீங்கள் அடுத்த நாள் அது சிவன் கோவிலாக இருந்தால் சிவன் கோவிலுக்கும், மாரியம்மன் கோவிலாக இருந்தால் மாரியம்மன் கோவிலுக்கும் அந்த கோவிலுக்கு போங்க. கோவிலில் இருந்துகொண்டு இறைவனை தரிசிக்கிறோம் அப்படின்னா அதைவிட சிறந்த புண்ணியம் எதுவுமே இல்லை.
கனவில் அது மாதிரி சாமியை கும்பிடுகிற மாதிரி வந்தாலும் அது மிகச்சிறந்த கனவு. அது எல்லோருக்கும் அவ்வளவு சீக்கிரம் அந்த கனவெல்லாம் வருவதில்லை. அதுவும் இறைவனோட திருமுகம் எல்லாம் கனவில் தெரிகிறது அப்படின்னா உங்களுக்கு அந்த தெய்வத்தின் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறதை காட்டுகிறது அப்படின்னு அர்த்தம்.
கோவிலில் இருந்து கொண்டு கைகூப்பி சாமியை கும்பிடுகிற மாதிரி கனவு வந்தது அப்படின்னா அந்த கோவிலுக்கு போய் தான தர்மங்களை அது சிவன் கோவிலாக இருந்தால் சிவன் கோவிலுக்கும் விஷ்ணுவோட கோயிலாக இருந்தால் விஷ்ணு கோவிலுக்கும் பெருமாள் கோவிலாக இருந்தால் பெருமாள் கோயிலுக்கும் போய் நீங்கள் தான தர்மங்களை செய்யணும். இப்படி நாம் செய்யறது மூலமாக ஆழ் மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் எல்லாம் உடனே நிறைவேறும் அப்படின்னு நம்பப்படுகிறது.
பாம்பு
தெய்வ சக்தி உள்ளவர்களுக்கு தான் பாம்பு கனவில் வரும். அவங்களுக்கு தான் அடிக்கடி பாம்பு கனவில் வரும். தெய்வங்களுக்கு எல்லா தெய்வங்களோட சிலைகளுக்கு அருகிலையும் இந்த பாம்பு இருக்கும். முருகன் அம்மன் ரங்கநாதர் படுத்தே இருக்கிறார். இதை நாக தெய்வமாக நாம் வழிபடுகிறோம். ராகு கேதுங்கிறதும் பாம்பாக தான் இருக்கிறது.
அப்போது நம்முடைய கனவில் பாம்பு வந்தால் இறைசக்தி உள்ளவர்களுக்கு வரப் போகின்ற நல்லதையும் கெட்டதையும் பல்வேறு விதத்தில் உணர்த்தும். திருமணம் ஆகாதவர் பாம்பு கடித்து ரத்தம் வெளியே போகிற மாதிரி கனவு கண்டார்கள் அப்படினா சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானவருக்கு இப்படி கனவு வந்தது அப்படினா செல்வம் சேரும்.
சுடுகாடு
கனவில் சுடுகாடு வந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம். இது தெய்வ சக்தி உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி சுடுகாடு கனவில் வருமாம். இது ஒரு நல்ல சகுனமாம். சுடுகாட்டுக்கு போகிற மாதிரி சுடுகாட்டில் நாம் இருக்கிற மாதிரி சுடுகாட்டில் பிணம் எரிகிற மாதிரி இது மாதிரி கனவு வந்தது அப்படின்னா உங்களுடைய பிரச்சனைகளுக்கு எல்லாம் நீங்கள் தீர்வு காண போறீங்க அப்படின்னு அர்த்தம்.
சுடுகாட்டில் பிணம் எரிகிற மாதிரி இருந்தால் உங்களுடைய வீட்டில ரொம்ப நாளாக தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்க போகிறது. கிரகப்பிரவேசம் கல்யாணம் இது மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்க போகிறது அப்படிங்கறதை தெய்வம் காட்டுகிறது. உங்களுடைய வேண்டுதல் நிறைவேற போகிறது அப்படிங்கறது காட்டுகிறது.
பிணத்தை தூக்கி சென்ற மாதிரி கனவு கண்டீர்கள் அப்படின்னாலும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த செயல் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருந்தீங்க அப்படின்னா அந்த செயலானது முடிவுக்கு வரும். பல நன்மைகளை அள்ளித் தரப்போகிறது அப்படின்னு அர்த்தம். அதனால் இந்த சுடுகாடு பாம்பு ஒவ்வொரு ரூபத்தில் காட்டும். நாய் இது மாதிரி கனவுகள் எல்லாம் வந்தால் நாம் அதற்குரிய பலன் என்னன்னு பாக்கணும். ஆனால் இதெல்லாம் தெய்வசக்தி உள்ளவர்களுக்கு தான் இந்த கனவெல்லாம் வரும். அதே சமயம் அதிகாலையில் கனவு காண்கிறோம் அப்படின்னா அந்த கனவு சீக்கிரம் பலிக்கும்.