21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் கோவில் ! வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் !
இந்த கோவில் எந்த ஊரில் இருக்கிறது என்னனென்ன இந்த கோவிலுக்கான சிறப்பு மற்றும் ஆச்சரியமான பல தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.
இதையும் படிக்கலாமே :
- ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?
- வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?
சிவனுக்குரிய கோவிலாக இருந்தாலும் கூட மக்கள் தங்களுடைய ஜாதகம் மற்றும் குடும்பத்தில் இருக்கக்கூடிய பாவங்களை தீர்க்கவும் வாழ்க்கையில் நல்ல பயன்களை அடையவும் சிறந்த கல்வியினை அடையவும் இந்த கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள். குடும்ப தோஷங்கள் இருக்கிறவர்கள் இந்த கோவிலுக்கு வந்து இங்கு இருக்கக்கூடிய தீர்த்த குளத்தில் நீராடி திதி கொடுப்பதன் மூலமாக குடும்ப தோஷங்கள் நீங்கும் என்பது இங்கே தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு நம்பிக்கையாய் இருந்து வருகிறது.
திருவெண்காடு தளத்தில் ருத்ரபாதம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இதை வழிபட்டு வந்தோம் என்றால் 21 தலைமுறை பாவங்களும் தீரும் என்பது ஐதீகம் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் காசியில் இருக்கக்கூடிய விஷ்ணு பாதத்தை வழிபட்டால் கூட ஏழு தலைமுறை பாவங்கள் மட்டும்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தளத்தில் யார் ஒருவர் ருத்ரபாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட மூன்று மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும். புதன் திசை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் 17 ஆண்டுகள் நீடிக்குமாம். எனவே தான் திருவெண்காட்டில் இருக்கக்கூடிய புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் தான் கடைபிடிக்கப்படும்.
ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகமங்கள் கடைபிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தளத்தில் மூன்று வகை ஆகமங்கள் மட்டும்தான் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி கிரகமாகத்தான் கூறுவார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர யோக சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத்துறைகளில் மேன்மை உள்ளிட்ட எட்டு வகையான அதிகாரங்கள் நமக்கு கை கூடும் என்று ஒரு நம்பிக்கை.
திருவெண்காட்டில் இருக்கக்கூடிய மூன்று குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டு வந்தோம் என்றால் நிச்சயமாக நமக்கு குழந்தை பேரு கிடைக்கும். சுவாமி அம்மன் புதன் மூவருக்குமே இந்த கோவிலில் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயமாக உண்டாகும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
திருவெண்காடு அகோர மூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள்.
நாகை மாவட்டத்தில் கணிசமான பேர் இருக்கிறார்கள் பில்லி சூனியம் இதுபோன்ற பிரச்சனைகளில் அதிகமாக கஷ்டப்படுகிறவர்கள் இந்த திருவெண்காடு தளத்தில் வந்து ஹோமம் செய்தார்கள் என்றால் இவைகள் எல்லாம் இருந்தால் நம்மை விட்டு விலகும் என்பது மிகப்பெரிய அதிகமாக இருந்து வருகிறது. அகோர மூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்று சொல்லுவார்கள் இதே போல சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு கருத்து வேறுபாடுகள் எல்லாம் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதால் நீங்கும்.
இந்த தளத்தில் புராணப்படி மருத்துவன் என்னும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறுகள் சொல்லுகிறது. இந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே இப்பொழுதும் பார்க்க முடியும். அந்த நந்தியுடைய உடம்பில் ஒன்பது இடங்களில் ஈட்டியால குத்தப்பட்ட துளைகள் இருக்கும். நந்திக்கு அபிஷேகம் நடக்கும். அதை நாம் பார்க்க முடியும் அந்த நந்திக்கு தான் பிரதோஷ வழிபாடுகள் இங்கு வெகு சிறப்பாக செய்யப்படும் என்று சொல்லலாம்.
புதன் பகவான்
திருவெண்காடு தளம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாடுகள் ஆத்ம திருப்தியை நமக்கு கொடுக்கும். திருவெண்காடு தளத்தில் புதனை வழிபட வருபவர்கள் சிலர் நேரடியாக புதன் சன்னதிக்கே சென்று கூட வழிபடுவார்கள். இது தவறு முதலில் சுவாமியையும் பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகு தான் இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகள் மேற்கொள்ளவேண்டும்.
இந்த தளத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புகிறவர்கள் விநாயகர் மூலவர் அகோர மூர்த்தி அம்பாள் மற்றும் புதன் ஆகிய ஐந்து பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்யவேண்டும். இந்த தளத்தில் இருக்கக்கூடிய காளியினுடைய சிலை பயங்கரமான முக அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோவிலில் காளி சாந்தமானவள் என்று சொல்லப்படுகிறது. பக்தர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் தவறாது தருபவள் இந்த காளி. இதனால் தவறாது இந்த காளியையும் வழிபட்டு வரலாம்.
காளி
காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவேதான் இந்த பலிபீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. பொதுவாக பழங்காலத்து கோவில் என்று எடுத்துக்கொண்டால் அந்த கோவிலில் அந்த கோவிலுடைய வரலாறு பற்றி சில ஓவியங்களும் சிற்பங்களும் கண்டிப்பாக அமைக்கப்பட்டிருக்கும். சில கோவில்களில் கல்வெட்டுகள் கூட அமைக்கப்பட்டிருக்கும். இந்த திருவெண்காடு கோவிலில் அந்த மண்டபத்தில் தள வரலாறு ஓவியங்களாக அமைக்கப்பட்டிருக்கும்.
நடராஜர் சன்னதி
சிதம்பர நடராஜர் தளத்தில் இருப்பது போன்றே இந்த கோவில்லையும் வடிவமைத்து கட்டப்பட்டிருக்கிறது. திருவெண்காடு தளத்தில் சுற்றுப்பிரகாரங்கள் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கிற அமைப்பை நாம் பார்க்க முடியும். ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியாகவும் அமைந்திருக்கிறது. சுற்றுலா வருகிறவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருகின்றவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதியாக பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணி நேரம் பூஜைகள் இங்கு நீடிக்கும். இங்கு புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதால் இப்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. எங்கள் பூஜை நேரத்தை கணக்கிட்டுசுற்றுப்பயணத்தை அமைப்பது மிகவும் நல்லது அப்படின்னு சொல்லலாம்.
- குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!
- ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?
- வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?
இந்த கோவிலில் வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். நவகிரக தலங்களில் புதனுக்குரிய தளம் என்பதினால் புதன் பகவான் பச்சை வஸ்திரம் அணிந்து வெண்காந்தள் மலர் சூட்டில் பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நெய்வேத்தியம் செய்வார்கள். நம்முடைய உடம்பில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும் என்பதினால் செய்யப்படுகிறது. திருமணதோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு 17 தீபம் ஏற்றி வழிபடும் முறை இங்கு கடைப்பிடித்து வருகின்றனர்.
சுவாமிக்கு மா மஞ்சள் பொடி திரவிய பொடி தைலம், பால் தயிர் விபூதி பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் எலுமிச்சை தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களும் நேர்த்திக்கடனாய் இந்த பொருட்களைக் கொண்டு வந்து அபிஷேகத்துக்கு கொடுக்கிறார்கள். மேலும் இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்வதற்கு அனுமதி உண்டு. சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு. நிவேதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் நாம் செய்யலாம். வசதி படைத்தவர்கள் இந்த கோவில் திருப்பணிக்கு பெரும் பொருள் உதவியும் கொடுக்கிறார்கள். பொதுவாகவே காசிக்கு சமமான தளங்களில் ஆறு சொல்லுவார்கள். அதுலே ஒன்றுதான் இந்த திருவெண்காடு. இந்த தளத்தில் மூர்த்தி தீர்த்தம் தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவகிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலம் 51 சக்தி பீடங்களில் ஒன்று. சிவனுடைய 64 மூர்த்தங்களில் ஒன்றாக அகோர மூர்த்தி இந்த தளத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். இவர் நவ தாண்டவம் புரிந்தவர் எனவேதான் இதை ஆறு சிதம்பரம் என்று சொல்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு என்ற தல வரலாறு என்ன சொல்கிறது என்றால் பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்து வந்திருக்கிறான். சிவபெருமான் அருளிய படி தேவர்கள் வேற்று உருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்திருக்கார். அசுரன் காட்டில் வந்ததும் போர் செய்து இருக்கார் அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று இடப தேவரை சூலத்தால தாக்கி காயப்படுத்தி இருக்கார்.
இடபதேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு எழுந்தார் அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசானிய முகத்தில் நின்று அகோர மூர்த்தி தோன்றியிருக்கிறார் அந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அந்த அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட இடபதேவர் ஸ்வாதி ஈஸ்வர சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் கூட பார்க்க முடியும். தென்னிந்தியாவுடைய மிகவும் புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தளமாய் இந்த தளம் இருந்து வருகிறது
இந்த தளத்தில் மிகவும் முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்ன என்றால் அதாவது அதிசயத்தின் அடிப்படையில் இங்கு இருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாய் அருள் பாலிக்கிறார் என்று சொல்லலாம். இப்படி புதன் பகவானுடைய முழுமையான அருளை பெறுவதற்கான ஒரு சிறந்த தளமாகவும் இந்த தளம் இருந்து வருகிறது.