ஓணம் பண்டிகை – Onam Festival in Tamil

 

ஓணம் பண்டிகை – Onam Festival in Tamil



ஓணம் திருவிழா 

ஓணம் கேரளாவின் அறுவடை திருவிழாவில் முக்கியமான ஒன்று. இந்த திருவிழா கேரளாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களையும் ஈர்க்கிறது. இந்த பருவ காலத்தில் வழி விடுதல் இசை நடனம் விளையாட்டு படுகுப்போட்டி மற்றும் பலவகையான உணவு வகைகள் பங்கு வகிக்கும். இந்த விழாவானது சின்னம் என்ற மலையாள மாதத்தில் அதாவது ஆகஸ்ட் இறுதியில் செப்டம்பர் துவக்கத்திலும் துவங்கும்.

ஓணம் ஒரு அறுவடை திருவிழா 




இது ஓராண்டு கால கடின உழைப்பிற்கு கிடைக்கும் பரிசாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் திருச்சூரில் மிகப்பெரிய ஊர்வலம் பம்பை ஆற்றில் வியப்பூட்டும் படகு போட்டு நடைபெறும். பெண்மணிகள் ஒன்றாக சேர்ந்து ரங்கோலி மற்றும் பூக்கோலங்களை வீட்டின் முன் போடுவார்கள்.

 ஓணம் என்பது மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் மகாபலி சக்கரவர்த்தி கேரளாவை ஆட்சி புரிந்து மக்களின் நலனை பேணிக்காத்தவர். அவ்விதம் ஓனம் நல்லாட்சி தரும் அரசு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை குறிக்கிறது. ஓனம் அன்று மகாவலி சக்கரவர்த்தி கேரளாவிற்கு மக்களை பார்வையிட வருவதாக ஐதீகம்.


இதையும் படிக்கலாமே : வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?


கேரள மக்கள் இப்ப பண்டிகைக்காக அவர்களது வீடுகளை சுத்தம் செய்து அலங்காரம் செய்வார்கள். ஓணதன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் புதுத்துணிகள் உடுத்தி மகிழ்வார்கள். பலவகையான உணவுகள் தயார் செய்யப்பட்டு தலைவாழை இலைகளில் பரிமாறுவார்கள் ஒவ்வொரு வீட்டின் வெளியிலும் பூக்களால் நிறைந்த கோலம் காணப்படும் இது மகாபலி சக்கரவர்த்தி வரவேற்கும் பொருட்டு அலங்கரிக்கப்படுகிறது.

 ஓணம் தினத்தன்று முந்தைய நாள் பாரம்பரிய வழிபாடுகள் நடக்கும் அன்று பெரும்விருந்துடன் கொண்டாடி மகிழ்வார்கள் இந்த பண்டிகையில் சிறப்பு உணவுகளில் ஒன்று பாயாசம் ஓணம் தினத்தன்று அனைவருக்கும் வழங்கப்படுகிறது.


வல்லம் களி


வல்லம் களி என்பது இந்த பண்டிகையில் நடத்தப்படும் ஒரு பெரிய படகு பந்தயம் இதில் நூற்றுக்கணக்கானவர்கள் படகுகளில் ட்ரம்ஸ் மட்டும் தாளங்களுக்கு ஏற்றவாறு ஓட்டுவார்கள். இதன் சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு படகுக்கும் மேல் பட்டுக்கொடியும் அதிலிருந்து தங்க நாணயங்களும் தொங்கவிடப்படும் இதில் வெற்றி பெற ஒவ்வொரு படகும் போட்டி போட்டுக் கொண்டு செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


ஓணம் இந்துக்களால் கொண்டாடப்படுவதுடன் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தான் இனம் மதம் பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைக்கிறது. ஓணம் திருவிழாவின்போது ஆரம் குள படகு பந்தயம் ஏற்பாடு செய்யப்படுகிறது.


இது ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் நடைபெற்றது ஆரங்குழாவில் படகு பந்தயம் பம்பை நதியில் நடக்கிறது. ஆரங்குலாவில் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுன் கோவில்களும் உள்ளன படகு பந்தயம் பார்த்தசாரதி கோவில் வளாக ஆற்றில் நடைபெறும் பம்பா நதியின் கரைகள் ரசிகர்களால் நிறைந்து காணப்படும் மக்கள் இதை பெரும் ஆர்வத்துடன் காண்பார்கள் பம்பா நதியின் கரையில் உள்ள குக் கிராமத்தில் உள்ள மக்கள் இந்த படகு போட்டியில் கலந்து கொள்வார்கள் இந்த பந்தயத்தில் போட்டி என்பதைவிட திருவிழாவின் ஒரு அங்கம் என்று கூறலாம்.




ஒரு கிராமம் வெற்றி பெற்றால் அந்த மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் எந்த வித பகைமை உணர்வுகளையும் ஏற்படுத்துவது இல்லை நான்கு மாலுமிகளும் 100 துடுப்பு போடுபவர்களும் 25 பாடகர்களும் இந்த நூறடி பாம்பு போல நின்றுள்ள சுண்டன் வல்லம் எனப்படும் படகுகளில் காணப்படுவார்கள் இந்த படகுகள் துவக்கத்திலிருந்து கடைசி இலக்கு வரை ஆற்றில் வருவதை காண்பதே தனி அழகு.

ஆட்டமும் கூச்சலும் வானை நிரப்புகின்றன மக்கள் மிகுந்த குதூகலத்துடன் காணப்படுவார்கள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட படகுகள் தண்ணீரில் செல்வது நம் கண்களுக்கு விருந்து மிக அழகாக பொன் நிற துணிகளாலும் வண்ணமயமான கொடிகளாலும் ரம்யமான கொடைகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. படகை ஓட்டும் நபர்கள் பலிர் என்ற வெள்ளை வேஷ்டி மற்றும் தலைப்பாகைகளை கட்டியிருப்பார்கள் இவர்களைப் பார்த்தாலே படையில் நாமும் பயணம் செய்வது போல இருக்கும். ஓணம் அன்று பெரியோர்களின் ஆசியுடன் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *