ஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்

 

ஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்how to increase blood level naturally – increase hemoglobin fast.


இன்றைக்கு இருக்கும் சூழலில் நிறைய பேர் சந்திக்ககூடிய‌ ஒரு பெரிய பிரச்சனை ரத்தசோகை. அனிமியா (Anemia) என்று சொல்லக்கூடிய ரத்த சோகை என்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும்  முக்கியமான காரணம்  ஊட்டச்சத்து குறைபாடு தான்.




அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாகுவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பதுதான் இதற்கு காரணம். நமது உடலில் புதிய ரத்தம் உருவாகுவதற்கு தேவையான சத்துக்கள் என்னவென்றால்  இரும்புச்சத்து, விட்டமின் சி, போலிக் ஆசிட், விட்டமின் பி12 மற்றும் புரதம் இந்த ஐந்து சத்துக்களும் ஒன்றாக சேர்த்தால் தான் உடலில் புதிய ரத்தம்  உருவாகும். 


இந்த சத்துக்கள்  தான் உடலில் புதிய ரத்தம் உருவாகுவதற்கு தேவையான அடிப்படை சத்துக்கள். இந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது உடலில் புதிய ரத்தம்  உருவாகும். இதன் மூலமாக உடலில் ரத்த அளவுகளும் சீராக இருக்கும் ரத்த சோகையும் குணமாகும்.


உடலில் புதிய ரத்தம் உருவாகுவதற்கு சாப்பிட வேண்டிய 10 சிறந்த உணவுகள். 


ஒன்று : கருப்பு திராட்சை 



கருப்பு திராட்சையில்  அதிகப்படியான இரும்பு சத்தும் பொட்டாசியமும்  அடங்கியிருக்கிறது. உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டும் என்றால் ஒரு கையளவு கருப்பு திராட்சையை  முதல் நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த திராட்சையும் திராட்சை ஊரின நீரையும் மிக்ஸியில் போட்டு அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். 

கருப்பு திராட்சையை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தம்  வேகமாக அதிகரிக்கும்.


இரண்டு : மாதுளை ஜூஸ் 



மாதுளை பழங்களில் அதிக அளவு  இரும்பு சத்து இருக்கிறது. ஏராளமான விட்டமின் மற்றும் மினரல்களும் அடங்கி இருக்கிறது. மாதுளை என்றதுமே சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய விலையில்லாத (Seed Less)  மாதுளையை  வாங்கி சாப்பிடக்கூடாது. நாட்டு மாதுளை அதாவது விதை உள்ள மாதுளைகளை வாங்கி  சாப்பிடலாம். மாதுளையை அப்படியேயும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாவும் சாப்பிடலாம். தினமும் ஒரு மாதுளை  சாப்பிடுவது மிகவும் நல்லது. 


இதையும் படிக்கலாமே ; மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க

மூன்று : பீட்ரூட் ஜூஸ் 



காய்கறி வகைகளில் பீட்ரூட்டில்  அதிகமான இரும்புச் சத்து இருக்கிறது. பீட்ரூட்டை மதிய உணவுகளில் பொறியலாக செய்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம்.  


நான்கு : மட்டன் மற்றும் லிவர்



இவை இரண்டிலும் அதிகப்படியான இரும்புச்சத்து, புரதம் மற்றும் விட்டமின் பி12 அடங்கியிருக்கிறது. இந்த மூன்று சத்துக்களும் அடங்கிய ஒரே உணவு ஈரல் மட்டும்தான். அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் தவறாமல் ஒரு 50 கிராம் ஈரலை மதிய உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. 


ஐந்து : கீரை வகைகள் 



கீரை வகைகளில் அனைத்து வகை  கீரைகளையுமே  நாம் சாப்பிடலாம்.  குறிப்பாக முருங்கைக்கீரையில் தான் அதிக அளவு  இரும்பு சத்து இருக்கிறது.  ரத்தம் குறைவான அளவில் இருப்பவர்கள் வேகமாக ஊற வேண்டும்  நினைககூடியவர்கள் முருங்கைக்கீரையை தினமும் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.முருங்கைக்கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் முருங்கைக்காய் பொரியல்  செய்து சாப்பிட்டு வரலாம் இதுவும்  ரத்தம் ஊறுவதற்கு   உதவியாக இருக்கும்.


ஆறு : சிட்ரஸ் பழங்கள் 



சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை சாத்துக்குடி கமலா ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.   சிட்ரஸ் பழங்களில்தான் விட்டமின் சி  அதிகமாக இருக்கிறது. விட்டமின் சி நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய இரும்புச்சத்துக்களை  உடல் உறிஞ்சுவதற்கு விட்டமின் சி உதவி செய்கிறது.


நாம் இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது விட்டமின் சி  சத்து மூலம் உடல் முழுவதும் போய் சேரும். தினமும் இந்த பழங்களை நேரடியாக சாப்பிட்டு வரலாம் அல்லது ஜூஸாகவும் குடிச்சிட்டு வரலாம். விட்டமின் சி  நெல்லிக்காயில் அதிக அளவில் இருக்கிறது அதனால் நெல்லிக்காய்  ஜூஸ் செய்து தினமும் குடித்து வரலாம்.


ஏழு : டிரை ஃப்ரூட்ஸ் 


பேரீச்சை 



பேரீச்சையிலையும் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்தும்  இருக்கிறது. இது தவிர ஏராளமான விட்டமின் மற்றும் மினரிடம் அடங்கி இருக்கிறது. உடலுக்கு உடனடியாக எனர்ஜி கொடுக்க கூடிய ஒரு பழம் இந்த பேரிச்சம்பழம் ரொம்ப சோர்வாகவும் டயர்ட் ஆகவும் இருக்கிறவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பதற்கு  உதவியாக இருக்கும்.


எட்டு : அத்திப்பழம் 



டிரை ஃப்ரூட்ஸ்ல  அத்திப்பழமும்  அதிகமான இரும்புச்சத்து நிறைந்த ஒரு பழம்.  அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து  சாப்பிட்டு வருவது உடலுக்கு  மிகவும் நல்லது. தேனில் கலந்த அத்திப்பழத்தை நாம் சாப்பிட்டால்  உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் உடலில்  சேர்ந்துவிடும்.


ஒன்பது : முட்டை 



நாட்டுக்கோழி முட்டை மிகவும் நல்லது.  நாட்டுக்கோழி முட்டையில்  100% சுத்தமான புரதம் மற்றும் கொழுப்பு  இருக்கிறது. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகமான போலீக் ஆசிட்டும்  இருக்கிறது. உடலில்  ரத்தம் அதிகரிக வேண்டும் என்றால்   தினமுமே ஒன்றிலிருந்து இரண்டு முட்டை  தவறாமல் சாப்பிட்டு வந்தால்  ரத்தம் உடலில்  வேகமாக ஓடும்.


பத்து :  காய்கறி சூப் 




எல்லா வகை காய்கறிகளையும் கலந்து சூப்பாக செய்து குடித்தால்  நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும்  கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் சாப்பிட்ட உணவுகள்  எளிதில் ஜீரணம் ஆகுவதற்க்கும் உதவியாக  இருக்கிறது காய்கறி சூப்.


ஆட்டுக்கால் சூப்




ஆட்டுக்கால் சூப் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சூப்.. ஆட்டுக்கால் சூப்  குடிப்பதினால்  மூட்டு எலும்புகளுக்கு  நல்ல  வலிமையைக்கொடுக்கும்.   எலும்புகள்  வலிமையாக இருந்தால் மட்டுமே புதிய ரத்தம்  உருவாகும். ஆட்டுக்கால் சூப்பினாள் எலும்புகளில்  புதிய ரத்தம் உருவாகும் என்று நாம் அனைவரும் அறிந்ததே.  எலும்புகளின்  ஆரோக்கியம்  மிகவும் அவசியம் எனவே அசைவம் சாப்பிடுபவர்கள் தவறாமல்  ஆட்டுக்கால் சூப் குடித்து வருவது மிகவும் நல்லது.


ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு  தவிர்க்க வேண்டிய உணவுகள்.

காபி டீ  குடிக்க கூடாது. காபி மற்றும் டீயில் இருக்கக்கூடிய ரசாயனங்கள்  நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய இரும்பு சத்து  உடலில் சேர்வதற்கு  தடையாக இருக்கும் அதனால் காபி டீ  குடிக்க கூடாது. மேலும் அது மட்டும் இல்லாமல் மதுபானங்கள் போதைப்பொருட்கள்  .  சாப்ட் டிரிங்க்ஸ் அதாவது கூல்ட்ரிங்க்ஸ்  தவிர்க்க வேண்டும்.எவ்வளவு சாப்பிட்டாலும்  ஒரு சிலருக்கு ரத்தம்  வேகமா  அதிகரிக்காது.  ஏன் என்றால் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடலில்  சேராமல் இருப்பது தான். 


இதையும் படிக்கலாமே ; இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.


அதற்கு வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல் இருப்பது தான் காரணம். வயிற்றில் இருக்கும் கழிவுகளை சுலபமாக வெளியேற்றதிரிபலா சூரணம்  தினமும் சாப்பிட்டு வர வேண்டும். திரிபலா சூரணம் என்றால் நெல்லிக்காய், தாண்டி காய் மற்றும் கடுக்காய் இந்த மூன்றும் சேர்ந்தது தான்  திரிபலா சூரணம். இந்த பொடி  நாட்டு மருந்து கடைகளில்  கிடைக்கும். திரிபலா சூரணம் பொடியை அரை ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து இரவு உணவுக்கு பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வர வேண்டும்.


தினமும் இரவு தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது காலையில் மலம்  எளிதில்  வெளியேறும்.  இதனால் வயிறு  சுத்தமாகிடும் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும்  உடலில் சேர்ந்துவிடும். சத்துக்கள் உடலில் சுலபமாக சேர்வதினால் ரத்தம் அதிகரிக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *