Iranthavargal Kanavil Vanthal Palan
இறந்தவர்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்க போறோம். கனவுகள் என்பது எப்போதுமே விசித்திரமானவை தான் ஒரு கனவு எதற்காக வருகிறது எதனால் வருகிறது என்று நாம் சரியாக அறிந்து கொள்ள முடியாது. சில கனவுகள் நம்முடைய எண்ணங்களின் கலவையாக இருக்கும் ஆனால் சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும் படி இருக்கும் கனவுகளிலும் கூட பல்வேறு வகைகள் இருக்கின்றன
அவற்றில் ஒன்றுதான் நம்மோடு நெருங்கி பழகியவர்கள், நமக்கு மிகவும் பிடித்தவர்கள் மற்றும் நம் நெருங்கிய உறவினர்கள், நம்மோடு தொடர்புடைய சில நண்பர்கள் என நமக்கு மிகவும் தொடர்புடைய இறந்தவர்கள் கனவில் வருவது, அப்படி இறந்தவர்கள் கனவில் வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி கனவு சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதை பற்றி இன்றைக்கு தெரிந்து கொள்வோம்.
பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் மரணமடைந்து பின்னர் நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனை தரும்.
இதையும் படிக்கலாமே: 50 கனவுகளின் பலன்கள்
இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால் உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக நீங்கள் முடிக்க போகிறீர்கள் என்று பொருள்.
இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று பொருள்.
நமக்கு வேண்டப்பட்ட சிலர் யாராவது இறந்துவிட்டது போல் நமக்கு சில சமயங்களில் கனவுகள் வரும் அவ்வாறு கனவுகள் வந்தால் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்,
இறந்தவர்களின் சடலத்தை கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
இறந்து போனவர்கள் அதாவது இது யாராக வேணாலும் இருக்கலாம் இறந்து போனவர்களை நாம் சுமந்து தூக்கிச் செல்வது போன்ற கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேரும்.
இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதைப் போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து நீங்கள் தப்பிப்பீர்கள் என்று பொருள்.
இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நட்புகளும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.
இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சில வருவார்கள் என்று பொருள். விரைவில் உங்களுக்கு பெயரும் புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம். செல்வாக்கை இழந்தவர்களாக இருந்தாலும் நற்பெயர் திரும்பப் பெற்று உற்றார் உறவினர்களிடத்தில் நீங்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள்.
இறந்தவர்கள் உங்களுக்கு உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் தடைபட்ட காரியங்கள் தடை விலகி சுபமாக நடக்கும் வழக்கு நடந்து கொண்டிருந்தால் அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசீர்வதிப்பது போல் கனவு கண்டால் எல்லாவிதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
தான் இறந்துவிட்டது போல் கனவு வந்தால் நன்மைகளே ஏற்படும் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
இதையும் படிக்கலாமே: இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்
இறந்தவர்கள் கனவில் வந்து தொடர்ந்து உங்கள் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே இருப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு நற்செய்தி வரப்போகிறது என்பதை வெளிக்காட்டும் ஒரு அறிகுறி தான் இது.
இறந்தவர்கள் வந்து கனவில் உங்கள் பெயரை ஒருமுறை சொல்லி அழைத்தால் நீங்கள் ஏதாவது ஒரு கடின நேரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இதுதான் இதோட குறிப்பு.
இறந்து போன தாய் தந்தை தொடர்ந்து அடிக்கடி கனவில் வந்தால் நமக்கு வரப்போகும் ஆபத்துக்களை அவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று அர்த்தம்.
குழந்தை இறந்து போனது போல் நாம் கனவு கண்டால் ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் நல்லதல்ல அவர்களுக்கான பித்ரு காரியங்களை தவறாமல் மற்றும் குறையில்லாமல் நாம செய்ய வேண்டும் அதுதான் நல்லது.
துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும் உடல் நலம் குறையலாம் விபத்து குடும்பத்தில் வாக்குவாதம் பிரிவு உள்ளிட்டவை ஏற்படக்கூடும் இது போன்ற சில தேவையற்ற கனவுகளை தவிர்க்க குலதெய்வ கோவில் வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம் அவ்வாறு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் போது நம் குடும்பத்துடன் சென்று அனைவரும் குலதெய்வத்தை வேண்டி பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கினால் தேவையற்ற கனவுகள் நீங்கும் என்பது உண்மை.
Your blog has helped me through some tough times and I am forever grateful for your positive and uplifting content
From the bottom of my heart, thank you for being a source of positivity and light in this sometimes dark and overwhelming world
Your blog post had me hooked from the first sentence.
From the bottom of my heart, thank you for being a source of positivity and light in this sometimes dark and overwhelming world
Your passion for this topic shines through in your writing It’s clear that you put a lot of effort and thought into your posts Thank you for sharing your knowledge with us
Your blog is a haven of positivity and encouragement It’s a reminder to always look on the bright side and choose happiness
Your blog post had me hooked from the very beginning!
Your writing style is so engaging and easy to follow I find myself reading through each post without even realizing I’ve reached the end
Your blog has helped me become a more positive and mindful person I am grateful for the transformative effect your words have had on me