நீங்கள் இறக்கப்போவதை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள்

இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினமாக இருந்தாலும் ஒரு நாள் மரணத்தை சந்தித்து தான் ஆகவேண்டும். பிறப்பைப் போன்று இறப்பும் ஒரு நிகழ்வுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ மறுபடியும் அங்கேயே போகப் போகிறோம். ஆனால் பிறப்பை சந்தோஷமாக கொண்டாடும் அளவிற்கு அந்த மரணத்தை தாங்கக்கூடிய சக்தி யாருக்கும் இங்கே இருக்கிறதில்லை. மனிதர்களுடைய படைப்பு தொழிலை செய்வது பிரம்மதேவர், பரம்பொருள், பரமாத்மா என்று சொன்னாலும் மனிதர்களின் மரணத்தை தீர்மானிக்கும் ஒரே கடவுள் எமதர்மராஜனாக தான் இருக்கிறார். இவருடைய பிடியில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. எமதர்மராஜன் மனித உயிர்களை எமலோகத்திற்கு கூட்டிக்கொண்டு போவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் முன் எச்சரிக்கைகளாக சில அறிகுறிகளை காட்டுவார். நீங்கள் இறக்கப்போவதை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள்

எதனால் இந்த அறிகுறிகள் என்றால்  மரணம் உங்களை நெருங்கப் போகிறது. இந்த பூமியில் மீதம் இருக்கக்கூடிய கொஞ்ச நாட்களில் உங்களால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களை செய்து புண்ணியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் விதமாக மரணத்திற்கு முன் சில அறிகுறிகள் தென்படும்.

இந்த அறிகுறிகளை வெறும் வாய் வழி வார்த்தையாகவோ செவிவழி வந்த செய்தியோ கிடையாது. நம் முன்னோர்கள் அனுபவத்தால் உணர்ந்த உண்மை அறிகுறிகள்.

இதையும் படிக்கலாமே :குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!

அனைவருடைய வீட்டிலும் அவர்களுடைய தாத்தா பாட்டி இறந்து போயிருந்திருப்பார்கள் அல்லது உறவினர்கள் யாராவது இறந்து போயிருப்பார்கள்.அந்த மரணத்திற்கு முன் அவர்கள் பார்த்த சில அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

கருப்பு பூனை

கருப்பு பூனை நல்லிரவில் நோய்வாய்ப்பட்டவர்களின் படுக்கையில் விழுந்தாலோ அமர்ந்திருந்தாலோ அது மரணத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

ஒரு மனிதர் இறந்த பிறகு நடக்கும் இறுதி ஊர்வலத்தின் போது கருப்பு பூனை கடந்து போனால் அந்த குடும்பத்தை சேர்ந்த வேறு யாரோ அடுத்த மூன்று நாட்களில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

காகங்கள் வீட்டுக்குள்ளே பறந்தாலோ அல்லது நோய் வாய்பட்டவரின் தலையில் அடித்தாலோ ஆறு காகங்களை ஒரே நேரத்தில் பாக்குறதும் மரணத்தை உணர்த்தும் அறிகுறி என்று கூறப்படுகிறது. காகம் சனி பகவானுடைய வாகனம்.

பகல் நேரத்தில் ஒரு ஆந்தை காணப்பட்டால் அல்லது ஒரு ஆந்தை உங்களுடைய தலைக்கு மேல் கொத்துகிறது என்றால் உங்களுக்கு நெருக்கமான யாரோ ஒருவரின் மரணத்தின் அறிகுறியாக இருக்குமாம். ஆந்தை பக்கத்தில் வந்து அமர்ந்தாலும் அல்லது வீட்டு கூரையின் மேல் அமர்வதும் மரணத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

நீங்கள் இறக்கப்போவதை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள்

காகங்கள்

எமதர்மராஜன் சில நேரம் சனி பகவானின் வாகனமாக இருக்கக்கூடிய காகங்களை தூதுவனாக மரண வீட்டிற்கு அனுப்பி வைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஒருவரின் இறப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. அது அவர்களை மட்டும் சார்ந்து இல்லாமல் கூட இருக்கிறவர்களையும் அவங்களை நேசிக்கிறவர்களையும் எல்லோர் மனதிலும் மிகப்பெரிய வேதனையை தரக்கூடிய சம்பவம் தான் மரணம்

இயற்கையான மரணம் என்பது பொதுவாக நன்றாக வாழ்ந்து முடித்து வயதான பிறகு இறந்து போவது. இயற்கையான மரணம் திடீர் என்று நடந்திருக்காது. சில மாதங்களுக்கு முன்னாலோ அல்லது சில நாட்களுக்கு முன்னாலோ மரணம் வரப்போவதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக தென்படும்.

மரணம் வருவதற்கு முன் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் எப்படி அதை கண்டுபிடிக்கலாம்.

உடம்பில் ரத்த அழுத்தம் குறந்து தோல்  லேசாகி ஒரு காகிதம் போல் மாறிவிடும்.இயற்கையான உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும்.  தலை முடிகளும் வலுவிழந்து மெலிதான நூல் போன்று மாறிவிடும். உணவில் ஈடுபாடு இல்லாமல் போய்விடும். உடல் உணவை ஏற்க மறுப்பதால் எந்த ஆற்றலும் இல்லாமல் உடல் சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகும்.

நீங்கள் இறக்கப்போவதை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள்

எப்பொழுதும் உடல் சோர்வாகவும் சோம்பலாகவும் தான் இருக்கும். பகலில் தூங்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட மரணம் நெருங்கி வரும் நேரத்தில் பகலில் அதிகமாக தூங்க ஆரம்பிப்பார்கள். மனதில் கொஞ்சம் கூட அமைதி இல்லாமல் எப்பவும் ஒரு குழப்பமான மன நிலையிலதான் இருப்பார்கள்.

எந்த பொருளாக இருந்தாலும் அதுவரை எல்லோருடனும்  குடும்பத்தில்  பகிர்ந்து வாழ்ந்து வந்தவர்கள் ரொம்ப செல்பிஷா மாற ஆரம்பிச்சிடுவார்கள். இது என்னோட பொருள் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று மத்தவர்களிடம் வெறுப்பை உண்டாக்கி அவங்களிடம் இருந்து விலகிப் போவார்கள்.யாருமே இல்லாதபோது தனிமையில் தன்னந்தனியாக பேச ஆரம்பிப்பார்கள். விசித்திரமான கனவு வந்தது கனவில் பாம்பு காகம் எருமை வந்தது என்று சொல்லுவார்கள்.

இப்போது ஒருத்தர் சாகப் போவது அவர்களுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடியே தெரிந்து இருக்கும் சமயத்தில் அவர்கள் பல வருடங்களாக பாதுகாத்து வந்த சத்துக்களையோ உடைமைகளையும் அவர்களுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவர்களுக்கு கொடுக்க ஆரம்பிப்பார்கள். எங்கோ ஒரு உலகத்திற்கு பறப்பதற்கு முன்பு இதுவே இறுதிக்கட்டமாக இருக்கும்.

கருட புராணத்தின் படி இறக்கப் போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள். 

கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவலின் படி ஒருவருடைய முகத்தின் நிறமானது மஞ்சள் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றம் அடைந்தால் அதாவது இயற்கை நிறத்தில் இருந்து வேறு ஒரு நிறத்திற்கு மாற்றம் அடைந்தால் அவர்கள் அடுத்த ஆறு மாதத்தில் மரணம் அவங்களை நெருங்கப் போகிறது என்று அர்த்தம்.

கண்களில் மாற்றம்

காலப்போக்கில் ஒருவர் அவருடைய மூக்கின் நுனியை தன்னுடைய கண்களால் பார்க்க முடியவில்லை என்றால் அவர்கள் விரைவில் இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். எதனால் என்றால் அவர்களுடைய கண்கள் மேற்புறம் நோக்கி நகர்ந்து போகும். இதனால் அவர்களால் மூக்கின் நுனியை பார்க்க முடியாமல் போகும். இறுதியில் மரணம் அடைந்தவுடன் கண்கள் முழுவதும் மேல் நோக்கி சென்று விடும்.

கண் பார்வை

இது பல பேருக்கும் தெரிந்த ஒரு அறிகுறிதான். சில சமயங்களில் மரணம் நிகழ்வதற்கு முன்பு இறக்க போகிறவர்களுடைய கண் பார்வையில் பல மாற்றங்கள் ஏற்படும், குறிப்பாக  பார்க்கும் நிறங்களில் மாற்றம் ஏற்படும். அவர்களுடைய கண்களுக்கு எந்த வித வண்ணமும் தெரியாது. அவர்களுடைய கண்களுக்கு கருப்பு நிறம் மட்டும்தான் தெரியும்.

இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

வான் பொருட்கள் துண்டு துண்டாக உடைந்து கீழே விழுவது போல் தெரியும். மரணம் அடையப்போகிறவர்களுக்கு அனைத்தும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் உண்மையில் அங்கு அப்படி எதுவுமே நடக்காது. மரணம் கண்களுக்கு தெரிவதைவிட கண்கள் மூலம் தான் மரணமே நமக்கு தெரியும்.

இதனால் தான் மரணம் நெருங்குவதற்கு முன்னால் கண்களில் தொடர்ந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்குமாம். மூக்கில் விரிசல்கள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் விரைவில் மரணம் அடையப் போகிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இறந்தவர்களுடன் தொடர்பு சாகப் போறவங்களுக்கு அவங்களுக்கு ரொம்ப பிடித்த இதற்கு முன்னால் இறந்து போனவர்களின் நினைவுகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்குமாம். சில சமயம் மரணிக்க போகிறவர்களின் கண்களுக்கு இறந்தவர்களின் உருவம் கூட தெரிய ஆரம்பிக்கும். மிகவும் ஆழமான இந்த உணர்வு இறந்தவர்கள் கூடவே வாழ்வது போன்ற ஒரு உணர்வு அவங்களுக்குள்ளே ஏற்படுத்தி கொடுக்குமாம். இப்படி நடந்தது என்றால் அவர்கள் சீக்கிரமே மரணிக்க போகிறார்கள் என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் இறக்கப்போவதை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள்

கண்ணாடி பிம்பம்

கண்ணாடி பார்க்கும் பொழுதெல்லாம் அதில் பார்ப்பவரின் பிம்பம் மட்டும்தான் தெரியும். ஆனால் மரணம் நெருங்குபவர்களுக்கு அதிலே அவங்களுடைய பிம்பம் தெரியவே தெரியாது. அதற்கு பதிலாக மற்றவர்களின் பிம்பமோ அல்லது எதுவுமே தெரியாமலோ தான் இருக்கும். இது உடனடி மரணம் நிகழப்போவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே :இதையும் படிக்கலாமே : வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 அதிர்ஷ்டம் தரும் மரங்கள்

படரும் கொடி வகையான காய்கறி வகைகளை கனவில் காண்பது அவ்வளவாக நல்லது கிடையாது. கீரை, காய்கறிகள் கனவில் வந்தால் அது சொர்க்க லோக வாசத்தை குறிக்கிறது. இந்த வகையான கனவுகள் உங்களுக்கு ஏற்படும் பொழுது முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது. அதாவது இது போன்ற கனவுகள் அல்லது அறிகுறிகள் உங்களுக்கு தென்படும் பொழுது எம பயத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் கால பைரவரை நீங்கள் வழிபடலாம்.

ஒருவருக்கு ஆபத்து நடக்க போகிறது என்பதை அவர்கள் உணராமலே இருந்தால் அது அவர்கள் செய்த கர்ம வினை. அறிகுறிகளால் நீங்கள் முன்கூட்டியே உங்களுடைய ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழியையும், கடவுள்களுக்கு காண்பித்தால் அதுவும் நீங்கள் செய்த நல்ல கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பூனை, பசு கன்றுடன் நமது செல்லமாக வளர்க்கின்ற வளர்ப்பு பிராணிகள் கனவில் வந்தால் அதை முன்னெச்சரிக்கையாய் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டு வளர்ப்பு பிராணிகள் கனவில் வந்தால் அது வீண் விரயத்தை ஏற்படுத்துமா? பூனை குறுக்கே வருவது நிஜத்தில் தோல்வியை குறித்தாலும் கனவில் இதுபோல் உங்களுக்கு வந்தால் வீண் விரயத்தை தான் குறிக்கும். மருத்துவ செலவுகள் திருட்டு போன்று அசுப செலவுகள் ஏற்பட இருப்பதை இந்த அறிகுறிகள் உணர்த்தும். நாய்கள் ஊளையிடுவது நாய்கள் ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே அறியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

நாய் தொடர்ந்து ஜன்னலுக்கு பக்கத்தில் ஊளை இடுகிறது

உங்கள் நாய் தொடர்ந்து ஜன்னலுக்கு பக்கத்தில் ஊளை இடுகிறது என்றால் நீங்கள் குடும்பத்தில் ஒரு மரணத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. வீட்டில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது நாய் தொடர்ந்து ஊளை இடுவது, தரையை தொடர்ந்து தேய்ப்பது அல்லது தலையை தொங்க போட்டுக் கொண்டே இருப்பது மரணத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

வீட்டு பொருள்களின் இறப்பு சகுனங்கள் பக்கத்தில் யாருமே இல்லாதபோது ஒரு கண்ணாடி திடீர் என்று உடைவது, பாத்திரம் உடைவது, கடிகாரம் நின்று போவது, சத்தம் எழுப்ப முடியாமல் போவது, சுவற்றில் இருந்து விழும் படம் மற்றும் சுவரில் தொங்கி இருக்கும் போது உடைந்து போகும் ஒரு கண்ணாடி ஆகியவை மரணத்தின் சகுனங்களாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.

சிலர் இறக்கபோகிறார்கள் என்றால் அவர்களுடைய ரூமில் யாருமே இல்லை என்றால் கூட சில பேரு பேசிக்கொண்டு இருப்பதை போல் இருப்பார்கள்.‌ அது அவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்த நடத்தைக்கு வெவ்வேறு விளக்கங்களும் சொல்வார்கள். சிலர் தேவ தூதர்களுடன் பேசுகிறார்கள் என்று சொல்லுவார்கள்.

சிலர் முன்னோர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.  சிலர் இதனை இறந்த மூதாதையர்களின் ஆவிகளுடன் பேசுவதாக சொல்லுவார்கள்.உடலில் இருந்து ஆன்மா புறப்படும் போது புறப்பட்ட பின் தங்கள் ஆவிக்கு வழிகாட்டும் பொருட்டு அவர்கள் இறுதி மூச்சு விடுவதற்கு முன்பு சரியான நேரத்தில் அந்த மூதாதையர்கள் அங்கு வந்து சேருவார்களாம். இன்னும் சிலர் இது ஒருவரின் மூளை மூட்டப்படும் செயல் என்று கூட சொல்லுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *