(Top 7 Good Foods for Kidney)
பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றக்கூடிய மிக முக்கிய பணியைச் செய்யக்கூடிய உறுப்பு கிட்னி அதாவது சிறுநீரகங்கள். இந்தச் சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டால் உடலிலிருந்து வெளியேற்றப் படாத கழிவு நீர் உடலின் கை கால் முகம் என உடலின் பல்வேறு பகுதிகளிலும் தேங்கும். அதுமட்டுமில்லாமல் உடலிலிருந்து வெளியேற்றப் படாத சிறுநீர் உடலின் உள்ளுறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இருதயத்தைச் சுற்றியுள்ள பகுதியிலும் தேங்க தொடங்கும். இதன் காரணமாக மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டு இறுதியில் மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. கிட்னியை பாதுகாக்கும் 7 உணவுகள்
பொதுவாக இந்தச் சிறுநீரகப் பிரச்சினை சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை உள்ளவர்கள் இதுபோன்றவர்களை எளிதில் தாக்கும் அபாயம் அதிகம். பொதுவாக நோய் வந்தபிறகு என்ன செய்வது என்று தவிப்பதை விட வராமல் பாதுகாத்துக் கொள்வதே மிகவும் புத்திசாலித்தனமானது. அந்த வகையில் சிறுநீரகங்களைப் பலப்படுத்தும் ஏழு உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒன்று: பூண்டு
பூண்டினுடைய நன்மைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தினமும் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பூண்டு இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே இருதய நோய் வராமல் தடுக்கப்படும். அதோடு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு கரைந்து ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலமாகக் கிட்னி பாதுகாப்பாக இயங்கும். முக்கியமாகச் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக குழாய்களில் ஏற்படக்கூடிய தொற்றுகளை எதிர்த்து போராடி அழிக்கும் ஆற்றல் இந்தப் பூண்டிற்கு உண்டு. அதனால் பூண்டினை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வருவது சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
இரண்டு: கொத்தமல்லி
கொத்தமல்லி சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றப் பெரிதும் உதவக்கூடிய கீரை. இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு பத்து நிமிடம் கொதித்து ஆறிய பிறகு அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் கிட்னியில் உள்ள அனைத்து டாக்ஸின்களும் வெளியேறும். கிட்னி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த ரெமெடிய பாலோ பண்ணிட்டு வரலாம்.
மூன்று: திராட்சை
திராட்சையில் விட்டமின் சி நல்ல அளவில் இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி சிறுநீரகங்களில் தொற்றி ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இந்தத் திராட்சைக்கு உண்டு. ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்குத் தேவையான முக்கியமான உணவுகளில் ஒன்று திராட்சை. திராட்சையில் இருக்கக்கூடிய அமிலங்கள் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
நான்கு: இஞ்சி
இஞ்சியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் சிறுநீரகங்களுடைய செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. இஞ்சி உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் மற்றும் சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் ஆற்றில் வாய்ந்தது. பொதுவாக இஞ்சி அஜீரணம் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உடலில் செரிமானம் சீராக இருந்தாலே உடலில் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஐந்து: முட்டைகோஸ்
ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு ஒரு சிறப்பான உணவு முட்டைக்கோஸ். இதில் இருக்கக்கூடிய வழமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவது மட்டுமில்லாமல் பிற உறுப்புகளுக்கும் நன்மை தரக்கூடியதாகவும் இருக்கிறது இந்த முட்டைக்கோஸ். இதில இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் சிறுநீரக நீர் கட்டிகள் போன்றவை வராமல் தடுக்கிறது. முட்டைக்கோஸில் வைட்டமின் கே வைட்டமின் பி12 பி6 போலிக் அமிலம் மற்றும் டயட்ரீம் போன்ற நார்ச்சத்துக்கள் இருக்கிறது. ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு ஒரு சிறந்த உணவாக இருக்கிறது முட்டைக்கோஸ். சோ முட்டைக்கோஸ் உணவுகளில் சேர்த்துட்டு வரத் தவறாதீர்கள்.
ஆறு: மீன்கள்
மீன்களில் ஒமேகா த்ரீ பேட்டி ஆசிட் அதிக அளவில் இருப்பதால் இவை சிறுநீரகத்தை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கிறது. அதிலும் சூறை, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களில் அதிக அளவில் இந்த ஒமேகாத்திரி ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. மீன்களை வறுக்காமல் குழம்பு செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வருவது சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
ஏழு: வெங்காயம்
வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். அதுமட்டுமின்றி சிறுநீரகங்களைச் சுத்தமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. அடிக்கடி சின்ன வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டு வருவது சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
பொதுவாகச் சாப்பிடும் உணவுகளில் உப்பினை குறைத்து சேர்ப்பது, சிறுநீரத்தை அடக்கி வைக்காமல் இருப்பது, மது புகை போன்ற போதைப் பொருட்கள் எடுக்காமல் இருப்பது, தினசரி உடற்பயிற்சி செய்வது, தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்கு சுத்தம் செய்வது, மன அளவில் அதிக பயத்தை தடுப்பது, தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது, அதிக சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
மிக முக்கியமாக மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. ஒருவேளை நோயின் தீவிரதால் மருத்துவ உதவி தேவைப்பட்டால் வியாதிக்கு ஏற்றச் சரியான அனுபவமுள்ள மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் தரமான மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலமாகப் போலி மருந்துகளை வாங்கி சாப்பிடுவது தடுக்கப்படும்.