(Varattu Irumal Sali Sariyaga Tips)
வறட்டு இருமல் குணமாக… சில நேரங்களில் இந்த உலகத்திலேயே கொடுமையான விஷயம் சளி இருமல் தான் என் தோணும். தும்மி தும்பி இருமி இருமி மொத்த உடம்போட எனர்ஜியும் போயிடும். அதுவும் வறட்டு இருமல் வந்ததென்றால் கேட்கவே வேண்டாம். நம்மைப் பாடாய் படுத்திவிடும். வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று இது அதிகமா குழந்தைகளைத் தான் பாதிக்குது இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டவங்க கொஞ்சம் அதிக சத்தமாக இரும்முவார்கள். இரும்பு போது தொண்டையிலும் எரிச்சல் அதிகமாவே இருக்கும்.
குறிப்பு: படுத்தவுடனே வறட்டு இருமல் அதிகமாகவே இருக்கும்.
வறட்டு இருமலுக்கு தீர்வே இல்லையா? என்றால் இருக்கிறது.நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த வறட்டு இருமலுக்கு தீர்வு காண முடியும்.வறட்டு இருமல் குணமாகச் சில எளிய வீட்டு வைத்தியங்கள்.
இஞ்சியுடன் தேன்
ஒரு துண்டு அளவு இஞ்சி எடுத்து அதைச் சின்ன சின்னத் துண்டுகளாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிடவும். பிறகு அதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
எலுமிச்சையுடன் தேன்
பொதுவாக இருமல் ஜலதோஷம் இருக்கிறவர்கள் விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடும் காரணம் விட்டமின் சி சளியை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் விட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இதற்குக் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தொல்லை தரும் வறட்டு இருமலிலிருந்து நாம் சீக்கிரமாக விடுபடலாம்.
உலர்திராட்சை
பொதுவாகக் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுதான் உலர் திராட்சை. 50 கிராம் உலர் திராட்சையில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து அதனுடன் 50 கிராம் வெள்ளம் சேர்த்து ஹீட் பண்ணி கெட்டியாகும் வரை நன்றாகக் கிளறி தயாராகும் மருந்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். இதனுடைய சுவை நன்றாக இருப்பதினால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்ததென்றால் இந்த மருந்தைத் தாராளமாகக் கொடுக்கலாம்.
புதினா
வறட்டு இருமல் குணமாக நம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் புதினா ஒரு சிறந்த மருந்து. இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். புதினாவை துவையலாகவோ சூப்பாகச் செய்தோ சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமலிலிருந்து நாம் விடுபடலாம்.
மஞ்சள்
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மஞ்சள் வைரஸ் தொற்றுகளான சளி இருமலை சரி செய்ய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு தேன் கலந்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் வறட்டு இருமலிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்லது வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிச்சாலும் வறட்டு இருமல் குறையும்.
மாதுளை, தேன், இஞ்சி
மாதுளை பழத்தை உரித்து அதனுடன் கொஞ்சம் தேன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
Try This: