வாழைத்தண்டு மருத்துவ பயன்கள்

 வாழைத்தண்டு மருத்துவ பயன்கள்.



வாழைத்தண்டு


குலைதள்ளிய வாழையில் அதன் முதிர்ந்த இலை பட்டைகளை  நீக்கிய பின்பு அதன் மையப்பகுதியில் இருந்து கிடைக்கக்கூடிய இளம் குருத்து தான்  வாழைத்தண்டு. வாழையிலிருந்து கிடைக்கக்கூடிய வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம் என வாழையின் அனைத்து பாகங்களுமே நம் உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியதுதான். அந்த வகையில் மிக முக்கியமானது வாழைத்தண்டு. வாழைத்தண்டில் பொட்டாசியம் பி விட்டமின், விட்டமின் சி, மெக்னீசியம், காப்பர் என ஏராளமான தாது சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது. வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை விடவும் அதிக சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்தது வாழைத்தண்டு.


இதையும் படிக்கலாமே ; இன்சுலினை தூண்டும் 10 உணவுகள்

வாழைத்தண்டினை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளும்போது நமக்கு கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று : சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்


 வாழைத்தண்டு என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இது சிறுநீரக கற்களை கரைக்க வல்லது என்பது. வாழைத்தண்டுக்கு இயல்பாகவே சிறுநீரை அதிக அளவில் பெருக்கும் தன்மை உண்டு. இதன் காரணமாக சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான கற்களை கரைத்து  வெளியேற்றி விடும். சிறுநீரக கற்கள் இருக்கிறவர்கள் வாழைத்தண்டு சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகிவர கால்சியம் சீட் ரேட் மற்றும் கால்சியம் கிரிஸ்டல்ஸ் போன்ற கற்கள் வராமல் தடுத்துவிடும்

வாழைத்தண்டு. மேலும் இது சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றுவதோடு கிருமிகளை அழிக்கும். இதன் மூலமாக யூடி என்று சொல்லக்கூடிய யூரின் டிராக் இன்பெக்சன் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது வாழைத்தண்டு.

 இரண்டு : ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும் 


வாழைத்தண்டில் இருக்கக்கூடிய துவர்ப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டு ஒரு லோ கிளைஸ்மி இன்டெக்ஸ் கொண்ட உணவு. மேலும் இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் இருக்கு இது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் இதன் மூலமாக இரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியது வாழைத்தண்டு. சர்க்கரை நோயாளிகள் வாழைத்தண்டை வடிகட்டி ஜூஸாக அருந்துவதை விட பொறியலாக வாரம் இரண்டு மூன்று நாட்கள் சேர்த்து வர ரத்த சர்க்கரை அளவுகள் நன்கு கட்டுப்படும்.

மூன்று : உடல் எடையை குறைக்கும் 


உடல் எடையை குறைக்க டயட் ஃபாலோ பண்றவர்கள் கலோரிகள் குறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் மிகவும் ஏற்ற ஒரு உணவு வாழைத்தண்டு. 100 கிராம் வாழைத்தண்டில் 42 கலோரிகள் தான் இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக வாழைத்தண்டு சாப்பிட்டு வரலாம். மேலும் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதன் மூலமாக வேகமாக உடல் எடையை குறைக்க உதவக்கூடியது. வாழைத்தண்டு 

நான்கு : ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் 



இதையும் படிக்கலாமே ;நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்

அதிக ரத்த அழுத்ததினால் அவதிப்படுபவர்களுக்கு  மிகவும் நல்லது வாழைத்தண்டு. வாழைத்தண்டில் இதய ரத்த நாளங்கள் சீராக இயங்க தேவையான பொட்டாசியம் சத்து அதிக அளவில் இருக்கிறது. இது நரம்புகள் சீராக சுருங்கி விரியவும் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்யும். உயர் ரத்த அழுத்தத்தையும் நன்கு கட்டுப்படுத்தக் கூடியது வாழைத்தண்டு.

ஐந்து : மலச்சிக்கலை குணமாக்கும்


மலச்சிக்கல் என்று சொல்லக்கூடிய கான்ஸ்டிடியூஷன் இன்றைக்கு பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இந்த மலச்சிக்கலை எளிதில் குணமாக்கும் ஆற்றல் இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. 100 கிராம் வாழைத்தண்டில்  3.1 கிராம் டைட்ரிபைபர் இருக்கிறது.

 இது குடல் இயக்கத்தை அதிகப்படுத்துவது மலக்கழிவுகளை எளிதில் வெளியேற்றும் மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள்  வாழைத்தண்டை அடிக்கடி உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படும்.

ஆறு : அனீமியா வராமல் தடுக்கும்  


ரத்தசோகை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் என்ன என்றால் ரத்தத்தில் இரும்பு சத்து குறைவாக இருப்பதுதான். இந்த இரும்புச்சத்து வாழைத்தண்டில் அதிக அளவில் இருக்கிறது. அனீமியா பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை எளிதாக அதிகரிக்கும். இதன் மூலமாக ரத்தசோகை வராமல் பாதுகாக்க கூடியது வாழைத்தண்டு.

ஏழு : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க ஆன்டி-ஆக்சிடென்ட் அதிக நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமான ஒன்று. அந்த வகையில் வாழைத்தண்டில்  அதிகப்படியான பாலிபினால் விட்டமின் சி என ஏராளமான ஆன்டிஆக்சின் நிறைந்திருக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது மட்டும் இல்லாமல் இன்பிளமேசனை குறைக்கும். மூட்டு வலி முதுகு வலி மற்றும் ஆர்த்ரைடீஸ் போன்ற பிரச்சனை இருக்கிறவர்களுக்கு நல்ல ஒரு நிவாரணம் தரக்கூடியது  வாழைத்தண்டு.

எட்டு : கெட்ட கொழுப்பை குறைக்கும் 


ரத்தத்தில் இருக்கக்கூடிய எல் டி எல் மற்றும் டிரைகிளிசரில் போன்ற கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. வாழைத்தண்டில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள்  உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருக்க உதவி செய்கிறது மட்டும் இல்லாமல் இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது. இதன் மூலமாக மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் கொண்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்க கூடியது வாழைத்தண்டு.

ஒன்பது : அசிடிட்டியை குணமாக்கும் 


அசிடிட்டி என்று சொல்லக்கூடிய நெஞ்செரிச்சலை குணமாக்கும் ஆற்றல் வாழைத்தண்டுக்கு இருக்கிறது. வாழைத்தண்டு முற்றிலும் ஒரு அல்கலின் சார்ந்த உணவு என்பதினால் இது வயிற்றில் இருக்கக்கூடிய அதிக அமிலத்தன்மையை குறைத்து உடலின் பீஹச் அளவை சமநிலைப்படுத்தும் இதன் மூலமாக நெஞ்செரிச்சல் புளித்த ஏப்பம் அல்சர் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது வாழைத்தண்டு. செரிமானம் தொடர்பான பிரச்சனை இருக்கிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறுடன் மோர் கலந்து குடித்து வர செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீங்கும்.

பத்து : உடல் கழிவுகளை வெளியேற்றும் 


வாழைத்தண்டுக்கு டயரோட்டிக் ப்ராபர்ட்டிஸ் என்னும் சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் உண்டு இதன் மூலமாக ரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத டாக்ஸினை சிறுநீர் வழியாக வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக்கும் இதில இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து குடலின் உட்பகுதியில் ஆங்காங்கே தேங்கி இருக்கக்கூடிய கழிவுகளை  வெளியேற்றி குடலையும் செரிமான உறுப்பையும் சுத்தப்படுத்தும். இதன் மூலமாக உடல் கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியும் கொடுக்கக்கூடியது  வாழைத்தண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *