நோய்எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை பொடி

அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது நோய்எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை பொடி

சுவையான  முருங்கைக்கீரையில் செய்யக்கூடிய இந்தப் பொடியை எப்படி செய்யலாம்.

முருங்கைக்கீரையில் பொடி செய்து வைத்துக் கொண்டால் அவசரத்திற்கு இட்லி தோசைக்கு தொட்டுக்க பொடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் சாதத்தில் போட்டு கலந்து முருங்கைக்கீரை சாதகமாகவும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். நோய்எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் முருங்கைக்கீரை பொடி

குழந்தைகள் கூட இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி

சாப்பிடுவார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல்  நூற்றுக்கணக்கான வியாதிகளுக்கு தீர்வு இதில்

இருக்கிறது.

முருங்கைக்கீரை.



முருங்கைக்கீரை பொடி செய்வதற்கு  ஒரு கட்டு முருங்கை கீரையை

எடுத்து அதில் இருக்கும் இலையை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.

தனியாக எடுத்த கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி

நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகு தண்ணீரை நன்றாக வடித்து எடுக்க

வேண்டும்.

 தண்ணீர் நன்றாக வடிந்த பிறகு ஒரு காட்டன் துணியை விரித்து அதன்

மேல் கழுவி வைத்துள்ள கீரையை கொட்டி நிழலிலே ஈரம் போகும்

அளவிற்கு காய் வைக்க வேண்டும். ஈரம் நன்றாக காய்ந்த பிறகு

கீரையை எடுத்து பொடி செய்யலாம்.

தேவையான பொருட்கள் அளவு
முருங்கை கீரை 1 கட்டு
எண்ணெய் 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
வேர்க்கடலை. 2 டீஸ்பூன்
சீரகம். 1 டீஸ்பூன்
மல்லி. 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 10
கருப்பு எள். 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிய துண்டு
புளி கொஞ்சம்.
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
உப்பு. 1 டீஸ்பூன்

செய்முறை:-

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக சூடு ஏறியதும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், கருப்பு எள், பெருங்காயம் மற்றும் புளி ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்து எடுத்த பொருட்களை ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆறவிடவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்து இருக்கும் முருங்கை கீரையை எடுத்து வாணலியில் போட்டு நன்றாக மொருமொருவென வரும் வரை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து அதையும் சூடு குறைய காய் வைக்கவும்.

வறுத்து வைத்திருக்கும் மல்லி உளுந்து வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அமைக்கவும். பிறகு முருங்கை கீரையையும் மிக்ஸியில் போட்டு அரைத்து இரண்டையும் கலந்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக மிக்ஸியை சுற்ற விட்டு ஒரு தட்டில் கொட்டி ஆற‌விடவும்.

ஆறிய‌ முருங்கை கீரை பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொண்டு தேவைபடும் பொழுது சாதத்திலோ அல்லது இட்லி தோசை பொடியாகவோ சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் உடம்பிற்கு நிறைய சத்துக்கள் கொடுக்கும் உணவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *