ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

 

ஏலக்காயின் மருத்துவ குணங்கள். Health Benefits of Eating Cardamom Tamil – elakai/yelakai – Health Tips.





அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது. (adhikan.co.in)

சுமார் நாலாயிரம் வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வரும் ஒரு அற்புதமான மூலிகை ஏலக்காய். ஏலக்காய் ஒரு சிறந்த வாசனைப் பொருள் மட்டும் இல்லாமல் நம் உடல் நலத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியதாகவும் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏலக்காய். சிறிய அளவிலான ஏலக்காயில் சிறிதளவு புரதம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின் a,b,c போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது.இவ்வளவு சத்துக்கள் கொண்ட ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் ஏராளமான நோய்கள் குணமாகும்.

ஒன்று: ஜீரணக் கோளாறுகள் குணமாகும்.



பசியே இல்லை சாப்பிட பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும், ஜீரண உறுப்புகளின் பலம் அதிகரிக்கும் மற்றும் ஜீரண உறுப்புகளை துரிதப்படுத்தி ஜீரண நீரை சுரக்கச் செய்யும் ஏலக்காய். இதனால் நன்றாக பசிக்கும். வயிறு உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பிரச்சனைகள் குணமாகும்.


இரண்டு: நெஞ்சு சளி மறையும்.



இதையும் படிக்கலாமே: நுரையீரல் சளியை வெளியேற்ற அற்புதமான வீடு வைத்தியம்


அதிக மார்புச்சளியின் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் அதிக இருமலினால் அவதிப்படுகிறவர்கள் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும் மற்றும் நெஞ்சு சளியை உருவாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடி அளிக்கக் கூடியது ஏலக்காய். அதிக நெஞ்சு சளியினால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. 


மூன்று: வாய் துர்நாற்றம் நீங்கும்.




ஜீரண உறுப்புகளில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். வாய் துர்நாற்றத்தினால் அவதிப்படுகிறவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும் மற்றும் வாயில் நல்ல மனத்தையும் கொடுக்கும்.


நான்கு: உடல் நச்சுக்களை வெளியேற்றும்.




நமக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் நம் உடலில் தேங்கி இருக்கக்கூடிய நச்சு கழிவுகள்.  இந்த தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றக் கூடியது இந்த ஏலக்காய். தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் மற்றும் உடல் புத்துணர்ச்சி பெறும்.


ஐந்து: வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஏலக்காய். 



வாய் புண், பல் சொத்தை, பல் வலி, பல் ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் பல்வலி போன்றவை குணமாகும். மற்றும் பல் சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகளையும் அளிக்கக்கூடியது ஏலக்காய்.


ஆறு: தலைசுற்றல் நீங்கும்.


 



நிறைய பேருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போதும் அல்லது வெயிலில் போகும் போதும் தலைசுற்றல் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டே பயணம் செய்தால் வாந்தி மயக்கம் போன்ற பிரச்சனைகள் வராது..


ஏழு: ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது ஏலக்காய்.

 



ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். இதுபோன்ற சிரமங்களில் இருந்து எளிதில் விடுபட உதவக்கூடியது ஏலக்காய். இதுபோன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் சுவாசம் சீராகும் மற்றும் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகளும் குணமாகும். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *