கோவிலில் மாவிளக்கு ஏன் போடுகிறார்கள்?

Why do they light the mavilaku in the temple?

அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதை நாம் பார்த்திருப்போம். இந்த வழிபாடு எதற்காக செய்கிறார்கள் என்றால் தீராத நோய்களை தீர்க்கும் ஒரு வழிபாடாகவே கருதி காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த வழிபாடு தீராத நோய்களை தீர்க்கும் ஒரு அற்புதமான வழிபாடு. இந்த வழிபாடு ஆறு குளம் உள்ள இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில்செய்வது மிகவும் சிறப்பானதாகும். கோவிலில் மாவிளக்கு ஏன் போடுகிறார்கள்?

 இந்த வேண்டுதல் இரட்டிப்பு பழமையை கொடுக்கும். அன்பை தீபமாக அர்ப்பணிக்கும் ஒரு உன்னதமான வழிபாடு. இந்த மாவிளக்கு வழிபாடுகளில் ஆடி வெள்ளிக்கிழமை தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை பல குடும்பங்கள் வழக்கத்தில் கொண்டு உள்ளனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் விளக்கு போடும் வழக்கமும் பல குடும்பங்களில் உள்ளது. பச்சரிசி வெள்ளம் ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும். பேரொளி வடிவமான இறைத்துவத்தையே மாவிளக்கு வழிபாடு உணர்த்துகிறது.

வீட்டில் மாவிளக்கு வழிபாடு செய்யும் முறைகளை பற்றி பார்க்கலாம்.

கோவிலில்-மாவிளக்கு-ஏன்-போடுகிறார்கள்

வீட்டில் மாவிளக்கு ஏற்றும் பொழுது பூஜை அறையில் கோலம் போட்டு அதன் மீது வாழை இலை விரித்து அதன் மேல் மாவிளக்கை வைக்க வேண்டும். வீட்டில் நாம் ஏற்றும் விளக்கானது குறைந்தது 2 மணி நேரமாவது எரிவது நல்லது. அந்த நேரத்தில் நம் பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லலாம். பக்தி பாடல்கள் பாடலாம். இறைவனின் ஸ்லோகங்களையோ அல்லது புராண புத்தகங்களையோ படிக்கலாம். மாவிளக்கு எரிந்து முடிந்ததும் வழிபாட்டை முடித்துக் கொண்டு வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் உடைத்து நெய்வேத்தியம் இறைவனுக்கு படைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சாமி கும்பிடும் போது பூ விழுந்தால் என்ன பலன்?
தெய்வ சக்தி உள்ளவர்க்கு வரும் கனவுகள்

தேங்காய் நீரை மாவில் கலந்து பிசைந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். சர்வ மங்களமும் நிறைந்த இந்த மாவிளக்கு வழிபாட்டை  வீட்டில் செய்யும் பொழுது சகல சௌபாக்கியமும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி இன்மை ஏற்பட்டால் அல்லது நோய் பாதிப்பினால் வீட்டில் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பம் அமைதி இல்லாமல் இருந்தால் இந்த மாவிளக்கு வழிபாட்டினை செய்யலாம். வீட்டில் கணவன் மனைவி பிரச்சினை இருந்தால் நெய் ஊற்றி மாவிளக்கு ஏற்றலாம். இவ்வாறு செய்வதால் தம்பதிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளிடம் நல்ல கல்வித்திறன் மேம்பாடு அடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *