நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.பொதுவாக நம் எல்லோருக்கும் கோடீஸ்வர யோகம் ஏற்படனும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றைக்குமே ஏற்படக்கூடாது சுகபோகமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக நிறைய வழிபாடுகள் பரிகாரங்கள் அனைத்தையும் செய்து கொண்டு இருப்போம் அப்படி அந்த பரிகாரங்கள் வழிபாடுகள் அனைத்தும் நமக்கு பலன் தரப்போகிறது என்று சில அறிகுறிகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். “கோடீஸ்வர யோகம்” ஏற்பட போவதை உணர்த்தும் 10 அறிகுறிகள்.உங்களுக்கு கோடீஸ்வர யோகமும் அதிர்ஷ்டமும் வரப்போவதை உணர்த்தும் 10 அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்று :பல்லி
| பல்லி |
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் பல்லிகளுடைய சப்தம் அடிக்கடி கேட்டுகொண்டே இருக்கும் அப்படி அந்த பல்லிகளோட சத்தம் வேகமாகவோ அல்லது நிறைய பள்ளிகள் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்கிறது என்றால் அந்த குறிப்பிட்ட அறிகுறியானது நம்முடைய வீட்டுக்குள்ளே மகாலட்சுமி தாயார் வருகை புரிய போறாங்க என்ற அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
பல்லி இருக்கிறது என்று சொல்லப்படும்போது கூட அது நம்முடைய வீடுகளுக்கு மகாலட்சுமி தாயாரையும் அஷ்டலட்சுமி தாயாரையும் வரவழைக்க வைப்பதற்கு உண்டான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இப்படி இந்த அறிகுறிகள் உங்கள் வீட்டில் தென்படுகிறது என்று சொல்லப்படும்போது நீங்கள் மேற்கொள்ளக்கூடிய தொழிலாக இருக்கட்டும் வேலையாக இருக்கட்டும் அதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டு பணம் பெருகுவதற்கு உண்டான ஒரு முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இரண்டு :கட்டெறும்பு
பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் எறும்புகள் கூட்டம் கூட்டமாக பார்த்திருப்போம். அப்படி அந்த எறும்புகளை கட்டெறும்பு என்று சொல்லக்கூடிய இந்த வகை எறும்பு உங்களுடைய வீட்டில் கூட்டமாக ஒரு இடத்தில கூடியிருக்கிறது என்றால் அந்த குறிப்பிட்ட அறிகுறியானது நம்முடைய வீடுகளுக்கு பணமழை பொழிவதற்கு உண்டான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இப்படி இந்த கட்டெறும்பு கூட்டத்தை பார்த்தோம் என்று சொன்னாலே நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் பச்சரிசி கொஞ்சம் எடுத்து தண்ணியில் ஊற வைத்து அதுகூட கொஞ்சம் வெள்ளம் சேர்த்து இடிச்சு அதை நாம் கட்டெறும்புகளுக்கு உணவாக கொடுத்தோம் என்றால் கண்டிப்பாக நம்முடைய வீட்டில் பணம் பெருகுவதற்கான அற்புதமான வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அதில் வாயில் இவ்வளவு எறும்புகள் நம்மை ஏதாவது செய்து விடுமோ என்று பயந்து எறும்புகளுக்கு மருந்து கொட்டி எறும்புகளை கொலை செய்யாதீர்கள். அப்படி தவறு செய்தால் உங்களுக்கு வந்த அதிர்ஷ்டத்தை நீங்களே வேண்டாம் என்று விரட்டி விட்ட மாதிரி ஆகிவிடும். உங்களுக்கு எறும்புக்கு உணவளிக்க பிடிக்கவில்லை என்றால் அதை தொந்தரவு செய்யாமல் போக விட்டாலே போதும்.
மூன்று :மங்கள ஓசைகள்
அதிகாலை நேரத்தில் நாம் கண் விழிக்கும் போது ஏதாவது ஒரு மங்கள ஓசைகள் கேட்கிறது என்றால் அதுவும் பணம் பெறுவதற்கு உண்டான முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சங்கினுடைய ஓசை அல்லது புல்லாங்குழல் மற்றும் மங்களகரமான வாத்தியங்களுடைய சப்தம் நம்முடைய காதுகளில் கேட்கிறது என்றால் அந்த ஒரு குறிப்பிட்ட நாள் நமக்கு நல்ல ஒரு பண வரவை ஏற்படுத்தித் தரக்கூடிய நாளாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஒரு குறிப்பிட்ட சத்தம் அதிகாலை நேரத்தில் கேட்கிறதென்றால் கொஞ்சம் கவனமாக கேட்டு பாருங்கள். முடிந்தால் நம்முடைய ரிங்க்டோன் அல்லது அலாரம் டோனில் நல்ல மங்கள வாத்தியம் முழங்குவது போல் வைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே :
- 21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் கோவில் ! வாழ்வில் ஒரு முறையாவது
- செல்ல வேண்டிய இடம் !
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
-
கடன்பிரச்சினை – பணப்பிரச்சனை நீங்க ஆண்கள் இதை செய்யுங்கள்
நான்கு :பறவைகள் கூடு காட்டினால்
நம்முடைய வீடுகளில் ஏதாவது ஒரு பறவை இனம் கூடு கட்டி இருக்கிறது என்றால் அந்த குறிப்பிட்ட செயலானது நம்முடைய வீட்டில் பண மழை பொழிவதற்கு உண்டான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்குளவி நம் வீட்டு பூஜை அறையில் கூடு கட்டும் போது பணம் பெருகுவதற்கு உண்டான செயலும் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு உண்டான வாய்ப்பும் ஏற்படும். அதேபோல் புறாக்கூடு அல்லது குருவிக்கூடு நம்முடைய வீட்டுக்குள்ளே கட்டி இருக்கிறது என்று சொல்லும்பொழுது கண்டிப்பாக அந்த குறிப்பிட்ட செயல் நம்முடைய வீட்டுக்குள்ளே கோடீஸ்வரி யோகத்தை ஏற்படுத்தி தருவதாக நம்பப்படுகிறது.
நம் ஊரிலேயே நிறைய பேரு வீட்டுக்குள்ளே குருவி கூடு கட்டி இருக்கிறது என்றால் அதை தொந்தரவு செய்யாமல் சில செயல்கள் செய்வோம் அதே மாதிரி துபாய் நாட்டு இளவரசனோட விலை உயர்ந்த காரின் மீது ஒரு பறவை கூடு கட்டி இருந்திருக்கிறது அது நல்லபடியாக தன்னுடைய பிள்ளைகளை பெற்றெடுக்கும் வரை அந்த விலை உயர்ந்த காரை பயன்படுத்தாமலேயே வைத்திருந்தார் அந்த பட்டத்து இளவரசன். ராஜ வம்சத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இப்படி சில மரபுகளை அவர்கள் பின்பற்றி தான் வருகிறார்கள். நம்முடைய வீட்டு மரத்திலையோ கட்டிடத்திலையோ பறவைகள் கூடு கட்டி இருந்தால் அதை அழித்து விடாதீர்கள்.
ஐந்து :ஆந்தை
நம்முடைய வீடுகளில் பெரும்பாலும் ஆந்தைகளுடைய சப்தத்தை கேட்பது ரொம்ப அரிதாக இருக்கும். எப்பொழுதாவது தான் அது அரிதாக நடக்கும். ஆனால் தொடர்ந்து நம் வீட்டில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆந்தைகளுடைய சப்தம் கேட்டு கொண்டே இருக்கிறது இல்லையென்றால் நம்முடைய வீட்டுக்கு முன்னால் இருக்கும் மரங்களில் இருந்து நம்முடைய வீட்டை பார்த்த மாதிரி ஆந்தைகள் அமர்ந்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக நம்முடைய வீட்டுக்கு மகாலட்சுமி தாயார் வருகை தருவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் மகாலட்சுமியோட வாகனம் ஆந்தையாக இருக்கிறது. கனமழை பொழிய போகிறது என்று சொல்லும்போது ஆந்தையோட சத்தம் அல்லது ஆந்தையோட பார்வை நம்முடைய வீட்டில் விழுகிறது என்றால் கட்டாயமாக நமக்கு கோடீஸ்வரராகும் யோகம் ஏற்படலாம்.
ஆறு :உள்ளங்கையில்கண்விழிக்கும் போது
நாம் பொதுவாக காலையில் கண்விழிக்கும் போது உள்ளங்கை தரிசனம் நமக்கு பன்மடங்கு பலன்களை பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது. மகாலட்சுமி தாயார் விரும்பி வாசம் செய்யக்கூடிய உள்ளங்கையில் நாம் காலை நேரத்தில் கண் விழிக்கிறோம் என்றால் கண்டிப்பாக அந்த நாள் முழுவதுமே நல்ல ஒரு லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். அதே சமயத்தில் உங்களுக்கு உள்ளங்கை எப்போதாவது அரிக்கிறது என்றால் அதுவும் நம்முடைய வீட்டுக்கு பணவரவை ஏற்படுத்தி தருவதற்கான ஒரு முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஏழு :முன் வாசல் கதவை திறப்பது
நாம் அதிகாலை நேரத்தில் கண்விழிக்கும் போது நம்முடைய வீட்டு பின் வாசல் கதவை ஒரு இரண்டு நிமிடம் திறந்து வைத்து விட்டு அதன் பிறகு முன் வாசல் கதவை திறப்பது நல்லது. நிறையபேர் இதை தொடர்ந்து செய்து வருவோம். ஆனால் முன் கதவை திறக்கும் போது குலதெய்வத்தின் பெயரையும் அஷ்டலட்சுமி பெயரையும் சொல்லி கதவை திறப்பது ரொம்ப விசேஷமானது. அதிர்ஷ்டமான பலன்களை பெற்றுத்தரும். அதே சமயத்தில் வீட்டின் முன் கதவை திறக்கும் போது பசு மாட்டு சாணத்தின் வாசம் நம்முடைய நாசிகளை தொடுகிறது என்றாலும் நல்ல ஒரு வாசனை.
இதையும் படிக்கலாமே :
- 21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் கோவில் ! வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் !
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
- கடன்பிரச்சினை – பணப்பிரச்சனை நீங்க ஆண்கள் இதை செய்யுங்கள்
எடுத்துக்காட்டுக்கு யாராவது சாம்பிராணி புகை போட்டாலும் ஊதுபத்தி ஏற்றி வைத்து அந்த வாசனை நாம் முகர்ந்தாலும் அன்றைக்கு அந்த நாள் நமக்கு நல்ல நாளாக அமையும் நல்ல பண வரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் கணவன் எழுந்து வேலைக்கு போவதற்கு முன் மனைவி எழுந்தி சாணி பூசி கோலம் போட்டு சாமி கும்பிட்டுவிட்டு சாம்பிராணி புகை வீடு முழுக்க போடுவார்கள். கணவன் கண்விழிக்கும் போது இந்த வாசனையை முன் வந்தால் அவருக்கு அன்றைக்கு நல்ல தன வரவு கிடைக்குமாம். வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
எட்டு :பசும்பால்
பெரும்பாலும் நிறைய பேரோட வீட்டில் பசும்பால் வாங்கி பயன்படுத்துகிற பழக்கம் இருக்கும். அப்படி நாம் வாங்கக்கூடிய பசும்பால் ஆனது ஒரு சில நேரங்களில் வாங்குகின்ற நேரத்தில் தவறுதலாக கொஞ்சம் சிந்தி அதாவது நம்முடைய வாசல் பகுதியில் பசும்பால் தானாக கொஞ்சம் சிந்துகிறது என்றால் அதுவும் நம்முடைய வீட்டுக்குள்ளே மகாலட்சுமி தாயார் வருகை தருவதற்கான ஒரு முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. பூலோகத்தினுடைய கோமாதா என்று சொல்லக்கூடிய பசுமாட்டிடமிருந்து கிடைக்கக்கூடிய பசும்பால் ஆனது நம் வீட்டு வாசலில் சிந்துகிறது நல்ல தனமழை பொழிய போகிற ஒரு அறிகுறியாகும்.
ஒன்பது : நாய்
பொதுவாக நாம் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்துக்காக வெளியில் புறப்பட்டு போகும்போது நம் கண்களுக்கு எதிரே காலபைரவரின் வாகனமான நாய் தென்பட்டுதென்று சொன்னாலும் அல்லது நாயோட வாயில் ஏதாவது ஒரு சைவ உணவு எடுத்துக்கொண்டு உங்கள் முன்னாடி வருது என்று சொன்னாலும் கண்டிப்பாக அந்த குறிப்பிட்ட நாள் அன்றைக்கு மேற்கொள்ளக்கூடிய முயற்சி அனைத்துமே கட்டாயமாக நல்ல பலன்களை பெற்று தரும் என சொல்லப்படுகிறது. பணம் சம்பந்தப்பட்ட முயற்சியானாலும் சரி அல்லது வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட முயற்சியானாலும் சரி இந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறி தென்படுகிறதென்றால் ஏதாவது ஒரு வகையில் பணமழை பொழிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பத்து :கனவில் இந்த பொருட்களை கண்டால்
“கோடீஸ்வர யோகம்” ஏற்பட போவதை உணர்த்தும் 10 அறிகுறிகள். பொதுவாக எல்லோரும் தூங்கும்பொழுது கனவு காண்பது ஒரு இயற்கையான விஷயம். அப்படி நமக்கு கனவு வரும் போது அந்த கனவில் நாம் ஒரு சில பொருட்களை பார்க்க நேரிட்டது என்று சொன்னால் அதுவும் நம்முடைய வீட்டுக்கு தன வரவு ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
என்னென்ன பொருட்களை நாம் கனவில் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றால் பல்லி, நட்சத்திரம், நல்ல வாசனை உள்ள மலர்கள் ஆந்தை, யானை, குடம், சங்கு, துடைப்பம் போன்ற பொருட்களை நாம் கனவில் பார்த்தோம் என்றால் கண்டிப்பாக நமக்கு ஏதோ ஒரு வகையில் கோடீஸ்வரராக கூடிய யோகம் வருதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த பதிவின் மூலம் கோடீஸ்வர யோகம் ஏற்பட போகுதுங்கறதுக்கான இந்த பத்து அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்கள் வீட்டில் தென்படுகிறது என்றால் கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ஷ்ட கதவை திறக்க போகிறது. உங்களுடைய பண பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து கோடீஸ்வர யோகம் நிகழப்போகிறது என்று நம்பலாம். இப்போது நீங்கள் கடைபிடித்து வரும் பூஜை மற்றும் பரிகாரங்களை இரண்டு மடங்கு செய்தீர்கள் என்றால் சீக்கிரமே அந்த பலன் கைகூடும்.
இதையும் படிக்கலாமே :
- 21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் கோவில் ! வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் !
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
-
கடன்பிரச்சினை – பணப்பிரச்சனை நீங்க ஆண்கள் இதை செய்யுங்கள்
உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை நினைத்துக் கொண்டு உப்பு தீபம் ஏற்றி வருகின்றீர்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறை செய்வது. தினமும் காலையில் உப்பு தீபம் ஏற்றுவது. தேய்பிறை அஷ்டமிக்கு காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வருவது என்பது வளர்பிறை அஷ்டமிக்கும் இயற்றி வாங்க மகாலட்சுமி நினைச்சு என்ன விரதம் கடைபிடிக்கிறீர்களோ அதை அடிக்கடி செய்து வாருங்கள் கோடீஸ்வரன் ஆகவில்லை என்றாலும் பணப்பற்றாக்குறை இல்லாமல் வருகின்ற பணம் செலவாகாமல் வீட்டில் தங்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.