இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.

 

இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.

Effective Home Remedies For Glowing Skin | Tamil Beauty Tip.


ஹலோ பிரண்ட்ஸ் காலை முதல் மாலை வரை உங்களுடைய முகம் நல்ல புத்துணர்வோட இருக்கவேண்டுமென்றால்  ஒரு சில அழகு குறிப்புகளை பின்பற்ற வேண்டும். காலையில் தூங்கி எழும்போதே உங்களுடைய முகம் பளிச்சென்று பிரகாசமாக‌ இருக்க கீழே இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம்.


வெள்ளரிக்காய்



வெள்ளரிக்காயில் அதிகப்படியான நீர்ச்சத்து இருக்கிறதனால் நம்மளோட சருமத்துக்கு எப்பொழுதும் நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும்.

வெள்ளரிக்காயை நன்றாக நறுக்கி பிறகு மசிச்சு உங்களுடைய முகத்தில் தூங்க போகும் முன் பூசிக்கொண்டு தூங்கவேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்வதினால் உங்களுடைய முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக இருக்கும்.


இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய சுலபமான வழி

கற்றாழை



கற்றாழை (Aloe vera) ஒரு அருமையான பொருள். இது அனைவருடைய தோலுக்கும் ஏற்றதக்கது. கற்றாழையில் உள்ளே இருக்கும் சதையை எடுத்து உங்கள் முகத்தில் பூசி நன்றாக தேய்த்து (massage) விட வேண்டும். இரவு முழுவதும் கற்றாழை சோறு முகத்தில் ஒட்டி இருப்பதனால் உங்கள் முகத்தில் நன்றாக வேலை செய்யும்.  மறுநாள் காலையில் எழுந்ததும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதனால் குளோரின் குறைவாக இருக்கும்.


பால் ஆடை (Milk Cream)



பாலாடையை எடுத்து உங்கள் முகத்தில் பூசி (Massage)  சிறிது நேரம் நன்றாக தேய்த்து விட வேண்டும். பாலாடையை முகத்தில் பூசியிருப்பதினால் சருமத்துக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் சருமத்தையும் மென்மையாக வைத்திருக்கும்.


காலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுது உங்களுக்கு அழகான சருமத்துடன்‌  மென்மையான முகம் கிடைக்கும். மில்க் க்ரீமை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.  இது ரொம்பவே சிறந்த ஒரு பொருள் பாலாடையை பயன்படுத்துவதால்  உங்கள் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிந்துவிடும்.


பாதாம் எண்ணெய்



பாதாம் எண்ணெயில் இயற்கையாகவே ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை இருக்கிறது. பாதாம் எண்ணெயை சிறிது எடுத்து உங்கள் முகத்தில் பூசி மென்மையாக ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு தூங்கலாம்.மறுநாள் காலையில் எழுந்ததும் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக இருக்கும்.


இதையும் படிக்கலாமே ;ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.

பாலாடையுடன் எலுமிச்சை 



பாலாடை ஒரு அற்புதமான பொருள் எந்த ஒரு தொந்தரவையும் கொடுக்காது. பாலாடையுடன் இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சை சாறை நன்றாக கலந்து படுக்கபோகும் முன் முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து விட வேண்டும். இரவு முழுவதும் நன்றாக முகத்தில் ஒட்டி இருக்கும்.


மறுநாள் காலையில் எழுந்ததும் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீரில் நன்றாக தேய்த்து கழுவி விட்டு மிருதுவான துணி கொண்டு துடைத்து விட்டாள் முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக இருக்கும்.


விட்டமின் இ (Vitamin E)



விட்டமின் இ மாத்திரை அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளையும் பாக்டீரியா மற்றும் கிருமிகளையும் சுத்தம் செய்யக்கூடியது. விட்டமின் இ மாத்திரை ஒன்றை எடுத்து அதிலிருக்கும் திரவத்தை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.


மறுநாள் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். முகம் மொழியாக புத்துணர்ச்சியுடன் பளிச்சென்று அழகாக தெரியும்.


மேலே கண்ட ஆறு முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி உங்கள் முகத்தை அழகாக வைத்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *