கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன?

கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன?

நம் கர்மா கரைவதற்கான அறிகுறியை இந்த காகம் உணர்த்துமா என்கிற கேள்விக்கான பதிலும் அது மட்டும் அல்லாமல் யார் வைக்கும் சாப்பாட்டை இந்த காகம் முதலில் எடுக்கும் அப்படிங்கற பதிலோடு பணவரவை நம் வாழ்வில் அதிகரிக்க காகத்துக்கு இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் என்பதையும் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன?

இந்த கர்மா அப்படிங்கற சொல் இந்த கர்மா நம் வாழ்வில் கரைவதற்கான அறிகுறி என்ன அப்படிங்கறதை முதலில் தெரிந்துகொள்வோம்.

கர்மா அப்படிங்கிறது நம்முடைய வாழ்வில் குறைகிறது என்றால் இறைவன் மேல் நம்முடைய பக்தியை அதிகமாக வைத்தால் இந்த கர்மா குறையும் அப்படிங்கறது உண்மை. அப்படி அந்த கர்மா நம் வாழ்வில் இருந்து கரையுது அப்படிங்கிறத சில அறிகுறிகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

கர்மா நம் வாழ்வில் குறைந்து கொண்டே இருக்கிறது என்பதை நாம் தெரிஞ்சுக்கணும்னா பிரச்சனை ரொம்பவே விஸ்வரூபம் எடுத்து அதிகப்படியாக நம்மை சூழ்ந்து வரும். நிதானமாக வந்த பிரச்சனைகள் எல்லாம் ரொம்பவே வேகமாக விஸ்வரூபம் எடுத்து நம்மை சூழ்ந்து நிற்பது போல நமக்கு ஒரு தோற்றமளிக்கும். கஷ்டமும் பிரச்சனைகளும் போராட்டங்களும் நம்மளை சூழ்ந்து இருக்கும்.

ஆனால் அதை பார்த்து நாம் பயப்படாமல் இருக்கவேண்டும். ஏன் என்றால் கர்மா கரைவதை உணர்த்துவது தான் அந்த செயல். பொதுவாக ஒரு இரண்டு மாதத்திற்கு வரவேண்டிய பிரச்சனை, ஒரு வருடத்திற்கு பிறகு வரவேண்டிய பிரச்சினைகள் வெகு சீக்கிரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை ஆட்கொள்ளும். அதற்கு பெயர் தான் தர்மா.

இதுபோல நடப்பது கர்மா கரைவதற்கான முதல் அறிகுறியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிரச்சனைகளும் போராட்டங்களும் எப்பவுமே நம்மை சூழ்ந்து இருக்கிறது மாதிரி ஒரு தோற்றம் இருந்ததென்றால் நமக்கு கர்மா கறைகிறது என்பது தான் முதல் அறிகுறி. இப்படி எல்லா பிரச்சனைகளுமே நம்மை சூழ்ந்து நடக்கும்பொழுது அந்தப் பிரச்சினை எல்லாம் ஒவ்வொன்றாக நம்மை விட்டுப் போகிறது என்றால் கர்மா கரைகிறது என்பதை புரிஞ்சுக்கலாம்.

இது எல்லாம் முடிந்த பிறகு நாம் எந்த ஒரு செயல் செய்தாலும் அது ரொம்பவே சாதாரணமாக நாம் என்ன செயல் செய்யணும் அப்படின்னு நினைத்தாலுமே ரொம்பவே சுமூகமாக அந்த செயலை செய்து முடிக்கலாம். இதை கர்மா கரைவதற்கான முக்கிய அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி இருக்கும் பொழுது இந்த காகம் அப்படின்னு சொல்லப்படும் சனி பகவானின் வாகனமாக இருக்கும் அந்த காகமும் முன்னோர்களின் ஆத்மாவாகவே வலம் வரும். அந்த காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது சில சமயம் அந்த காகம் உணவு எடுக்கலையே அப்படிங்கற வருத்தம் சில பேருக்கு இருக்கும்.

காகத்திற்கு வைக்கும் உணவிற்கு தொடர்பு என்ன?

யாருடைய கர்மா நல்லவிதமாக இருக்குதோ யாரு நல்லவிதமாக வாழ்வில் பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்று முன்னேற வேண்டும் அப்படின்னு அந்த இயற்கை அந்த பிரபஞ்சம் ஒரு ஆசீர்வாதம் யார் ஒருவருக்கு கொடுக்குதோ அவர்கள் வைக்கும் சாப்பாட்டை நிச்சயமாக காகம் எடுக்கும் இதுதான் உண்மை.

இப்படி கர்மா நல்லவிதமாக இருக்கும் ஒருவர் வைக்கும் சாப்பாட்டை நிச்சயமாக அந்த காகம் எடுக்கும். கர்மா அதிகமாக வேலை செஞ்சுகிட்டு இருக்கு அப்படின்னா அந்த சமயம் காகம் அந்த உணவை எடுக்காது. அதற்காக வருத்தப்படாமல் தினமுமே காகத்துக்கு உணவு வைப்பது அப்படிங்கறது ரொம்பவே ஒரு விசேஷமான செயலை பார்க்கப்படுகிது.

நம்முடைய கர்மா எப்பொழுது குறைகிறதோ அந்த அறிகுறி எல்லாம் நமக்கு எப்பொழுது தெரிகிறதோ அன்றையிலிருந்து காகம் நாம் வைக்கும் உணவை எடுக்கும் அப்படிங்கறது 100 சதவீத உண்மை. காகத்துக்கு தினமுமே உணவு வைப்பது அப்படிங்கறது ரொம்பவே ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக நம்முடைய வாழ்வில் பணவரவை அதிகரிக்கவேண்டும் என்று விருப்பப்படுறவர்கள் செல்வ செழிப்பாக வாழவேண்டும் அப்படின்னு ஆசைப்படுகிறவர்கள் தினமும் உலர் திராட்சை பழங்களை காகத்திற்கு தினமும் ஒரு பிளேட்ல ஐந்து அல்லது பத்து நம்மளால எவ்வளவு முடியுமோ அதை காகத்திற்கு வைத்து நாம் தினமும் வழிபாடு செய்தோமென்றால் நிச்சயமாக நம் வாழ்வில் பண வரவிற்கு பஞ்சமே இல்லாமல் வந்துகொண்டே இருப்பதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

காகத்திற்கு உணவு வைப்பதை விட இந்த உலர் திராட்சை பழங்களை வைத்து செல்வ செழிப்பை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நாம் பெற்றுக் கொள்ளலாம் அப்படிங்கறது நூறு சதவீத உண்மை. குறிப்பாக எப்பொழுதும் காகத்திற்கு உணவு வைத்தாலும் இந்த மாதிரி உலர் திராட்சையோ பிஸ்கெட்டோ அல்லது மிக்சரோ எது வைத்தாலும் வீட்டு வாசலுக்கு எதிராக வைக்காமல் வீட்டுக்கு சைடு புறம் பின்புறம் வைப்பது நல்லது.

அந்த இடத்தில் காகத்திற்கு உணவு அல்லது எந்த ஒரு பதார்த்தத்தை வைக்கும் பொழுதும் இந்த மாதிரி சைடுல வைத்து பழக்கினால் நிச்சயமாக காகத்தின் பார்வை நம் வீட்டின் மேல் படாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். பொதுவாகவே காகம் சனிபகவானின் வாகனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சனி பகவானின் பார்வையில் இருந்து குறைவதற்கு இந்த ஒரு வழியை நாம் பின்பற்றலாம் கூடியவரை உணவு வைப்பதை விட இந்த உலர் திராட்சை பழங்களை காகத்திற்கு வைத்து நம் வாழ்வில் செல்வ செழிப்பை அதிகரிக்க செய்து வாழ்வில் வளமாகவும் நலமாகவும் வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *