பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆண்களின் 4 குணங்கள்

(4 qualities of men that make women look back)

பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆண்களின் 4 குணங்கள். எதிர் பாலினத்தை கவர்வது என்பது உலக உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது தான். அதில் மனிதர்கள் எப்போதும் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். பெண்கள் கொஞ்சம் வித்தியாசமான ரசனையுடன் இருப்பவர்கள். பொதுவாகப் பெண்களைக் கவர்வது  ஆண்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கும். சில ஆண்கள் தான் பெண்ணின் பின்னால் போவதைவிட தன் பின்னால் பெண்களை வர வேண்டும் என்று நினைப்பார்கள். எப்படி இருந்தால் பெண்களுக்கு ஆணை பிடிக்கும் எப்படி பட்ட ஆண்களைப் பெண்கள் திரும்பிப் பார்ப்பார்கள் எனப் பார்க்கலாம் வாருங்கள்.

நேராக நிமிர்ந்து நடக்கும் ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உடல் பாவனையிலும் நடையிலும் தன்னம்பிக்கை தெரிய வேண்டும். நிமிர்ந்து நடப்பதில் இரண்டு வகை உண்டு ஒன்று ஆணவத்துடன் நடப்பது மற்றொன்று கம்பீர நடை.

இரண்டாவதாகச் சொல்லப்படுகிற கம்பீர நடையை பெண்கள் ரசிப்பார்கள். ஆண்களுக்கென்று ஒருவகை கம்பீரமும் நேர்மையான உடல் பாகமும் இருக்கும். கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே ரசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுடைய உடல்மீது உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தாலே போதும் உங்கள் உடலும் நடையும் தோரணையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மன அழுத்தம் குறைய எளிய வழிகள்.

தங்களுக்கு பிடிக்கிற ஆண்களுக்குச் சில குணங்கள் இருக்க வேண்டும் எனப் பெண்கள் விரும்புகிறார்கள். தனக்கு பிடித்த ஆண்கள் எவ்வளவு கம்பீரமாக இருந்தாலும் அவர்களுக்குள் அவ்வப்போது ஒரு சுட்டி பையன் வந்து எட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொறுமையாக இருக்க வேண்டும், நிறைய கோபப்படக் கூடாது, எதற்கும் பயப்படக் கூடாது, காதலுடன் சேர்ந்த அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

முடி கொட்டுவதற்கு சொட்டையாக இருந்தால் அதற்கெல்லாம் உட்கார்ந்து சோர்ந்து போய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஆண்களைப் பெண்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. குண்டாக இருப்பவர்கள் தான் குண்டாக இருக்கிறோம் என்பதற்காக அதைக் குறைப்பதற்கான முயற்சி எடுக்காமல் அதைப் பெரிய குற்றமாக நினைத்து தாழ்வு மனப்பான்மையோடு இருப்பது கூடாது.ஒரு ஆய்வின் படி சொட்டை விழுந்த ஆண்களையே அதிகம் பெண்கள் விரும்புவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முடி குறைந்த அல்லது சொட்டை விழுந்த ஆண்கள் இயல்பாகவே அதிக கம்பீரத்துடன் இருப்பதாகப் பல பெண்கள் ஆய்வில் தெரிவித்தனர்.

ஒரு பெண்ணை பற்றி தவறாகப் பேசாமல் இருப்பது கூட ஆண்மை தான். பல ஆண் பெண் நண்பர்கள் ஒன்றாக இருக்கும் கூட்டத்தில் எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் தப்பாகப் பேசாமல் இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியே இருந்தாலும் அவளைப் பற்றி தவறாகப் பேசாமல் அவரது சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்கிறது.

பிரச்சனையான சூழ்நிலையையும் அமைதியாகக் கையாளும் ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுடன் துணிவுடன் நேர்த்தியாக ஒன்றே ஆராய்ந்து அணுகும் தன்மை கொண்ட ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்கிறது. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்து கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *