தம்பதிகள் உடலுறவில் செய்யும் 4 பொதுவான தவறுகள் மற்றும் செய்யக் கூடாத தவறுகள்.

தம்பதிகள் உடலுறவில் செய்யும் 4 பொதுவான தவறுகள் மற்றும் செய்யக் கூடாத தவறுகள்.


கணவன் மனைவிக்குள் உறவில் அதிக இன்பத்தைப் பெறுவதற்கு உடலுறவு குறித்த எல்லா விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றஅவசியம் கிடையாது. புதிதாக உறவில் ஈடுபட தொடங்குபவர்களுக்கு அதுகுறித்து நிறைய சந்தேகங்களும் தயக்கங்களும் ஏற்படும். அதனால் நிறைய குழப்பங்களும் தவறுகளும் ஏற்படுவதுண்டு. 


அதனால் தாங்கள் விரும்பும் அளவுக்கு நிறைவான இன்பத்தை எட்டுவதில் சிரமங்கள் உண்டாகின்றன. உறவில் புதியவர்களோ அனுபவம் நிறைந்தவர்களோ யாராக இருப்பினும் பொதுவாகப் பலர் செய்யும் சில தவறுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படி பொதுவாகத் தம்பதிகள் செய்கின்ற தவறுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


சில தம்பதிகள் வழக்கமாக எப்போதும் உறவில் ஒரே பொசிஷனில் மட்டும் உறவு கொள்வார்கள் அது அவர்களுக்குச் சௌகரியமான பொசிஷன் என்ற முடிவுக்கு வருவது அதற்குக் காரணம் அதோடு அந்தப் பொசிஷன் நிலையைத் தாங்கள் இருவரும் திருப்தி அடைவதாக முடிவு செய்கிறார்கள். அதனாலேயே வேறு எந்தப் பொசிஷன்களையும் அவர்கள் முயற்சி செய்வதே கிடையாது.



இதையும் படிக்கலாமே: மன அழுத்தம் குறைய எளிய வழிகள் 



சில சமயங்களில் உறவு கொள்ளும் சமயங்களில் உடல் இயக்கம் மற்றும் உடலுக்குள் ஏற்படும் அழுத்தங்களின் காரணமாக ஆசனவாய் அல்லது பிறப்புறுப்பின் வழியே வாயு வெளியேறும். பொதுவாகச் சாதாரண நேரத்தில் வீட்டில் அல்லது அருகில் இருப்பவர்கள் வாயு வெளியேறினால் இயல்பாகச் சிரித்து விடுவோம். அதுபோல உறவு கொள்ளும் நேரங்களில் இருவரில் யாரேனும் வாயு வெளியேற்றினால் அதை பார்த்து சிரிக்க கூடாது. சிரித்து சங்கடப்படுத்தக் கூடாது


ஆபாச படங்களைப் பார்த்து அவற்றில் உள்ளது போலத் தாங்களும் உறவில் ஈடுபட முயற்சிப்பது பெரும்பாலான ஆண்கள் செய்கின்ற தவறுகளில் ஒன்றாக இருக்கிறது. படங்கள் கற்பனைகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஆனால் அதைப் பார்ப்பவர்கள் தங்களால் அப்படி செய்ய இயலும் என்று கருதி கொள்கிறார்கள். அதை முயற்சித்துப் பார்க்கவும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே தங்களுடைய துணையுடன் மனமொத்து உறவில் ஈடுபடும் எளிமையான முறையே அதிக இன்பத்தைத் தரும் என்று மறந்து விடாதீர்கள்.


கணவன் மனைவிக்குள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் இவர்கள் உடலுறவு குறித்த விஷயங்களைப் பற்றி ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில் மிகுந்த சங்கடத்தை வைக்கிறார்கள். அப்படிப் பேசிக் கொள்வது தவறு என்றும் கூச்சத்தாலும் பேசுவதில்லை. இந்தத் தவறை பெரும்பாலான தம்பதிகள் செய்கிறார்கள். இந்தத் தயக்கத்தை விட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய மனதில் இருப்பதையும் தங்களுக்கு பிடித்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும்போது உறவு சிறக்கும். 



உறவின்போது ஒருவருடைய காலைப் பிடிக்க மற்றொருவர் தயக்கம் காட்டுவது இந்தத் தவறையும் பலரும் செய்கிறார்கள் கணவன் மனைவிக்கு உள்ளாகவே ஒருவர் காலை மற்றவர் தொடுவதால் மரியாதை குறைவு ஏற்படும் என்றும் கூச்சமாக இருப்பதாகவும் நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். உறவில் தம்பதிகளுக்குள் பால் வேறுபாடு உயர்வு தாழ்வு கிடையாது. 



இதையும் படிக்கலாமே: பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆண்களின் 4 குணங்கள்  



ஆண்கள் உச்சம் அடைந்து விட்டால் பெண்கள் தன் துணையை திருப்தி அடைய செய்து விட்டதாகவும் அதேபோலப் பெண்கள் உச்சமடைந்தால் ஆண்கள் தன்னுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்தி விட்டதாகவும் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் முதலில் தவறானது பெண்களும் ஆண்களும் இந்தத் தவறை பொதுவாகச் செய்கிறார்கள். 


உச்சம் தாமதம் ஆனால் குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். அது தேவையில்லை உறவில் உச்சத்தை எட்டவில்லை என்றால் அந்த உறவுத் தோல்வி அடைந்து விட்டதாக மனதில் நினைத்துக் கொள்கிறார்கள். இந்த எண்ணம் பெரும்பாலான தம்பதிகளிடம் உண்டு. அதற்கான காரணத்தை உட்கார்ந்து ஆராய ஆரம்பித்து விடுகிறார்கள். 




உண்மையில் உச்சமடைதலுக்கும் உச்சத்தை எட்டாமைக்கும் மன ரீதியான காரணங்களும் உண்டு. அதேசமயம் உறவு கொள்ளும் எல்லா சமயங்களிலும் உச்சத்தை எட்டிவிடும் தம்பதிகள் என்று யாரும் கிடையாது என்பதை முதலில் உணர வேண்டும். 


தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அதீத காதல் கொண்டவர்களாகக் கூட இருக்கலாம். அப்படி இருப்பதாலேயே உறவில் தனக்கு என்ன பிடிக்கும் தனக்கு என்ன தேவை தான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை அவர் புரிந்து கொள்வாரென நினைத்துக் கொண்டு மனதில் நினைப்பதை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள். 


ஆனால் அது முற்றிலும் தவறானது இருவருக்குள் இருக்கும் காதலுக்கும் உறவில் உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்கள் துணை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொண்டு நடப்பாரென நினைப்பதும் மிகப்பெரும் தவறு. மனம் விட்டு பேசுவது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *