தினை அரிசியின் மருத்துவ பயன்கள்

(Top 10 Health Benefits of Foxtail Millet (Thinai))

தினை அரிசி நம் முன்னோர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில் ஒன்று திணை. உலகிலேயே அதிகம் பயிரிடப்படக்கூடிய தானியமும் கூட இதனுடைய தாயகம் சீனா என்கிறதுனால் இதனைச் சைனீஸ் மில்லட் எனவும் அழைக்கிறார்கள். தினையில் வெந்தினை கருத்தினை மஞ்சள் தினையென மூன்று வகையான தினை அரிசிகள் உண்டு.

பொதுவாகத் தினை அரிசியில் என்னென்ன சத்துகள் இருக்கிறது என்றால் புரதம் கார்போஹைட்ரேட் கால்சியம் நார்ச்சத்து இரும்புச்சத்து  தயாமின் ரிபோபிளேமின் நியாசின் மற்றும் அதிகப்படியான அமீனோ அமிலங்களையும் கொண்டது தினை அரிசி.

இவ்வளவு சத்துக்கள் கொண்ட தினை அரிசி நம் உடலுக்கு உணவாக மட்டுமல்ல மருந்தாகவும் செயல்படக் கூடியது. இன்றைக்கு திணை அரிசியை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்து சாப்பிடும்போது நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

ஒன்று: உடலை உறுதியாக்கும்

 உடற்பயிற்சி மற்றும் கடினமான வேலை செய்பவர்களுக்கு மிகச்சிறந்த உணவு திணை அரிசி. தினை அரிசியில் தசைகளுக்கும் எலும்புகளுக்கு அவசியமான புரதம் மற்றும் கால்சியம் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது.

இது தசைகள் மற்றும் எலும்புகள் உறுதியாகவும் வலிமையாக இருக்கிறதுக்கு உதவி செய்யும்.  நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்பட்டு உடல் மெலிந்தவர்களின் உடலையும் தேற்றும் ஆற்றல் இந்தத் தினை அரிசிக்கு உண்டு. உடலை உறுதியாகவும் வலிமையாகவும் வைக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவு தினை அரிசி.

இரண்டு: இருதயத்தை பலப்படுத்தும்

தினையில் இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் பி1 பி12 போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது. இது இருதய தசைகளைப் பலப்படுத்தி இருதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்யும். இதில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து இருதய அடைப்பு வராமல் தடுக்கும். சோ பலவீனமான இருதயம் இருக்கிறவர்கள் தினை அரிசி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள்

.மூன்று: சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது

தினை ஒரு லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவு என்பதினால் இது ரத்தத்தில் மெல்ல மெல்ல சர்க்கரை ஆக மாறும். இதன் மூலமாக ரத்தத்தில் திடீரெனச் சர்க்கரையின் அளவு கூடுவது தடுக்கப்படும். சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் அரிசிக்கு மாற்றாகத் தினை அரிசியை பயன்படுத்தி வருவது மிகவும் நல்லது. இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்கும்.

நான்கு: ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கும்

மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இந்தத் தலைமுறை ஆண்கள் பலரும் உயிரணுக் குறைபாடு மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுறார்கள். அப்படிப்பட்டவர்கள் தினைமாவுடன் சிறிது நெய் சேர்த்து களியாகச் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.

ஐந்து: பெண்களுக்கு மிகவும் நல்லது

பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறு காரணமாக அனிமியா போன்ற பிரச்சினைகளினால் பலரும் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தினை மாவுடன் கருப்பட்டி சேர்த்து உருண்டைகளாகத் தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலப்பட்டு கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.  தினையில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்து அனிமியாவையும் போக்கும்.

தையும் படிக்கலாமே: இரும்பு சத்து அதிகமுள்ள 10 உணவுகள்

ஆறு: அல்சைமர் நோயைத் தடுக்கும்

  ஞாபகம் மறதி பிரச்சனையினால் அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது திணை அரிசி. தினையில் இருக்கக்கூடிய அதிகப்படியான அமில அமிலங்கள் மூளையில் ஆப்ஷன் சீராக இருக்கவும் மூளையில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும்  உதவி செய்யும். இதன் மூலமாக ஞாபக மறதி நோய் குணமாகும். வளரும் குழந்தைகளுக்கு இந்தத் தினை அரிசியை உணவாகக் கொடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஏழு: தசைப்பிடிப்பை தடுக்கும்

நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பலரும் தசைப் பிடிப்பு மற்றும் கால் மரத்து போறது போன்ற பிரச்சனையினால் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தினை அரிசியை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. இது நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிராணவாயு என்று சொல்லக்கூடிய ஆக்ஸிஜன் பரிமாற்றம் சீராக இருக்க உதவி செய்யும். இதன் மூலமாக இது போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

எட்டு: சிறுநீரை பெருக்கம்

சிறுநீரகங்களில் கற்கள் அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற காரணங்கள்னால் சிறுநீர் சரியாக வெளியேற்ற முடியாமல் சிரமப்படுபவர்கள் தினை அரிசியை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. இது உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து உடல் வறட்சியை நீக்கி சிறுநீரை பெருக்கி சிறுநீர் நன்கு வெளியேற உதவி செய்யும். உடலில் தேவை இல்லாமல் இருக்கக்கூடிய கழிவுகளையும் வெளியேற்றும். சோ சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கிறவர்கள் தினை அரிசியை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

ஒன்பது: செரிமான உறுப்புகளைப் பலப்படுத்தும்

100 கிராம் திணை அரிசியில்  ஆறு புள்ளி ஏழு கிராம் செரிமானத்துக்கு தேவையான நார்ச்சத்து அடங்கி இருக்கிறது. இது சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணம் ஆகுவதற்கு உதவி செய்வதோடு செரிமான உறுப்புகளான இறைப்பை கல்லீரல் கணையம் போன்ற உறுப்புகளை பலப்படுத்தி பாதுகாக்கும். சோ செரிமான உறுப்புகளில் பிரச்சனை இருக்கிறவங்களும் தினை அரிசியை  சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: சாமை அரிசியின் நன்மைகள்

பத்து: க்லூட்டன் அலர்ஜியை போக்கும்

கோதுமை மைதா போன்ற உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறவர்கள் க்லூட்டன் அலர்ஜினால் அவதிப்படுவார்கள். க்லூட்டன் அலர்ஜி என்று சொல்லக்கூடிய எப்போதும் அதிக சோர்வு வயிற்றில் இரைச்சல் தலைவலி மட்டும் தோலில் அலர்ஜி எரிச்சல் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு தினை அரிசி உணவு மிகவும் நல்லது. திணை அரிசி ஒரு முற்றிலும் குளூட்டன் ஃப்ரீ உணவுகளுக்கு மாற்றாகச் சாப்பிட சிறந்த உணவு தினை அரிசி.

சிறுதானிய உணவுகளில் ஒன்றான தினை அரிசியின் சிறந்த பத்து மருத்துவ பயன்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *