மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க/white pumpkin juice/powerful ash gourd juice
உடலுக்கு நிறைய நன்மைகள் தரக்கூடிய சக்தி வாய்ந்த வெண்பூசணி ஜூஸ் எப்படி செய்வது.
உடல் குளிர்ச்சியாவது மட்டும் இல்லாமல் அதோட நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொண்டு அதை பக்குவமா செய்து நாம் சாப்பிடும்பொழுது அந்த ஜூஸோட மருத்துவ பயன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
வெண்பூசணி ஒரு நல்ல நீர் சத்து நார்ச்சத்து நிறைந்த காய். நம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், உடலில் இருக்கூடிய கழிவுகளை வெளியேற்றவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும் வெண்பூசணியில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. அந்த சத்துக்கள் எல்லாம் நமக்கு முழுமையாக கிடைக்க கூடிய வெண்பூசணி ஜூஸ் எப்படி செய்வது.
வெண்பூசணி காயை எடுத்து அதன் மேலுல்ல கனமான தோலை சீவி ஒரு 350 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வெண்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அப்பொழுது தான்
அரைப்பதற்கு சுலபமாக இருக்கும். நறுக்கி வைத்திருக்கும் வெண்பூசணி துண்டுகளுடன் ஒரு ஏழு எட்டு மிளகு சேர்ப்பது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; நரம்பு சுண்டி இழுத்தல் , கால் மரத்துப் போதல், கால் நரம்பு வலி
வெண்பூசணி
ஒரு சிலருக்கு பூசணிக்காய் ஜூஸ் தினசரி குடிக்கும் போது சளி பிடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால் பூசணிக்காயோடு மிளகு சேர்க்கறதினால் சளி பிடிக்காமல் இருக்கும். மேலும் மிளகு சேர்க்கும் போது ஜூஸும் நல்ல சுவையாகவும் இருக்கும். அதிகமாக இல்லாமல் ஒரு ஆறு அல்லது ஏழு மிளகு சேர்த்தால் போதும்.
அடுத்ததாக உப்பு ரெண்டு சிட்டிகை அளவுக்கு எடுத்து கொள்ளவும் கூடவே ஒரு கொத்து புதிய கருவேப்பிலை சேர்க்கவும். பூசணிக்காயோடு கருவேப்பிலை சேரும்போது அதிலிருக்கும் இரும்பு சத்து நமக்கு அதிகமாக கிடைக்கும். அந்த வாசனை சுவை ரொம்ப நன்றாக இருக்கும்.
உப்பு
உப்பு மட்டுமே சேர்த்து பூசணிக்காய் ஜூஸ் குடிக்கலாம். சுவையும் நன்றாக தான் இருக்கும். இனிப்பு சுவையை விரும்புவர்கள் பனைவெல்லம், நாட்டுச்சக்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இந்த ஆரோக்கியமான ஜூஸில் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இப்பொழுது வெட்டி வைத்திருக்கும் வெண்பூசணி துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகு சேர்த்து அதனுடன் இரண்டு சிட்டிகை அளவு உப்பு,கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த அந்த ஜூஸை வடிகட்டி மூலம் வடித்து எடுத்து கொள்ளவும். வடிக்காமல் அப்படியேயும் குடிக்கலாம். இனிப்பு சுவை வேண்டும் என்பவர் தேன் கலந்து குடிக்கலாம்.
இதையும் படிக்கலாமே ;நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்
கருவேப்பிலை
சக்தி வாய்ந்த ஜூஸ் மிகவும் நல்லது. நமது தோல் முடி அனைத்திற்கும் சிறந்தது. உடல் எடை குறைய தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிலர் இந்த ஜூஸை அடிக்கடி குடிக்க கூடாது. அதாவது சைனஸ் தொந்தரவு இருக்கிறவர்கள் சளி இருக்கும் போது இந்த ஜூஸல குடிக்க கூடாது.