Health Benefits of Curry Leaves Tamil
கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்.
கூட்டு, பொரியல், குழம்பு, ரசம் எனச் சகல உணவுகளிலும் கருவேப்பிலை இருப்பதை பார்க்க முடியும். பாரம்பரியமாகத் தென்னிந்திய சமையலில் தவறாமல் சேர்க்கப்படக்கூடிய இலை இந்தக் கருவேப்பிலை. காய்கறி கடைகளில் இலவசமாகவும் கிடைக்கக்கூடியது என்கிறதுனால் இதனைப் பலரும் அலட்சியமாகவும் எண்ணுவதுண்டு. ஆனால் உணவே மருந்து என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தக் கருவேப்பிலை தான். கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்
கருவேப்பிலை வெறும் மனம் சுவை மட்டும் கொண்டதல்ல நம் உடல் நலத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் கொண்டது இந்தக் கருவேப்பிலை. கருவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி போன்ற வைட்டமின் சத்துகளும் அதன் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துகளும் புரோட்டின், கார்போஹைட்ரேட், டைட்ரி ஃபைபர் என ஏராளமான ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்தது இந்தக் கருவேப்பிலை.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கருவேப்பிலையின் மருத்துவ பயன்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கருவேப்பிலை நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளைத் தரக்கூடியது என்றாலும் கூடப் பலரும் இதனைச் சாப்பிடும்போது எடுத்து ஓரமாக வைத்துவிடுவதுண்டு.
ஒன்று: கண் பார்வை திறனை அதிகரிக்கும்
கருவேப்பிலையில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஏ சத்து அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் கருவேப்பிலையில் 3767 அய்யூ விட்டமின் ஏ இருக்கிறது. இது நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் ஏ யில் 125% விட்டமின் இருக்கிறது. கண் கார்னியா என்று சொல்லக்கூடிய ஒளியை உள்வாங்கக்கூடிய செல்களைப் புதுப்பிக்கும். இதன் மூலமாகக் கண் பார்வை திறன் அதிகரிப்பதோடு வயதான காலத்தில் ஏற்படக்கூடிய கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக்கூடியது இந்தக் கருவேப்பிலை.
இரண்டு: உடல் எடையைக் குறைக்கும்
பொதுவாகவே உடல் எடை அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் நம் உடலில் ஆங்காங்கே தேவை இல்லாமல் படிந்து இருக்கக்கூடிய கொழுப்புகள் தான். இந்தக் கொழுப்பைக் கரைக்கக்கூடிய ஆற்றல் இந்தக் கருவேப்பிலைக்கு உண்டு. கருவேப்பிலையில் ஆன்ட்டி ஓபிசிட்டி எஃபெக்ட் நிறைந்த கார்பசோல் அல்கலைட் அதிக அளவில் இருக்கிறது.
இது உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய கொழுப்புத் திசுக்களைக் கரைத்து உடல் எடை வேகமாகக் குறைவதற்கு உதவியாக இருக்கும். உடல் எடை அதிகமாக இருக்கிறவர்கள் கருவேப்பிலைச் சாறுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை நன்கு குறையும்.
மூன்று: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய மூலிகைகளில் மிக முக்கியமானது இந்தக் கருவேப்பிலை. கருவேப்பிலையில் அதிகப்படியான பைட்டோ கெமிக்கல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் காண விட்டமின் ஏ சி போன்ற ஆன்டி டயாபடிக் பிராப்பர்டீஸ் நல்ல அளவில் இருக்கிறது. இது கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும்.
இது மட்டுமில்லாமல் இன்சுலின் சென்சிடிட்டியையும் இன்க்ரீஸ் பண்ணக்கூடிய ஆற்றல் இந்தக் கருவேப்பிலைக்கு உண்டு. சர்க்கரை நோயினால் அவதிப்படுறவங்க கருவேப்பிலையை பச்சையாகச் சாப்பிடுவதை விடக் கருவேப்பிலையை காய வைத்து பொடி செய்து தினசரி சாப்பிடும் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரும்போது இரத்த சர்க்கரை அளவுகள் உயர்வது தடுக்கப்படும்.
நான்கு: அனிமியாவை குணமாக்கும்
பொதுவாக அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை ஏற்படுவதற்கு ரத்தத்தில் அயன் எனும் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான் முக்கியமான காரணம். இந்த இரும்புச்சத்து கருவேப்பிலையில் நல்ல அளவில் இருக்கிறது. 100 கிராம் கருவேப்பிலையில் 3.2 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் இரும்புச்சத்தை உடல் எளிதாகக் கிரகிக்க தேவையான போலிக் ஆசிட் சத்தும் இந்தக் கருவேப்பிலையில் சேர்ந்தே இருக்கிறது. அனிமியாவினால் அவதிப்படுறவங்க கருவேப்பிலைச் சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடலில் புதிய சிவப்பணுக்கள் உற்பத்தியாவதோடு அனிமியாவும் எளிதில் குணமாகும்.
ஐந்து: மாரடைப்பு வராமல் தடுக்கும்
இதையும் படிக்கலாமே:
அத்திப்பழத்தின் முதல் 10 ஆரோக்கிய நன்மைகள்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமான ரத்தக்குழாய் அடைப்பு உண்டாவதை தடுக்கும் ஆற்றல் இந்தக் கருவேப்பிலைக்கு உண்டு. கருவேப்பிலையில் டயக்ளோரோமீத்தேன், எத்தில்அசிட்டேட், மகோனிம்பைன், ஆன்ட்டி ஹைப்பர் லிபிடமிக் பிராப்பர்டீஸ் நல்ல அளவில் இருக்கு. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய எல் டி எல் மற்றும் ட்ரைக்லீஸ்ட் போன்ற கெட்ட கொழுப்பைக் கரைப்பதோடு ஹெச்டி என்னும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
இதன் மூலமாகக் கொலஸ்ட்ரால் அளவுகள் சீராவதோடு ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதும் தடுக்கப்படும். இது மட்டுமில்லாமல் கருவேப்பிலையில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் பிரீராடிகல்ஸ் இதய தசைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதோடு இதய தசைகளையும் வலுவாக்கும். இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்க அவசியம் இந்தக் கருவேப்பிலையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஆறு: செரிமான கோளாறுகளைக் குணமாக்கும்
செரிமானம் சார்ந்த தொந்தரவுகளான அஜீரணம், அசிடிட்டி, வயிறு உப்புசம் போன்ற தொந்தரவினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது கருவேப்பிலை. மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இந்த இரண்டையுமே சரி செய்யக்கூடிய ஆற்றல் இந்தக் கருவேப்பிலைக்கு உண்டு. கருவேப்பிலையில் இருக்கக்கூடிய நார்ச்சத்து ஒரு சிறந்த லாக் செட்டிங் ஆகச் செயல்பட்டு மலச்சிக்கலை குணமாக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய கார்பசோல் அல்கலைட் போன்ற ஆண்டி டைரியா பிராப்பர்டீஸ் வயிற்றுப்போக்கை நிறுத்தவும் உதவி செய்யும். செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் சரி இந்தக் கருவேப்பிலை சாறுடன் நீர் மோர் கலந்து குடித்து வரச் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீங்கும்.
ஏழு: தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது
கருவேப்பில்லையில் தலை முடி வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டின், அயன், போலிக் ஆசிட், விட்டமின் சி, மற்றும் பீட்டா கரோட்டின் என்று சொல்லக்கூடிய விட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கு. ஸ்கால்பாரியாவடன் கூடிய செல்களைப் புதுப்பிப்பதோடு புதிய தலைமுடி வளர்ச்சிக்கு உதவி செய்யும். மேலும் இதில் இருக்கக்கூடிய பிற நுண்ணூட்டச் சத்துக்கள் தலைமுடி உதிர்வு மற்றும் ரீமிக்ஸ் கிரேக்கர் என்னும் இளநரை பிரச்சினையும் குணமாக்கும் ஆற்றல் இந்தக் கருவேப்பிலைக்கு உண்டு.
கருவேப்பிலையில் இயற்கையாகவே ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி பங்கள் ப்ராபர்ட்டிஸ் அதிக நிறைந்திருக்கிறது என்கிறதனால் இது பொடுகு தொல்லையில் இருந்தும் நல்ல ஒரு நிவாரனத்தை கொடுக்கும். தலைமுடி சார்ந்த பிரச்சினை இருக்குறவர்கள் கருவேப்பிலையை உணவில் நன்கு சேர்க்கறது மட்டுமில்லாமல் தேங்காய் எண்ணெயுடன் கருவேப்பிலை சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு இந்தக் கருவேப்பிலை சேர்த்த எண்ணையை தினமும் தலையில் தேய்த்துவர தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் எளிதில் நீங்கும்.
எட்டு: கல்லீரலை பாதுகாக்கும்
கருவேப்பிலையில் கல்லீரலை பாதுகாக்க தேவையான என்னும் கெமிபிரால் என்னும் பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சன் இருக்கிறது. இது ஆக்ஸிடெட்டிஸ்டினால் கல்லீரல் பாதிக்கப்படுவதை தடுப்பதோடு கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் உதவி செய்யும். மேலும் கல்லீரல் பாதிக்கக்கூடிய ஹெபடைடிஸ் போன்ற வைரல் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் வராமலும் தடுக்க கூடியது இந்தக் கருவேப்பிலை.
குறிப்பாக ஆல்கஹாலிக் ஃபேட்டிலிவர் மற்றும் நான் ஆல்கஹாலிக் ஃபேட்டிலிவர் சொல்லக்கூடிய இனி இரண்டு வகைகளை வரக்கூடிய கொழுப்பு களிறு நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்தக் கருவேப்பிலைக்கு உண்டு. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியம் கருவேப்பிலையை உணவில் சேர்த்துகிறது மிகவும் நல்லது.