பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்ச பலன்கள் – 3

 Effects of moles on Female -3 Macha Palangal for Women – 3

பெண்களுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் உள்ள மச்சங்களுக்கு என்ன அதிர்ஷ்ட பலன்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்ச பலன்கள்

பெண்களுக்கு இடது கையில் மச்சம் இருந்தால் நடுத்தர குடும்ப வசதிகளுடன் வாழ்வார்கள். வலது கையில் மச்சம் இருந்தால் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கை அமையும்.

பெண்களுக்கு கழுத்து, தோல், முதுகு, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள மச்சங்களுக்கு என்ன அதிர்ஷ்ட பலன்கள்

இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நன்மையை அளிக்கும் மற்றவர்களிடம் மரியாதை உடன் நடந்து கொள்வார்கள்.

வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நற்குணங்கள் கொண்டவர்கள் வாய் துடுக்கு அதிகம் உள்ளவர்கள். ஆகையால் இவர்களுக்கு பேச்சில் கவனம் தேவை.

பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்ச பலன்கள் - 1

இடது உள்ளங்கையின் பின்புறம் இருந்தால் நேர்மையானவர்கள் எளிதில் கோபமடைவார்கள். அதிக எதிர்ப்புகளை சந்திக்க கூடும். குறைந்த அளவில் நண்பர்கள் உண்டு, 

வலது உள்ளங்கையில் பின்புறம் இருந்தால் அமைதியானவர்கள் சண்டைகளை விரும்பாதவர்கள். மற்றவர்களிடம் நட்புடன் இருப்பார்கள். 

கைவிரல்களின் பலன்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

இடது கைவிரல்களின் பலன்களை பார்ப்போம். கட்டை விரலில் மச்சம் உள்ள பெண்கள் நேர்மையானவர்கள். முன்னேற்றத்தில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளித்து வெற்றி பெறுவார்கள். 

 தலை மற்றும் முகத்தில் உள்ள மச்ச பலன்கள்.

ஆள்காட்டி விரலில் மச்சம் இருப்பவர்கள் கடுமையாக உழைத்து செல்வம் சேர்ப்பார்கள். நல்ல குணங்களை உடையவர்கள். அடுத்தவரை ஏமாற்ற மாட்டார்கள்.

நடுவிரலில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வசதி மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை அடைவார்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.

மோதிர விரலில் மச்சம் உள்ள பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இருக்கும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். சில சமயங்களில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்ச பலன்கள்

விரலில் மச்சமுள்ள பெண்கள் பிடிவாதக்காரர்கள் நல்ல வசதியான வாழ்க்கை அமையும்.

வலது கை விரல்களின் பலன்களை பார்ப்போம். கட்டை விரலில் மச்சம் உள்ள பெண்கள் தெய்வ நம்பிக்கை மற்றும் நல்ல குணங்களை உடையவர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் பெயருடன் வாழ்வார்கள்.

ஆள்காட்டி விரலில் மச்சம் இருப்பவர்கள் நல்ல குணங்கள் உடையவர்கள் நேர்மையானவர்கள். நடுவிரலில் மச்சம் இருப்பவர்கள் செய்யும் தொழில்களில் சிறந்து விளங்குவார்கள். வசதியான வாழ்க்கை அமையும்.

மோதிர விரலில் மச்சம் இருந்தால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இவர்களின் அறிவு மற்றும் ஆற்றலால் செல்வம் பல வழிகளில் வந்து கொண்டே இருக்கும்.

பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்ச பலன்கள் - 1

சுண்டு விரலில் மச்சம் உள்ளவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் உயர்ந்த செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பார்கள். பொறுமைசாலிகள் எதையும் திறமையாக கையாள கூடியவர்கள்.

பெண்களுக்கு இடது பாதத்தில் இடது புறம் மச்சம் இருந்தால் நற்குணங்கள் நிறைந்தவர்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். அழகான தோற்றம் கொண்டவர்கள். 

வலது புறம்மச்சம் இருந்தால் இரக்ககுணம் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.

பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

வலது பாதத்தில் இடது புறம் மச்சம் இருந்தால் நடுத்தர வாழ்க்கை அமையும். திருமண வாழ்வில் மனநிறைவு பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.

வலது புறம் இருந்தால் அதிர்ஷ்டசாலிகள். நல்ல கணவர் மற்றும் பிள்ளைகளை பெற்று அவர்களால் பெருமை அடைவார்கள். 

கால்விரலில் மச்சம் இருந்தால் இவர்கள் செல்வ செழிப்போடு சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டு இருப்பார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *