புரட்டாசி விரதம் தோன்றிய வரலாறு
என் இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். ஆடி வெள்ளி ஆவணி ஞாயிறு அந்த வரிசையில் அடுத்து வருவது புரட்டாசி சனி. இந்த புரட்டாசி மாதம் முழுவதும் திருமாலுக்கு உகந்த நாளாக விரதம் இருந்து வழிபட்டு வருகின்றோம். ஆனால் திருமாலை புரட்டாசி மாதத்தில் வழிபடுவதற்கு சனி பகவான் தான் ஒரு முக்கிய காரணமாய் இருந்திருக்கிறார். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்று சொல்லி தான் காலம் காலமாக வழிபட்டு வந்திருக்கிறோம். ஆனால் அதுதான் இல்லை ஆதி சக்தியான பார்வதி தேவிக்கும் சிவன் வழி பெற்றதற்கு உகந்த மாதமும் இந்த புரட்டாசி மாதம் தான்.
பாண்டவர்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு கிருஷ்ணர் இந்த புரட்டாசியில் ஒரு விரதம் இருக்க சொல்லி இருக்கிறார். அது என்ன விரதம் என்றால் சனி தோஷம் நீங்க பெருமாளை ஏன் புரட்டாசியில் வழிபடவேண்டும். இப்படி புரட்டாசி மாதத்தில் நடந்த பல ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளையும் அதிலே குறிப்பாக ஏழுமலையான் வாசம் செய்யும் திருமலையில் திருமால் என்னவெல்லாம் அதிசயங்கள் நிகழ்த்தியிருக்கிறார் புரட்டாசி மாதம் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று பல பின்னணி புராண வரலாற்று சிறுகதைகளை
நீங்கள் புரட்டாசி விரதம் இருக்கின்றீர்கள் என்றால் பெருமாளுக்கு விரதம் இருக்கிறதோடு மற்ற எந்தெந்த தெய்வங்களுக்கு எல்லாம் விரதம் இருக்கலாம்
ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தெய்வத்தை முன்னிறுத்தி வழிபட்டு வந்தாலே அந்த தெய்வத்தினுடைய அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ஒரு மாதம் முழுவதும் ஒரு தெய்வத்தை நோக்கி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் அந்த தெய்வத்துடைய அருள் முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் அமைந்திருக்கிறது.
ஏன் இந்த புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு இவ்வளவு சிறப்பு வாய்ந்தது அதிலும் குறிப்பாக சனிக்கிழமை தெரிந்து கொள்ளலாம். பத்மாவதி தாயாரை கரம் பிடிக்க ஸ்ரீனிவாச பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தான்.ஏன் சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது என்றால் சனிபகவான் விஷ்ணுவிடம் இரண்டு முறை எல்லாரும் வெறுத்து ஒதுக்கிவிட்டு சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த தினமாக மாற வேண்டும் என்று வரம் வாங்கி இருக்கிறார் கிரன்யன்.
இதையும் படிக்கலாமே :
ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?
கிரன்யன் கஸுப்போட சகோதரி ஹோலிகா துபாகர யுகத்தில் விஷ்ணு பகவான் கண்ணனாக பிறந்திருப்பதை தெரிந்து கொண்டு அவரை கொல்ல முயற்சி செய்வார். அப்பொழுது சனி பகவானுடைய பார்வைப்பட்டு ஜோதிகா எரிந்து சாம்பலாகி விடுவாள். அப்பொழுது சனிபகவான் கிருஷ்ணரிடம் வாங்கிய வரம்படி சனிக்கிழமை விஷ்ணுவிற்கு உகந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கலியுகத்தில் பெருமாள் திருமலையில் அவதரித்த பிறகு ஒரு முறை நாரதர் சனி பகவானிடம் போய் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உன்னுடைய சக்தியை பயன்படுத்தி யாரை வேணுமானாலும் நீ துன்பப்படுத்தலாம் ஆனால் திருமலை திருப்பதி பக்கம் போய் விடாதே என்று சனி பகவானை தூண்டி விடுவது போல் சொல்லி விட்டு சென்று விடுகிறார். எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே செய்வது போல் சனிபகவானும் என்னை யார் என்ன செய்ய முடியும் என்று திருமலை மேல் தன்னுடைய காலை வைத்திருக்கார். திருமலையில் கால் வைத்த நொடியை சனி பகவான் பயங்கரமாக தூக்கி வீசப்பட்டிருக்கார்.
திருமலையில் யார் இருக்கின்றார் என்று தெரிந்தும் மற்றவர்களை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனி பகவானே துன்பப்பட்டு நடுங்கி திருவேங்கடவராக இருக்கும் மகாவிஷ்ணுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருக்கார். கோபம் கொண்ட திருமால் சனி பகவானிடம் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்கக்கூடாது என்கிற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.
சனிபகவானம் திருமாலிடம் இனிமேல் நான் உங்களுடைய உண்மையான பக்தர்களை என்றென்றும் துன்பப்படுத்த மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். சனி பகவான் திருமாலிடம் ஒரு வரமும் கேட்டு வாங்கி இருக்கிறார் நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை அதனால் அந்த நாளை உங்களுக்கு உகந்த நாளாக மாற்றி உங்களுடைய பக்தர்கள் உங்களை எண்ணி பூஜை செய்ய வேண்டி வந்தால் அவர்கள் கேட்கும் வரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்று சொல்லி இருக்கார்.
திருமாலும் சனி பகவானுக்கு வரம் கொடுத்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக மாற்றிக்கொண்டார். அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக அதிக மகத்துவம் நிறைந்த நாளாக உருவாகி இருக்கிறது. சனிபகவானை ஆயுள் காரகன் என்று சொல்வார்கள்.
இவர் சூரியன் மற்றும் சாயாதேவிக்கு பிறந்தவர். இவர் பிறந்ததும் புரட்டாசி சனிக்கிழமை சனி கிரகத்தை கட்டுப்படுத்தும் சக்தி மகா விஷ்ணுவிடம் இருக்கிறது. நவகிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியதாக புரட்டாசி மாதத்தை பார்க்கப்படுகிறது. எதனால் என்றால் புதன் பகவானோட அதிதேவதியா மகாவிஷ்ணு இருக்காரு அதனால் புரட்டாசி மாதம் விரதமும் வழிபாடும் பகவான் மகாவிஷ்ணுவோட அருளை பெற்று தரும் என நம்பப்படுகிறது.
சனி பகவானும் புதனும் நட்பு கிரகங்கள் என்பதினால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை அதிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. சரி பகவான் பிறந்த இந்த புரட்டாசி மாதத்தில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வந்தால் சனி தோஷம் நீங்குவதோடு அஷ்டம சனி கண்ட சனி ஏழரை சனி போன்ற சனியோட பிடியில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிராத்திப்பதன் மூலம் சனியோட உக்கிரகம் குறைந்து சனி பகவானால் ஏற்படும் தடைகள் நீங்கும் என்று சொல்கிறார்கள்.
முன்னொரு காலத்தில் திருமலையில் பீமன் என்கிற ஒரு குயவன் வாழ்ந்து வந்திருக்கான் அவன் பெருமாளுடைய தீவிர பக்தனாக இருந்திருக்கான் பரம ஏழையான பீமன் விரதத்தை மேற்கொள்ள கோவிலுக்கு போக கூட வசதி இல்லாமல் இருந்திருக்கிறான். அப்படியே கோயிலுக்கு போனாலும் அவனுக்கு பூஜை செய்ய தெரியாது. பீமன் குயவுத் தொழில் செய்து வந்திருக்கிறான். கோவிலுக்குப் போகும் சூழல் இல்லாததால் பெருமாளை இங்கேயே வரவழைத்துவிட்டால் என்ன என்று பீமனுக்கு தோன்றுகிறது.
பீமன் அவனிடமிருந்த களிமண்ணால் பெருமாளுக்கு ஒரு சிலையை தயார் செய்து இருக்கிறான். அந்த சிலைக்கு பூஜை செய்ய பூக்கள் வாங்க கூட அவனிடம் பொருள் வசதி இல்லை. அதனால் தினமும் வேலை முடிந்து வந்த உடனே மீதம் இருக்கும் களிமண்ணிலையே பூக்கள் செய்து அந்த பூக்களை மாலையாக கோர்த்து பெருமாளுக்கு போட்டு வந்திருக்கான். இப்படியே போயிட்டு இருக்கும்போது அந்த நாட்டை ஆண்டு வந்த அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தனாக இருந்திருக்கார்.
அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருமலைக்கு போய் வெங்கடாஜலபதிக்கு தங்க பூ மாலை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு வாரம் அவர் போட்டு விட்டு வந்த தங்க பூ மாலை அடுத்த வாரம் போய் பார்க்கும்போது களிமண்ணால் செய்யப்பட்ட பூமாலையாக மாறி இருக்குமாம். இதைப் பார்த்த தொட்ட வானுக்கு ரொம்ப ஆச்சரியமாக போயிருக்கிறது. அங்கு இருக்கும் கோயில் அர்ச்சகர்கள் பணியாளர்களிடம் கேட்டு இருக்கார். அவங்களுக்கும் இந்த விஷயம் பற்றி எதுவுமே தெரியவில்லை.
இந்த விஷயத்தை நினைத்து குழப்பமடைந்த தொண்டைமானோட கனவில் தோன்றிய பெருமாள் நான் என்னோட தீவிர பக்தனான குயவன் பீமனோட மாலையை தான் ஏற்றுக்கொண்டேன் வறுமையில் வாழும் அவனுக்கு தேவையான உதவிகளை செய்துகொடு என்று அரசனுக்கு ஆணையிட்டு இருக்கார். திருமாலோட ஆணைப்படி அரசன் தொண்டைமானும் குயவன் பீமனை சந்தித்து அவனுக்கு தேவையான பொருட்களை கொடுத்திருக்கிறார். பெருமாள் மீது குயவன் பீமன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் விதமாக இப்பவும் திருப்பதியில் மண் சட்டியில்தான் நெய் வேத்தியம் செய்து வருகிறார்கள்.
இதையும் படிக்கலாமே : வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?
புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு மட்டும் உகந்த மாதமாக இல்லாமல் சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக அவருக்கும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குமாம். நண்பகலில் சிவ வழிபாடு செய்து வந்தால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல் இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்குமாம்.
மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்து வந்தால் சிவபெருமானுடைய அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாம் நீங்குவதோடு எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமாம். அதே மாதிரி அம்பிகைக்கு உகந்த நவராத்திரி ஒன்பது நாட்கள் வழிபாடும் இந்த புரட்டாசி மாதத்தில் தான் வரும். சிவபெருமானின் அருளை பெற்று தரும் கேதாரீஸ்வர விரதம் வருவதும் இந்த புரட்டாசி மாதத்தில் தான்.
புரட்டாசி மாதத்தை பொதுவாக விரத மாதமென்று தான் சொல்லுவார்கள். பார்வதி தேவி வன்னி மரத்தடியில் அமர்ந்து சிவபெருமான நோக்கி கடுமையான தவம் இருந்துருக்காங்க. பார்வதியுடன் தவத்தில் மிகுந்த சிவபெருமான் தன்னுடைய உடலில் பாதி பாவத்தை பார்வதிக்கு கொடுத்திருக்கிறார். பார்வதி தேவியை ஞான கௌரியாக மாற்றி சிவபெருமான் ஆசி வழங்கியிருக்கிறார்.
இந்த தேவியை பிரம்மதேவன் கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் வழிபட்டு இருக்கார். அந்த நாள் தான் ஞானபஞ்சமி கௌரி பஞ்சமி என்று சொல்கிறார்கள். போர்வீரர்கள் தங்களுடைய வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர்பிறை பிரதமையில் வழிபட்டு வந்திருக்கிறார்கள். இதே போல நாமும் புரட்டாசி வளர்பிறையில் அம்பிகையை வழிபட்டு வந்தால் அளவில்லா செல்வமும் ஞானமும் கிடைக்குமாம்.
புரட்டாசியில் வரும் துர்வாஷ்டமி விரதம் ஜெயிஸ்டா விரதம் விநாயகர் பெருமாளுக்கு உரிய விரதமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டு வந்தால் அவருடைய முழுமையான அருளை நாம் பெறலாம் என்று சொல்கிறார்கள். அதே மாதிரி புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் 16 நாட்களும் லட்சுமி தேவியை நோக்கி பூஜை செய்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கி செல்வங்கள் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்
துவாகர யுகத்தில் தங்களுடைய நாட்டை இழந்து வனவாசத்தில் துன்பப்பட்டு வந்த பாண்டவர்கள் சகல பாக்கியங்களையும் பெற ஸ்ரீ கிருஷ்ணரே ஒரு விரதம் இருக்க சொல்லி இருக்கார். இந்த புரட்டாசி மாதத்தில் அந்த விரதத்தை அனந்த சதுர்த்தி விரதம் என்று சொல்லுவார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி என்று ஆனந்த பத்மநாபன் வேண்டி கடைபிடிக்க வேண்டிய ஒரு விரதம் தான் அனந்த விரதம் பக்தியோட இந்த விரதத்தை செய்தால் தீராத வினைகள் எல்லாம் தீருமாம்.
அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேருமாம். 14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வந்ததால் பாண்டவர்களுக்கு தோல்வியே இல்லாமல் வெற்றிகள் அவர்கள் வசமாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் பித்ருகளுடைய ஆசியை நாம் பெற முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி தெய்வங்களோட ஆசியும் பித்ருகளோட ஆசியும் ஒருங்கிணைந்து புரட்டாசி மாதத்தில் நமக்கு கிடைக்கிறதால் இந்த மாதம் அதிக முக்கியத்துவத்தை பெருகிறது. புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை 15 நாட்களும் மஹாளயே அமாவாசை இந்த காலத்தில் முன்னோர்களை நினைத்து பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் கொடுக்கிறது மூலமாக ஏழைகளோட பசி பறந்தோடுவது போல் நம்மளுடைய துன்பங்கள் அனைத்தும் நம்மளை விட்டு நீங்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த புரட்டாசி மாத பாகுலி தினத்தில் சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு துன்பங்களே நேராது என்று சொல்லிருக்காங்க.
விநாயகரின் பரம பக்தரான திருச்சமரம் முனிவரோட மகன் பலி விநாயகரை வழிபட்டு பல வரங்களை வாங்கி இருக்கான். முக்கியமானது பொன் வெள்ளி இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அந்த கோட்டைகளை வைத்துக்கொண்டு மூன்று உலகங்களையும் துன்புறுத்தி வந்திருக்கான் திரிபுரங்களுக்கும் அதிபதியான அந்த அசுரனோட தொல்லைகளை பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சரணடைந்து இருக்கிறார்கள்.
அவர்களை காப்பாற்ற நினைத்து விநாயகர் அந்த அசுரன் மீது போர் தொடுத்திருக்கிறார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் சிவனுடைய கனை அந்த அசுரன் மீது பாய்ந்திருக்கிறது. திரிபுரனாகிய பலி சிவபெருமானோட காலடிகளை சரணம் அடிச்சிருக்கார் அப்படி அந்த அரக்கன் சிவனோட பாதத்தில் சரணடைந்த தினம் புரட்டாசி மாதம் பௌர்ணமி அந்த நாளை பாகுலி தினம் என்று அழைக்கிறார்கள். இந்த நாளில் சிவனை
வழிபடுகிறவர்களுக்கு துன்பங்கள் நேராது.