குறட்டைக்கு நிரந்தர தீர்வு இதுதான்

 

குறட்டைக்கு நிரந்தர தீர்வு இதுதான்!ஏலக்காய் பற்றிய தெரியாத ஆரோக்கிய உண்மைகள்.




வணக்கம் நண்பர்களே ஏலக்காயோட நறுமணம் உங்களுக்கு பிடிக்குமா?  ஏன் என்றால் இன்றைக்கு நாம்  ஏலக்காய் பற்றி பலரும் அறிந்திடாத பல அற்புத தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 


ஏலக்காயில் இவ்வளவு பிரமிக்கத்தக்க நன்மைகள் எல்லாம் இருக்கிறதா? என்று நீங்கள் ஒரு நிமிடம் வாயடைத்து போகும் அளவிற்கு பல அற்புத தகவல்களை தெரிந்து கொள்வோம்.

நம்முடைய இந்திய நாட்டில் பல வகையான மூலிகைகள் ரொம்ப அற்புதமாக வளர்ந்து இருக்கிறது.அது அனைத்தும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. அந்த வகையில் நம்முடைய மேற்கு தொடர்ச்சி மலையை பூர்வீகமாக கொண்டு வளரக்கூடிய ஒரு மூலிகை மற்றும் நறுமண பொருளாக இருக்கக்கூடியது ஏலக்காய்.


இந்த ஏலக்காயோட நறுமணம் நிச்சயமாக பலருக்கும் ரொம்பவே இஷ்டமான ஒரு வாசனையாக இருக்கும். ஏலக்காய் வாசனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான நறுமணத்தை தரக்கூடியது ஏலக்காய். ஏலக்காய் நறுமணத்துக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் கிடையாது. இது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இதிலே நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாமே நிறைந்து இருக்கிறது.

ஏலக்காயில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் 

ஏலக்காயில் ரிபோவ்வின் நியாசின் விட்டமின் சி இரும்புச்சத்து கால்சியம் ஜி மாங்கனிஷ் பொட்டாசியம் அதுக்கப்புறம் இதிலே டயட்ரி பைபர் சத்து இருக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பிராப்பர்டீஸ் நிறைந்து இருக்கிறது. இதிலே இருக்கக்கூடிய எண்ணெய் சத்து நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக இன்றியமையாதது.

ஏலக்காயில் இரண்டு வகைகள் இருக்கிறது.




ஒன்று பச்சை நிறத்தில் இருக்கக்கூடியது, இன்னொன்று கருப்பு நிறத்தில் இருக்கக்கூடியது நாம் பெரும்பாலும் பச்சை நிற ஏலக்காயை தான் பயன்படுத்தி வருகிறோம்.  இப்பொழுது அதனுடைய பயன்கள் என்ன மருத்துவ குணங்கள் என்ன என்பதை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.


ஓன்று : உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்ஆற்றல்  ஏலக்காயில் நிறைந்து இருக்கிறது. ஏன் என்றால்  ஏலக்காயில் ஸ்ட்ராங் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் டயட்ரி பைபர் சத்து நிறைந்திருக்கிறது. அதனால் ஏலக்காய உங்களுக்கு இருக்கக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். யாருக்கெல்லாம் உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறதோ அவர்களுக்கு ஆட்டோமெட்டிக்காவே இதய சம்பந்தமான கோளாறுகளும் வர ஆரம்பித்துவிடும்.


உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதையும் சேர்த்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாராளமாக நீங்கள் ஏலக்காயை சாப்பிடலாம். ஏலக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்றால் ஒரு டம்ளர் அளவுக்கான தண்ணியில் ஒரே ஒரு ஏலக்காயை நல்லா இடிச்சு அந்த தண்ணியில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடலாம். இல்லையென்றால்  தினமும் ஒரு ஏலக்காயை வாயில போட்டு மென்று சாப்பிடலாம். எந்த வகையில் எடுத்துக்கிட்டாலும் அதோட பயன்கள் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். ஏலக்காயை டீயாக செய்து நீங்கள் தாராளமாக எடுத்துக்கலாம்.


இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து


இரண்டு :  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த நிவாரணமாக இருக்கக்கூடியது ஏலக்காய்.



ஏலக்காயில் மாங்கனீஸ் இருக்கிறது காயத்ரி பைபர் சொத்தை இருக்கிறது இது  உங்களுடைய ரத்தத்தில் கலந்து இருக்கக்கூடிய குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்று நினைக்கிறார்கள் உடனே ஏலக்காயை தினமும் சாப்பிட ஆரம்பித்திடுங்கள். டெய்லியும் ஒரு ஏலக்காயை நீங்கள் டீயாகவோ இல்லை என்றால் ஏலக்காய் தண்ணியாவோ அல்லது வெறுமனே ஏலக்காயை எடுத்துக்கிட்டாலே போதும். உங்களுக்கு ஆயிசுக்கும் சர்க்கரை வியாதி வரவே வராது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நீங்கள் ஏலக்காய் சாப்பிட்டாலே போதுமானது.


மூன்று : விக்கல்


நிறைய பேருக்கு அடிக்கடி விக்கல் வந்துகொண்டே இருக்கும் தொடர்ச்சியாக விக்கல் வந்துகொண்டே இருக்கும் நிறுத்தவே முடியாது அது மாதிரி விக்கல் வரக்கூடியவர்கள் உடனே ஒரு ஏலக்காயை எடுத்து நல்லா தட்டி தண்ணீரில் போட்டு வேகவைத்து வடிகட்டி அந்த தண்ணீரை மட்டும் குடியுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய விக்கல் உடனே கட்டுப்படும் ஏன் என்றால் உங்களுக்கு விக்கல் வர காரணமாக இருக்கக்கூடிய வாழ்வை ரிலாக்ஸ் பண்ணக்கூடிய தன்மை இந்த ஏலக்காயில் நிறைந்திருக்கிறது. தொடர்ச்சியாக விக்கல் வரக்கூடியவர்கள் ஏலக்காய் சாப்பிடுங்கள் விக்கல் உடனே நின்று விடும்

நான்கு : மன அழுத்தம்



அதே போல் நம்முடைய மனது  நிம்மதியாக இருந்தால் மட்டுமே நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நம்முடைய மனதில் வரக்கூடிய கவலை பயம் மன அழுத்தம் துக்கம் இது எல்லாம் நம்முடைய மனதை மட்டும் பாதிக்க போவது கிடையாது. நம்மளுடைய உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்து கெட்டுப் போக வைக்கும். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது மனசார்ந்த பிரச்சனைகள் இருக்கிறது என்றால்  அந்த டைம்ல நீங்கள் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்னு சாப்பிடுங்கள் அல்லது ஏல காயை காட்டிய குடித்து பாருங்கள். அது உங்களுடைய மூளை செல்களை ரிலாக்ஸ் ஆக்கும். மூளையை ரொம்ப அமைதியாக செயல்படுத்த உதவியாக இருக்கும். அதனால் உங்களுக்கு 


இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.

 இருக்கக்கூடிய மன அழுத்தம் மற்றும் மனம் சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி நல்ல ஒரு ரிலாக்சேஷன நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். அதனால் உங்களுடைய மனது மட்டும் இல்லாமல் உங்களுடைய உடல் ஆரோக்கியமும் ரொம்பவே மேம்படும். மனதையும் உடல் இறுக்கத்தையும் தளர்த்தக்கூடிய தன்மை இந்த ஏலக்காயில் நிறைந்து இருக்கிறது.

ஐந்து : சுவாச நோய்களை கட்டுப்படுத்தும்



சுவாச நோய்களை கட்டுப்படுத்தவும் நீங்கள் ஏலக்காயை பயன்படுத்தலாம். அதாவது இந்த ஏலக்காயில் நியூக்ளிக் ப்ராபர்ட்டிஸ் நிறையவே இருக்கிறது. அது  உங்களுடைய நுரையீரலில் சளி உருவாகுவதை தடுக்கும். நம்முடைய நுரையீரலில் சளி உருவாகி அப்படியே செட்டில் ஆகி கட்டியாக படியும் பொழுது நமக்கு பலவிதமான சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் வரும். ஆகையால் அந்த சளி உருவாகுவதை தடுக்கக்கூடிய தன்மை கொண்ட ஒரு அற்புதமான மூலிகை பொருள் ஏலக்காய்.


ஏலக்காய் டீயை நீங்கள் ரெகுலராக சாப்பிட்டு வரும் பொழுது அது உங்களுடைய நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற எந்த விதமான சுவாச சம்பந்தமான பிரச்சனைகளையும் உங்களுக்கு வர விடாது. குறிப்பாக உங்களுடைய நுரையீரலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரித்து கொடுக்கும். அதேபோல நுரையீரலில் தேங்கி இருக்கக்கூடிய கழிவுகளையும் வெளியேற்றி நுரையீரலை சுத்தமாக்கும். நம்முடைய சுவாச உறுப்பை சுத்தப்படுத்த நீங்கள் தாராளமாக ஏலக்காயை பயன்படுத்தலாம். 


ஆறு : புற்று நோய்


இன்றைக்கு பலவிதமான புற்று நோய்கள் ஒவ்வொரு நாளும் பெருகி கொண்டே இருக்கிறது. இது  நம் எல்லாருக்குமே பயத்தை உண்டு பண்ண கூடிய ஒரு நோய் என்று சொல்லலாம். இந்த ஏலக்காயில்  ஆன்டி கேன்சர் பிராப்பர்டீஸ் நிறைந்து இருக்கிறது.  இது உங்களுக்கு வரக்கூடிய அனைத்து விதமான புற்று நோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மையுடையது.


நீங்கள் புற்று நோய்க்கு முன்னமே ஏதாவது மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் அது கூடவே சேர்த்து தினமும் ஏலக்காயையும் நீங்கள் ஃபாலோ பண்ணிட்டு வரும்பொழுது நிச்சயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய புற்று நோயோட தீவிர தன்மை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.புற்றுநோய் செல்களுடைய வளர்ச்சியை சுத்தமாக அழிக்கக்கூடிய தன்மையுடையது  ஏலக்காய்.


இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்


ஏழு : ஆண்மை குறைபாடு



நிறைய ஆண்கள் உடல் சூடு மற்றும் சில பல காரணங்களால் ஆண்மை குறைபாடால் துவண்டு போயிருக்கிறார்கள். அவர்களுக்கு எழுச்சி தரக்கூடிய ஒரு அற்புதமான இயற்கை பொருளாக இருக்கக்கூடியது ஏலக்காய். நீங்கள் தினமும் இரவு தூங்க போவதற்கு முன்னால் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு நன்றாக மென்னு முழுங்கிட்டாலே போதும். இல்லை என்றால் அந்த ஏலக்காய்க்கு மேல் இருக்கக்கூடிய தோலை நீக்கி விட்டு அதன் உள்ளே இருக்கக்கூடிய  எள்ளரிசியை மட்டும் எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்னு முழுங்கிடுங்கள்.


இதை தினமும் நீங்கள் செய்து வரும்பொழுது உங்களுக்கு இருக்கக்கூடிய ஆண்மை சம்பந்தமான அனைத்து விதமான பிரச்சனைக்கும் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.அதாவது விரைப்புத்தன்மை குறைபாடு தாம்பத்தியத்தில் ஆர்வம் இன்மை மற்றும் உங்களுக்கு இருக்கக்கூடிய விந்து அணுக்களோட குறைபாடு இது மாதிரி இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் போக்கி தாது விருத்தியையும் ஆண்மையையும் பெருக்கெடுக்க வைக்கக்கூடிய தன்மை கொண்டது. 


எட்டு : வயிறு சார்ந்த பிரச்சினைகள்

வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் தாராளமாக ஏலக்காயை எடுத்துக்கலாம். வயிற்று வலி  மாதிரியான பிரச்சனை இருக்கிறது வாயு தொந்தரவால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்றால் ஒரு டம்ளர் அளவுக்கு இந்த ஏலக்காய் டீ மட்டும் டெய்லியும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து  வயிறு சம்பந்தமான கோளாறுகளும் 100% குணமாக்கும். உங்களுடைய செரிமான உறுப்பு சிறப்பாக செயல்பட வைக்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள் ஏலக்காய்.ஏலக்காய் சாப்பிடுங்கள் வயிறு கோளாறுகள் என்றைக்குமே வராது


ஒன்பது :கல்லீரல்



அதே போல் அதிக அளவில் மாமிச உணவுகளை சாப்பிடுவது அதுக்கப்புறம் அதிக அளவில் ஆல்கஹால் குடிக்கிறது போன்ற காரணங்களினால் நம்மளுடைய கல்லீரல் அசுத்தம் அடைந்து இருக்கும். கல்லீரல் அசுத்தம் ஆனால் நிச்சயமாக நமக்கு பலவிதமான நோய்கள் வர ஆரம்பிக்கும்.  ஆதலால் கல்லீரலை சுத்தப்படுத்தக் கூடிய தன்மையுடையது ஏலக்காய்,


ஏலக்காயை நீங்கள் டீயாகவோ அல்லது ஏலக்காய் தண்ணீராகவோ இல்லை ஏலக்காயாகவோ சாப்பிடும் பொழுது அது உங்களுடைய கல்லீரலில் படிந்து இருக்கக்கூடிய அனைத்து விதமான நச்சு கழிவுகளையும் வெளியேற்றி கல்லீரலை சுத்தமாக்கி சிறப்பாக செயல்பட வைக்கும். கல்லீரல் ஆரோக்கியம் நமக்கு மிக மிக முக்கியமானது அதை சிறப்பாக செயல்பட வைக்கக்கூடிய தன்மை  ஏலக்காயில் நிறைந்து இருக்கிறது.


பத்து : கொழுப்பு



அது போல் நீங்கள் அளவுக்கு அதிகமாக கொழுப்பு இருக்கக்கூடிய உணவுகளை சாப்பிடும் பொழுது அந்த கொழுப்பு எல்லாமே உங்களுடைய ரத்தக்குழாய்களில் படிய ஆரம்பிக்கும். ரத்தக்குழாய்களில் படிய ஆரம்பிக்கும் பொழுது என்ன ஆகும் என்றால் ரத்த ஓட்டம் தடைபடும் ரத்தம் அங்கங்கு கட்டிக்கும். ரத்தக்கட்டை நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டது ஏலக்காய்.


இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது


ஏலக்காயை நீங்கள் சாப்பிடும்பொழுது உங்கள் உடல் முழுக்கவே ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கக்கூடிய தன்மையுடையது.  உங்கள் ரத்தக் குழாய்களில் படிந்து இருக்கக்கூடிய கொழுப்பை கரைத்து உங்களுடைய உடல் பாகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு அற்புதமான இயற்கை பொருள் ஏலக்காய். ஏலக்காய் சாப்பிடுங்கள் உங்களுக்கு ரத்த கட்டு பிரச்சனையே இருக்காது. ரத்தக்கட்டை நாம் உடனே கிளியர் பண்ணிடவேண்டும். இல்லை என்றால் அது நமக்கு நிச்சயமாக ஏதாவது ஒருவித ஆபத்தை கொண்டு வரும்.பேட் கொலஸ்ட்ராலை கரைக்க கூடிய ஒரு சூப்பரான பொருள் ஏலக்காய். ஏலக்காய் பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடியது.


பதினொன்று :ஈறுகளில் வீக்கம்



நீங்கள் அதிக அளவில் இனிப்பு சேர்ந்த பொருட்களை சாப்பிடுவது பிறகு  பல்லை சுத்தமாக வைத்திருக்காமல் இருக்கிறது இது மாதிரியான காரணங்களால் உங்களுடைய வாய் முழுக்கவே கிருமிகள் அதிகளவில் தங்க ஆரம்பிக்கும். அதனால் உங்களுக்கு பல்வலி, பல் சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரும்.


பல் சார்ந்த பிரச்சினை இருக்கக்கூடியவர்கள் டெய்லியும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்னு சாப்பிடுங்கள். இல்லையென்றால் ஏலக்காய் தண்ணீரை குடித்து பாருங்கள். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் நீங்கள் ஃபாலோ பண்ணாலே போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய வாய் துர்நாற்றம் நீங்கி வாய்க்கு நல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். பல் சொத்தை, பல் வலி, ஈறுகளில் பிரச்சனை போன்ற அனைத்து விதத்துக்கும் காரணமாக இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழித்து உடனடியாக வெளியேற்றும். ஆகையால் ஏலக்காய் இதுவரைக்கும் நறுமண பொருளாகவே நீங்கள் நினைத்துகொண்டு இருப்பீர்கள் ஆனால் ஏலக்காயில் எவ்வளவு அற்புத நன்மைகள் எல்லாம் இருக்கிறது.


இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்

தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறவர்கள் அதிக குறட்டை விடுகிறவர்கள் நைட்டு தூங்க போவதற்கு முன்னால் ஒரு டம்ளர் அளவுக்கான தண்ணீரில் ஒரு ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணியை மட்டும் சாப்பிட்டு படுங்கள். உங்களுக்கு நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும். அதேபோல் குறட்டை பிரச்சனையும் இருக்கவே இருக்காது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *