பேச்சி அம்மன் கோயில் வரலாறு.
( Pechi amman kovil history )
என் இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
பேச்சி அம்மன் என்று சொல்லக்கூடிய பெர்யாச்சி அம்மன் ஏன் கற்பினி பெண்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் காவலாக இருக்காங்க. அவங்க காலடியில் ஒரு மனிதனை கொலை செய்தும் மடியிலே ஒரு பெண்ணோட குடலை உருவியும் கையில் ஒரு பச்சை குழந்தையோடும் ஆக்ரோஷமாக காட்சி கொடுக்கிறார்களே எதனால் என்று பெரியாச்சி அம்மன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களையும் பெரியாச்சி அம்மன் யார் என்றும் தெரிந்து கொள்வோம்.
பெரியாச்சி அம்மன் செய்தது நியாயமா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள்.
நம்முடைய ஹிந்து மதத்தில் தெய்வீக அம்சம் கொண்டு ரொம்ப பயங்கரமான தோற்றத்தோடு இருக்கும் பெரியாச்சி அம்மன் பார்வதியின் அம்சமான காளி தேவியோட அவதாரம் என்று சொல்கிறார்கள். பெரியாச்சி அம்மன் பெண்கள் கருத்தரித்தது முதல் நல்லபடியாக குழந்தை வளர்வதற்கும் சுகப்பிரசவம் அடைவதற்கும் அந்த குழந்தை இந்த பூமியை தொடும் வரை அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
குழந்தை பிறந்த பிறகும் அந்த குழந்தையை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றி கொடுக்கும். நிறைமாத கர்ப்பிணி பெண்களை சில துஷ்ட கிராமத்து காவல் தெய்வங்களிடம் இருந்து தீட்டு என்று சொல்லி விலக்கி வைப்பார்கள். ஆனால் பெரியாச்சி அம்மனுக்கு இந்த தீட்டெல்லாம் கிடையாது. பெரியாச்சி அம்மன் வயதான மூதாட்டி ஆச்சி மாதிரி உருவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மருத்துவமனைகள் இல்லாத அந்த காலத்தில் கிராம புறங்களில் பிரசவம் பார்ப்பதற்கு வயதான மருத்துவச்சிகள் தான் இருப்பார்கள். அவர்கள் மிகவும் திறமையாக மருத்துவமும், பிரசவமும் பார்ப்பார்கள். எப்பொழுது குழந்தை குழந்தை பிறக்கும் என்பதை சரியாக கணித்து கூறுவார்கள்.
குழந்தை நல்லபடியாக பிறக்க கர்ப்பிணி பெண்களுடைய வயிற்றில் எண்ணெய் தடவி உருவி விட்டு சுகப்பிரசவம் அடைவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விடுவார்கள். பெண்களுக்கு அவர்களுடைய அறிவுரையும் ஆலோசனையும் மிகவும் முக்கியமானது.
என்னவெல்லாம் செய்யணுமோ எல்லாத்தையும் செய்து வந்திருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களுடைய அறிவுரையும் ஆலோசனையும் ரொம்ப முக்கியம் என்பதினால் அவர்களை ஆச்சி என்று உரிமையோடு கூப்பிட்டு தெய்வத்துக்கு நிகராக பார்த்து இருக்காங்க.பிரசவம் பார்பதற்கென்றே அனுபவம் மிகுந்த வயசான ஆச்சிகளை கர்ப்பிணி பெண்களுக்கு துணையாய் இருக்க வைத்திருப்பார்கள்.
பெரியாச்சி அம்மன் யாரு? எப்படி பூமிக்கு வந்தாங்க என்பதை தெரிந்து கொள்ள ஒரு கிராமிய கதை இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு காலத்தில் பாண்டியநாட்டை வல்ல ராஜா என்ற அரசன் ஆட்சி செய்து வந்திருக்கான். அரக்கர்கள் மாதிரி அவனுடைய ஆட்சியில் எல்லாரையும் கொடுமை படுத்திகொண்டு இருந்தான். குடிமக்கள் மட்டும் இல்லாமல் ரிஷிகள் மற்றும் முனிவர்களும் அவனுடைய ஆட்சிக் காலத்தில் பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.
ராட்சசர்களும் சில தீய சக்திகளும் அவனுடைய கையில் இருந்ததால் அவனை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி கொடுங்கோள் ஆட்சியை நடத்தி வந்தவனுக்கு ஒரு முனிவர் கடுமையான சாபம் கொடுத்திருக்கார். அது என்னவென்றால் அவனுக்கு பிறக்க இருக்கும் குழந்தை பிரசவமானதும் அந்த குழந்தையினுடைய உடல் இந்த பூமியை தொட்டால் அவன் அழிந்து விடுவான். அவனோடு சேர்ந்து அந்த நாடும் அழிந்து விடும். அந்த குழந்தையால் தான் அவனுக்கு மரணம் ஏற்படும். மாறாக அந்த குழந்தை பூமியை தொடாமல் ஒருநாள் இருந்துவிட்டால் அதன்பிறகு அந்த அரசனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று முனிவர் சாபம் கொடுத்திருக்கார்.
அந்த மன்னனுக்கும் ரொம்ப வருஷமாக குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்து முதல் முறையாக மனைவி கற்பம் தரித்திருக்கிறாள். குழந்தை பூமியை தொட்டுவிட்டால் நாம் இறந்துடுவோம் அதே நேரத்தில் அந்த சாபம் தோல்வி அடைந்துவிட்டால் அதன் பிறகு எந்த ஆபத்தும் கிடையாது.
என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்திருக்கார் பல்லராஜாவோட அழிவு நிச்சயம். அவனை அழிக்க பார்வதியோட அம்சமான காளி தேவியே பிரசவம் பார்க்கும் ஆச்சி உருவத்தில் ஊருக்குள்ளே வலம் வந்திருக்காங்க. அரசன் அவனுடைய படைவீரர்களை எல்லா இடத்துக்கும் அனுப்பி பிரசவம் பார்க்க ஒரு சரியான மூதாட்டியை அழைத்து வர சொல்லி இருக்கான் இப்படிப்பட்ட கொடூர மன்னனுக்கு உதவி செய்ய பயந்துகொண்டு யாருமே முன்வரவில்லை.
ராணிக்கு பிரசவ வலி வந்துவிட்டால் குழந்தை நல்லபடியாக பிறக்கவேண்டும். அந்த நேரத்தில் நாமும் அழியாமல் இருக்கவேண்டும் என்று கவலைப்பட்ட மன்னன் அவனே கிளம்பி ஊருக்குள் போய் பிரசவத்துக்காக ஆள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அரசன் முன்னால் ஒரு வயதான பெண்மணியோட உருவத்தில் இருந்த பெரியாச்சி அம்மன் தென்பட்டு இருக்காங்க.
பெரியாச்சி அம்மன் ஒரு தெய்வ பிறவி அவங்களிடம் போய் என் மனைவிக்கு பிரசவம் பார்க்கவேண்டும் நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கான் மன்னன். பெரியாச்சி அம்மனும் சரி என்று சொல்லி உன் மனைவிக்கு நான் பிரசவம் பார்த்து உன் குழந்தையோட உடல் பூமியில் படாமல் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அவனிடம் ஒரு நிபந்தனையும் போட்டு இருக்காங்க.
குழந்தையுடைய உடல் பூமியில் படாமல் பாத்துக்கொண்டால் நிறைய பொன் பொருள் எல்லாம் எனக்கு வேணும் என்று கேட்டிருக்காங்க. மன்னரும் தர உறுதி அளித்திருக்கான் குழந்தை நல்லபடியாக பிறந்தது. மன்னனுடைய மனைவி பக்கத்திலேயே இருந்து பெரியாட்சியம்மன் குழந்தையை அவங்க கையில் ஏந்திக்கொண்டு ஒரு நாள் முழுவதும் இருந்திருக்காங்க. காலக்கெடு முடிந்ததும் அரசன் வந்து அந்த குழந்தையை அவனுடைய மனைவியிடம் கொடுக்க சொல்லிக் கேட்டிருக்கான்.
ஆனால் பெரியாச்சி அம்மனோ குழந்தையை அவங்க கையிலேயே வைத்து கொண்டு முதலில் எனக்கு தர வேண்டியதை கொடு என்று சொல்லி இருக்காங்க. அதான் ஒரு நாள் முடிந்துவிட்டதே இனிமேல் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இந்த வயதான கிழவி மட்டும் என்ன செய்துவிடும் என்று ரொம்ப திமிராக உனக்கு ஒன்றும் கொடுக்க முடியாது. குழந்தையை கையில் ஒப்படைத்துவிட்டு இந்த இடத்தை விட்டு போகின்றாயா இல்லை உன்னையும் கொலை செய்யவாஎன்று சொல்லிவிட்டு வால் எடுத்து பெரியாச்சி அம்மனை கொலை செய்ய அருகில் சென்ற அரசன் அவ்வளவுதான்
அரசனுடைய கதை முடிந்தது. ஆத்திரமடைந்த பெரியாச்சி அம்மன் நான்கு கைகளோடு கோரமான உருவம் எடுத்து பயங்கரமான கண்களோடு அவங்களுடைய சுய உருவத்துக்கு வந்து ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்காங்க. மன்னனோட மனைவியும் பெரியாச்சி அம்மன் செய்த உதவியை மறந்துவிட்டு மண்ணுக்கு ஆதரவாக பெரியாச்சி அம்மனை எதிர்த்ததால் ஒரு கையில் குழந்தையை தூக்கி பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் மன்னனுடைய மனைவியை தூக்கி தன் தொடை மேல் வைத்து கொண்டு அவளுடைய வயிற்றை கிழித்து குடலை உருவி மாலையாக போட்டுக்கொண்டு உடலில் உள்ள உள் பாகங்களை எல்லாம் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
உருவிய உடைவாளோடு வந்த மன்னனை காலடியில் போட்டு அவங்களோட காலாலையே மன்னனோட தலையை மிதித்து கொன்றிருக்காங்க. இப்படி கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆணவ மன்னனுடைய கதையை முடித்து ஆக்ரோஷமான பெரியாச்சி அம்மனை வணங்கிய மக்கள் அம்மனுடைய கோபத்தை தனித்து எங்களையும் காப்பாற்றுங்கள் என்று சொல்லியிருக்காங்க. அப்பொழுது பெரியாச்சி அம்மன் கோபம் தனிந்து தான் யார் என்ற உண்மையை சொல்லி இருக்காங்க. நானே காளிதேவியோட அவதாரம் இனிமேல் என்னை நீங்கள் வணங்கி வந்தால் நீங்கள் குடி இருக்கின்ற ஊரை நான் பாதுகாப்பேன் என்று.
அவங்க அவங்க வீட்டில் இருக்கின்ற கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகவும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்லபடியாக வளரவும் நான் உதவி செய்வேன். அவர்களுடைய குழந்தைகளுக்கு நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று உறுதியளித்திருக்காங்க பெரியாச்சி அம்மன. பல கிராமங்களில் கிராம தேவதையாகவும், நகரங்களில் நகர மக்கள் வணங்கும் பேச்சியம்மன் பெரியாச்சி அம்மனாகவும் இருக்காங்க.
ஆடி மாதம் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று நல்லபடியாக சுகப்பிரசவம் ஆகவேண்டும் குழந்தை பிறந்ததும் தொட்டிலில் போட்டு பேர் வைப்பதற்கு முன்னால் பெரியாச்சி அம்மனுடைய சன்னதிக்கு எடுத்து சென்று குழந்தையை சன்னதியில் போட்டதற்கு பிறகு தான் வீட்டிற்கு தூக்கி வந்து மற்ற சடங்குகள் எல்லாம் செய்வார்கள்.
அதே மாதிரி பெண் குழந்தைகளுக்கு காது குத்துவது மொட்டை போடுவது மாதிரியான சடங்குகளையும் பெரியாச்சி அம்மனை வேண்டிக்கொண்டு அந்த ஆலயத்தில் செய்து கொண்டு இருக்கிறார்கள். பெரியாச்சி அம்மனை சிலர் மாரியம்மனோட அவதாரமாகவும் பார்க்கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள கோயிலில் பெரியாச்சி அம்மனுக்கு மிருக பலி கொடுக்கிறார்கள். ஆனால் நகர் புறத்தில் உள்ள கோயில்களில் சுத்த சைவ படையல் தான் பெரியாச்சி அம்மனுக்கு படைக்கிறார்கள்.
பேச்சியம்மன் படித்துறை மதுரை வைகை ஆற்றில் மிகவும் புகழ்பெற்றதாம். மதுரையிலும் பேச்சியம்மன் அருளாட்சி செய்து கொண்டு இருக்காங்க. தன்னுடைய கைகளில் ஒரு குழந்தையை ஏந்திக்கொண்டு மடியில் ஒரு பெண்ணுடைய வயிற்றை கிழித்தும் கால் பாதத்தில் ஒரு மனிதனை மிதித்துக் கொண்டு பயங்கரமான தோற்றத்தோடு காட்சி கொடுக்கும் பெரியாச்சி அம்மன்.
பார்ப்பதற்கு உக்கிரமாக இருப்பார்களே தவிர அவர்களை மனதார வணங்கிறவர்களுக்கு கருணை காட்டி வேண்டும் வரத்தை குடுப்பார்களாம். பெரியாச்சி அம்மனை காவல் தெய்வம் காவல் ஆத்மா என்று சொல்கிறார்கள். பெரியாட்சி முனீஸ்வரனோட ஒரு அம்சமான ஜடா முனீஸ்வரனோடு சேர்ந்து தீய சக்திகளை விரட்டி பூமியை காப்பாற்ற பூமிக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.
மற்றவர்களை காயப்படுத்துவது மாதிரியான விஷயங்களை செய்யும் பெண்களை தண்டிக்கிறதாகவும் பெண்களை சீண்டும் ஆண்களை தன்னுடைய காலடியில் போட்டு தண்டனை கொடுக்கிறதாகவும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறாங்க. முனீஸ்வரன் மதுரை வீரன் போன்ற பிற ஆண் காவல் தெய்வங்கள் அம்மனுக்கு பாதுகாப்பாக இருக்காங்க நிறைய கோவில்களில் அம்மனுக்கு காவலாக இருப்பது மதுரை வீரன்.