இந்த செடியை கண்டால் விடாதீர்கள்… பல் வலி பறந்தோடிவிடும்.

இந்த செடியை கண்டால் விடாதீர்கள்… பல் வலி பறந்தோடிவிடும்.

நாயுருவி என்று சொல்லக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை பற்றி தெரிந்து கொள்வோம்.




இந்த மூலிகை ஒரு வசீகரத் தன்மை கொண்ட ஒரு மூலிகை என்று சொல்வார்கள். இந்த மூலிகையை நாம் பயன்படுத்துவதற்கு  முன் ஒரு விஷயம் நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த மூலிகையை நாம் பயன்படுத்தும் போது நம்முடைய உடலுக்கு   உஷ்ணத்தை  உண்டாக்கக்கூடிய தன்மை உடையது.

அதாவது இந்த மூலிகையை நாம் சாப்பிடும் பொழுது அல்லது பயன்படுத்தும் பொழுது நம்முடைய உடல்  ரொம்பவே உஷ்ணமாகிடும். அதனால் உடல் சூடு சீக்கிரம்  உண்டாகும்  சிலர் இந்த மூலிகையை பயன்படுத்தும் பொழுது கொஞ்சம் கவனமாக பயன்படுத்த வேண்டும். அதை நாம் கொஞ்சம் மனதில் வைத்து கொண்டு இந்த மூலிகை பயன்படுத்தலாம். 

இந்த நாயுருவி மூலிகையினுடைய மருத்துவ குணங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன் இந்த நாயுருவி செடியினுடைய சிறப்பான ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.


இதையும் படிக்கலாமே ;


அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து

கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது


 சித்தர்கள் காட்டுப்பகுதிகளுக்கு மூலிகை தேடி செல்லும் பொழுது பல நாட்கள் அங்கே தங்கி இருந்து தேடுறது மாதிரியான ஒரு சந்தர்ப்பம்  ஏற்படும். அந்த மாதிரி சமயத்தில் இந்த நாயுருவி மூலிகையின் அரிசி பகுதி என்று சொல்லுவார்கள். அதாவது அந்த பூப்பகுதியில் இருக்கக்கூடிய அரிசி போன்ற பகுதியைத்தான் சொல்வார்கள். அந்த அரிசி பகுதியை  சோறு சமைப்பது போன்று  சமைத்து ஒரு தடவை சாப்பிட்டால் பல நாட்கள் தங்கி இருந்து மூலிகைகளை சேகரித்து பிறகு வீடு வந்து சேர்ந்த பிறகு மிளகாயை நன்றாக வெட்டி   கஷாயம் மாதிரி எடுத்துக் கொள்ளும் போது தான் திரும்ப பசி ஏற்படுமாம்.

இந்த மாதிரி தான்  இந்த மூலிகையை  சித்தர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாயுருவி மூலிகை இருக்கின்ற பக்கம் நீங்கள் நடந்து சென்றீர்கள் என்றால் உங்களுடைய ஆடைகளில் உங்களுடைய கால் பகுதிகளில் இது பட்டுதென்றால் அப்படியே ஒட்டி அந்த அரிசி போன்ற பகுதி மட்டும் ஒட்டி வரக்கூடிய தன்மை உடையதாக இருக்கிறது.

மூலிகையினுடைய மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.



இந்த நாயுருவி மூலிகையினுடைய வேரை  பெயர்த்து எடுத்து அதை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.  அதிலிருந்து நீங்கள் தினமும் பல் துலக்கிட்டு வந்தீர்கள் என்றால் உங்களுடைய பல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் பல் வலி பல் சொத்தை ஈறு வீக்கம் அல்லது  பல்லில் நுண்கிருமிகள்  இருந்தாலும் அதையும்  குணப்படுத்தக்கூடிய தன்மை இந்த நாயுருவி மூலிகை செடிக்கு இருக்கிறது. நீங்கள் தினமும் நாயுருவி செடியின் காம்புகளினால் பல்துலக்கி வந்தால் உங்களுடைய உடல் உஷ்ணம் உண்டாகும் அதனை தவிர்க்க நீங்கள் குளிர்ச்சியான பானங்கள் அல்லது குளிர்ச்சி தரும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் தினமும் நாயுருவி குச்சியினால் பல் துலக்கி வந்தால் உங்களுடைய முகம் வசீகத் தன்மை கொண்டதாக மாறிவிடும்.


இந்த நாயுருவி இலையில் இருந்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு  நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக சூடு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலே கொஞ்சம் கூட தண்ணீர்  இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை  காது பகுதிகளுக்கு ஒரு இரண்டு சொட்டு நீங்கள் விட்டு வந்தால்  காதிலே சீல் புடிக்கிறதில் இருந்து காது சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வியாதிகளையும் குணமாக்கக்கூடிய தன்மை இந்த மருந்துக்கு உண்டு.


 இந்த நாயுருவி இலையை நன்றாக மை போல அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அதை  எருமை தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் மூலம் பேதி போன்ற பிரச்சனை இருக்கிறவங்களுக்கும் மேக நோய் இருக்கிறவங்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.  


இதையும் படிக்கலாமே ;


அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து

கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது

நாயுருவி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து எடுத்து வைத்துக்கொண்டு தினமும் 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து கசாயம் போல் செய்து குடித்து வந்தால் இதே போன்ற ரத்தம் மூலம் மேக நோய் பேதி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

நாயுருவி இலையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாறை நாய் கடித்தவர்களுக்கு 30 லிருந்து ஒரு 50 ml வரைக்கும் அந்த மாதிரி நாய் கடித்தவர்கள் இதை சாப்பிடும் பொழுது  உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும் அதுதான் இதனுடைய பத்திய முறை. இந்த மாதிரி நாம் சாப்பிடும் பொழுது அந்த நாய் கடியின் விஷத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.



நாயுருவியினுடைய வேர் இலை இந்த இரண்டையுமே சேர்த்து நன்றாக அரைத்து சிரங்கு கொப்புளங்கள் மற்றும் தோல் நோய்கள் இருப்பவர்கள் இதை அதன் மேல் பூசி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக குணமாக்கும் தன்மை எந்த நாயுருவி செடிக்கு இருக்கிறது.


 இந்த நாயுருவி இலையையும் குப்பைமேனி இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தேள் கடித்த பகுதியில் கடிவாய் பகுதியில் வைத்து கட்டினால் கடுகடுப்பு நீங்கி விஷத்தன்மை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இது தேள் கடிக்காக இந்த மாதிரி பயன்படுத்துகிறார்கள். 


நாயுருவியை நாம் சாப்பிடும் பொழுது உடலை சுத்தமாகவும் நரம்புகளை வலிமையுடனும் மாற்றும் ஆற்றல் இந்த நாயுருவிக்கு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பேதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வியர்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்  அனைத்தையும் சரி செய்கிறது.  அதனால் இந்த நாயுருவி மூலிகையை நாம் சாப்பிடும் பொழுது  நம்முடைய உடல்  உஷ்ணமாகும். அதனால் கண்டிப்பாக  பத்தியம் இருக்க வேண்டும். அதாவது டீ காபி மாமிசம் போன்ற பொருட்களை  தவிர்ப்பது நல்லது. உப்பு புளி காரம் போன்றவற்றை உணவில் குறைத்து சேர்த்து சாப்பிடுவது ரொம்ப நல்லது.  இன்னும் ஏராளமான மருத்துவ பயன்கள் இந்த நாயுருவி மூலிகையில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *