குலதெய்வ சாபம் யாருக்கு வரும் தெரியுமா? குலதெய்வ சாபம் நீங்க எளிய பரிகாரம் – Kuladeiva Sabam.
குலதெய்வ சாபத்தை கண்டுபிடிப்பது எப்படி? குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது? அதற்கு என்ன பரிகாரம். மொத்தம் 13 வகை சாபங்களில் மிகவும் கொடுமையான சாபம் எது என்றால் குலதெய்வ சாபம் தான். நம்முடைய ஜாதகத்தில் குலதெய்வத்தின் சாபம் இருக்கிறதா? என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம். யார் யாருக்கெல்லாம் இந்த குலதெய்வ சாபம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
நமது முன்னோர்கள் வழி வழியாக வணங்கும் ஒரு தெய்வமே குலதெய்வம் மற்ற அனைத்து தெய்வங்களை காட்டிலும் குலதெய்வத்திற்கு சக்தி அதிகம். எமன் கூட ஒருவரின் உயிரை பறிக்க வேண்டுமானால் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே பறிப்பார். இப்படி பல அபூர்வ சக்திகளை கொண்ட குலதெய்வத்தின் சாபம் எதனால் ஏற்படுகிறது.
ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி தாய் தந்தையர் போன்ற குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை செய்ய தவறினாலும் குலதெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்கத் தொடங்கி குலதெய்வ கோவிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயமாய் ஏற்படும்
குலதெய்வ சாபம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தை வைத்து கண்டுபிடிக்கலாமா?
ஒருவருடைய ஜாதகத்தில் குலதெய்வத்தை குறிக்கக்கூடிய கிரகமாக விளங்குபவர் சனிபகவான். அதன் அடிப்படையில் ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் இருக்கின்ற வீட்டிலிருந்து ஆறாம் வீட்டில் புதன் சந்திரன் சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு குலதெய்வ சாபம் இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த குலதெய்வ சாபத்தால் எப்படிப்பட்ட விளைவுகள் எல்லாம் ஏற்படும் தெரியுமா?
குலதெய்வ சாபம் உள்ள ஒருவருக்கு திருமணத்தில் தடை இருக்கும் சிலருக்கு குழந்தை பேரு இருக்காது எதை தொட்டாலும் அதில் ஒரு இழுப்பறி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்காது இப்படி குலதெய்வ சாபத்தால் பல துன்பங்கள் வரும் இந்த துன்பமானது நமக்கு மட்டும் இல்லாமல் நம்முடைய சந்ததியினருக்கும் தொடர்ந்து இருக்கும். நம்மோடு இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க சாப நிவர்த்தி செய்வது அவசியம்.
இதையும் படிக்கலாமே :
ராஜயோகம் வரப்போவதை உணர்த்தும் 13 அறிகுறிகள்
குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம் என்ன தெரியுமா?
நம்முடைய குலதெய்வம் யார் என்பதை அறிந்திருந்தால் குலதெய்வ சாப பரிகாரம் ரொம்ப எளிமையானதாக இருக்கும்
குலதெய்வம் பற்றி அறியாதவர்கள் முதலில் குலதெய்வத்தை தெரிந்து கொள்வது அவசியம். நம்முடைய முன்னோர்கள் எப்படி குலதெய்வத்தை வழிபட்டர்களோ அதேபோல நாமும் நம்முடைய குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஒரு சிலருக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்கும் வழக்கம் இருந்திருக்கும். சிலர் வெறும் பொங்கல் மட்டும் வைத்து குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்து இருப்பார்கள். இப்படி நம்முடைய முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைப்படி நாமும் வணங்க வேண்டும்.
நாம் இத்தனை நாள் செய்த தவறுக்காக குலதெய்வத்திடம் மன்றாடி வேண்டி நாம் கொடுக்கும் பூஜையை ஏற்கும் படி கேட்க வேண்டும். இதனால் குலதெய்வம் மன மகிழ்ந்து நிச்சயமாக நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ளும். குலதெய்வங்கள் கர்ம வினைகளை நீக்கக்கூடியது. யாருக்கு அதிக கரும வினைகள் இருக்கிறதோ அவர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போவது கூட உண்டு. குலதெய்வ பிரார்த்தனை என்பது தந்தை தாத்தன் முப்பாட்டன் அவர்களுக்கு முன்னால் உள்ள மூதாதையர்களால் வணங்கப்பட்ட தெய்வம்.
குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்கும்போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டுமல்லாமல் மூதாதையரின் ஆசியும் முழுமையாக கிடைக்கிறது. குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் போது எல்லா தடைகளும் நீங்கி வாழ்க்கை வளமாகும். குலதெய்வ கோயில்களை பொருத்தவரை மற்ற தெய்வங்களுக்கு என்று தனித்தனி சன்னதிகள் இருக்கிறது கிடையாது.
ஆனால் ஹிந்து மத வழிபாட்டின்படி விநாயகர் முதன்மையான கடவுளாக சொல்கிறார்கள். அவரை வணங்கி தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்ற ஒரு கருத்தையும் முன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். குலதெய்வ கோவில்களில் விநாயகர் சன்னதி இருந்தால் அவரை வணங்கிய பிறகு குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். விநாயகர் சன்னதி இல்லாத பட்சத்தில் அவரை மனதில் நினைத்துக் கொண்டு வணங்கிவிட்டு பின்பு குலதெய்வ பூஜையை தொடங்க சொல்லி இருக்கிறார்கள்.
சர்க்கரை நோய் தீர வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில்.
சில நேரங்களில் தீய சக்திகளால் நம்முடைய பூஜைக்கு இடையூறு ஏற்படும் போது அத்தகைய தீய சக்திகளை விரட்டியாலும் சக்தி விநாயகருக்கு உண்டு என்று சொல்லி நம் கிராம தெய்வங்களின் வழிபாட்டில் விநாயகரை புகுத்தியுள்ளனர். இதிகாச கதைகள் கூறும் சமய துறவிகள் ஒவ்வொரு வீட்டின் தலை வாசலின் கதவிலும் குலதெய்வம் வாசம் செய்யுமாம்.அதனால தவறியும் அங்கு இந்த தவறை எல்லாம் செய்து விடாதீர்கள்.
ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதுபோல் தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு இருக்கிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும் மூடவும் என்று வீட்டில் பெரியவர்கள் சொல்லி இருப்பார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள்.
குழந்தைகள் கதவின் தாழ்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை கூட நாம் கேட்டு இருப்போம். இவ்வளவு ஏன் சில நேரம் நாமே கூட அந்த தவறை செய்து விட்டு பலமுறை சின்ன வயதில் திட்டுவாங்கியிருப்போம். அதற்கு இதுதான் காரணம். வீட்டின் கதவில் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கிறது. இத்தகைய நிலை வாசல் கதவில் தெரியாமல் கூட இந்த தவறை எல்லாம் எப்பவுமே செய்து விடாதீர்கள்.
அந்த மாதிரியான தவறுகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வீட்டின் தலைவாசலில் இரு புறங்களிலும் விளக்கேற்றி வைப்பது பண்டையகால வழக்கமாகும். நாம் எல்லாருக்குமே தெரிந்திருக்கும். அந்த இரண்டு புறங்களிலும் கும்ப தேவதைகள் அமர்ந்திருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது.அந்த தேவதைகளை குளிர்விக்கவே அந்தப் பகுதியில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கும்.
அவர்களை வணங்குவதற்காகவே வீட்டின் தலை வாசலை குள்ளமாக வடிவமைத்து இருப்பார்கள். அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கும்ப தேவதைகளை வணங்கி செல்வதற்கு தான் இவ்வளவு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் எப்படி நாம் கோவில்களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டி உள்ளே போகிறோமோ அப்படித்தான் வீடு என்னும் கோவிலில் வாசல் படிகளை மிதித்து விட்டு உள்ளே செல்லக்கூடாது. படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்கு தான். அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலவாசல்படியை மிதித்துக் கொண்டு உள்ளே போகக்கூடாது.
“கோடீஸ்வர யோகம்” ஏற்பட போவதை உணர்த்தும் 10 அறிகுறிகள்.
ஒருபோதும் நிலை வாசல் படியில் அமரக்கூடாது ஒரு சிலர் பொழுது போகாமல் வீட்டின் தலை வாசல் பகுதியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள் இது மிகவும் மோசமான பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கலாம் படியிலிருந்து இறங்கிதான் நீங்கள் அமர்ந்து கதை பேச வேண்டும் அதேபோல வாசல் படியில் தலை வைத்து படுக்க கூடாது என்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம் அதுவும் இதற்காகத்தான்.
வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும் கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக் கூடாது தரித்திரம் ஏற்படுத்தும் என்று சொல்லுவார்கள். அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக்கூடாது. அங்கு என்று தும்முவது தலை வாருவது போன்றவற்றை செய்தால் வீட்டில் தரித்திரம் தான் உண்டாகும். இது போன்ற சில தவறுகளை வீட்டில் செய்தால் பணவரவு கட்டாயம் தடைப்படும். கெட்ட சக்திகளும் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமைந்துவிடும்.
இவ்வாறு தலைவாசலில் நாம் செய்வதால் வீட்டை பாதுகாக்கும் தெய்வங்கள் செயல்பட முடியாமல் போகும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நம்முடைய குலதெய்வம் தான். அதனால்தான் எப்போதும் நம் வீட்டின் கதவுகளில் குடியிருப்பதாக சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் நமக்கு தெரியாமல் நமக்கு சில நேரங்களில் வரும் ஆபத்துகள் விலகியதை அடுத்து தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய் விட்டது என்று சொல்லுவோம். நம்முடைய பல கஷ்டங்களில் இருந்து குலதெய்வம் நம் துணையாக இருந்து பாதுகாப்பதாக ஆன்மீக சாஸ்திரங்களில் கூறப்பட்டு இருக்கிறது. அதனால் இதுவரைக்கும் தெரியாமல் எந்த தப்பு செய்து இருந்தாலும் இனியும் தலைவாசலில் இந்த தவறுகளை நீங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.
ஒரு குடும்பத்தின் குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய் இருந்து அந்த குடும்பத்தை வழிநடத்திச் செல்வது. குல தெய்வங்களை நமக்கு பிடிச்சாலும் பிடிக்கவில்லை என்றாலும் குலதெய்வத்திடம் அனுமதி பெற்று தான் எந்த விஷயமாக இருந்தாலும் ஆரம்பிக்க வேண்டும். குலதெய்வத்தை மதிக்காமல் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம் யாகம் என்று செய்தாலும் எத்தனை கோவிலுக்கு போய் வழிபட்டாலும் அந்த காரியம் தடைபட்டு தான் போகும்
குலதெய்வங்களை பொறுத்தவரைஆண் குலதெய்வம் பெண்
குலதெய்வம் என இரண்டு வகைப்படும்
ஆண் குலதெய்வங்கள் தன்னைத்தானே தியாகம் செய்து உயிர் துறந்த மாவீரர்களாக இருப்பார்கள். ஆண் குலதெய்வ வழிபாட்டிற்கு நடுக்கல் வீரக்கல் நட்டு பயப்படுவோம். பெண் குலதெய்வங்கள் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து கர்ப்புக்கரசியாய் இருந்த கன்னிப்பெண்களை பெண் குலதெய்வங்களாய் ஏற்று நம்முடைய பரம்பரையில் வழிபட்டு வந்திருப்போம்.
பொதுவாக இறந்து போன ஆத்மாக்களுக்கு அதிக சக்திகள் இருக்கும். தன்னலம் பார்க்காமல் வீரத்திற்காக உயிர் துறந்த ஆத்மாக்களும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு உயிர் துறந்த ஆத்மாக்களும் வலிமைமிக்க சக்திகளோட இருப்பார்கள். அந்த ஆத்மாக்களை தொடர்ந்து வழிபட்டு அவங்களுக்கு தேவையானதை செய்து உயிர் பலி கொடுத்து அவங்களுடைய சக்திகளை அதிகப்படுத்தறது மூலமாக அவர்கள் அந்த குளத்தோட காவல் தெய்வமாக மாறி அந்த குளத்தோட குலதெய்வமாக மாறி பரம்பரை பரம்பரையாக அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.
பொதுவாக 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் நம் தமிழ் மண்ணில் குலதெய்வங்களாக இருக்கிறார்கள்.
அய்யனார், மதுரை வீரன், மாடசாமி, காத்தவராயன், ஒண்டிக்கருப்பன், கருப்பண்ணசாமி, வீரனார், சங்கிலி கருப்பன், ஆகாய கருப்பன், ஆர்க்டிக் கருப்பன்,மார்நாட்டு கருப்பன், சமையக்கருப்பன், முன்னடி கருப்பன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் இருக்காங்க.
அதேபோல பெண் தெய்வங்களாக வீரமாகாளி, குழுமமாகியம்மன், மகமாயி, எல்லைப்பிடாரி, பெரியாச்சி, எல்லை மாறி பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்காணத்தம்மன், வனதுர்க்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அனுச்சியார், மாசாணி அம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் இந்த காவல் தெய்வங்கள்.
ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற மாதிரி வெவ்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்கள். இந்த காவல் தெய்வங்களை மட்டுமே முதன்மை கடவுளாக வழிபட்டு வந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இப்போது இந்த குலதெய்வங்கள் சிறு தெய்வங்களாக மாற்றப்பட்டு பெரும் தெய்வங்களான சிவன் திருமால் பார்வதியெல்லாம் இதிகாசங்களாலும் புராணக் கதைகளாலும் எழுதப்பட்ட தெய்வங்கள்.
சர்க்கரை நோய் தீர வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில்.
ஆனால் நம் குல தெய்வங்களும் கிராம தெய்வங்களும் நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. பெருந்த தெய்வங்களின் குழந்தைகளையும் நாம் கடவுளாக வணங்கி வருகிறோம். உதாரணத்திற்கு விநாயகர் முருகன் ஐயப்பன் ஆனால் நம் சிறு தெய்வங்களின் குழந்தைகளின் ஐயப்பனுக்கும் அழகர் திருமாலுக்கு காவலாக கருப்புசாமி அம்மனுக்கு காவலாக முனீஸ்வரனும் வைத்து பெரும் தெய்வங்களின் வரலாற்றில் சிறு தெய்வங்களுக்கும் இடம் உண்டு என அவரவர்களின் புராணக் கதைகளையும் இதிகாசங்களையும் கூறி சைவர்களும் வைணவர்களும் தத்தம் சமயத்தை புகுத்த நம் காவல் தெய்வங்களை இணைத்துக் கொண்டனர்.
நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபட்டு வரப்படும் முதன்மை சிறு தெய்வங்கள் ஐந்து வகையாக வகைப்படுத்தப்படுகிறது.
வீட்டு தெய்வம், குலதெய்வம், இனத் தெய்வம், ஊர் தெய்வம், வெகுஜன தெய்வம். இன தெய்வம் இரண்டு வகைப்படும் பெண் தெய்வம் ஆண் தெய்வம் பெண் தெய்வங்களை தாய் தெய்வமாகவும் கன்னி தெய்வமாகவும் ஆண் தெய்வங்களை முதன்மை தெய்வங்களாகவும் துணை தெய்வங்களாகவும் வகைப்படுத்துகிறார்கள். வீட்டை காப்பது வீட்டு தெய்வம் குலத்தை காப்பது குலதெய்வம் இனத்தை காப்பது இன் தெய்வம் என்று சொல்வது போல் ஒரு ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பதை ஊர் தெய்வம் வெகுஜன தெய்வங்கள் என்று ஜாதி மதம் மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் சென்று வழிபடும் வகையில் அமைந்த சிறு தெய்வங்கள்தான் வெகுஜன தெய்வங்கள் என்று சொல்கிறார்கள்.
இன்னும் சிறு தெய்வங்களுக்கு கோவில் எழுப்பி வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியதுதான் பெரும்பாலும் திறந்தவெளியில் மரத்தின் கீழே தெய்வமாக கருதி கல் சூலாயுதம் வேல் அரிவால் விளக்கு மாடம் வைத்து தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். பெரும் தெய்வங்களான சிவன் பார்வதி திருமாலின் வழிபாடு என்பது ஒரு நம்பிக்கையும் புராண இதிகாச கதைகளாலும் தெரிந்தது. ஆனால் நம் சிறு தெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்களின் வரலாறு என்பதை உணர்ந்து குலதெய்வங்களின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வோம்.
நம் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்கள் என்றால் அவர்களை நான் மனம் உருகி வேண்டுதல் வேண்டும். நம்முடைய உண்மையான அவர்களிடம் காட்டும் பொழுது ஒரு கட்டத்தில் உங்களுடைய பக்தியை உணர்ந்து கொண்டு நீங்கள் வைத்திருப்பது உண்மையான பக்தி என்று தெரிந்த பின்னர் அவர்கள் உங்களுடன் இருப்பதை உங்களால் உணர முடியும். நம்முடைய வீட்டுக்குள்ளே பிரவேசிக்கிறது அந்த ஆற்றல் நம்முடன் இருப்பதை நம்மால் உணர முடியும் அப்போது நம் கூட இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் குலதெய்வம் என்பது அப்படி கிடையாது குலதெய்வம் எப்பவுமே நம்முடன் கூட இருக்கிறவர்கள். நீங்கள் நல்லவர்களா கெட்டவர்ளா என்றெல்லாம் குலதெய்வங்களுக்கு தெரியாது எல்லோரிடமும் குலதெய்வங்கள் பேசுவார்கள் எல்லோர் வீட்டிலும் குலதெய்வங்கள் இருப்பார்கள் எப்படி உணர்ந்து கொள்வது என்றால் எப்பவுமே இருப்பார்கள் ஆனால் உங்க கூட நல்ல விதமாக பேசுகிறார்களா? உங்கள் வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா உங்க குலதெய்வம் அப்படிங்கிறது தான் நம் உணர்ந்து கொள்ள முடியும் ஏனென்றால் அவர்கள் நம்முடைய குழந்தைகள் ஒருவன் நல்லவன் ஒருவன் கெட்டவன் என்று பிரித்து பார்க்க தெரியாது.
குலதெய்வத்தை பொறுத்த அளவில் அனைவரும் தன் குழந்தைகள் என்பது போல தான் பார்ப்பார்கள். ஆனால் என்ன இருந்தாலும் ஒரு குழந்தை நல்லது செய்யும்போது பெற்ற தாய்க்கு ஏற்படுகின்ற பூரிப்பிற்கும் அதே குழந்தை தவறு செய்த பிறகு ஏற்படுகின்ற மன வருத்தத்திற்கும் வேறுபாடு உண்டு. அதேபோலத்தான் குலதெய்வமானது வீட்டில் ஆனந்தமாய் இருக்கின்றீர்களா அல்லது மன கஷ்டத்தில் இருக்கின்றீர்களான்னு தெரிந்து கொள்வது சுலபமான ஒரு விஷயம். நாம் தொடர்ந்து வழிபாடு செய்கின்றோம்.
முகப்புஆன்மிகம் 21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் கோவில் ! வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் !
அந்த குல தெய்வத்தினுடைய பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வானது தினமும் நடைபெறுகிறது மனதில் எண்ணிக்கொள்கிறீர்கள் அப்படி என்கிற போது குலதெய்வத்தின் அந்த மகிழ்ச்சியினால் விளைகின்ற விளைவுகள் அதை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். வீடு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் சின்ன சின்ன சண்டை எல்லாம் வருவது தான் அந்த குடும்பமானது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அந்த வீட்டில் எப்பவுமே சிரிப்பும் சத்தமும் மழலைகளோட சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்
இன்னும் சொல்லப்போனால் ஒரு கலகலப்பு சத்தம் அந்த வீட்டில் எப்பவுமே இருக்கும் பார்பதற்கு இன்னும் லட்சுமி கடாட்சமாக இருக்கும். லட்சுமி கடாட்சம் என்றால் என்ன இந்த இடத்தில் அந்த வீட்டில் இருக்கின்ற பெண்கள் தெய்வத்திற்கு இணையாக இருப்பார்கள் அன்னலட்சுமியாக சரஸ்வதியாக காணிதேவியாக சாட்சாத் அந்த அம்மனின் உருவமாகவே அந்த வீட்டில் இருக்கின்ற பெண்கள் பார்க்கப்படுவார்கள். அந்த வீட்டில் குலதெய்வம் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும்.
ஏன் இப்படி சொல்கிறோம் என்றால் வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். உடம்புக்கு முடியாமல் அந்த வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் இல்லை என்று சொல்லாமல் அவர்களிடம் இருக்கின்ற பொருளை கொடுத்து உதவி செய்வார்கள். பிறர் பெற்ற கஷ்டத்தை பார்த்து அந்த பெண்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த இரக்க குணமானது தானாகவே அந்த பெண்களுக்கு வந்துவிடுகிறது.
ஒருவேளைக்குத்தான் வேலைக்கு போகிறேன் என்றாலும் அதில் ஒரு ஆத்ம திருப்தி அவர்களுக்கு இருக்கும் அந்த வேலை செய்றதில் ஒரு திருப்தி இருக்கும். அவர்களிடம் அந்த அளவிற்கான சூழ்நிலைகளை குலதெய்வங்கள் ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
அதுதான் இந்த இடத்தில் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் எப்பவுமே அருகில் இருந்து காப்பாற்றிக் கொண்டே இருப்பார்கள் ஒரு பாதுகாப்பு வளையம் போன்று குலதெய்வங்களிடம் இருந்து நம்மால் உணர முடியும் எளிதில்..
ரொம்ப இரக்க சுபாவம் அதேபோல ஒரு இயல்பான சில விஷயங்களை வீட்டில் நம்மால் உணர முடியும். நான் கேள்விப்பட்ட வரைக்கும் அல்லது ஏன் சில பேர் உயிரோடு இருக்கும்போதே நம்பகமானவர்கள் கூறியிருப்பது அவர்களுடைய கண்ணீருக்கு அந்த ஒளியானது தெரியும் என்று சொல்லுவார்கள். ஆலயத்திற்கு போகும்போது அல்லது வீட்டில் சாமி கும்பிடும் போது கூட அந்த குலதெய்வத்தை ஏதோ ஒரு உருவத்தில் அவர்களால் பார்க்க முடிந்திருக்கிறது.
ஒரு குழந்தை வடிவத்தில் பார்த்துவிட்டு உள்ளே போய் பார்த்தால் ஒன்றும் இருக்காது. ஒரு நாகசர்ப்பம் மாதிரி பார்த்தேன் ஆனால் காணோம். எங்களுடைய பூஜை அறையில் இந்த மாதிரி ஏதோ ஒரு விதத்தில் தன்னுடைய அறிகுறியை காட்டிக்கொண்டே இருப்பார்கள். குலதெய்வங்கள் தன்னுடைய இருப்பை அந்த இடத்தில உறுதி செய்து கொண்டே இருப்பார்கள் நாம் இந்த பூஜை புனஸ்காரங்கள் செய்யும் போது வருகின்ற வாசம் என்பது வேறு இயல்பாகவே பூஜையறையில் குலதெய்வம் வழிபாடு நடக்கும்போது அப்படி எங்கும் போது ஒரு ரம்யமான மனம் வரும் அந்த மணமானது ஒரு விசித்திரமாக இருக்கும். என்ன திடீர்னு சந்தன வாசம் அடிக்கிறது திடீர்னு ஒரு விபூதி வாசம் அடிக்குது என்று ஒரு மாதிரியான அந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு வந்த அறிகுறிகளாக தோன்றும்.
சில பேருக்கு கனவில் வந்து தத்துரூபமாக குலதெய்வங்கள் பேசுவார்கள் இதுதான் அப்படி என்கிற மாதிரி உனக்கு இதுதான் நடக்க போகுது இதுதான் நடக்கும் அப்படிங்கற மாதிரி அவர்களுடன் இயல்பாக உரையாடுவார்கள் ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி பெண் தெய்வமாக இருந்தாலும் சரி நீங்கள் அம்மா என்று கூப்பிட்டால் அந்த வார்த்தைக்கு இறங்கி வருவார்கள். கஷ்டத்தில் இருக்கும்போது அப்பா என்று கூப்பிட்டீர்கள் என்றால் இறங்கி வந்து விடுவார்கள். வந்து முதல் ஆளாக காப்பாத்ற்றுவது அவர்களாக தான் இருப்பார்கள்.
அந்த குலதெய்வமாகத்தான் இருப்பாங்க குலதெய்வங்களுக்கு ஆற்றல் அதிகம் நம் சனாதன தர்மத்தோடு வேறு என்று சொன்னோம் என்றால் அந்த குலதெய்வம் வழிபாடு என்பது அந்த குலதெய்வத்தின் வழிபாட்டின் மூலமாக நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். அவர்கள் அதற்கும் வழி காட்டுவார்கள் அந்த இஷ்ட தெய்வ வழிபாடு சொல்வதில்லை நம்முடைய தர்மத்தில் சொல்லக்கூடிய பெரும் தெய்வங்களை வழிபாடு செய்ய போகிறோம்.
இந்த இடத்தில் பெரும் தெய்வம் சிறு தெய்வம் என்று சொல்வதே தவறு. முதலில் ஏன் என்றால் எல்லாமே இறைவன்தான் குலதெய்வமே அந்த இறைவனின் மறு உருவம் தான் இருந்தாலும் அதற்கு மேல் இருக்கக்கூடிய ரகசியங்களை உணர்ந்து கொள்வதற்கு குலதெய்வங்கள் வழிகாட்டுவார்கள் இதெல்லாம் இயல்பாகவே நடக்கும் சில சித்தர்களுக்கே குலதெய்வங்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.
எதற்கு நாம் சொல்லக்கூடிய மூலிகை ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக அல்லது நாம் சொல்லக்கூடிய ரசாயன சேர்க்கைகளை அறிந்து கொள்வதற்காக. சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தால்ரொம்ப தெளிவாக தெரியும் கருவூரார் பற்றி படியுங்கள் கண்டிப்பாக நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இந்த மாதிரி குலதெய்வங்களுடைய அந்த அருள் பெற்றவர்களுக்கு எப்பவுமே பெயர் புகழோடு சமுதாயத்தில் ஒரு கண்ணியமான இடத்தில் இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இதையும் படிக்கலாமே :வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?
கீழே எல்லாம் சில விஷயங்கள் அறிகுறிகள் அவர்கள் தொட்டது எல்லாம் பொன்னாகும் தொட்டது எல்லாம் வெற்றியாகும் இந்த மாதிரி ஒரு சந்தோஷமான சூழ்நிலைகளுக்குள்ளே இருந்து கொண்டிருக்கும் போது கண்டிப்பாக அவர்களுக்கு குலதெய்வம் பக்க பலமாக நின்று பேசுகிறது என்று அர்த்தம்.
இதிலேயே மிக முக்கியமான விஷயம் காலகட்டங்களுக்காக சில மேடு பள்ளங்கள் இருக்கும் அதெல்லாம் இந்த இடத்தில் சேர்க்க முடியாது திடீர்னு போகும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது என்றால் அந்த இடத்தில் இருந்து காப்பாற்றுவது அந்த குலதெய்வமாக தான் இருக்கும். பெரிய விபத்தாக நடக்க இருந்ததை தடுத்து நிறுத்தியவர்கள் குல தெய்வமாகத்தான் இருப்பார்கள்.
அந்த மாதிரி சின்ன சின்ன நிகழ்வுகளை கூட தன்னுடைய மேற்பார்வையில் கூட என் குழந்தைக்கு இதுக்கு மேல எதுவும் நடக்கக்கூடாது இதோட நான் காத்துக் கொள்ளணும் அந்த மாதிரி அந்த நவகிரக பாதிப்புகளில் இருந்து கூட நம்முடைய குலதெய்வங்கள் தான் காத்து வராங்க அது ரொம்பவே ஒரு அற்புதமான உணர்வாய் இருக்கும் நீங்கள் மற்ற இடங்களுக்கு போறதுக்கும் குலதெய்வ ஆலயத்துக்கு போறதுக்கும் மன வித்தியாசம் ரொம்பவே அதிகமாக இருக்கும்.
இப்ப குலதெய்வ ஆலயத்திற்கு போனீர்கள் என்றால் சொந்த வீட்டுக்குள்ள போன மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தும். மற்ற இடத்தில இருக்கிறதை விட அந்த ஆலயத்திற்கு போகும்போது இது என் வீடு அப்படிங்கிற மாதிரி ஒரு உணர்வு அந்த இடத்தில் உருவாகும் அதுதான் அந்த குலதெய்வத்தோட மகிமை என்று சொல்லக்கூடியது. குலதெய்வத்தை நினைத்து தியானிக்கலாம் எனக்கு இந்த பிறவி சூழலில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்பை காட்டுங்கள் என்று சொன்னால் அதற்கான வாய்ப்பையும் குலதெய்வங்கள் காட்டுவார்கள் அதனால் தான் இந்த குலதெய்வ வழிபாடு என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிது.
நம்முடைய வேர் மாதிரி அதை சரி செய்தோம் என்றால் நம்முடைய வீட்டில் இறைவன் இருப்பதை உணர முடியும் இறைவனின் கருணையால் எல்லாமே நல்லதாகவே நடைபெறும். குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிது அதற்கான பரிகாரம் என்ன என்பதை தெரிந்து கொண்டோம்.