வீட்டு வாசலில் எலுமிச்சை வைத்தால் அதிசயம் நடக்கும்.

 

வீட்டு வாசலில் எலுமிச்சை வைத்தால் அதிசயம் நடக்கும்.

(Benefits of sliced lemon in home)



ஹிந்து மதத்தில் பின்பற்றபடும் பல சடங்கு சம்பிரதாயங்களுக்கு உண்மையான காரணம் என்ன என்று தெரியாமலேயே மூடநம்பிக்கை என்று சொல்லி அதெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பெயர் தெரியாத பலவிதமான கிருமிகளுக்கு நடுவே பயந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். 


நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த தேவகனி என்று கூறப்படும் எலுமிச்சையின் தலைவாசல் ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஏன் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் தடவி வீட்டு வாசலில் வைக்கிறோம். அப்படி வைக்கிறதினால் என்ன அதிசயம் நடக்கும் எலுமிச்சம் பழத்தோடு மிளகாய் கறி சேர்த்து ஏன் நிலை வாசலில் கட்டி தொங்கவிடுகிறோம். எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி ஏன் காவு கொடுக்க வேண்டும் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை போட்டு வைக்கிறதினால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று அன்றாடம் நம் வாழ்வில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் எலுமிச்சம் பழத்தோட ஆன்மீக ரீதியான சக்திகள் மற்றும் அறிவியல் ரீதியான வியக்க வைக்கும் பலவிதமான உண்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சம் பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதோடு எலுமிச்சம் பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தியும் உண்டு. அதனால்தான் எலுமிச்சம்பழம் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிது. இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு வகைகளாக பயன்படுத்துகிறார்கள். நல்ல சக்தியை பெறவும் தீய சக்தியை ஏவி விடவும் இந்த எலுமிச்சம் பழத்தை கோவிலில் கொடுக்கும் போது நல்ல சக்தியாக வலுப்பெற்று இருக்கும். வீட்டில் தொழில் நடக்கும் இடத்தில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்டவும் நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துறோம்.


எலுமிச்சை



எலுமிச்சம் பழச்சாற்றில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இந்த சிட்ரிக் அமிலத்திற்கு ஆகர்சன சக்தி அதாவது ஈர்ப்பு விசை இருக்கும். தன் நிலை மறந்து அருள் வந்து ஆடுபவர்களின் வாயில் எலுமிச்சம் பழத்தை திணிக்கிறதை பார்த்திருப்போம். அவர்களும் அந்த எலுமிச்சம் பழத்தை கடித்த உடனே அந்த எலுமிச்சையின் சாறு நாவினில் இறங்கும் போது தங்களுடைய சுயநினைவிற்கு வருவதையும் பார்த்திருப்போம். 

பொதுவாகவே ஒரு வீட்டை கட்டும்போது தலைவாசல் வைத்ததும் அதற்கு சிறப்பான பூஜைகள் எல்லாம் செய்த பிறகு தான் மற்ற வீட்டு வேலைகளை எல்லாம் துவங்குவார்கள். எப்பவுமே வீட்டின் வாசலில் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுவதால் இது போன்ற பூஜைகள் எல்லாம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. எதனால்  என்றால் தலைவாசலில் இருக்கும் தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும். இதனால் அதன் சக்தியை அதிகரிப்பதனாலேயே சில பொருட்களை வீட்டு வாசலில் கட்டி தொடங்கிவிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே :குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!



இதற்கு நம்முடைய முன்னோர்கள் ஒரு புராண கதையையும் கூறி இருப்பார்கள். அதாவது மகாலட்சுமியுடைய சகோதரி தான் மூதேவி இந்த மூதேவி வீட்டில் இருக்கும் செல்வ செழிப்பை எடுத்து சென்று விடுவார்கள் என்று சொல்லி இருப்பார்கள். அந்த மூதேவிக்கு மிகவும் விருப்பமானது புளிப்பு, காரம் மற்றும் சூடான பொருட்கள் அதனாலதான் நம்முடைய வீட்டு வாசலில் புளிப்புக்கு எலுமிச்சையையும் காரத்திற்கு மிளகாயையும் சூடான பொருளுக்கு கரியும் சேர்த்து கட்டி வைத்திருக்கிறோம். மூதேவிக்கு பிடித்த விஷயங்கள் வீட்டு வாசலிலேயே இருப்பதினால் அதை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளே நுழையாமலேயே மூதேவி திரும்ப போய்விடுவாள்.


எலுமிச்சை, மிளகாய், சூடான கறி


அதனால் தான் வீட்டு வாசலில்  எலுமிச்சை, மிளகாய், சூடான கறி சேர்த்து கட்டி வைக்கிறோம். இதற்கான அறிவியல் ரீதியான காரணம் என்னவென்றால் எலுமிச்சை மற்றும் மிளகாயில் விட்டமின் சி அதிகமாக இருக்கும் நாம் ஒரு பருத்தி நூலில் எலுமிச்சை, மிளகாய், கரி ஆகியவற்றை கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மெல்ல மெல்ல பருத்தி நூலின் வழியாக மிளகாயுடன் சேர்ந்து ஆவியாக வெளிப்படும்.


இந்த ஆவி காற்றில் கலந்து நம் சுவாச ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் அது மட்டும் இல்லாமல் எலுமிச்சை மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டுக்குள்ளே நுழையாமல் பாதுகாக்கும். அதன் மூலம் உண்டாகும் நோய் தொற்றில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எதனால் எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


குங்குமம் என்பது மஞ்சளோடு சுண்ணாம்பு சேர்த்து தயாரிக்கப்படுவது. இந்த மஞ்சள்  கிருமி நாசினி என்று நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் வண்டு போன்ற விஷ பூச்சிகள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிப்பகுதியில் சுண்ணாம்பு தடவுவார்கள் மஞ்சளுக்கும் சுண்ணாம்புக்கும் விஷக்கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் விரட்டும் சக்தி இருக்கிறது.


எலுமிச்சம் பழத்திற்குள் கிருமி நாசினியாக செயல்படும் குங்குமத்தை தடவி வீட்டு வாசப்படியில் வைத்தாலும் அல்லது பிழிந்து சாறினை தரையில் விடுவதாலும் அந்த வீட்டுக்குள்ளே எந்த விதமான கெட்ட சக்தியும் அதாவது விஷ கிருமிகளும் அண்டாது என்று மக்கள் நம்புகிறார்கள். அதனால் தான் எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுக்க சொல்லி இருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.


இதையும் படிக்கலாமே :இதையும் படிக்கலாமே : வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 அதிர்ஷ்டம் தரும் மரங்கள்

தலைவாசலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக சம அளவில் வெட்டி குங்குமம் தடவி வைப்பார்கள். அதனால் கெட்ட சக்திகள் எதுவும் நம்முடைய வீட்டுக்குள் நுழையாது என்பது நம்பிக்கையாய் இருந்து வருகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் நல்ல சக்தி மற்றும் கெட்ட சக்தி இரண்டுமே கலந்ததுதான். நமக்கு நல்லது நடக்கும் பொழுது அது நல்ல சக்தியாலும் கெட்டது நடக்கும் பொழுது அதை எதிர்மறை ஆற்றல்களாலும் நடைபெறுகிறது என்பதை நம்மளால் உணர முடியும்.


இந்த எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து நமக்கு நல்ல சக்திகளை கொடுக்கக்கூடிய ஒரே தன்மை இந்த எலுமிச்சம் பழத்திற்கு தான் உண்டு. அதனால்தான் எலுமிச்சம் பழத்தை தேவகணி என்று சொல்கிறார்கள். தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் இருக்கிறது. கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையை குறிக்கும்.  


எலுமிச்சை மாலை


துர்கை, பத்திரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களை பூஜிக்கும் பொழுது எலுமிச்சை மாலை சாத்தி வழிபடுவார்கள். துர்க்கை, பத்ரகாளி போன்ற உக்கிரமான தெய்வங்களுக்கு கனிமாலை அணிவித்து வழிபட்டால் நீண்ட நாட்கள் தடைப்பட்ட செயல் கைகூடும் என்பது நம்பிக்கை. எலுமிச்சை பழத்திற்கு இருக்க கூடிய சக்தி அளவில்லாதது மூன்று எலுமிச்சம் பழங்களை எப்பவுமே கையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சுப காரியத்திற்கு செல்லும் போது அல்லது வெற்றியை நோக்கி செல்லும்போது இந்த கனிகளை அம்மன் கோவில் வாசல் முன்னிருக்கக்கூடிய திரிசூலத்தில் சொருகிவிட்டு போனால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் அனுபவமாக இருந்திருக்கிறது. 

நல்ல காரியமாக நாம் யாரையாவது பார்க்க போனால் நம் கூடவே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து கொண்டு போனால் அந்த காரியம் நிச்சயமாக வெற்றி அடையும் என்றும் நம்பப்படுகிறது.  இதை நம்முடைய முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று கேட்டால் மூடநம்பிக்கை என்று சில பேர் சொல்லுவார்கள். ஆனால் நிச்சயமாக இது மூடநம்பிக்கை கிடையாது இதற்கு பின் அறிவியலும் மருத்துவரீதியான காரணங்களும் புதைந்து கிடக்கிறது.  ஒருத்தருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள்   அதிகமாக இருந்தால் அந்த வீட்டில் இருக்கிறவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும்.


உறவுகளின் இடையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது. எதிர்மறை ஆற்றலை கண்டறிந்து அந்த ஆற்றலை வெளியேற்ற மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல பகுதிகளில் வைக்க வேண்டும். மஞ்சள் எலுமிச்சை கருப்பு நிறத்தில் மாறிவிட்டது என்றால்  அதை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் புதிய பச்சை அல்லது மஞ்சள் எலுமிச்சையை வைக்க வேண்டும்.


மழை நீரில் எலுமிச்சம் பழத்தின் தோலை கொதிக்க வைத்து வீட்டில் தெளிக்க வேண்டும்


மழை நீரில் எலுமிச்சம் பழத்தின் தோலை கொதிக்க வைத்து வீட்டில் தெளிக்க வேண்டும் இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளும் எதிர்மறையாற்றல்களும் வெளியேறும். அதேபோல் நம்முடைய வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற ஒரு எலுமிச்சையை நான்காக கட் பண்ணி ஒரு உப்பு பரப்பிய தட்டின் நடுவில் வைத்து கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையை கையால் தொடாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்து விட வேண்டும்.


இந்த முறைகளை பின்பற்றும் போது வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நீங்கி பலம் பெறலாம். இந்த பரிகாரத்தை செய்யும் போது நம்முடைய வீட்டில் தனியாக எலுமிச்சம் பழத்தை வாங்கி தான் பயன்படுத்த வேண்டும். சிலர் எலுமிச்சம் பழத்தை கொடுப்பார்கள் அந்த எலுமிச்சையை பயன்படுத்தக் கூடாது கோவிலில் பிரசாதமாக பெறப்படும் எலுமிச்சை தெய்வ அருளை முழுமையாக பெற்று தரும் என்பது நம்பிக்கை.

கோவிலில் கொடுக்கும் எலுமிச்சையை நாம் பயன்படுத்தலாமா என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு வந்திருக்கும். கட்டாயமாக அந்த எலுமிச்சம் பழத்தை நாம் பயன்படுத்தலாம். பிரசாதமாக வாங்கிய பழத்தை சிலர் வாகனங்களில் வைத்திருப்பார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட பழங்கள் கிடைத்தால் அதை ஜூஸ் போட்டு குடிக்கலாம். தேன் மற்றும் சர்க்கரை மட்டுமே கலந்து சாப்பிட வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ள கூடாது கோவிலில் இருந்து பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு வரும் எலுமிச்சையை திருஷ்டி சுத்தி போட பயன்படுத்தக்கூடாது.


இதையும் படிக்கலாமே : வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?


வீட்டில் உள்ள எலுமிச்சம்பழத்தை மட்டும்தான் திருஷ்டி சுத்தி போட பயன்படுத்த வேண்டும். திருஷ்டிகள் நீங்க மற்றவர்களுடைய பொறாமை பார்வைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழத்துடன் ஒரு துண்டு இரும்பு கம்பி பச்சை மிளகாய் மற்றும் கறி துண்டு ஆகியவற்றை சேர்த்து கோர்த்து வாசலுக்கு நடுவே கட்டி தொங்க விடுவார்கள். இதே போல் வாரத்துக்கு ஒருமுறை அந்த எலுமிச்சையை மாற்றி வர திருஷ்டி தோஷங்கள் அண்டாது. இப்படி தலைவாசலுக்கும் எலுமிச்சை பழத்திற்கும் நிறையவே தொடர்புகள் இருக்கிறது.

எதனால் பல கடைகளிலும் வீடுகளிலும் பணியிடங்களிலும் எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் போட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


எலுமிச்சை வெறும் பழம் மட்டும் கிடையாது. அதற்கென்று பிரத்தியோக ஆன்மீகம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறையவே இருக்கிறது. குறிப்பாக எலுமிச்சயில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. அதனால் தண்ணீரில் எலுமிச்சை கலந்து எடுத்துக் கொள்வதால் முழுமையான ஆரோக்கியத்திற்கும் எதிர்ப்பு சக்திக்கும் உகந்ததாக இருக்கும். ஆன்மீக ரீதியாக பார்த்தால் எலுமிச்சைக்கு எதையும் நேர்மறையான ஆற்றலாக மாற்றும் தன்மையுண்டு.

ஒருவர் தீய எண்ணத்துடன் நம்மை அணுகினாலும் கூட ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை இருப்பதை பார்த்தால் உளவியல் ரீதியாக சற்று திகைத்து போய் நிற்பார்கள். அந்த திகைப்பு அவருடைய தீவிரத்தை குறைத்துவிடும். மற்றொன்று தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு அப்படின்னு பல ஆய்வுகளையும் தெரிவித்திருக்கிறார்கள். தண்ணீருக்கு தன்னை சுற்றியுள்ள ஆற்றலுக்கு தகுந்தவாறு மாறும் தன்மை உண்டு. இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.


கடவுளின் பெயர் சொல்லி ஹோமம் நிகழ்த்தும்போது கலச தீத்தமாகவும் அர்ச்சனையின் போது தீர்த்தமாகும் ஏன் சில சமயம் சாதுக்கள் பிறரை வாழ்த்தவோ அல்லது சபிக்கவோ வேண்டுமென்றால் கூட தண்ணீரை பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். நேர்மறை மற்றும் எதிர்மறையாற்றல் இரண்டிற்குமே தகுந்தவாறு மாறும் தன்மை உடைய நீரை நமக்கு ஏதுவான நேர்மறை ஆற்றலின்பால் ஈர்க்கவேண்டும்  என்றால் அங்கு எலுமிச்சையை பயன்படுத்துவது சிறப்பானது.


எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைக்கும் போது அதன் இயல்பான தன்மையினால் அது அந்த இடத்தை சுற்றியுள்ள தீய சக்திகளை போக்கும். வீட்டிலும் நாம் வேலை செய்யும் இடத்திலும் ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைப்பதினால் அதிலிருந்து பெருகும் ஆற்றல் அந்த இடத்தை முற்றிலுமாக தீய அதிர்வுகளிடமிருந்து சுத்திகரிக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த இடத்திற்கு தேவையான நல்ல அதிர்வுகள் அதாவது பாசிட்டிவ் எனர்ஜி பெற்றுக்கொடுத்து சகல சௌபாக்கியங்களையும் அருளும்.


இதையும் படிக்கலாமே ; நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

எதனால் எலுமிச்சம்பழத்தை வீட்டில் மஞ்சள் குங்குமம் தடவி நிலைவாசலில் வைக்கிறார்கள், எலுமிச்சை, கறி, மிளகாய் சேர்த்து வாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். எதனால் எலுமிச்சம் பழத்தை காவு கொடுக்கிறார்கள் என்று பலவிதமான கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொண்டோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *