காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள் | Best Food for Morning Empty Stomach in Tamil
நாம் காலையில் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அந்த உணவு நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இனிமையான ஒன்றாக இருக்கும். காலையில் எழுந்ததுமே டீ காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கு ஆனால் டீ காபி விடவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாகவும் உடலுக்கு நல்ல எனர்ஜி கொடுக்கக் கூடியதாகவும் காலையில் எழுந்ததும் முதல் உணவாக என்ன சாப்பிடலாம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு கேள்வியா இருக்கு.
இன்னைக்கு உடலுக்கு நல்ல எனர்ஜி கொடுக்கக் கூடியதாகவும் உடலில் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க கூடியதாகவும் காலை வெறும் வயிற்றில் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.
ஒன்று : தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் (Warm water with honey)
தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் பொதுவாக தேன் மிகவும் ஆரோக்கியமான உணவு என நம் எல்லோருக்கும் தெரியும் தேனில் இருக்கக்கூடிய விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் என்சைன்ஸ் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வயிற்றில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளான டாக்ஸின் சேம் வந்து வெளியேற்றும்.
இது மட்டும் இல்லாமல் 20 கிராம் தேனில் 8.4 கிராம் பிரக்டிஸும் 6.9 கிராம் குளுக்கோஸும் இருக்கு. இது காலையில் உடலுக்கு தேவையான நல்ல எனர்ஜியை கொடுப்பதோடு உடலின் மெட்டபாலிசத்தை பூஸ்ட் பண்ணவும் ரொம்பவே உதவியாக இருக்கிறது.
சிறிது வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிடும் போது இது செரிமான உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவி செய்கிறதுகாலையில் முதல் உணவாக தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
இரண்டு :ஊறவைத்த பாதாம்
ஊறவைத்த பாதாம், பாதாம்ல பாத்தீங்கன்னா மெக்னீசியம் விட்டமின் இ புரோட்டின் பைபர் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் சொல்லக்கூடிய ஒமேகா 3 அதிக அளவில் இருக்கு. நீண்ட உணவு இடைவெளிக்கு பிறகு காலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த ஒரு உணவு பாதாம் 100 கிராம் பாதாம்ல 21 கிராம் புரோட்டீன் இருக்கு.
இது வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கும் ஒரு கையளவு பாதாமை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த ஊற வைத்த பாதாமையை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
ஊற வைத்த பாதாமை சாப்பிடும் போது அது தோலை நீக்கிட்டு தான் சாப்பிடணும் ஏன்னா பாதாமின் தோளில் டானின் என்னும் மூலப்பொருள் இருக்கு இது பாதாம்ல இருக்கக்கூடிய சத்துக்கள் உடலில் சேர்வதை தடுக்கும்.
ஊற வைத்த பாதாம் காலையில் எழுந்ததும் முதல் தினசரி உடற்பயிற்சி செய்றவங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த உணவு
ஊறவைத்த பாதாம்.
மூன்று : பப்பாயா?
பப்பாளி பழம் பழங்களில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட மிகச்சிறந்த ஒரு பழம் பப்பாளி பழம். உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை எளிதில் வெளியேற்றவும் குடல் இயக்கத்தை சீராக்கவும். வயிறு உப்புசம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் மிகவும் உதவக்கூடிய ஒரு பழம் பப்பாளி பழம் மற்றும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து எல் டி எல் என்னும் கெட்ட கொழுப்பை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பப்பாளி பழம் வருடம் முழுதும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் என்கிறதுனால எல்லோராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய பழமாக இருக்கிறது. உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கணும் என்று நினைக்கிறவங்க காலை வெறும் வயிற்றில் முதல் உணவாக இந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்ல ஒரு பலன் வந்து தரும்
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
நான்கு : வாட்டர்மெலான் : தர்பூசணி
பழங்களில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட மற்றொரு சிறந்த ஒரு பழம் தர்பூசணி 90% நீர்ச்சத்தும் மிக அதிக அளவில் எலக்ட்ரோலைட் நிறைந்த ஒரு பழம் தர்பூசணி. இது கோடை காலத்தில் உடலில் ஏற்படக்கூடிய நீர் வறட்சியை தடுக்கும் உடலுக்கு நல்ல எனர்ஜியும் கொடுக்கக்கூடியது
இந்த தர்பூசணி மிக மிக குறைந்த கலோரிகள் கொண்ட ஒரு பழம் தர்பூசணி என்பதுனால உடல் ரீதியாக எந்த ஒரு தொந்தரவு இருந்தாலும் தாராளமாக தர்பூசணி சாப்பிடலாம்.கோடை காலத்தில் காலை வெறும் வயிற்றில் முதல் உணவாக சாப்பிட மிகச்சிறந்த ஒரு பழம் தர்பூசணி.
ஐந்து : Sprouted green lentils : முளைகட்டிய பச்சைபயிறு
பச்சை பயிற்றை அப்படியே சமைத்து சாப்பிடுவதை விட முளைவிட்டு சாப்பிடும் போது அதன் நன்மைகள் மிகவும் அதிகம் முளைவிட்ட பச்சை பயிற்றில் அதிகளவிலான புரதம் நார்ச்சத்து விட்டமின் பி சி கே போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கு மற்றும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடன்ட் உடல் கழிவுகளை வெளியேற்றுவதோடு பாடி மெட்டபாலிசத்தை பூஸ்ட் பண்ணவும் ரொம்பவே உதவியாக இருக்கும்..
இதில இருக்கக்கூடிய அதிகப்படியான புரதம் சீரான தசை வளர்ச்சிக்கும் செல்கள் சேதம் அடைவதை தடுக்கும் இதன் மூலமாக நல்ல ஒரு ஆரோக்கியமான உடலமைப்பை பெறவும் மிகவும் உதவியாக இருக்கக்கூடியது முளைவிட்ட பச்சைப் பயறு உடலை பலமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க காலை முதல் உணவாக இந்த முளைவிட்ட பச்சைப் பயிரை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய சுலபமான வழி
ஆறு ; Chia seeds ஊறவைத்த சியா விதைகள்
சியா விதைகள் புரோட்டின் பைபர் கால்சியம் ஆன்டிஆக்சிடென்ட் ஒமேகா 3 பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கு ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய சியா விதைகளை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்தோ அல்லது பாலுடன் சேர்த்தோ அல்லது பழ கலவைகள் மீது தூவியோ சாப்பிட்டு வரலாம்.
ஜெலட்டினஸ் கோட்டிங் என்னும் வலுவலுப்பான பகுதி இருக்கும் இது குடலின் உட்பகுதியில் படிந்து குடல் இயக்கம் சீராக இருக்கவும் செரிமானம் எளிதாக நடைபெறவும் மிகவும் உதவியா இருக்கு மேலும் கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்கும்.உடல் எடையை குறைக்க விரும்புறவங்க காலையில் வெறும் வயிற்றில் இந்த ஊற வைத்த சியா விதைகளை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய சுலபமான வழி
ஏழு : பழைய சோறு அல்லது நீராகாரம்
இது நம் எல்லோருக்கும் தெரிந்த எளிமையான உணவு முந்தின நாள் இரவே அரிசி சாதத்தில் சிறிது நீரை ஊற்றி வைக்க மறுநாள் காலையில் நீராகாரமாக நமக்கு வந்து கிடைக்கும் சாதாரண அரிசி சாதத்தை விட புளிக்க வைக்கப்பட்ட சாதத்தில் சத்துக்கள் பல மடங்கு அதிகம் என பல ஆராய்ச்சிகளை சொல்றாங்க ஒரு நாள் இரவு முழுவதும் சாதத்தில் நீரை ஊற்றி வைக்கும் போது அது நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் என்று சொல்லக்கூடிய குரோம்பயாடிக் அதிக அளவில் பெருகி இருக்கும்.
இந்த பழைய சாதத்தின் மூலம் கிடைக்கக்கூடிய குடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய நியூட்ரியன்ட்ஸ் எளிதாக குடல் உறிஞ்சி கொள்வதற்கும் மிக உதவியாக இருக்கக்கூடியது இந்த நீராகாரம்.முதல் உணவாக நம் முன்னோர்கள் அதிகம் பருகிய நீராகாரம் சாப்பிடுவதும் மிகவும் நல்லது.