சர்க்கரை நோய் தீர வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில்.

சர்க்கரை நோய் தீர வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில்.



உலகளாவிய அளவில் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு நோய்தான் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய். ஊருக்கு ஒருவர் என்ற நிலை மாறி இப்பொழுது வீட்டுக்கு வீடு சர்க்கரை நோயாளிகள் இருக்கும் அளவிற்கு இந்த நோய் பெருகிக்கொண்டே வருகிறது. இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வந்தால் அதை கட்டுக்குள் வைக்கலாம் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள். எந்த நோயும் ஒருவரின் கர்ம வினையின் பயனாக உருவாகி அது கடவுளின் அருளால் கட்டுப்படும் என்பது ஆன்மீக நம்பிக்கை.


அந்த வகையில் திருவெண்ணியூரில் உள்ள வெண்ணி கரும்பேஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை வியாதியில் இருந்து விடுபடலாம் என தீர்க்கமாக நம்பப்படுகிறது. வித்தியாசமான சிவ தலங்களில் வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோவிலும் ஒன்று. இங்கு இறைவனின் திருமேனியானது கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தது போல் காட்சி தருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்தை இறைவனின் நான்கு யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தல வரலாறு கூறுகிறது.


ஆனால் புராணங்களோ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முசுகுந்த சக்கரவர்த்தி ஆட்சி காலத்து ஆதியும் இது என்கிறது பழங்காலத்தில் இந்த தலம் இருந்த இடம் கரும்புக்காடாக இருந்ததாம். ஒருமுறை இரு முனிவர்கள் தல யாத்திரையாக இங்கு வந்ததாகவும் அப்போது கரும்பு காட்டிற்குள் இறைவனை திருமேனியில் இருப்பதைக் கண்டு அதனை போதித்து வழிபட்டதாகவும் அப்பொழுது அவர்களில் ஒருவர் இங்குள்ள தலவிருட்சம் கரும்பு என்றும் மற்றொருவர் வெண்ணி என்றும் அழைக்கப்படும் நந்தியால் வட்டம் என்றும் வாதிட்டனராம் அப்பொழுது இறைவன் அசரீதியாக தோன்றி எனது பெயரில் கரும்பும் தல விருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும் என்று அருளியதாகவும் அன்று முதல் இத்தல இறைவன் கரும்பேஸ்வரர் என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.


கரும்பேஸ்வரர்


பெயருக்கு ஏற்றார் போலவே சுயம்புவாய் உருவான இத்தல லிங்கத்திருமேனி கரும்பு கட்டாக இருப்பது போன்ற தோற்றத்தில் மேடு பள்ளமாக காட்சி தருவது சிறப்பம்சமாகும். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அந்த வடிவம் நமக்கு நன்கு புலப்படும். சிவலிங்கத்திருமேனியின் வலது மேல் புறத்தில் வெட்டுப்பட்டது போன்ற அடையாளம் உள்ளது.


கரும்பு காட்டில் மறைந்து கிடந்த சுயம்புவான ஈசனை முசுகுந்த சக்கரவர்த்தி கண்டறிந்து அவருக்கு கோவில் கட்டுவதற்காக அங்குள்ள கரும்புகளை வெட்டும்போது அது லிங்கத்தில் பட்டு ரத்தம் கசிந்து இருக்கிறது. இதை கண்ட மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி இச்சுயம்பு திருமேனிக்கு சதுர ஆவுடையார் அமைத்து கருவறை எடுத்து கோவில் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. 


இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.


இத்திரை கோவிலின் தலவிருட்சமாக இருக்கும் வெண்ணி மரத்தின் நந்தியால் வட்ட மலரே சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களில் மிக முக்கியமானதாக உள்ளது. சித்தர்கள் பாடல்களில் இந்த கோவிலில் சர்க்கரை நோய்க்கான பிராத்தனை முறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது பாம்பாட்டி சித்தரும் கோயில் வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்து பாடியுள்ளார்.


ரசமணியோடு வெல்லம் கலந்து கோவிலை வலம் வந்து சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால் குருதியில் சர்க்கரை குறையும் என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ரசமணியை வாங்கி படைப்பது என்பது சாத்தியம் அல்ல என்பதால் மக்கள் தங்களால் இயன்ற அளவு ரவையை வாங்கி அதை சர்க்கரையோடு கலந்து இறைவனுக்கு படைத்து வழிபடுகின்றனர்.


அதுவே அங்குள்ள எறும்புகளுக்கு உணவாகிறது. அதனை ஏற்றுக் கொள்ளும் இறைவன் சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது. அன்னதானத்திற்கு அரிசியும் வெல்லமும் வாங்கி கொடுத்தாலும் அது சர்க்கரை நோய்க்கு பரிகாரமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிறிய கோவில் என்றாலும் அங்கு சாணித்தியம் நிறைந்துள்ளது.


மூன்று நிலைத்த ராஜகோபுரம் கோவிலுக்கு எதிரே சூரிய புஷ்கரணி தீர்த்தம் கோவிலுக்கு வலப்புரம் சந்திர புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது ராஜகோபுரத்தை தாண்டியதும் ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே காணப்படுகிறது. உள்ளே மகா மண்டபம் வலப்புரம் வினாயகர் பிறகு நர்த்தன கணபதி கருவறையை சுற்றி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்ரீ லிங்கோத் பவர் ஸ்ரீ துர்க்கை ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன.


ஸ்ரீ சண்டிகேஸ்வரர்



பிரகாரத்தில் பைரவர் சன்னதியும் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஈசானியமூலையில் தல விருட்சமான நந்தியால் வட்டம் உள்ளது இங்கு மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம் என்பது சிறப்பு. கிழக்கு நோக்கி கரும்பேஸ்வரரும் தெற்கு நோக்கி அம்பாளும் அருள் பாலிக்கிறார்கள். இங்கு உள்ள அம்பிகையின் திருநாமம் சௌந்தரநாயகி பெயருக்கேற்றபடி அழகிய தேவி குழந்தை பாக்கியம் அருளும் மகா சக்தி இவள் குழந்தை வரம் வேண்டி பிராத்திக்கும் பக்தர்கள் இங்குள்ள அம்பாள் சன்னதியில் வலையல்களை கட்டி விடுகின்றனர் இதனால் கண்டிப்பாக கருத்தரிப்பர் என்பது நம்பிக்கை.


இத்தலம் திருக்கருகாவூருக்கு மிக அருகில் உள்ளது. எனவே வெண்ணியூர் அம்பிகையால் கரு உண்டானால் திருக்கருகாவூரில் உள்ள கற்பரக்ஷாபிக்கை அதை காப்பார் என்பது பெண்களின் நம்பிக்கை. பசுமையான கரும்புக்காடும் நெல் வயல்களும் சூழ்ந்துள்ள இத்தலத்தில் அமைந்துள்ள ஒரு மரத்தடியில் கரிகால் சோழன் வழிபட்டதாக சொல்லப்படும் பிடாரி அம்மன் திரு உருவம் காணப்படுகிறது. அதற்கு சற்று தூரம் சென்றால் தீர்த்த குளம் உள்ளது கரிகால் சோழன் தன் 18 வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளார்.


ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?

வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?


கரிகால் சோழன் பெற்ற இந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது. அவன் பேரரசனாக முடி சூட்டிக்கொண்ட இடம் வெண்ணி பரந்தலை என்ற இலக்கியங்களால் புகழப்பட்ட இன்றைய கோவில் வெண்ணி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நவராத்திரி திருவிழா பங்குனி உத்திரம் சித்திரபௌர்ணமி வைகாசி விசாகம் ஆனித்திருமஞ்சனம் திரு கார்த்திகை திருவாதிரை தைப்பூசம், மாசி மகம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.


பங்குனி 2, 3, 4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திற்கு மேற்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் தஞ்சை இருந்து கிழக்கில் 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. எனவே நம் உடலில் உள்ள பிணிகள் அகல இத்திரு கோவிலுக்கு சென்று வழிபட்டு கரும்பீசனின் அருளை பெறுவோம். நலமோடு வாழ்வோம். நன்றி… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *