அதிக வட்டி தரும் அஞ்சல் அலுவலக SCSS திட்டம்.
(சீனியர் சிட்டிசன் ஸ்கீம் )
Senior Citizen Sevings Scheme (SCSS)
வைப்புத் தொகை முதிர்வு காலம்: ஐந்து வருடங்கள்
குறைந்த பட்ச செலுத்தும் தொகை: 1000.00
அதிகபட்சம்: 30,00,000.00
ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் 30 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
வட்டி 8.2சதவீதம்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி உங்களுடைய சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
31 மார்ச் / 30 ஜுன் / 30செப்டம்பர் / 31டிசம்பர்.
—————————————————————————————————
உதாரணத்திற்கு
30,00,000.00 செலுத்தி இருந்தால்
61,499.00 மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும்.
மாதம் 20,500.00.
——————————————————————————————————
ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் செலுத்திய தொகை முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.
வருடத்திற்கு50,000.00 மற்றும் அதற்கு மேல் வட்டி வந்தால் அதற்கு வரி உண்டு.
வட்டி வரவிற்குsection 80c மூலம் வரிவிலக்கு பெறலாம்.
15G மற்றும்15H பாரத்தை அஞ்சல் அலுவலகத்தில் கொடுத்தால் உங்களுக்கு வரி பிடிக்க மாட்டார்கள்.
60வயது முடிந்த எந்த பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த கணக்கை துவங்கலாம்.
ராணுவம் அல்லாத வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது விருப்ப ஓய்வு பெற்றிருந்தாலோ 55 வயதிற்கு மேல் இருந்தால் இந்த கணக்கை துவங்கலாம். ஓய்வு பெற்று பணம் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கை துவங்க வேண்டும்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று 50 வயதிற்கு மேல் இருந்தால் இந்த கணக்கை துவங்கலாம். ஓய்வு பெற்ற பின்னர் வரும் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்த கணக்கை துவங்க வேண்டும்.
கணக்கு துவங்க தேவையான சான்றிதழ் நகல்கள்
-
ஆதார்
-
நான்
-
போட்டோ இரண்டு
-
நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் இவைகள் தேவைப்படாது.
கணக்கு துவக்கி இடையில் அவசரமாக பணம் தேவைப்பட்டு கணக்கை முடிக்கவேண்டும் என்றாலும் முடித்துக் கொள்ளலாம் ஒரு நிபந்தனையுடன். ஒரு வருடத்தில் நீங்கள் திரும்ப பெற்றால் உங்களுக்கு எந்த விதமான வட்டியும் கிடைக்காது. ஏற்கனவே நீங்கள் வட்டி பெற்றிருந்தால் அந்த வட்டி பணத்தை கழித்துக்கொண்டு மீது பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு வருடம் முடிந்து இரண்டாம் வருடம் முடிவதற்குள் நீங்கள் கணக்கை முடிக்க விரும்பினால் உங்களுடைய வைப்புத்தொகையிலிருந்து1.5சதவீதம் பிடித்தம் போக அசலை பெற்றுக்கொள்ளலாம்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு ஐந்து வருடங்களுக்கு முன்னதாக கணக்கை முடிக்க விரும்பினால் ஒரு சதவீதம் பிடித்தம் போக நீங்கள் அசலை பெற்றுக்கொள்ளலாம்.
ஐந்து வருடங்கள் முழுமை பெற்றால் எந்த விதமான பிடித்தமும் இல்லாமல் முழு அசலையும் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் மேலும் நீட்டிக்க விரும்பினால் மூன்று வருடங்களுக்கு நீடித்துக் கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் எப்பொழுது பணம் தேவையென்றாலும் பிடித்தம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.