நம் வீட்டில் வைக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செடிகள்

 நம் வீட்டில் வைக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செடிகள்.வைக்கும் திசைகள்


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதைத்தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும் நான் கண்டிப்பாக இந்த தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பேன் என்று சொல்லி விட்டு படிக்காமல் இருந்தால் இங்கே எதுவும் நடக்காது. நம்முடைய உயர்ந்த சிந்தனையும் நம்முடைய விடாமுயற்சியும் இருந்தால் மட்டும்தான் இந்த பிரபஞ்ச சக்தி நாம் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொடுக்கும். அதுபோல உங்கள் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து சீக்கிரமே கோடீஸ்வர யோகம் கிடைக்க ஒரு பத்து செடிகளை உங்களுடைய வீட்டில்  வளர்த்து வந்தீர்கள் என்றால் அதீத நன்மைகள் நடக்கும்.

மரம் செடி கொடிகளை அதிகமாக நடுவது நம் சுற்றுப்புறத்துக்கு மிகவும் நல்லது. அதில் இந்த பத்து வகை செடிகளையும் கண்டிப்பாக வளருங்கள். பாசிட்டிவ் எனர்ஜியும் பணத்தை ஈர்க்கும் தன்மையும் பணத்தை வீட்டில் செலவாகாமல் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய சக்தியையும் இந்த வகை செடிகள் உங்களுக்கு தரும்.

அதிர்ஷ்டம் தரக்கூடிய 10 செடிகளை நீங்கள் வீட்டில் வைத்து வளர்த்தாலே போதும். இதுவரை உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் குறைந்து நன்மை உண்டாகிறதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். நிறைய பேருக்கு வருமானம் சரியாக வருவதில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டூ இருப்பார்கள். நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக இருக்கும் வீட்டில் நிம்மதியே இருக்காது. எப்போது பாத்தாலும் வீட்டில் சண்டையாக தான் இருக்கும்.

கவலைகள் பிரச்சினைகள் எல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விட்டு இந்த செடிகளை வளர்க்க ஆரம்பியுங்கள். இந்த செடிகள் அதிக விலையாக இருக்குமோ பெரிய இடத்தில் தான் வைத்து வளர்க்கணும் என்று எல்லாம் நீங்கள் யோசிக்க தேவையில்லை. நமது வீட்டில் சின்ன வாட்டர் பாட்டில் அல்லது சின்ன தொட்டிகளை வைத்து சின்னதாக வளர்த்தால் கூட பெரிய பலன்களை தரும். அதிர்ஷ்டம் தரக்கூடிய அந்த பத்து வகை செடிகள் என்னென்ன எந்த திசையில் வைத்து வளர்த்தால் ரொம்ப விசேஷ பலன்களை தரும் என்று வாஸ்து சாஸ்திரப்படி தெரிஞ்சுக்கலாம்.

இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

முதல் செடி : நெல்லிக்காய்

நெல்லிக்காயில் லட்சுமி கடாக்ஷம் நூறு சதவிகிதம் இருக்கிறது என்பது  உண்மை. குபேரரே கையில் ஒரு கையில் ஒரு துளி கூட பொன் பொருள் இல்லாத போது சிவபெருமானிடம் தவம் இருந்து நான் செய்த தவறால் என்னுடைய செல்வங்கள் எல்லாம் என்னை விட்டு போய் விட்டது. என்னிடம் பணமே இல்ல எல்லோருக்கும் நான் கடன் கொடுத்து கொண்டு இருந்தேன். ஆனால் இன்றைக்கு என்னுடைய நிலைமை இவ்வளவு மோசமாக போய் விட்டது என்று சொல்லி வருந்தி இருக்கார். 

அதற்க்கு சிவபெருமான் ஒரே ஒரு வழி தான் சொல்லி இருக்கார் அது என்ன வழி என்றால் நெல்லி மரம் வைத்து  அதற்கு தினமும் தண்ணீர் ஊற்று கண்டிப்பாக உனக்கு இழந்த செல்வங்கள் எல்லாம் திரும்ப கிடைக்கும். உன்னுடைய செல்வம் பெருகி கிட்டே போகும் என்று சொல்லி இருக்கார். அதே போல குபேரனும் நெல்லி மரங்களை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்திருக்கார். நெல்லி மரம் வளர வளர ஒவ்வொரு இலையும் துளிரும் போது அவருடைய துன்பமானது குறைந்து பண வரவு அதிகரித்து இருக்கிறது.

இழந்த செல்வங்களும் குபேரனுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் நாமும் நெல்லி மரங்களை வளர்த்து நம்முடைய கஷ்டங்களை குறைப்போம். நெல்லி மரம் சிவபெருமானுக்கு மட்டும் இல்லை விஷ்ணு பகவானுக்கும் ரொம்ப உகந்தது. விஷ்ணு பகவானோட ஆனந்த கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து நெல்லி மரமாக உருவானது என்று ஒரு தகவலும் இருக்கிறது.  வீட்டின் முன் பக்கத்தில் வைப்பது தான் ரொம்ப சிறப்பு வாய்ந்தது. பின்புறத்தில் வைக்க கூடாது. வீட்டின் முன்பக்கத்தில் கிழக்கு பக்கம் பார்த்தது போல் வைக்க வேண்டும்.

இரண்டு : சங்கு பூ

மாதிரி சங்குப்பூ ஏன் நம் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் நமக்கு எல்லா விதத்துலயும் செல்வத்தை தரக்கூடியது இந்த சங்குப்பூ. இந்த செடியில் இருந்து வரக்கூடிய பூக்கள் சங்கு மாதிரி வடிவம் கொண்டிருக்கும். சங்கு என்றாலே விஷ்ணு பகவான் தான் நினைவுக்கு வருவார். சங்கு பெருமாளையும் லக்ஷ்மி தேவியையும் குறிக்கும். இந்த சங்கு பூ இரண்டு மூன்று நிறங்களில் இருக்கிறது. நீல நிற சங்கு பூ வளர்ப்பது ரொம்ப மகத்துவம் வாய்ந்தது. இந்த சங்குப்பூ நீலமும் வயலட் நிறமும் சேர்ந்த கலவையாக இருக்கும். இந்த சங்கு பூவை வீட்டிற்கு முன் பகுதியில் அல்லது இடது பக்கம் வளர்க்கலாம். இது ஆரம்பத்தில் செடி போல இருக்கும் பிறகு பெரியதாக வளரும் போது கொடி போல படர ஆரம்பிக்கும்.

மூன்று : துளசி செடி

மகாலட்சுமியின் சொரூபம் தான் துளசி செடி. விஷ்ணு பகவானே இந்த துளசி  செடியை திருமணம் செய்து கொண்டார் என்று நிறைய புராணக் கதைகளில் படித்து இருக்கிறோம்.  அனைவருடைய வீட்டிலும் மாடம் அமைத்து விளக்கேற்றி வணங்கி வருவார்கள்.  லட்சுமி தேவி வாசம் செய்யும் இந்த துளசி செடி கூட இன்னொரு செடியையும் கூட சேர்த்து ஒன்றாக வைத்தீர்கள் என்றால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அந்த செடி ஓமவள்ளி என்கிற கற்பூரவள்ளி செடி. இந்த இரண்டையும் சேர்த்து ஒன்றாக வைத்து வளர்த்து வரலாம்..

ஏற்கனவே துளசிக்கு மாடம் அமைத்து தொட்டி கட்டி வைத்திருக்கும் அதில் இந்த கற்பூரவள்ளி சேர்த்து வைக்கலாமா என்றால் கூடாது. அதிலே  வைக்காமல் பக்கத்திலேயே ஒரு சின்ன தொட்டியில் வைத்து இந்த ரெண்டு செடியையும் புதியதாக வளர்த்து வாருங்கள் நல்லதே நடக்கும். இந்த செடிகளை  வீட்டின் முன் பக்கத்திலும் வைக்கலாம் பின்பக்கத்தில் வைக்கலாம்.இந்த செடிகளை கிழக்கு பக்கம் பார்த்த மாதிரியும் வடக்கு பக்கம் பார்த்த மாதிரியும் (North East and South East) வைத்து வளர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே ; நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

நான்கு : கற்றாழை

கற்றாழை செடியை கண்டிப்பாக வீட்டின் முன் பகுதியில் தான் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு முன்னால் வைக்கூடாது என்று சொல்வார்கள். வீட்டின் முன் வைத்தால் தான் கண் திருஷ்டியை போக்கும். நிறைய வீடுகளில் கற்றாழையை வீட்டுக்கு முன்னால் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அதற்கு காரணம் நம் வீடடடிறங வரக்கூடிய நெகட்டிவ் எனர்ஜியும் கண் திருஷ்டியும் போக்க முன் பக்கத்திலேயே வலது இடது இரண்டு பக்கத்திலயும் அழகு செடிகள் போன்று  வளர்த்து வரலாம்.

ஐந்து : வாடாமல்லிகை


வாடாமல்லிகையில் இருக்கும் பூக்கள் எப்படி வாடாமல் இருக்கிறதோ அதே போல் நம்முடைய மனமானது கவலை கொள்ளாமல் எந்தவித நெகட்டிவ் எனர்ஜியும் நம்மை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக  இந்த வாடாமல்லி பெருமளவு பயன்படுகிறது. இந்த செடிக்கு அந்த ஆற்றல் இயற்கையாகவே இருக்கிறது. அதனால் கண்டிப்பாக இந்த செடியை வீட்டில் வளர்க்க வேண்டும். நீல நிறத்தில் இருக்கும் வாடாமல்லி செடியை வாங்கி வீட்டின் முன் பகுதியில் எந்த திசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். நீல நிறம் கிடைக்கவில்லை என்றால் ரோஸ் நிற வாடாமல்லியை வாங்கி  வளர்க்கலாம்.  வெள்ளை நிற வாடாமல்லியை மட்டும் தவிர்க்கவும்.

ஆறு : மூங்கில் செடி


லக்கி பாம்பு : இந்த வகை மூங்கில் செடியை வீட்டில் வளர்க்கலாம் காட்டு மூங்கில் துஷ்ட காரியத்திற்க்காக பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். அழகுக்காக தான் இதெல்லாம் வைத்திருக்கிறார்கள்  என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னால் இந்த ரகசியங்கள் இருக்கிறது. இந்த வகை மூங்கில் செடியை வாங்கி வீட்டில் வளர்க்க ஆரம்பியுங்கள்.

அதுவும் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் (East or North East corner)  வைத்து வளர்த்தால் மட்டும்தான் அதனுடைய பலன் நமக்கு கிடைக்கும். வீட்டுக்கு வெளியே வைக்க கூடாது. தண்ணீர் வாரம் ஒரு முறை ஊற்றினாலே போதும். அதனால் இந்த செடி வீட்டுக்குள்ளே நன்றாக வளரும். வீட்டுக்குள்ளே வரும் பணம் செலவாகாமல் சேமித்து வைக்கக்கூடிய ஆற்றலை இந்த செடி அதிகமாக தரும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிக்கலாமே ; இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.

ஏழு : மணி பிளாண்ட்


இந்த செடி வளர வளர நமக்கு பணவரவு அதிகரிக்கும்.  உண்மைதான் பொதுவாக இலைகள் வட்ட வடிவமாக இல்லாமல் கூர்மையாக இல்லாத இலைகளுக்கு எல்லாம் பணத்தை ஈர்க்கக்கூடிய பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். மணி பிளாண்ட் செடியை தென் கிழக்கு திசையில் மட்டும் தான் வளர்க்க வேண்டும். மற்ற திசையில் வைத்தால் இந்த மணி பிளான்ட் உங்களுக்கு பண விரயத்தை தான் கொடுக்கும் மற்றும் பலன் கிடைக்கவில்லை பணம்  செலவுதான் ஆகிறதென்று சொன்னால் அதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும்.

எட்டு : தொட்டா சிணுங்கி 


அனைவரும் ஆச்சரியத்தோடு யோசிக்கிற ஒரு விஷயம் இது காடு மாதிரி சாலை ஓரங்களில் இருக்கும். இதை வீட்டில் வைத்து வளர்க்கலாமா என்று சந்தேகம் இருக்கும். கண்டிப்பாக வீட்டில் வளர்க்கக்கூடிய செடி  தொட்டாச்சிணுங்கி. என்னதான் ரோட்டில் காடு மாதிரி கிடந்தாலும் ஒரு வீட்டில் நன்றாக வளருகிறதென்று சொன்னால் அது ஆச்சரியம்தான். ஏன் என்றால் அதிகபட்ச எதிர்மறை ஆற்றல் (.maximum negative energy) உள்ள வீட்டில் இந்த தொட்டால் சுருங்கி செடி பட்டு போய்விடும் வளரவே வளராது.

இந்த தொட்டால் சிணுங்கி செடி ஒரு வீட்டில் நன்றாக வளருகிறது என்றால் கோடீஸ்வர யோகம் வரப்போகிறதென்று அர்த்தம். இந்த தொட்டால் சிணுங்கி செடிக்கு அப்படி ஒரு அபரிதமான ஆற்றல் இருக்கிறது. நாம் ஒரு நல்ல காரியத்தை நினைத்துக்கொண்டு காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது நாலு மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த தொட்டால் சுருங்கியை தொட்டு வணங்கி நமக்கு என்ன வேண்டுமோ அதை அப்படியே நமக்கு நடத்திக் கொடுக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது.

இந்த தொட்டாச்சிணுங்கியானது இந்த பிரபஞ்சத்தில் நாம் கேட்கின்ற விஷயத்தை நேரடியா சொல்லி அதனை நடத்திக் கொடுக்கக்கூடிய ஆற்றல் இந்த செடிக்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் நல்லதை கேட்டால் நல்லதே நடக்கும். 

தப்பான காரியத்தை நினைத்துக்கொண்டு வேண்டினால்  அது நமக்கே தீங்காக அமையும். பட்டு போறதுக்கு வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.  நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும். இந்த செடியையும் வீட்டுக்கு முன்னால் தான் வைக்க  வேண்டும் வீட்டுக்கு பின்னால் வைக்க கூடாது வீட்டுக்கு முன்னால் எந்த திசையில் வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம்.

ஒன்பது :  ஆடாதொடை செடி

ஆடாதொடை ரொம்ப ரொம்ப மருத்துவ குணம் நிறைந்தது. இதில் வீட்டுக்குள்ளே வைக்கக்கூடிய செடியும் இருக்கிறது. வீட்டுக்கு வெளியில் வைத்து வளர்க்கக்கூடிய செடியும் இருக்கிறது.. ஆடாதொடை செய்வினை கெட்ட சக்தியும் யாராவது நமக்கு வசியம் வைப்பது போன்ற விஷயத்திற்க்கெல்லாம் ஆடாதொடை  அருமருந்தாய் இருக்கும். ஆடாதொடை இலையை எடுத்து வெந்நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம்.  உங்களுக்கு யாராவது தவரான விஷயங்கள் செய்து இருந்தாலும் அது உங்கள் உடம்பை விட்டு விலகிப் போய்விடும். இந்த செடி முதலில் உங்கள் வீட்டில் இருந்தாலே வீட்டுக்குள் எந்தவிதமான கெட்ட சக்தியையும்  அனுமதிக்காது. வீட்டுக்குள் வரவிடாது அதனால் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இந்த ஆடாதொடையை வளர்த்து வாருங்கள். இந்த செடியை நீங்கள் உங்க வீட்டுக்கு முன் பகுதியில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் (East or North East direction ) வைத்து வளர்க்கிறது ரொம்ப சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து

பத்து : வாசனை மலர் செடிகள் 


ஏதாவது ஒரு வாசனை தரக்கூடிய பூச்செடியை வளர்த்து வரலாம். ஏன் என்றால் வாசனை மிகுந்த இடத்தில் தான் லட்சுமி தேவி வாசம் செய்வாள் அதனால் மல்லிகை பூ ரோஜா பூ பன்னீர் ரோஜா போன்ற வாசனை தரக்கூடிய ஏதாவது ஒரு பூச்செடியாவது உங்கள் வீட்டில் வளர்த்து வரும்போது இந்த பிரபஞ்ச சக்தி ஆனது உங்களுடைய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்கி பணவரவை தாராளமாக கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *