( Best Food for Morning Empty Stomach in Tamil)
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள். காலையில் எழுந்ததும் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அந்த உணவு நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஈடில்லாத ஒன்றாக இருக்கும். காலையில் எழுந்ததுமே டீ காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் டீ காபியை விடவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதும் உடலுக்கு நல்ல எனர்ஜி கொடுக்கக்கூடியதும் காலையில் எழுந்ததும் முதல் உணவாக என்ன சாப்பிடலாம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு கேள்வியாக இருக்கும்.இன்றைக்கு உடலுக்கு நல்ல எனர்ஜி கொடுக்கக் கூடியதாகவும் உடலில் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க கூடியதாகவும் காலையில் வெறும் வயிற்றில் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.
ஒன்று: தேன் கலந்த வெதுவெதுப்பான நீர்
பொதுவாக தேன் மிகவும் ஆரோக்கியமான உணவு என நம் எல்லோருக்கும் தெரியும். தேனில் இருக்கக்கூடிய விட்டமின்ஸ் மினரல்ஸ் ப்லோவனாய்ட் மற்றும் என்ஸைம் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வயிற்றில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளான டாக்ஸினை வெளியேற்றும்.இது மட்டும் இல்லாமல் 20 கிராம் தேனில் 8.4 கிராம் பிரக்டிஸும் 6.9 கிராம் குளுக்கோஸும் இருக்கிறது.
இது காலையில் உடலுக்கு தேவையான நல்ல எனர்ஜியை கொடுப்பதோடு உடலின் மெட்டபாலிசத்தை பூஸ்ட் பண்ணவும் ரொம்பவே உதவியாக இருக்கிறது.சிறிது வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிடும்போது செரிமான உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்கிறது.காலையில் முதல் உணவாக தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.
இரண்டு: ஊற வைத்த பாதாம்
பாதாமில் மெக்னீசியம் விட்டமின் இ புரோட்டின் பைபர் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் என்று சொல்லக்கூடிய ஒமேகா 3 ஒமேகா 6 அதிக அளவில் இருக்கிறது.நீண்ட உணவு இடைவெளிக்கு பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த ஒரு உணவு பாதாம் 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரோட்டின் இருக்கிறது. இது வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கும். ஒரு கையளவு பாதாமை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
ஊற வைத்த பாதாமை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிடவேண்டும். ஏன் என்றால் பாதாமின் தோலில் டானின் என்னும் மூலப்பொருள் இருக்கிறது.இது பாதாமில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடலில் சேர்வதை தடுக்கும். அதனால் ஊற வைத்த பாதாமை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும். ஊற வைத்த பாதாமை காலையில் எழுந்ததும் தினசரி உடற்பயிற்சி செய்கின்றவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த உணவு ஊற வைத்த பாதாம்.
மூன்று: பப்பாளி பழம்
இதையும் படிக்கலாமே ; பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
பழங்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மிகச்சிறந்த பழம் பப்பாளி பழம். உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை எளிதில் வெளியேற்றவும் குடல் இயக்கத்தை சீராக்கவும் வயிறு உப்புசம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவக்கூடிய பழம் பப்பாளிப்பழம். இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து எல் டி எல் என்னும் கெட்ட கொழுப்பை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பப்பாளி பழம் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் என்கிறதினால் எல்லோராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய பழமாகவும் இருக்கிறது. அதனால் சர்க்கரை நோய் இரத்த கொதிப்பு உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கவேண்டும் என்றால் காலை வெறும் வயிற்றில் முதல் உணவாக பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
நான்கு: தர்பூசணி
பழங்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மற்றொரு சிறந்த ஒரு பழம் தர்பூசணி. 90% நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்த ஒரு பழம் தர்பூசணி. இது கோடை காலத்தில் உடலில் ஏற்படக்கூடிய நீர் வறட்சியை தடுக்கும். உடலுக்கு நல்ல எனர்ஜியையும் கொடுக்கக்கூடியது. தர்பூசணி குறைந்த கலோரிகளை கொண்ட ஒரு பழம் தர்பூசணி என்றதுனால உடல் ரீதியாக எந்த ஒரு தொந்தரவு இருக்கிறார்களோ தாராளமாக தர்பூசணியை சாப்பிடலாம். கோடை காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் முதல் உணவாக சாப்பிட மிகச்சிறந்த ஒரு பழம் தர்பூசணி.
ஐந்து: முளைகட்டிய பச்சைபயிறு
பச்சை பயிற்றை அப்படியே சமைத்து சாப்பிடுவதை விட முளைவிட்ட பச்சை பயிறை சாப்பிடும் போது அதன் நன்மைகள் மிகவும் அதிகம். முளைவிட்ட பச்சை பயிற்றில் அதிக அளவிலான புரதம் நார்ச்சத்து விட்டமின் பி சி கே போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் உடல் கழிவுகளை வெளியேற்றுவதோடு பாடி மெட்டபாலிசத்தை பூஸ்ட் பண்ணவும் ரொம்பவே உதவியாக இருக்கும்.
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதம் சீரான தசை வளர்ச்சி மற்றும் செல்கள் சேதம் அடைவதை தடுக்கும். இதன் மூலமாக நல்ல ஒரு ஆரோக்கியமான உடலமைப்பை பெறவும் மிகவும் உதவியாக இருக்கக்கூடியது முளைவிட்ட பச்சைப் பயறு. அதனால் உடலை பலமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைக்கவேண்டும் என்றால் காலையில் முதல் உணவாக முளைவிட்ட பச்சைப் பயிரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
ஆறு; ஊற வைத்த சியா விதைகள்
சியா விதைகளில் புரோட்டின், பைபர், கால்சியம், ஆன்டி-ஆக்சிடென்ட், ஒமேகா 3, பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய சியா விதைகளை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்தோ அல்லது பாலுடன் சேர்த்தோ அல்லது பழ கலவைகள் மீது தூவியோ சாப்பிட்டு வரலாம்.
ஜெலட்டினஸ் கோட்டிங் என்னும் வலுவலுப்பான பகுதி இருக்கும்இது குடலின் உட்பகுதியில் படிந்து குடல் இயக்கம் சீராக இருக்கவும் செரிமானம் எளிதாக நடைபெறவும் உதவியா இருக்கும். மேலும் கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்கும்.உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஊற வைத்த சியா விதைகளை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
ஏழு; பழைய சோறு அல்லது நீராகாரம்
இது நம் எல்லோருக்கும் தெரிந்த எளிமையான உணவு. முதல் நாள் இரவே அரிசி சாதத்தில் சிறிது நீரை ஊற்றி வைக்க மறுநாள் காலையில் நீராகாரமாக நமக்கு கிடைக்கும். சாதாரண அரிசி சாதத்தை விட புளிக்க வைக்கப்பட்ட சாதத்தில் சத்துக்கள் பல மடங்கு அதிகம் என பல ஆராய்ச்சிகளை சொல்கிறார்கள். ஒரு நாள் இரவு முழுவதும் சாதத்தில் நீரை ஊற்றி வைக்கும் போது அதில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் சொல்லக்கூடிய ப்ரோபயாடிக் அதிக அளவில் பெருகி இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்.
இந்த பழைய சாதத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ப்ரோபயாட்டிக் குடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய நியூட்ரியன்ட்ஸை எளிதாக குடல் உறிஞ்சி கொள்வதற்கும் உதவியாக இருக்கக்கூடியது இந்த நீராகாரம். அதனால் காலையில் எழுந்ததும் முதல் உணவாக நம் முன்னோர்கள் அதிகம் பருகிய நீராகாரம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

