சர்க்கரைவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள்.
Top 10 Health Benefits of Sweet Potato Tamil | Healthy Food – adhikan.co.in
அந்தந்த சீசனில் கிடைக்கக்கூடிய உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு தான் சர்க்கரைவள்ளி கிழங்கு. கிழங்கு வகைகளிலேயே அதிக சத்துக்களும் அதிக மருத்துவ குணங்களும் கொண்ட கிழங்கு. அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு கிழங்கு. உலகம் முழுவதுமே பரவலாக காணப்படக்கூடிய ஒரே கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சர்க்கரைவள்ளி கிழங்கை சீசனில் சாப்பிடும்போது நமக்கு கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்று: கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
கிழங்குகளிலேயே அதிக அளவு விட்டமின் ஏ சத்து நிறைந்த ஒரே கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு. 100 கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கில் 14,187 இன்டர்நேஷனல் யூனிட் விட்டமின் ஏ இருக்கிறது. இது கண்களில் இருக்கக்கூடிய ஐ ரிசப்டா செல்களான ஒளியை உள்வாங்க கூடிய திசுக்களை புதுப்பிக்கும். இதன் மூலமாக சிரோப்தாழ்மியா என்னும் கண்ணழற்று நோய் வராமல் தடுக்கவும் ஐ கேட்ராக்ஸ் என்னும் கண்புறை வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது சர்க்கரைவள்ளி கிழங்கில் கண் பார்வை திறனை அதிகரிக்க கூடிய ஆற்றல் இருக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்க சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.
இரண்டு: குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
பொதுவாக கிழங்குகள் அனைத்திலும் டைட்ரி பைபர் என்னும் நார்ச்சத்து குறைவாகத்தான் இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளிக்கிழங்கை பொறுத்தவரைக்கும் சாலிபுல் பைபர் மற்றும் இன்சாலிப்பில் பைபர் என்ற இரண்டு வகையான நார்ச்சத்தும் நிறைய இருக்கிறது. நூறு கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கில் மூன்று கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இது காட் பிரெண்ட்லி பாக்டீரியா என்று சொல்லக்கூடிய பிபிடோபாக்டீரியம், லாக்டோபாகிலஸ் போன்ற நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
குடல் சார்ந்த பிரச்சினைகளான காஸ்ட்ரிக் அல்சர் இரிட்டபுள் பபுள் சென்றோம் டைரியா போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு நார்ச்சத்து மிகுந்த ஒரு கிழங்கு என்பதினால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுத்து மலம் எளிதில் வெளியேறவும் உதவி செய்கிறது. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சிகளினால் அவதிப்படக்கூடிய குழந்தைகளுக்கும் தாராளமாக சர்க்கரைவள்ளிக்கிழங்கை கொடுக்கலாம்.
மூன்று: மாரடைப்பு வராமல் தடுக்கும்
ஹார்ட் அட்டாக் என்னும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள். ரத்த நாளங்களில் உண்டாகக்கூடிய இன்ஃப்ளமேஷனும் அதில் படியக்கூடிய கெட்ட கொழுப்பும். இந்த இரண்டையும் தடுக்கக்கூடிய ஆற்றல் சர்க்கரைவள்ளி கிழங்கிற்கு இருக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கக்கூடிய அதிகப்படியான சாலிப்பில் பைபர் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கக்கூடிய எல் டி எல் என்னும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதனால் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் விட்டமின் சி இ மற்றும் ஆந்தோசைனின் இதயத்தில் இன்ஃப்ளமேசன் உண்டாவதை தடுக்கும். இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நான்கு: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நம்முடைய இடங்களில் பழுப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சதைப்பகுதி கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்குகள் கிடைக்கும். இதில் ஆரஞ்சு கலர் சதை பகுதி கொண்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிகப்படியான பீட்டா கரட்டின் எனும் ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. மேலும் 100 கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கில் 2.4 மில்லி கிராம் விட்டமின் சி சத்து இருக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கக்கூடிய இந்த இரண்டு சத்துக்களும் நம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு பல்வேறு நோய்க்கிருமிகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
ஐந்து; கேன்சர் வராமல் தடுக்கும்
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் ஆந்தோ சைனில் போன்ற ஸ்ட்ராங்க் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருக்கிறது. இது கேன்சர் செல்கள் உருவாக காரணமாக இருக்கக்கூடிய பீரியாடிக்கில் செல்லும் செல் கழிவுகளை வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கிறது. குறிப்பாக கோலன்கேன்சர் என்னும் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் சர்க்கரைவள்ளி கிழங்குக்கு உண்டு என பல ஆய்வுகளில் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆறு; ரத்த அழுத்தத்தை சீராக்கும்
உடலில் நரம்புகள் மற்றும் தசைகள் சீராக சுருங்கி விரிய தேவையான மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கில் 337 மில்லி கிராம் பொட்டாசியம் 25 மில்லி கிராம் மெக்னீசியம் சத்து இருக்கிறது. பொட்டாசியம் சத்து உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றி இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவி செய்யும் மெக்னீசியம் இதய தசைகள் சீராக சுருங்கி விரிந்து இரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்தும். உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறவர்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்
ஏழு: சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
பொதுவாக பூமிக்கு அடியில் விளையக்கூடிய எந்த ஒரு கிழங்கையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு ஆனால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அளவாக இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வரலாம். காரணம் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மட்டும் இல்லாமல் குறைந்த கைசமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு கிழங்கு என்பதினால் சர்க்கரைவள்ளி கிழங்கை மற்ற கிழங்குடன் ஒப்பிடுகையில் இதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் ரத்தத்தில் மெல்ல மெல்லத் தான் சர்க்கரையாக வந்து மாறும் மேலும் இன்சுலின் சென்சிடிவிட்டியையும் ஊக்குவிக்க கூடியது சர்க்கரைவள்ளி கிழங்கு. சர்க்கரை நோயாளிகள் கூட அளவாக சாப்பிட உகந்த ஒரு கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு.
எட்டு: சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சர்க்கரைவள்ளி கிழங்கில் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான
வைட்டமின் ஈ சி ஏ போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. இது சரும சுருக்கம் மற்றும் ஹைபர் பிக்மென்டேஷன் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும் மேலும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான விட்டமின் ஏ, சி, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் சருமத்தில் இருக்கக்கூடிய கொலாஜின் செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முகப்பொலிவை அதிகரிக்கும்.
ஒன்பது: ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இயல்பாகவே சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிகப்படியான கரோட்டினாய்ட், பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகம் இருக்கிறது. குறிப்பாக மேலை நாடுகளில் அதிகம் காணப்படக்கூடிய ஊதா கலர் சதைப்பகுதி கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கில் ஆன்டோ சைனின் எனும் ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் இருக்கிறது. 100 கிராம் பல்பில் கலர் சர்க்கரைவள்ளி கிழங்கில் 519 மில்லிகிராம் ஆந்தோசைனின் இருக்கிறது.இது மூளையில் இருக்கும் செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.
பத்து: மன அழுத்தத்தை குறைக்கும்
ஸ்ட்ரெஸ் என்னும் மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய உணவுகளில் மிக முக்கியமானது சர்க்கரைவள்ளி கிழங்கு. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கக்கூடிய மெக்னீசியம் சத்து ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசால் ஹார்மோனை குறைத்து மன அழுத்தம் உண்டாவதை குறைக்கும் மேலும் இதில் இருக்கக்கூடிய விட்டமின் பி6 ஹாப்பி ஹார்மோனான டோபமை என அதிகம் வந்து உற்பத்தியாக வைக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடும்போது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் நல்ல புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொடுக்கும். என்ன நண்பர்களே இன்னைக்கு இந்த வீடியோ