ஊக்கமூட்டும் மேற்கோள்கள் (Motivational Quotes)
யாரிடமும் ஒரு அளவிற்கு மேல் பேசாதீர்கள்…! பழகாதீர்கள்…!
(Don’t talk too much with anyone)
- மனம் உடைந்து சிந்தும் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பு மிக அதிகம். அதை மனிதர்களிடம் காட்டுவதை விட நீ வணங்கும் இறைவனிடம் காட்டிவிடு.
- கடவுளை நேரில் பார்த்ததில்லை என்று சொல்லாதீர்கள்.
- உங்கள் கஷ்டத்தில் உதவும் கருணை உள்ளம் கொண்ட அனைவரும் கடவுளே.
- பேசி சாதிப்பதை விட அமைதியாக இருந்து சாதியுங்கள்.
- உங்கள் அமைதி யாரையும் உங்கள் அருகில் வரப் பயமுறுத்தும்.
- வன்முறையைக் கண்டு அமைதியாக இருப்பதும் ஒருவகை வன்முறையே.
- உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால் உன் வாழ்வு எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
- மனதின் துன்பத்திற்கு அடிப்படை காரணம் தேவையற்ற ஆசைகளும் தேவையற்ற கற்பனைகளும் தான்.
- நம்மைச் சுற்றி நடக்கும் எந்த ஒரு செயலையும் நீ எளிதாக எண்ணி விடாதே.
- காரணம் இல்லாமல் காகமும் கரையாது.
- கடும் கோபத்திலும் அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் இருந்தால் நீங்களும் கடவுளே.
- நீ செய்த செயல்கள் அனைத்தும் நிழல்போல உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
- அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி.
- உன்மீது அன்பு குறைந்து விட்டால் அவரது பார்வை முழுவதும் உன் குறைகளைத் தேடி அலையும்.
- இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை நினைவுகள் என்ற ஒன்றைத் தவிர. தனிமை வேதனை என்று எண்ணி விடாதே சாதனை செய்யும் சிந்தனைகளை அது உனக்குத் தரும்.
- உறவுக்கு நீ செய்வது உதவியாகும் அது தானமாகாது.
- ஊருக்குச் செய்வதே தானமாகும் விட்டுவிடு அது மகிழ்ச்சிக்கான திறவுகோல்.
- எங்கே கேள்விகள் இல்லையோ அங்கே பதிலும் இல்லை.
- அன்பால் யானையைக் கூட அடக்கி விட முடியும் அதிகரத்தால் எரும்பை கூடப் பணிய வைக்க முடியாது.
- உன் எண்ணங்கள் எது என்பதை ஒருபோதும் இவ்வுலகிற்கு தெரியப்படுத்தாதே.
- ஏனென்றால் இங்கு உன்னை வாழ்த்த நினைப்பவரைவிட வீழ்த்த நினைப்பவரே அதிகம்.
- உயிர்மீது இருக்கும் நம்பிக்கையே உறங்கிய உடலை எழுப்புகிறது. சாத்தியமான அனைத்திலும் நீ நம்பிக்கை வைநடக்கும்.
- விருப்பு வெறுப்பு அற்றவனின் மனதில் அமைதி எப்பொழுதும் நிறைந்திருக்கும்.
- எதையும் நீ தேடி போகாதே தகுதி இருந்தால் அது உன்னைத் தேடி வரும்.
- குழம்பிக் கொண்டே இருந்தால் விதி உன் வாழ்க்கையை புரட்டிப்போட்டுக் கொண்டே தான் இருக்கும்.
- அதனால் அமைதியாக இரு விதியும் விரித்து விலகிப் போகும். அவமானமும் அனுபவமும் தான் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆசான். அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலையுறைந்த புத்தகமும் கற்றுக் கொடுக்காது.
- அன்பு ஒன்றே அழகு பார்ப்பதில்லை அனைத்தையும் அழகாக்கி பார்க்கிறது.
- உங்களை ஏமாற்றுபவர்களிடமிருந்தும், மதிக்காதவர்களிடமிருந்தும், உபயோகித்தவர்களிடமிருந்தும், விமர்சிப்பவர்களிடமிருந்தும், தாழ்த்தி பேசுபவர்களிடமிருந்தும் விலகி இருங்கள்.
- யார் மீதும் நாம் வெறுப்பை காட்டி எதையும் நீங்கள் மாற்றிவிடப் போவதில்லை.
- அமைதியாகக் கடந்து போகும் நடப்பது நடக்கட்டும் இருப்பவன் கொடுத்து வாழ வேண்டும்.
- இல்லாதவனைக் கெடுத்து வாழக் கூடாது.
- பழகும் எல்லோர் மீதும் பரிதாபப்படுவதும் ஒரு விதமான பலவீனமே. போலிகள் யார் என்று உனக்குத் தெரியாமலே போய்விடும்.
- இந்த உலகில் நமக்கென யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசியுங்கள் வாழ்க்கை மாறும்.
- எதுவும் நிரந்தரமில்லாத இந்த உலகில் உங்கள் கவலைகள் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்.
- ஒரு தீபத்திலிருந்து ஆயிரம் தீபங்களை ஏற்றினாலும் அதன் ஒளி குறைவதில்லை.
- உன் அன்பை பிறரருடன் பகிர்வதினால் அது என்றும் குறைவதில்லை. தன்னை தானே சரி செய்து கொள்ள முயலுங்கள்.
- அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றும் இல்லை.
- நீங்கள் தேடும்போது நான் கிடைக்கவில்லை என்றால் நான் இருக்கும்போது நீங்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை என்று அர்த்தம்.
- யாரையும் காயப்படுத்தாமல் யாரிடமும் காயப்படாமல் இருக்க வேண்டும் என்றால் தனிமையே சிறந்தது.
- உன் சொற்களைக் கேட்டு சிலருடைய உள்ளம் வேதனை அடைகிறது என்றால் அமைதியாக இருக்க பழகு.
- நல்வாழ்க்கைக்கு அதுவே அழகு.
- பிறர் நன்றாக இருக்க வேண்டும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது கூட ஒருவகையில் உதவிதான்.
- அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும்.
- வாழ்க்கை என்னவென்று வலிகளால் உணர்த்தும்.
- எத்தனை நல்ல மனிதர்களாக நடித்தாலும் அவர்களின் உண்மையான இயல்பைக் காலம் நமக்குக் காட்டி கொடுத்து விடும். தவறு செய்பவர்களைத் திருத்தி விடலாம் ஆனால் அதை நியாயப்படுத்துபவர்களை திருத்த முடியாது.
- எல்லோரும் கைவிட்ட நேரத்தில் உங்களோடு நின்ற அவர்களை உயிர் உள்ளவரை மறவாதீர்கள்.
- ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று வாழ்ந்து பார்.
- ஆறுதல் சொல்ல ஆளே தேவையில்லை.
- வாழ்க்கை பாடங்களை யாரும் தேடி போய் கற்றுக் கொள்ள தேவையில்லை.
- நம்மைச் சுற்றியுள்ளர்களே கற்றுக் கொடுத்து விடுவார்கள்.
- வலிதான் சற்று அதிகமாக இருக்கும் வாழ்க்கையில் நமக்கான நேரம். ஒரு நாள் வரும் வரை சிலவற்றை பொறுத்துக் கொண்டு ஓடிக்கொண்டே இரு.
- பசித்தபோது கிடைக்காத உணவும், பதறியபோது உதவாத உறவும் தேவையில்லை.
- வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மன்னிக்கவும் கூடாது மறக்கவும் கூடாது.
- எது வந்தாலும் ஏற்றுக்கொள் எது போனாலும் விட்டுவிடு.
- ஏனெனில் இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.
- படிப்பு கற்று தருவதை விடச் சில உறவுகளின் நடிப்பு சிறப்பாகக் கற்றுக் கொடுக்கிறது.
- வாழ்க்கையில் எல்லாம் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை. எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்பது தன்னம்பிக்கை. எல்லாவற்றையும் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது வாழ்க்கை.
- எல்லோருடைய வேஷமும் ஒரு நாள் கலையும் அப்போது சிறப்பான செய்கைகள் நம் கண் முன்னே தெரியும் காத்திரு.
- உங்களை நேரடியாக இருக்க தைரியம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம்.
- உங்களைப் பற்றிய பொய் வதந்திகள் வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்று தெரியவில்லை.
- ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையே மாற்றிவிடும்.
- அலட்சியப்படுத்தும் இடத்தில் அன்புக்காக ஏங்கி அவமானப்பட்டு நிற்காதே.
- அன்பு பெரியது என்றாலும் தன்மானம் அதைவிட பெரியது.
- காலம் போடும் கணக்கை இறைவனைத் தவிர யாராலும் மாற்ற முடியாது.
- அதனால் நல்லதை நினை நல்லதை செய் மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான்.
- உங்கள் வெற்றி தோல்வியை முடிவு செய்வது குரு பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ அல்ல.
- உங்கள் முயற்சியும் பயிற்சியும் தான்.
- அழும் பெண்களைக் கோழை என்று கூறுவதற்கு முன்னால் அழ வைத்தவர்கள் துரோகிகள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- உன்னைத் தள்ளி விட ஆயிரம் கைகள் வரும்.
- ஆனால் உன்னை தாங்கி பிடித்துக் கொள்ள ஒரே ஒரு கை தான் வரும்.
- அது உன் தன்னம்பிக்கை மட்டுமே.
- பிறருக்கு கொடுக்கும் நிலை உன்னிடம் இல்லை என்றாலும் பிறரை கெடுக்கும் எண்ணம் ஒருபோதும் உனக்கு இருக்கக் கூடாது.
- நல்ல குணம் கொண்ட ஒருவன் யாரையும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதில்லை.
- அதுபோலத் தரங்கெட்ட ஒருவனது கண்ணுக்கு யாரும் நல்லவராகத் தெரிவதில்லை.
- எல்லா இடங்களிலும் நேர்மையாக இருப்பவன் பணத்தைவிட பகையை வேகமாகச் சம்பாதிக்கிறான்.
- அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான் அது அவனுக்குப் பொழுதுப் போக்கு.
- ஆனால் நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உன்னுடையதாக இருக்க வேண்டும்.
- ஏனெனில் அது உன் வாழ்க்கை. உன்னுடைய கனவு பெரிதாக இருக்கும்போது உனது உழைப்பு கனவைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்.
- மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது நிம்மதியாக வாழ்வதற்கு. இன்று நாம் கடந்து செல்லும் கடினமான பாதை நாளை நாம் பெறப்போகும் வலுவான வெற்றியின் ஆரம்பம்.
- சண்டை போட்டுவிட்டு மறுநாள் எதுவும் நடக்காதது போல் பேசும் அன்பு கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே.
- இது என்னோட அனுபவத்தில் சொல்றது கேட்டுக்கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள் என்று உங்களை அவமானம் செய்தவர்கள் ஒரு நாள் உங்களைத் தேடி வந்து உதவி கேட்கும் காலமும் நேரமும் வரும்.
- அவமானத்தை அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவமானப்படுத்த ஒருவன் இல்லை என்றால் நமக்குத் தன் மானம் என்று ஒன்று தெரிந்திருக்காது.
- மற்றவர்களைப் பாவம் என்று நினைப்பவர்கள் நிலைதான் பாவமாக மாறிவிடுகிறது.
- கடற்கரை அருகில் இருந்தாலும் வறண்ட நாக்கிற்கு கடல் நீர் உதவாது.
- சில உறவுகளும் அப்படி தான் பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை.
- பொறாமை ஒருபோதும் ஜெயிப்பதில்லை.
- உங்களைக் கோபப்படுத்தும் எந்த ஒரு நபரும் உங்கள் எஜமானராக மாறுகிறார்.
- நீங்கள் அனுமதித்தால் மட்டுமே அவர் உங்களைக் கோபப்படுத்த முடியும்.
- கோபத்தில் தொடங்கப்படும் எதுவும் அவமானத்தில் முடிகிறது.
- பயம் என்பது இருண்ட பக்கத்திற்கான பாதையாகும்.
- பயம் கோபத்திற்கு வழிவக்கிறது. கோபம் வெறுப்புக்கு வழிவகுக்கிறது.
- வெறுப்பு துன்பத்திற்கு வலி வகுக்கிறது.
- உங்களைக் கோபப்பட வைப்பவர் உங்களை வெல்வார்.
- கோபம் ஒரு தற்காலிக பைத்தியக்காரத்தனம்.
- எனவே உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் அல்லது அது உங்களைக் கட்டுப்படுத்தும்.
- கோபம் ஒரு மிகப்பெரிய சக்தி உங்களால் அதைக் கட்டுப்படுத்த முடிந்தால் இந்த முழு உலகையும் நகர்ந்த கூடிய சக்தியாக அதை மாற்றலாம்.
- ஒரு சிறந்த போராளி ஒருபோதும் கோபப்படுவதில்லை.
- உங்கள் குழந்தைகளுக்கு ஒரு போதும் கோவப்பட வேண்டாம் என்று கற்பிக்காதீர்கள்.
- எப்படி கோபப்பட வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
- ஒரே நேரத்தில் கோவப்படுவதும் சிரிப்பதும் உங்களால் சாத்தியமற்றது.
- கோபமும் சிரிப்பும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது.
- மேலும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் அதிகாரம் உங்களுக்கு உள்ளது.
- கோபத்திற்கு சிறந்த நிவாரணம் தாமதித்தலாகும்.
- உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும்.
- கோபம் முட்டாள்களின் நெஞ்சில் மட்டுமே குடியிருக்கிறது.
- சரியான இடத்தில் சரியான நபருக்கு எதிராகச் சரியான விதத்தில் சரியான நேரத்தில் சரியான கால அளவில் கோபப்படும் மனிதரை நாம் போற்றுகின்றோம்.
- கோபம் அகிம்சை என் எதிரி.
- அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அக்கினி.
- நீங்கள் உங்கள் கோபத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் கோபத்தில் தவறில்லை.
- நீங்கள் அனுமதிக்காத வரை உங்களை யாரும் பொறாமை படவோ, கோபப்படவோ பழிவாங்கவோ அல்லது பேராசைப்படவோ வைக்க முடியாது.
- உண்மையைப் பேசுங்கள், உங்களால் முடிந்ததை கொடுங்கள், ஒருபோதும் கோபப்படாதீர்கள்.
- இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.
- ஒரு மனிதனின் மேன்மையை எது அவனைக் கோவப்படுத்துகிறது என்பதை வைத்து கூற முடியும்.
- பெரும் கோபமும் வன்முறையும் ஒருபோதும் ஒரு தேசத்தை உருவாக்காது.
- யார் வேண்டுமானாலும் கோபப்படலாம் அது எளிதானது.
- ஆனால் சரியான நபருடன் சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்திற்காகச் சரியான முறையில் கோபப்படும் ஆற்றல் அனைவருக்கும் இல்லை மற்றும் அது எளிதானதும் அல்ல.
- நீங்கள் சரியாக இருக்கும்போது நீங்கள் கோபப்பட வேண்டிய அவசியமில்லை.
- நீங்கள் தவறாக இருக்கும்போது உங்களுக்குக் கோவப்பட உரிமை இல்லை.
- நம்மைக் கோபப்படுத்தும் அல்லது எரிச்சல் ஊட்டும் விடயங்களைவிட நமது கோபமும் எரிச்சலும் நமக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.
- ஒரு கனத்தால் ஒரு நாளை மாற்ற முடியும்.
- ஒரு நாளால் ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும்.
- ஒரு வாழ்க்கையால் இந்த உலகை மாற்ற முடியும்.