எந்த கனவு நல்ல கனவு? எந்த கனவு கெட்ட கனவு?

கனவுகளின் பலன்கள்.

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் பலன் உண்டு சிலர் நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு என்றும் மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடு கனவு என்றும் கூறுவர். எல்லா கனவுகளும் பலிப்பதில்லை. மாறாகச் சில கனவுகள் வந்து மறையும் சில கனவுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். அதிலும் சிலருக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அதன் தொடர்பான விஷயங்களைக் கனவில் முன்னதாகவே காட்டிவிடும். எந்த கனவு நல்ல கனவு? எந்த கனவு கெட்ட கனவு?

நன்மைக்குரிய பலன்களும் தீமைக்குரிய பலன்களும்

நன்மையைக் குறிக்கும் கனவுகள்

நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்!! | வவுனியா நெற்

அலுவலகத்தில் பணியாற்றுவது போல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்று பொருள்.

அழகு இல்லாத பெண்ணை மணமாகாத ஆடவன் கனவில் கண்டால் மிகவும் அழகான பெண் மனைவியாவாள் என்று பொருள்

 ஆசிரியர் கனவில் வந்தால் பொருள் வளம் அதிகரிக்கும்

ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவது போல் கனவு வந்தால் செயல்களில் சிறு தடைகள் ஏற்பட்டு இறைவன் துணையால் நீங்கி வெற்றி பெறும்

ஆலயமணி ஓசை ஒழிக்கும் இசை கேட்டால் சந்ததியற்றவர்களுக்கு குழந்தை செல்வம் உண்டாகும்

இறந்த தாய் தந்தையர் கனவில் தோன்றினாள் வர இருக்கும் ஆபத்தினை எச்சரிக்க வந்துள்ளனர் என்று பொருள்

இது ஒரு விதத்தில் நன்மையே இறந்தவருடன் உரையாடுவது போல் கனவு வந்தால் உயர் பதவி அதிகார பதவி கிடைக்கும்

இறந்தவர்களைக் கனவில் கண்டால் சுப செய்தி வரும் என்பதை குறிக்கிறது

 இறந்தவர்களின் சடலங்களைக் கனவில் கண்டால் சுப செய்தி நிகழ்வு

 இனிப்பான பலகாரங்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்

உழவுத் தொழில் செய்வதாகக் கனவில் கண்டால் அவரது வாழ்க்கைத் தரம் உயரும்

எழுதிக் கொண்டிருப்பது போல் ஒருவர் கனவு கண்டால் நற்செய்திகள் விரைவில் அவரை நாடிவரும்

ஏழ்மை நிலையை அடைந்து விட்டது போல் கனவு கண்டால் எதிர்பாராத வகையில் அவருக்குத் திரண்ட செல்வம் வந்து சேரும்

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களைக் கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்

ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதே அறிகுறியாகும்

கடலைக் கண்டால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும்

கர்ப்பிணிப் பெண்ணைக் கனவில் கண்டால் பொருள் சேரும்

ஆலமரத்தை கண்டால் தொழில் அபிவிருத்தி அடையும்

கனவில் எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தராகக்கூடும்

பரம்பரை சொத்து கிடைக்கும்

கனவில் உடை எறிவது போல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பெரியவர்கள் ஆவார்கள்

 கனவில் காதணிகளை கண்டால் பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும்

கனவில் கிணற்றைக் காண்பது நல்லது திருமணம் கைகூடும்.

கனவில் தொழிற்சாலையைக் காண்போருக்கு பரம்பரை சொத்து கிடைக்கும்

கிணற்றிலிருந்து நீர் இறைப்பது போல் கனவு கண்டால் நல்ல விஷயம் கை கூடும்

கிணற்றைக் காண்பது நல்லதாகும் மனம் ஆகாதவர்களுக்கு மனம் ஆகும்

 குதிரை கழுதையை கனவில் கண்டால் வழக்குகளின் வெற்றி கிடைக்கும்

கோவிலினை கனவில் காண புகழ் உண்டாகும்

சண்டையில் பிறர் அடிப்பது போல் கனவு கண்டால் அவருக்கு விரோதிகள் விலகி விடுவார்கள்

உப்பைக் கனவில் கண்டால் தன லாபம் உண்டாகும்

சிறு குழந்தைகள் கனவில் வந்தால் பிணி நீங்கும்

சுத்தமான நீரூற்றை கனவில் கண்டால் அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது

தவ யோகிகளை கனவில் கண்டால் பொதுநலத் தொண்டில் ஈடுபடுவார்கள்

தற்கொலை செய்து கொள்வது போல் கனவு வந்தால் ஆபத்து நீங்கிவிடும்

தான் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால் புகழ் உண்டாகும் புதிய நண்பர்கள் உண்டாவார்கள்  

திருமண கோலத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும்

தேவலோக பெண்களை ஆண்கள் கனவில் கண்டால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்

நிலவைக் கனவில் கண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்

நீரூற்றை கனவில் கண்டால் அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது

உயிரினங்களைக் கனவில் கண்டால் கவலைகள் தீரும்

நெசவு தொடர்பான கனவுகள் நன்மைகள் அளிக்கும்

பசுவைக் காண்பது செல்வ வளத்தை உண்டாக்கும்

பழங்கள் நிறைந்த மரத்தைக் கண்டால் பொருள் சேர்க்கையும் புத்திர பாக்கியமும் உண்டாகும்

பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவில் வந்தால் செல்வம் பெருகும் திருமணத்தடை நீங்கும்

புது துணிகள் வாங்குவது போல் கனவு வந்தால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்

பெரும் பதவியில் உள்ளவர்களைக் கனவில் கண்டால் அந்தஸ்தும் மதிப்பும் அதிகரிக்கும்

மயிலினை கனவில் கண்டால் கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் அதிகரிக்கும்

மலத்தை மிதிப்பது போல் கனவு வந்தால் சுப செலவுகள் உண்டாகும்

மலர்கள் பூத்துக் குலுங்குவது போல் கனவு கண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்

மனைவி இறந்து விட்டார் போல் கனவு கண்டால் மனைவிக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதை குறிப்பிடும்

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்

மோதிரம் கனவில் வந்தால் சுக பலன்கள் உண்டாகும்

யானை ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்

மேலும் நல்ல காலம் பிறந்து இருப்பதை உணர்த்துவதாகும்

யானை கனவில் வந்தால் அரசாங்க உதவி நெடுநாள் வழக்கில் தீர்ப்பு கிடைக்கும் திருமணம் கைகூடும்

வானவில்லை கனவில் கண்டால் பணம் செல்வாக்கு அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைக்கும்

விருந்தில் உணவு உண்பது போல் கனவு கண்டால் திருமண தடை நீங்கும் வேலை உயர்வு கிடைக்கும்

நெருப்பை கனவில் காண்பது பாக்கியம் உண்டாகும் என்பதை குறிக்கிறது

ஆமையைக் கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதை குறிக்கிறது

பூக்கள் நிறைந்த களத்தைக் கனவில் கண்டால் வருமானம் பெறுவோம் பொருளாதார வளம் ஏற்படும்.

கனவுகளின் பலன்கள் -கனவு பலன்கள் - kanavu palangal in tamil

தீமையைக் குறிக்கும் கனவுகள்

இடியுடன் மழை பொழிவதை கனவில் கண்டால் உறவினர் விரோதி ஆவர்

இரும்பை தொட்டு எடுப்பது போல் கனவு காண்பது மிகவும் கெடுதலான சம்பவத்தைக் குறிக்கும்

ஆவது போல் கனவு வந்தால் துக்க செய்தி வரும்

எண்ணைத் தேய்த்து குளிப்பதாகக் கனவு வந்தால் அவர் வெகுவிரைவில் நோயால் பாதிக்கப்படுவார்

எதிரிகளைக் கனவில் கண்டால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

எலிகளைக் கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெறுவார்கள்

எள்லை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது

எறும்புகளைக் கனவில் கண்டால் மன கஷ்டம் ஏற்படும்

ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால் தீமை உண்டாகும்

ஓசையைக் கேட்பது போல் வரும் கனவு வீண் சச்சரவுகள் ஏற்படுவதை குறிக்கும்

கற்பூரம் எரிவது போல் கனவு கண்டால் மற்றொருவருக்காகச் சாட்சி சொல்லவோ அல்லது ஜாமின் கொடுக்கவோ நேரிடலாம்

கனவில் ஆரஞ்சு பழத்தைக் காண்பவருக்கு எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படும்

கனவில் இஞ்சியை கண்டால் நோயால் பாதிப்பு ஏற்படக்கூடும்

கனவில் சீப்பை கண்டால் சிக்கல்கள் உண்டாகும்

காகம் தலையில் அடிப்பதாகக் கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதை குறிக்கிறது

காகம் கனவில் வந்தால் தொழில் அல்லது உத்தியோக பாதிப்பு உண்டாகும்

கீழே விழுவது போல் கனவு கண்டால் பொருள் நஷ்டம் அடைய நேரிடும்

குழந்தைகள் இறப்பது போல் கனவு காண்பது அவருக்கு வர இருக்கும் பேராபத்தை குறிக்கும்

சாவிக்கொத்து காணாமல் போனால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும்

செருப்பினை கனவில் கண்டால் கெடுதல்கள் ஏற்படும்

தனித்து உண்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் உண்டாகும்

தொழிலில் நஷ்டம் உண்டாகும்

தேரோட்டம் திருவிழாக்களைக் கனவில் கண்டால் உடனடியாக உறவினர் ஒருவரின் மரண செய்தியை வரலாம்

தேனீக்கள் கொட்டுவது போல் கனவு வந்தால் வீண் செலவுகள் உண்டாகும்

நண்டு கனவில் கண்டால் முயற்சிக்கும் செயல்களில் இடையூறுகள் உண்டாகும்

நாய்க்கடிப்பது போன்று கனவு வந்தால் தீமைகள் உண்டாகும் என்பதை குறிக்கிறது மேலும் நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளால் மனக்கசப்பு உண்டாகும்

நிர்வாண கோலத்தைக் கனவில் கண்டால் அவமானம் தேடி வரும்

நோய் உண்டாவது போலக் கனவு வந்தால் நண்பர்கள் ஏமாற்றுவார்கள்

பசுக் கன்று போடுவதை கனவில் கண்டால் துன்பங்கள் வந்தடையும்

பசு விரட்டுவது போல் கனவு வந்தால் நோய்கள் உண்டாகும்

புயல் சூறாவளி கனவில் வந்தால் நோய் உண்டாகும்

பூனையைக் கனவில் கண்டால் திடீர் நஷ்டம் ஏற்படும்

மயானத்தை கனவில் கண்டால் காரிய தடங்கல் ஏற்படும் என்பதை குறிக்கிறது

மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதை குறிக்கிறது

முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் செல்வாக்கு சரியும்

மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதை குறிக்கிறது

வர்ணம் பூசுவதாகக் கனவு காண்பது கெடுதல்

வாடிய மலர்களைக் கனவில் கண்டால் வியாதி உண்டாகும்

வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு வந்தால் அவரது வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படக்கூடும்

விந்தையான மனிதர் அல்லது நூதன பொருட்கள் கனவில் வந்தால் வரும் தீமையைச் சுட்டிக் காட்டும் புதிய வரை நம்ப வேண்டாம்

இது வெறும் கனவோட பலன்கள் மட்டும் தான். இதே மாதிரி தான் நடக்கும் என்று கிடையாது. நமக்கும் மேல கடவுள் இருக்காங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *