ருத்ராட்சம் பிறந்த கதை தெரியுமா? ருத்ராட்சம் முகங்களும் பயன்களும். (Rudraksha power can transform)
அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது (adhikan.co.in)
ஒருவர் தொடர்ந்து ஏழேழு ஜென்மங்கள் புண்ணியம் செய்து வந்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் கிடைக்கும் என்று சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. சூரியனை கண்டு இருள் விலகுவதைப் போல ருத்ராட்சத்தை கண்டு துஷ்ட சக்திகள் விலகுகிறது.
- சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர்மூச்சாக கருதுகின்றனர்.
- அப்படிப்பட்ட ருத்ராட்சம் எப்படி உருவானது.
- சிவனிலிருந்து ருத்ராட்சம் பிறந்தது எப்படி?
- பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? கூடாதா?
- ருத்ராட்சத்தின் முகத்தை கண்டுபிடிப்பது எப்படி?
- அசைவம் சாப்பிடும் நாட்களில் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று சொல்கிறார்களே அது எதனால்?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு முக ருத்ராட்சத்தை பயன்படுத்த வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு எந்த முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.
ருத்ராட்சம் பற்றிய அனைத்து விதமான தகவல்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
திரிபுராசுரன் என்கிற அரக்கன் பிரம்மதேவரிடம் பெற்ற வரத்தை கொண்டு தேவர்களை துன்புறுத்தி இருக்கிறான். தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டு இருக்கிறார்கள். உடனே தேவர்கள் சக்தியை ஒன்றிணைத்து மிகப்பெரிய வல்லமை படைத்த அகோரம் எனும் ஆயுதத்தை உருவாக்கி இருக்கார் சிவபெருமான்.
அப்பொழுது சிவபெருமானுக்கு ஏற்பட்ட பேரிறக்கம் காரணத்தால் தன்னுடைய மூன்று கண்களையும் மூடி இருக்கார். பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் துளிகள் சிந்தி இருக்கிறது. அந்த கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக மாறி இருக்கிறது. அந்த ருத்ராட்சம் மரத்திலிருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் சூரியன் சந்திரன் அக்னி. இவை மூன்றும் சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்திலிருந்த பொழுது அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் ருத்ராட்சம் மரமாக தோன்றியது என்று மற்றொரு வரலாறும் கூறப்பட்டிருக்கிறது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழை துளியைப் போல சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம்.
ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம் ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர் தான். துன்பம் தூர ஓடிவிடும். ருத்ராட்சத்தை அணிந்து ருத்ர அம்சமாக இருப்பவர்களின் அருகில் எந்த தீய சக்தியும் நெருங்காது.
முதல் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள் சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று அணிந்தால் நன்மை. ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தால் இன்னும் கை மேல் பலன் கிடைக்கும். ருத்ராட்சத்தால் சிவலிங்கத்தை அலங்கரித்தால் அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும், லட்சுமி கடாட்சம் கிட்டும், பித்ரு தோஷம் நீங்கும், தலைமுறை தலைமுறைக்கு இன்னல் இல்லா வாழ்க்கை அமையும். சிவன் தந்த ருத்ராட்சத்தை அளிப்பவர்கள் ருத்ர சொரூபமாகவே மாறிவிடுகிறார்கள். வேலனுக்கு வேலாயுதம் போல எந்த ஆபத்தான சமயத்திலும் நம்மை காக்கும் சிவபெருமானின் ருத்ராட்சம்.
வேறு எந்த ஒரு விதைக்கும் இல்லாத தனி சிறப்பு ருத்ராட்ச விதைக்கு உண்டு. துளசி ஸ்படிக மாலைகள் நாம் துளையிட்ட பிறகே அதை கோர்த்து நாம் அணிந்து கொள்ள முடியும். ஆனால் ருத்ராட்சத்தை மனிதர்கள் எளிதில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இயற்கையாகவே இறைவனின் அருளால் ருத்ராட்சத்தின் நடுவே ஒரு துளையுடன் இருக்கும். ருத்ராட்சத்தை ஊறவைத்து அந்த நீரை குடிக்கும்போது வாந்தி, இருமல், உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாக இருக்கிறது.
இதையும் படிக்கலாமே :குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!
ருத்ராட்சத்திற்கு மனதை அடக்கி மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது. இதை அணிபவர்கள் இதை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள முடியும். ருத்ராட்சதிற்கு நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் அற்புத சக்தியும் சுய ஆற்றலை பெருக்கிக் கொள்ளும் திறனும் உண்டு. ருத்ராட்சத்தில் இருக்கும் இந்த சக்தியை சிலர் உடனடியாக உணரலாம், சிலர் படிப்படியாக உணரலாம்.
ஒன்று முதல் 27 முகங்கள் கொண்ட ருத்ராட்சத்தை ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
பெண்கள் அணிவதற்கு சில வரையறைகள் உண்டு.
அதை முறையாக பின்பற்றி அணிந்து கொள்வது நலம்.
ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.
பெண்கள் மாதவிலக்காக கூடியவர்கள் அணியாமல் இருப்பது நல்லது.
இரவில் தூங்கும் போது அதை கழற்றி பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது.
மாமிசம் சாப்பிடுபவர்கள் அன்று ருத்ராட்சத்தை கழற்றி வைத்து விடுவது நல்லது.
மறுநாள் குளித்துவிட்டு இறைவனை வணங்கி அணிந்து கொள்ளலாம்.
பிறப்பு இறப்பு போன்ற தீட்டு நாட்களில் ருத்ராட்சம் அணியக்கூடாது.
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும்.
கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்கு கஷ்டங்கள் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். ருத்ராட்சத்தை அணியும் பெண்களுக்கு லட்சுமி கடாட்ஷமும் மாங்கல்ய பாக்கியமும் தொழிலில் மேன்மையும் சகல விதமான ஐஸ்வர்யங்களும் தேடி வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்கலாமே :ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?
ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாகவும் ஆய்வுகளில் கூறப்பட்டிருக்கிறது. ருத்ராட்சம் அணிபவர்கள் அதை வாரத்திற்கு ஒரு முறை முறையாக பூஜை செய்து பின்பு அணிந்து கொள்வது உத்தமம்.
குறிப்பாக பிரதோஷம் அல்லது சிவபெருமானுக்கு பிடித்த நாளான திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது. ஒரு சுத்தமான தாம்பூல தட்டில் ஒரு வெற்றிலையை வைத்து அதன் மீது ருத்ராட்சத்தை வைத்து சந்தனம், பன்னீர், விபூதி, பால், வில்வம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அபிஷேகம் செய்வதற்கு முன்பு ருத்ராட்சத்தை ஒரு நாள் முழுக்க சுத்தமான பாலில் ஊறவைத்து அதற்கு பின்பு முறையாக பூஜை செய்து அணிந்து கொண்டால் நேர்மறை சக்திகள் நமக்கு கிடைக்கும்.
ருத்ராட்சத்தை அதிக பிரயாணம் மேற்கொள்பவர்கள், பல்வேறு இடங்களில் சாப்பிட்டு தூங்குபவர்களுக்கு அவர்களின் சக்தியின் பாதுகாப்பு கூடாக இருந்து ஒரு நல்ல உறுதுணையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே :அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.
ருத்ராட்சம் துஷ்ட சக்திகளுக்கு எதிராக செயல்படும் தன்மையுடையது. சிலர் தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்க தீய சக்திகளை பயன்படுத்துவார்கள். அந்த சமயத்தில் ருத்ராட்சம் பாதுகாப்பு கவசமாக மாறி நம்மை காப்பாற்றும்.
ருத்ராட்சத்தை உடலோடு ஒட்டி அணிந்து கொள்ளும்போது உடலுக்குள் ஏற்படும் பல்வேறு விதமான நோய் கிருமிகளை அழிக்க முடியும். அதிக பதற்றம், மன அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய்கள், புற்று நோய்கள் என பல்வேறு நோய்களை போக்கக்கூடிய ஒரு அபூர்வமான பொருளாக விளங்குகிறது இந்த ருத்ராட்சம்.
ருத்ராட்சத்தின் முகத்தை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சாத்துக்குடி பழத்தை எடுத்து உறித்தோம் என்றால் அதன் மேல் உள்ள கோடுகளை கொண்டு அதில் எத்தனை சுலை இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோலத்தான் ருத்ராட்சத்தின் மேல் உள்ள கோடுகளைக் கொண்டு அந்த ருத்ராட்சம் எத்தனை முகம் கொண்டது என தெரிந்து கொள்ளலாம்.
ஒரு முக ருத்ராட்சம் சிவபெருமானின் முகம் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடியது சூரியனின் ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.
இரண்டு முக ருத்ராட்சம் அணிந்தால் தேவ தேவிஸ்வரூபம் இது பாவங்கள் அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால் அறிவுத்திறன் மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
மூன்று முக ருத்ராட்சம்அணிவதால் அக்னிஸ்வரூபம் கிடைக்கும் தோஷங்களையும் பாவங்களையும் நெருங்க விடாமல் அது எரித்து விடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுப நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெற வழிவகுக்கும் கல்வி சிறப்பு தரும் வித்தைகள் கைகூடும்.
நான்கு முக ருத்ராட்சம் பிரம்ம தேவனின் வடிவம் வேதங்கள் புராணங்கள் கற்ற புண்ணிய பலன்கள் இரட்டிப்பாகும், இது ராகுபகவானின் எண் என்பதால் நல்ல செல்வ வளத்தையும் ஜாதகத்தில் ராகு பகவானின் தோஷம் இருந்தாலும் தீரும்.
ஐந்து முக ருத்ராட்சம் சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது, இதற்கு பெயர் காலம் உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால் தடைபடும் கல்வி தொடரும், நல்ல ஞானத்தை பெறுவார்கள், கலை துறையில் முன்னேற வழி பிறக்கும், பலரின் உதவிகள் கிடைக்கும் செயல்கள் வெற்றி அடையும்.
ஆறுமுக ருத்ராட்சம் முருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள், விரோதிகள் வீழ்வார்கள் எதிலும் வெற்றி கிட்டும், சொந்த வீடு சிறப்பை தரும் ஆறாம் எண் சுக்கிரனை குறிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும், மகாலட்சுமி யோகம் கிடைக்கும்.
ஏழு முகம் ருத்ராட்சம் மன்மதஸ்வரூபம் தெரிந்தோ தெரியாமலோ செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினால் யோகங்கள் தேடி வரும். இது கேது என்னாக இருப்பதால் உடல் பிணி நீங்கும், கல்வித்தடை அகலும், ஞானம் பிறக்கும்.
எட்டு முக ருத்ராட்சம் விநாயகர் பெருமானின் ஸ்வரூபவம் சனீஸ்வரனால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும், எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும், விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். எட்டாம் எண் சனி பகவானின் எண்ணாக இருப்பதால் எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்தவர்களுக்கு தொல்லை தந்தால் தொல்லை தந்தவர்களை சனி பிடிக்கும்.
ஒன்பது முக ருத்ராட்சம் பைரவ வடிவம் 100 பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது, சிவபெருமானின் வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும் முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால் தைரியம் ஏற்படும், பணவரவு பெருகும், இன்னல் இல்லாத வாழ்க்கை அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், தோஷங்கள் பாவங்கள் தீரும்.
பத்து முக ருத்ராட்சம் விஷ்ணு சொரூபமாக அமைகிறது இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும், தோல்வியாதி தீரும், கண் திருஷ்டி செய்வினை பாதிப்புகள் நீங்கும், பத்தாம் எண் சூரியனை குறிப்பதால் அரசாங்க பணிகள் கிடைக்கும், அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும், கண் நோய் குணமாகும்.
பதினொன்று முக ருத்ராட்சம் அணிவதால் ஏகாதச ருத்ர வடிவம் கிடைக்கும். 1000 அஸ்வ மேதை யாகங்கள் செய்ததால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலனை கொடுக்கும் கோடி பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும். இந்த பதினொன்றாம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால் அறிவு தெளிவு பெறும் இதை தலையில் சிறிது நேரம் வைத்திருந்தால் புத்தி நன்றாக வேலை செய்யும்.
பனிரெண்டு முக ருத்ராட்சம் துவாதச ஆதித்த ஸ்வரூபம் இது பயத்தை போக்கி மன தைரியத்தை கொடுக்கும். புண்ணிய பலனை அள்ளித்தரும் பனிரெண்டாம் எண் குருபகவானின் ஆதிக்கம் கொண்டதால் ஆற்றலும் செல்வ வளமும் தந்திடும் திருமண தடை விலகும்.
பதின்மூன்று முக ருத்ராட்சம் முருகப்பெருமானை பூஜித்தால் என்ன பலனோ அந்த பலனை எளிதாக கொடுக்கும் பெற்றோருக்கு அறியாமல் செய்த பாவத்தை போக்கும் பெற்றோரிடத்தில் அன்பு ஏற்படும். பதின்மூன்றாம் எண் ராகு பகவானை குறிப்பதால் திடீர் யோகத்தையும் ஏற்படுத்தும்.
பதினான்கு முக ருத்ராட்சம் சிவபெருமானாகவே கருதப்படுவார்கள் அதிர்ஷ்டம் தேடி வரும். செல்வந்தர்களாக திகழ்வார்கள். இன்னும் பல நல்ல பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு சுபிட்சத்தை தரும் ஆற்றல் கொண்டது.
இதில் ஒரு முக ருத்ராட்சமும் 14 முக ருத்ராட்சமும் கிடைப்பது அரிது.
ருத்ராட்சத்தை எப்படி அணிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தை சிகப்பு கயிரில் கழுத்தில் கட்டி அணியலாம் அல்லது தங்க சங்கிலியிலும் வெள்ளி சங்கிலியிலும் கட்டலாம். கருப்பு கயிற்றில் கட்டக்கூடாது ருத்ராட்சத்தின் மேல் பக்க முகம் பிரம்மா, கீழ்புறம் விஷ்ணு, நடுப்பகுதி ருத்ரன் என்கிறது சாஸ்திரம். அதனால் ருத்ராட்சம் அணிந்தால் முப்பெரும் தெய்வங்களின் ஆசி கிடைக்கும். ருத்ராட்சத்தை நன்றாக கவனித்து தரம் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். முள் இல்லாதவையாக இருக்க வேண்டும் பூச்சி எரித்தவையாக இருக்கக் கூடாது பிழவும் இருக்கக்கூடாது.
27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.
- அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒன்பது முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- பரணி நட்சத்திரம் ஆறுமுகம் 13 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- கார்த்திகை நட்சத்திரம் 12 முகம்கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- ரோகினி நட்சத்திரம் இரண்டு முகம்கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்று முகம்கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- திருவாதிரை நட்சத்திரம் 8 முகம்கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- புனர்பூசம் நட்சத்திரம் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- பூசம் நட்சத்திரம் ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- ஆயில்யம் நட்சத்திரம் நான்கு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- மகம் ஒன்பது முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- பூரம் நட்சத்திரம் ஆறுமுகம் 13 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- உத்திரம் நட்சத்திரம் 12 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- ஹஸ்த நட்சத்திரம் இரண்டு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- சித்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூன்று முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- சுவாதிநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 8 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- அனுசநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நான்கு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒன்பது முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆறுமுகமும் 13 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 12 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரண்டு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- அவிட்டநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூன்று முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 8 முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நான்கு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்.