செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA) | சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA) | சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA)

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்



உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில்


செல்வமகள் சேமிப்பு திட்டம்:


மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samriddhi Yojana Scheme). இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது.


செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை:


10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.


எப்போது இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது

சுகன்யா சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜனவரி 22 தேதி 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.



210 ரூபாய் சேமித்தால் 8,50,000 ரூபாய் தரும் மத்திய அரசின் திட்டம்.

யார் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம் (selva magal thittam):

செல்வமகள் சேமிப்பு திட்டம் / selva magal thittam: ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும்.


இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1,000/- செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.


செல்வமகள் சேமிப்பு திட்டம் தகுதி (selva magal scheme)

செல்வமகள் சேமிப்பு திட்டம்- இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும்.ஒரு வேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் எத்தனை ஆண்டுகள் வரை துவங்கலாம்.





ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1,000/- இக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் வரை பணம் செலுத்தப்பட வேண்டும்.



தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில்  5 வருடத்தில் Rs. 2,34,664 வட்டி பெறலாம்.


இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மாதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும்.


செல்வமகள் சேமிப்பு திட்டம் முதலீடு அளவுகள்.


செல்வமகள் சேமிப்பு திட்டம் குறைந்தபட்சம் ரூ.250/- முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும்.ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் போது அந்த தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.


இந்த சேமிப்பு கணக்கை தொடர முடியாத போது என்ன ஆகும்?


குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான, வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும்.மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.



தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில்  5 வருடத்தில் Rs. 2,34,664 வட்டி பெறலாம்.

கணக்கை இடமாற்றுதல்:


செல்வமகள் சேமிப்பு திட்டம் – கணக்கை வேறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாதாந்திர முதலீடு வருடத்திற்கு முதலீடு செய்யும் தொகை மொத்த முதலீடு முதிர்வு தொகை
        500.00        500.00  x  12   =       6,000.00      90,000.00   1,83,488.66
     1,000.00     1,000.00  x  12   =     12,000.00   1,80,000.00   5,46,977.31
     2,000.00     2,000.00  x  12   =     24,000.00   3,60,000.00 10,93,954.62
     5,000.00     5,000.00  x  12   =     60,000.00    9,00,000.00 27,34,886.56
     7,000.00        7,000.00  x  12   =     84,000.00 12,60,000.00 38,28,841.19
   10,000.00   10,000.00  x  12   =  1,20,000.00 10,00,000.00 54,69,773.12
   12,500.00      12,500.00  x  12   =  1,50,000.00 22,50,000.00 68,37,216.41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *