பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்

 

பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் – Top 10 Health Benefits of Jackfruit – Health Tips.


பலாப்பழம்.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே பல வகையான பழங்கள் நமக்கு கிடைக்க ஆரம்பித்து விடும் அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்கக்கூடிய ஒரு முக்கியமான பழம் பலாப்பழம். பழங்களிலேயே மிகப்பெரிய பழமும் கூட பலாபழத்தில்  மஞ்சள் பலா சிகப்பு பலா தேன் பலா வருக்கை பலா  என பல வகையான பழங்கள் இருக்கிறது.


ஒவ்வொரு வகையான பலாப்பழத்திற்கும் வெவ்வேறு விதமான சுவையும் மனமும் உண்டு. பலாப்பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியதுதான் பலாப்பழம். 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பலாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் என்ன?

 

ஒன்று : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


பலாப்பழத்தில்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான விட்டமின் சி சத்து அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் பலாப்பழத்தில்  13.7 மில்லி கிராம் விட்டமின் சி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.

 இதன் மூலமாக கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளான சின்னம்மை, மெட்ராஸ் ஐ, வேர்க்குரு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க கூடியது பலாப்பழம்.

இரண்டு : குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 



பலாப்பழத்தில்  சாலிபுல் பைபர் (Soluble Fiber)மற்றும் இன்சாலிபுல் பைபர் (Insoluble Fiber) என்று சொல்லக்கூடிய இரண்டு வகையான நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. நூறு கிராம் பலாப்பழத்தில் 2.5 கிராம் டயட்டரி பைபர் (Dietary Fiber) இருக்கிறது. இது வயிற்றில் இருக்கக்கூடிய ப்ரோபயாட்டிக் என்னும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களை அதிகரித்து குடல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக பலாப்பழத்தில் இருக்கக்கூடிய இன்சாலிப்பில் பைபர் (Insoluble Fiber) என்னும் கரையா நார்ச்சத்து மலக்குடலில் தேங்கியுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றும். அதனால் மலச்சிக்கலையும் தடுக்கக்கூடியது பலாப்பழம்.


இதையும் படிக்கலாமே ; சிறுநீரக கல் கரைய உணவுகள்

மூன்று ; எலும்புகளை வலுவாக்கும் 



பலாப்பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் மிகவும் அவசியமான கால்சியம் சத்து நிறைய இருக்கிறது. 100 கிராம் பலாப்பழத்தில்  34 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கிறது.

 பலாப்பழத்தில் இருக்கக்கூடிய கால்சியம் சத்தினை குடல் எளிதாக உறிஞ்சுவதற்கு  தேவையான விட்டமின் சி சத்தும் இந்த பலாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆஸ்ட்டியோ பிளாஸ்ட் (Osteoblast) என்னும் புதிய எலும்பு செல்கள் உருவாவதற்கு தேவையான மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தும் நிறைந்தது இருக்கக்கூடியது இந்த பலாப்பழம்.  எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள்  வராமல் தடுக்கவும் எலும்புகளை வலுவாக்கவும்   அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு பழம் பலாப்பழம்.

நான்கு : ரத்த சோகையை வராமல் தடுக்கும்.



அனிமியா (Anemia) என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் அயன் சத்து என்று சொல்லக் கூடிய இரும்புச்சத்து உடலில் குறைவாக இருப்பதுதான். 

பலாப்பழத்தில்  இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் பலாப்பழத்தில்  0.60 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்தில் 7.5% ஆகும்.

இரும்பு சத்து 

இது உடலில் புதிய சிகப்பு அணுக்களை உற்பத்தி செய்வதோடு இரத்த சோகை வராமல் தடுக்கும்.  அனிமியா என்று சொல்லக்கூடிய இரத்தசோகை பிரச்சனையினால்  அவதிப்படுபவர்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

ஐந்து : கண் பார்வை திறனை அதிகரிக்கும் 



பலாப்பழத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் இதில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின் சத்து அதிகம் இருப்பது தான். அதிலும் மஞ்சள் பலாவை விட செல்லக்கூடிய சிவப்பு பலாவில்   சற்று கூடுதலான அளவு விட்டமின் ஏ இருக்கு. 100 கிராம் பலாப்பழத்தில்  110 அய்யூ விட்டமின் ஏ இருக்கு இது கண் காருண்யா செல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு கண் பார்வைத் திறனை அதிகரிக்கும். மேலும் பலாப்பழத்தில் இருக்கக்கூடிய பிற நுண்ணூட்ட சத்துக்கள்  அதிக வெயில் காரணமாக கண்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அல்ட்ரா வைலட் ரேடியேஷனில்  இருந்தும் கண்களை பாதுகாக்க கூடியது இந்த பலாப்பழம்.

ஆறு ; இருதயத்தை பலப்படுத்தும் 


பலாப்பழத்தில்  இருதய தசைகள் சீராக சுருங்கி விரிவதற்கு தேவையான பொட்டாசியம் சத்து அதிக அளவில்  இருக்கிறது. 100 கிராம் பலாப்பழத்தில்  448 மில்லிகிராம் பொட்டாசியம் இருக்கிறது. இது இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்வதோடு இருதயத்தையும் பலப்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து  ரத்தத்தில் இருக்கக்கூடிய எல் டி எல் என்ற கெட்ட கொழுப்பை கரைத்து ஹெச்டிஎல்  என்னும் நல்ல கொழுப்பை நன்றாக அதிகரிக்கும். இதன் மூலம் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது பலாப்பழம்.


இதையும் படிக்கலாமே ; இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.

ஏழு ; கேன்சர் வராமல் தடுக்கும்.

 


ஆண்டி கேன்சர் பிராப்பர்டீஸ் (Anti-cancer properties) அதிகம் நிறைந்த பழங்களில் மிக முக்கியமான ஒரு பலம் பலாப்பழம். பலாப்பழத்தில்  லிக்னன்ஸ், ஐசோப்ளவோன்ஸ், சபோனின்ஸ், எலவோநாய்ட்ஸ் மற்றும் கரோடநாய்ஸ் கொண்ட ஆன்ட்டி கேன்சர் பிராப்பர்டீஸ் அதிகம்  இருக்கிறது. இது கேன்சர் உருவாவதற்கு காரணமான பீரிராடிக்கல் (free radicals) செல்லும் செல்களை உடலில் இருந்து வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கிறது இந்த பலாப்பழம். மேலும் இதில் இருக்கக்கூடிய இன்சாலிப்பில் பைபர் எனும் கரையா நார்சத்து  ஒரு சிறந்தது மட்டுமில்லாமல் கோலன் மீட்பு செல்களையும் பாதுகாக்கும். இதன் மூலமாக கோலம் கேன்சர் என்னும் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது பலாப்பழம்.

எட்டு : சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது 



பலாப்பழத்தில்  பிரக்டோஸ் என்று சொல்லக்கூடிய நேச்சுரல் சுகர் நிறைந்திருந்தாலும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக இது ஒரு மீடியம் கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு பழம். இது மட்டும் இல்லாமல் பலாப்பழத்தில் இருக்கக்கூடிய விட்டமின்ஸ், மினரல்ஸ், ப்ளவோநாய்ட் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் டயட்டரி பைபர் போன்ற சத்துக்கள்  சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது என்றாலும் ஒன்று அல்லது இரண்டு சுளைகளை சர்க்கரை அதிக எண்ணிக்கையிலான சுலைகளை  சாப்பிடக்கூடாது அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது லைசனுக்கு லோடு  அதிகமாகும் போது   ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கிறதுக்கும் வாய்ப்புகள் உண்டு சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிட ஒரு சிறந்த பழம் இந்த பலாப்பழம்.

ஒன்பது : தைராய்டுசுரப்பை சீராக்கும்



தைராய்டு கிளாஸ் மெட்டபாலிசம் சீராக நடைபெற மிகவும் அவசியமான சத்து காப்பர் சத்து. பலாப்பழத்தில்  இந்த காப்பர் சத்து அதிக அளவில் இருக்கிறது. இது தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீர் செய்வதோடு உடலில் தைராய்டு மெட்டபாலிசம் சீராக வேலை செய்ய உதவி செய்கிறது. தைராய்டு பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டால் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.


இதையும் படிக்கலாமே ; இன்சுலினை தூண்டும் 10 உணவுகள்

பத்து :  நரம்புகளை வலுவாக்கும் 

பலாப்பழத்தில்  நரம்புகளை வலுவாக்குவதற்கு‌ தேவையான நியாசின் மற்றும் நியாஸின் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் பலாபழத்தில்   4 மில்லி கிராம் நியாஸின் சத்து இருக்கிறது. கை கால் நடுக்கம் நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள்  பலாப்பழத்தை சாப்பிட்டு வர  நல்ல எனர்ஜியை கொடுப்பதோடு நரம்புகளையும் ரத்த ஓட்டத்தையும்  அதிகரிக்க வைக்கிறது. இதன் மூலம் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது பலாப்பழம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *