கடன்பிரச்சினை – பணப்பிரச்சனை நீங்க ஆண்கள் இதை செய்யுங்கள்

 

கடன்பிரச்சினை – பணப்பிரச்சனை நீங்க – ஆண்கள் குளித்து முடித்த பிறகு இந்த சின்ன விஷயம் செய்தால் போதும். 

ஆண்கள் குளித்து முடித்த பிறகு இந்த ஒரு சின்ன விஷயத்தை மட்டும் செய்தால் போதும் உங்களுக்கு கடனால் கஷ்டம் வராது. பணக்கஷ்டம் வராது. கடன் ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? பெண்களுக்கு இருக்காதா? என்று கேட்காதீர்கள்.


இந்த பரிகாரம் ஆண்களுடைய கடன் சுமையை குறைப்பதற்காக பிரத்தியேகமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம். ஆண்கள் குளித்து முடித்த பிறகு செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் வருமானம் இல்லாமல் பணக்கஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் ஆண்கள், குடும்பத்தை நடத்த வழி இல்லாமல் வருமானம் இல்லாமல் நல்ல வேலை கிடைக்காமல் சிக்கித் தவிக்கும் ஆண்கள் அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யும் போது அவர்களுக்கு நல்ல மாற்றம் வாழ்வில் வரும். உங்கள் குலதெய்வமே வந்து உங்களுக்கு இந்த வழியை காட்டியதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. அனுபவபூர்வமாக சில பேர் செய்து வளம் பெற்ற ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நம்பிக்கை உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படிக்கலாம். பொதுவாகவே தண்ணீருக்கு ஒரு நல்ல சக்தி உண்டு.  தண்ணீரில் கங்காதேவி குடி இருக்கின்றாள். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தீட்டாக இருந்தாலும், தண்ணீரை தெளித்தால் அந்த தோஷம் விலகிவிடும் என்று சொல்வார்கள். நிறைய மகான்கள் குருஸ்தானத்தில் உள்ளவர்கள் எல்லாம் கூட தியானம் செய்யும்போது அருவி கொட்டும் இடத்திற்கு பக்கத்தில் அல்லது குளங்கள் நீர்நிலைகள் இருக்கக்கூடிய இடத்திற்கு பக்கத்திலேயே தான் அமர்ந்து தியானம் செய்வார்கள்.


இதையும் படிக்கலாமே : பணத்தை ஈர்க்கும் 7 அதிர்ஷ்ட செடிகள்


இது எல்லாம் பார்க்கும்போது அந்த தண்ணீருக்கு ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த தண்ணீரை வைத்து தான் இந்த பரிகாரம். தினமும் நீங்கள் குளித்து முடித்த பின்பு ஒரு துண்டு கட்டிக் கொள்ளுங்கள். உடம்பை துடைக்க கூடாது நீங்கள் குளித்து முடித்தவுடன் துண்டை கட்டினால் அந்த துண்டும் ஈரம் ஆகிவிடும் அப்படியே உடம்பில் இருக்கும் ஈரத்தோடு கிழக்கு பார்த்தவாறு நின்று உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையை, கடன் சுமையை அந்த கடவுளிடம் சொல்லி அது சரியாக வேண்டும் என்று ஒரு நிமிடம் வேண்டுதல் வைத்தால் போதும்.




இதை நீங்கள் தினமும் செய்து வர வேண்டும் ஒரே ஒரு பணப்பிரச்சினையை மட்டும் சொல்லி வேண்டுதல் வைக்க வேண்டும். அந்தப் பிரச்சனை சரியாகி விட்ட பின்பு அடுத்த கடன் பிரச்சனையை சொல்லலாம். இன்னும் சிறப்பு குளித்து முடித்தவுடன் ஈர உடம்போடு இந்த வேண்டுதலை கிழக்கு பார்த்தவாறு நின்று வைக்கும் போது உங்கள் பணப்பிரச்சனைக்கு உண்டான ஒரு எளிமையான வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும்.


எந்த தெய்வத்தை மனதில் நினைத்தும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். சூரிய பகவானை நினைத்தும் செய்யலாம் அல்லது உங்கள் குலதெய்வத்தை நினைத்தும் செய்யலாம். முருகப்பெருமான், சிவன் மற்றும் உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் அந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு தினமும் இந்த வேண்டுதலை வைத்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை பண பிரச்சனை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.



இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.



தலைக்கு தான் குளிக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம் உடம்புக்கு குளித்தாலும் பரவாயில்லை இந்த பரிகாரத்தை விடாமல் தொடர்ந்து தினமும் செய்து வாருங்கள் நான் சொன்னபடி இதை ஆண்களால் மட்டும் தான் செய்ய முடியும் ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.


ஒரு வேலை உங்களுடைய மனைவிக்கோ அல்லது உங்களுடைய அம்மாவுக்கோ இப்படி ஒரு கடன் பிரச்சனை இருந்தால் அவர்களுக்காக நீங்கள் இந்த வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைக்கலாம். அதுவும் நிச்சயம் பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *