அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.

 

அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.



பிரம்ம முகூர்த்த வழிபாடு செய்யும் பொழுது செய்யக்கூடாத முக்கியமான ஐந்து தவறுகள் என்னென்ன?


இதை எல்லாம் நீங்கள் சரியாக செய்தீர்கள் என்றால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் வைக்கக்கூடிய வேண்டுதல்கள்  கண்டிப்பாக நிறைவேறும்


என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை ஒவ்வென்றாக தெரிந்து கொள்ளலாம்.


பிரம்ம முகூர்த்த நேரம் என்பது நாம் எந்த ஒரு வேண்டுதலை வைத்தாலும் அது உடனே நிறைவேற்றக்கூடிய சக்தி வாய்ந்த  நேரம். 


பிரம்ம முகூர்த்த நேரம் என்றால் அதிகாலையில் வருகின்ற நேரம். அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக வருகின்ற நேரம் பிரம்ம முகூர்த்த நேரம்.  6 மணிக்கு சூரியன் உதித்ததென்றால் பிரம்ம முகூர்த்த நேரம் நாலரை மணியிலிருந்து ஆறு மணி வரை. அதிகாலையில் நான்கு மணிக்கே எழுந்து நீங்கள் உங்களுடைய வேண்டுதல்களை வைக்கலாம். 


இல்லையென்றால் நான்கு மணியிலிருந்து ஐந்தரை மணிக்குள்ளாக உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் வேண்டிக்கொள்ளலாம்.  வேண்டுதல்கள் வைக்கும் பொழுது உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை அறையில்  விளக்கு ஒன்று ஏற்ற வேண்டும்.


செய்யக்கூடாத தவறுகள் 


ஒன்று


அதிகாலையில் எழுந்து நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும்பொழுது கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் குளித்தால் நல்லது.  நீங்கள் உடல் சுத்தத்தோடு இருந்தீர்கள் என்றால் முகம் கை கால் கழுவி விட்டு வந்து விளக்கு ஏற்றலாம். அதில் எந்த தவறும் கிடையாது. காலையில் எழுந்து குளித்துவிட்டு தான் விளக்கு ஏற்றவேண்டுமா? என்று கேட்பவர்களுக்கு இந்த பதில். 


நீங்கள் சுத்தமாக இருந்தால் குளிக்காமல் முகம் கை கால் கழுவி விட்டு விளக்கு ஏற்ற ஆரம்பிக்கலாம் எந்த தவறும் கிடையாது. ஆனால்  உடல் சுத்தம் இல்லாமல் வந்து விளக்கு ஏற்ற வேண்டாம். அது நம் வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும். 


இதையும் படிக்கலாமே ; நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்


இரண்டு



அதிகாலையில் எழுந்து வீட்டை பெருக்கி வீட்டெல்லாம் துடைத்து விட்டு விளக்கு ஏற்றனுமா என்றால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை அறை மற்றும் வீட்டை சுத்தம் செய்து பிறகு சாமி கும்பிட வேண்டும் என்றால் உங்களுக்கு நேரம் பத்தாது. அதனால் முதல் நாள் இரவே வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து விடுங்கள்.


அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் சுத்தமான காற்று மற்றும் நேர்மறை அதிர்வலைகள் (Positive Vibration) அதிகமாக இருக்ககூடிய நேரமாக இருக்கும். அந்த நேரத்தில் வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்வது சரியாக இருக்காது.


பூஜை அறை சுத்தமாக இருந்து வீடும் அதற்கு முன்பாகவே அந்த முதல் நாள் இரவே நீங்க சுத்தமட்டுத்து விடலாம் டைம் ஒதுக்கீட்டீங்கன்னா நீங்க உங்களுக்கு சுவாமி கும்பிட நேரம் பத்தாது கதிகாலை அப்படின்றது தூய்மையான காற்றுக்களும் பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸ் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நேரமாக இருக்கும்.


இந்த நேரத்தில் எழுந்து நம்ம கிளீனிங் ஒர்க் எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தோம்னா அதுலயே நேரம் சரியாகிடும் அப்புறம் நம்ம என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அந்த வேண்டுதல்கள் நமக்கு வைக்கிறதுக்கு நேரம் இல்லாமல் போகும் அதனால தான் இந்த ஒரு விஷயத்தை சொன்னேன். நீங்க அந்த தவறை செய்யாதீங்க நீங்க பூஜை அறையில வந்து ஒரு விளக்கு ஒன்று ஏற்றிடுங்க பிரம்ம முகூர்த்த வழிபாடு செய்றவங்க தினமும் செய்றீங்க அப்படின்னா அதை முன்கூட்டியே நீங்க வீட்டை சுத்தப்படுத்தி வச்சுருங்க 


மூன்று 



பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜைகள் செய்யும்பொழுது நீங்கள் எதிர்மறை எண்ணங்களோடு அமர்ந்து பூஜை செய்ய கூடாது. 


நிறைய பேருக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்கும். கடன் சுமைகள் இருக்கும் தீராத சண்டைகள்  இருக்கும். ஆனால்  அதை நினைத்து அழுது பூஜை செய்தீர்கள் என்றால் நீங்கள் அதிகாலையில் எழுந்து என்ன நினைக்கிறீங்களோ அதோட அதிர்வலைகள் அதிகமாக இருக்கும்


இதையும் படிக்கலாமே : செல்வதை அழிக்கும் வீட்டில் வளர்க்ககூடாத மரம் செடி கொடிகள்

அதனால் எப்பொழுதுமே பூஜை செய்யும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள். உங்களுடைய வேண்டுதல்களை எப்பொழுதும் நல்லவிதமாக நினைத்து செய்ய வேண்டும். எல்லாமே நல்லபடியாக நடக்கும். உதாரணமாக குழந்தைகளுக்காக நீங்கள் வேண்டுதல் செய்கின்றீர்கள் என்றால்  உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்த மாதிரியும் அதனுடன் நீங்கள் இந்த நேரத்தை செலவு செய்த மாதிரியும் வேண்டிக்கொள்ளுங்கள்.


கடன் தொல்லையில் இருக்கின்றீர்கள் என்றால் உங்களுடைய மொத்த கடனும் அடைத்து விட்டீர்கள் கடன் சுமையெல்லாம் தீர்ந்து விட்டது சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்று  நினைத்துக் கொண்டு நீங்கள் மனதார வேண்டிக் கொண்டீர்கள் என்றால் நினைத்தது போலவே நடக்கும்.


நீங்கள் இப்படி வேண்டுதல் வைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் தினமும் எழுந்து சுவாமி கும்பிடும் பொழுது பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு 100% வாய்ப்பு இருக்கிறது முயற்சி செய்து பாருங்கள். வேண்டுதல் வைக்கும் பொழுது எப்பவுமே நெகட்டிவா வைக்காதீர்கள்.


காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் விளக்கு ஏற்ற விரும்புகிறீர்கள் என்றால் முன்கூட்டியே அசைவம் செய்து இருந்தீர்கள் என்றால் அதெல்லாம் அன்றைய இரவே அப்புறப்படுத்தி விடுங்கள். ஏன் என்றால் நாம் பூஜை அறையை எப்படி பராமரிக்கிறோமோ அதே அளவுக்கு சமையல் அறையையும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் அறையில் துர்நாற்றம் வீசும் பொழுது நாம் பூஜை செய்தோம் என்றால் அதற்கு பலன் இருக்காது. 


இதையும் படிக்கலாமே : பணத்தை ஈர்க்கும் 7 அதிர்ஷ்ட செடிகள்


நான்கு 


எவ்வளவுதான் நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில்  விளக்கு ஏற்றினாலும்  வீட்டில் இந்த மாதிரியான ஒரு துர்நாற்றம் வீசும் பொழுது (அது துணி அதிகமாக சேர்ந்திருந்தாலும், அழுக்கு துணிகள் இருந்தாலும், அசைவம் சமைத்தாலும் ) நம்மால் நிம்மதியாக மனதை ஒருங்கினைத்து பிரார்த்தனை செய்ய முடியாது. 


அதனால் முதல் நாள் இரவே அனைத்து குப்பைகளையும் அகற்றிவிட்டு வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து வைத்து விடவேண்டும். வீட்டை எப்பொழுதும்  வாசனையாக வைத்திருங்கள். வாசனையாக இருக்கும் இடத்தில்  பாஸிட்டிவ் வைப்ரேஷன் அதிகமாக இருக்கும். மகாலட்சுமியும் வாசம் செய்வாங்க. அதனால் வீட்டை எப்பொழுதும் வாசனையாக வைத்திருங்கள்.


ஐந்து  


நீங்கள் காலையில் எழுந்து விளக்கு ஏற்றும் பொழுது தூங்குபவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். ஆனால் பூஜை அறைக்கு நேராக கால் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். அவர்களை ஓரமாகவோ அல்லது அடுத்த அறையிலோ படுக்க வைக்கலாம். அறை இல்லை ஹால் மட்டும் தான் என்றால் ஓரமாக படுக்க சொல்லலாம். அறை இருந்தால் அறையில் படுக்க சொல்லலாம்.


ஏன் என்றால் அந்த நேரத்தில் தெய்வ நடமாட்டம் இருக்கும். அதனால் நாம் அந்த நேரத்தில் நேராக படுத்திருந்தாள் அது சரியாக இருக்காது. பூஜை முடிந்து தூங்கலாமா என்றால் தூங்கலாம். விருப்பமுள்ளவர்கள் பூஜையை தொடர்ந்து செய்யலாம் அல்லது அன்றாடம் செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்யலாம்.


அதில் எந்த தவறும் கிடையாது. அதே போல் விளக்கு ஏற்றி தொடர்ந்து விழித்திருக்க வேண்டுமா என்றால் தேவையில்லை. அப்படி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பூஜையை பத்து நிமிடம் அல்லது 20 நிமிடம் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால் போதும். இறைவன் நம்மை கஷ்டப்படுத்தி எந்த ஒரு வேண்டுதலையும் கேட்க மாட்டார். நமக்கு மனது திருப்தியாக இருந்தாலே போதும் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்கும் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *