சாமை அரிசியின் நன்மைகள்.

 

சாமை அரிசியின் நன்மைகள்.

Top 7 Health Benefits of Little Millet(Samai)


சாமை அரிசி சிறுதானியங்களிலேயே சிறப்பு வாய்ந்த சிறுதானியம்  சாமை அரிசி தான். இது மற்ற சிறுதானியங்களை விட பார்ப்பதற்கு அளவில் மிகச்சிறியதாக இருக்கும். இது ஆங்கிலத்தில லிட்டில் மில்லட் என்று அழைக்கிறார்கள். சாமை அரிசி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழந்தமிழர்களும் நம் முன்னோர்களும் அதிகம் சாப்பிட்ட ஒரு சிறுதானியம்.  சாமை அரிசி இந்தியாவில் உருவான  சிறுதானியம் என்பதால் இதை இந்தியன் மில்லட் என்று அழைக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சாமை அரிசியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்றால் புரதச்சத்து, கொழுப்பு சத்து, தாது உப்புகளான மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனிசு என ஏராளமான சத்துக்கள் நிறைந்தது சாமை அரிசி.


சிறு தானிய உணவுகளில் ஒன்றான சாமை அரிசி சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று : சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

சாமை அதிக அளவு நார்ச்சத்தும் மிகக் குறைந்த அளவு மாவுச்சத்தும் நிறைந்த சிறுதானியம். சாமை அரிசி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மட்டுமில்லாமல் லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட  சிறுதானியம். இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாக  ஏறுவது தடுக்கப்பட்டு சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு   உதவக்கூடிய சிறுதானியம் சாமை.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள்  சாமை அரிசியை வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஒருவேளை உணவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.


இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது

இரண்டு : இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.


இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய காரணங்கள் என்னவென்றால்  ரத்தத்தில் எல்டிஎல் மற்றும் ட்ரிக்லீசெரிட் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதும் இரத்த சர்க்கரையின் அளவுகள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதும் தான் காரணம். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் ஆற்றல் சாமை அரிசிக்கு இருக்கிறது. சாமை அரிசியில் இருக்கக்கூடிய நியாசின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடலான ப்ளோவனாய்ட், டானின்ஸ் மற்றும் பாலிபெனோல்ஸ் போன்ற சத்துகள்  ரத்தத்தில் இதயத்தை பாதிக்கக்கூடிய கெட்ட கொழுப்பை குறைத்து ஹெச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் இதய  ஆரோக்கியத்தை‌ மேம்படுத்தக் கூடியது சாமை அரிசி.


மூன்று: உடல் எடையை குறைக்கும்.



 

உடல் எடையை குறைக்க நினைக்கிறவர்களுக்கு சிறந்த  சிறுதானியம் சாமை அரிசி. சாமை அரிசியில் அதிக அளவில் பாஸ்பரஸ் சத்து நிறைந்திருக்கிறது. 100 கிராம் சாமை அரிசியில்  220 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்து இருக்கிறது.  பாஸ்பரஸ் சத்து உடல் எடையை குறைக்கவும் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும் உதவி செய்கிறது. மற்றும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை  குறைக்கும்.


குறிப்பாக விஷெரல் பேட் என்று சொல்லக்கூடிய அடிவயிற்றுக் கொழுப்பை கரைக்கும் தன்மை இந்த சாமை அரிசிக்கு உண்டு. உடல் எடையை குறைக்க தினசரி ஒருவேளை உணவாக சாமை அரிசி உணவை சாப்பிடுவது நல்லது.


நான்கு : ரத்தசோகையை தடுக்கும்.


அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதுதான்.  இரும்புச்சத்து சாமை அரிசியில் அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சாமை அரிசியில்  9.3 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதோடு ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.


இதனால் ரத்த சோகை குறைவது  தடுக்கப்படுகிறது. சிறுதானிய உணவுகளில் சாமை அரிசியை  சேர்த்துக் கொள்வதால்  ரத்த சோகை பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.


இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து


ஐந்து : எலும்புகளை வலுவாக்கும்.



அடிக்கடி மூட்டு வலி முதுகு வலி என எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது சாமை அரிசி. சாமை அரிசியில்  எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்  அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சாமையில் 17 மில்லிகிராம் கால்சியமும் 220மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்தும் இருக்கிறது. இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை வலுவாக்கும். இதன் மூலமாக எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க கூடியது சாமை.


ஆறு : குளூட்டன் ஒவ்வாமை தடுக்கும்.



பொதுவாக சிறுதானியங்கள் அனைத்துமே குளூட்டன் பிரீ வகையைச் சார்ந்தது தான். ஒரு சிலருக்கு க்ளூட்டன் சார்ந்த உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சரும அரிப்பு எரிச்சல் அடிக்கடி வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு தொந்தரவுகளினால்   அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற சிறுதானியம் சாமை. சாமை முற்றிலும்  குளுட்டன் பிரீ உணவு என்பதனால்  க்ளூட்டன் அலர்ஜி இருக்கிறவர்கள்


 க்ளூட்டன் அடங்கிய உணவுகளான கோதுமை மைதா போன்றவற்றை தவிர்த்து  இதற்கு மாற்றாக சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 


இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்


ஏழு : வாழ்வியல் நோய்களை தடுக்கும்.




வாழ்க்கை முறை நோய் என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு உடல் பருமன் என தவறான வாழ்க்கை முறை காரணமாக வரக்கூடிய நோய்களை வராமல் விடாமல் தடுக்கும் ஆற்றல் சாமை அரிசிக்கு உண்டு.  சாமை அரிசியில் இருக்கக்கூடிய பினாலிக் காம்பவுண்ட்,பாலிபெனால்ஸ் மற்றும் டானின் போன்ற உடல் உள்ளுறுப்புகளில் இன்ஃப்ளமேஷன் உண்டாவதை தடுக்கிறது. இதன் மூலம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு விதமான வாழ்க்கை முறை நோய்கள் வராமல் பாதுகாக்க கூடியது இந்த சாமை அரிசி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *