50 கனவுகளின் பலன்கள்

(kanavugalin palangal tamil)

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்.

அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது. நாம் காணும் ஓவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. சில நேரம் நாம் நினைத்து பார்க்காத கொஞ்சம் எதிர்பார்க்காத விஷயங்கள் அனுபதே உண்மையான கனவு. அது ஒரு சிலருக்கு பலிப்பதும் உண்டு. ஆனால் எல்லா கனவுகளும் பலிப்பது கிடையாது. ஒரு சிலருக்கு மட்டுமே முன்கூட்டியே நடக்க இருக்கும் நிகழ்வுகள் அது தொடர்பான விஷயங்களை கனவில் காட்டிவிடும்.

கனவுகளின் பலன்கள் தெய்வ சக்தி சொல்லும் கனவுகள், சுமங்கலி கனவுகள், திருமண கனவுகள், இறந்து போன முன்னோர்கள் கனவில் வரும் பலன்கள்.

1.மனம் உள்ள பூக்களை திருமண ஆகாதவர்கள் கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடக்கும்.

2. பூக்களை பிறரிடம் இருந்து பெறுவது போல அல்லது சூட்டி கொள்வது போல பெண்கள் கனவு கண்டால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் சுமங்கலிகளாக இருப்பார்கள்.

3. கனகாம்பரம் போன்ற மனம் இல்லாத பூக்களை கனவில் கண்டால் உங்கள் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும். ஆனால் அது நிறைவேறுவதன் மூலம் நீங்கள் எந்த பலனும் அடைய முடியாது.


4. செடிகள் பூத்துக் குலுங்குவதைப் போல நீங்கள் கனவில் கண்டால் உங்கள் குடும்ப வாழ்க்கை எதிர்காலத்தில் மகிழ்ச்சி உள்ளதாய் இருக்கும்.

5. வெற்றிலை பாக்கு பெற்றுக் கொள்வது போல நீங்கள் கனவு கண்டால் சமூகத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப்படும் செல்வாக்கும் உயரும் உங்களுக்கு.

6. நீங்கள் பிறருக்கு தாம்பூலம் வழங்குவது போல கனவு கண்டால் உங்கள் வீட்டில் மகளுக்கோ தங்கைக்கோ திருமணம் நடைபெறும்.

7. இறந்து போன முன்னோர்களை கனவில் கண்டால் உங்களுடைய சிரமங்கள் எத்தகையதாக இருந்தாலும் தீர்ந்துவிடும் நோய் நீங்கி நலம் பெறுவீர்கள்.

————————————————————————————————————–

இதையும் படிக்கலாமே: இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்

————————————————————————————————————–

8. ஒரு அருவியில் நடந்து செல்வதை போல கனவு கண்டால் உங்களுடைய எதிர்காலம் மிகச் சிறப்பானதாக இருக்கும் எதிர்ப்புகள் எல்லாம் நீங்கிவிடும்.

9. ஒரு ஆற்றைக் கடந்துசெல்வது போல கனவு கண்டால் நீங்கள் இதுவரையில் அனுபவித்த தொல்லைகள் விரைவில் தீர்ந்து போய்விடும் முக்கியமாக கடன் தொல்லை தீர்ந்து போய்விடும்.

10. நீங்கள் பாகற்காய் சுண்டக்காய் போன்ற கசப்பான காய்களை கனவில் கண்டால் நண்பர்களின் வெறுப்புக்கு ஆளாகலாம்.

11. ஊமத்தங்காய் எட்டிக்காய் போன்ற நச்சு காய்களை கனவில் கண்டால் உங்களுக்கு பிரியமான ஒருவர் கொடிய பகைவர் ஆவார்.

50 கனவுகளின் பலன்கள்


12. காளி தேவதையை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் மாபெரும் வெற்றி ஏற்பட்டு செல்வமும் செல்வாக்கும் பெருகும் பகைவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்.

13. நீங்கள் ஒருசாரை பாம்பை கனவில் கண்டால் நினைத்த காரியம் கைகூடும்.

14.ஒருநல்ல பாம்பு உங்கள் வீட்டுக்குள்ளே வருவது போல கனவு கண்டால் உங்கள் வாழ்வு வளமாக வளர்ச்சியடையும் நீங்கள் இருக்கும் வீட்டை புதுப்பித்துக் கொள்வீர்கள் இல்லையேல் புதிதாக வீடு வாங்குவீர்கள்.

15. பாம்புஉங்களை கண்டு ஓடி ஒளிவது போல் அல்லது நீங்கள் அதை அடித்துக் கொள்வது போல கனவு கண்டால் நீங்கள் எந்த முயற்சியும் செய்யாமலே உங்களுடைய எதிரிகள் தாமாக வீழ்ச்சி அடைவார்கள்.

16. பாம்பு கடித்து விட்டது போல் கனவு கண்டால் நீங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும்.

17. விரியன் பாம்பை கனவில் கண்டால் உங்களது உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் தவறான பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும்.

18. நீங்கள் ஒரு யானையை கனவில் கண்டால் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய மனிதரின் நட்பு ஏற்படும்.

19. ஒரு குதிரையை நீங்கள் கனவில் கண்டால் ஆவலோடு எதிர்பார்க்கும் அரசாங்க உத்தியோகம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.

20. ஒரு பசுவை நீங்கள் கனவில் கண்டால் நிலையான சொத்து உங்களுக்கு கிடைக்கும்.

50 கனவுகளின் பலன்கள்


21.நீங்கள் விபத்துக்கு ஆளாவது போல கனவில் கண்டால் தொழிலில் எந்த காரியத்திலும் இப்போது இறங்கக்கூடாது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

22. மற்றவர்கள் இவற்றுக்கு ஆளாவது போல கனவு கண்டால் உங்களுக்கு பழக்கம் இல்லாத தொழிலில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் பல சிரமங்கள் ஏற்படும்.

23. கோயிலில் நரபலி நடப்பது போல கனவில் கண்டால் ஒரு நிலையான பெரும் சொத்து உங்களுக்கு கிடைக்கும்.

24. நீங்கள் கேக்சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு மிகவும் பிரியமான ஒருவரை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

————————————————————————————————————–

இதையும் படிக்கலாமே: இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்

—————————————————————————————————————————-

25. ஏதாவது ஒரு வீடோ, பொருளோ தீப்பற்றி எரிவது போல கனவில் கண்டால் உங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் விரைவில் பருவமடைவாள்.

26.உங்கள் உடையில் தீப்பற்றிக் கொள்வது போல கனவில் கண்டால் உங்களுக்கு நீண்ட காலமாக தொல்லை தந்த தீராத நோய் இன்று விரைவில் தீர்ந்து விடப்போகிறது என்று அர்த்தம்.

27. நெல் அரிசி கோதுமை போன்ற ஏதாவது தானியக் குவியல்களை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் செல்வ வளம் ஏற்படும்.

28.நீங்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது போல கனவில் கண்டால் உங்களை பிடித்திருந்த பீடைகள் எல்லாம் அழிந்து ஒளிந்து விட்டது என்று அர்த்தம்.

29. உங்கள் தலையில் எண்ணெய் தடவிக் கொள்வது போல கனவில் கண்டால் உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களிடமிருந்து நீங்கள் சிறிது காலம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அர்த்தம். இல்லாவிட்டால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படலாம்.

30. பிறர் மரணம் அடைவது போல கனவில் கண்டால் உங்களுடைய பெருங்கடன் ஒன்று விரைவில் தீர போகிறது என்று அர்த்தம்.

50 கனவுகளின் பலன்கள்

31. நீங்கள் ஒரு கொந்தளிப்பான கடலை கனவில் கண்டால் வெளியே சொல்ல முடியாத ஒரு மாபெரும் மனப்போராட்டத்திற்கு ஆளாக கூடும்.

32. ஒரு அமைதியான கடலை கனவில் கண்டால் உங்கள் பெயரும் புகழும் உயரப்போகிறது என்று அர்த்தம்.

33. நீங்கள் ஒரு கோபுரத்தை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையும் கோபுரத்தை போல உயர்வடைய போகிறது என்று அர்த்தம்.

34. நீங்கள் ஒரு கோயிலுக்குள் நுழைவது போல கனவில் கண்டால் உங்களது தோல்வி காலம் முடிந்து வெற்றிக்காலம் இறைவனால் தொடங்க போகிறது என்று அர்த்தம்.

35. கோயிலுக்குள் நீங்கள் ஒரு தெய்வத்தை வழிபடுவது போல கனவில் கண்டால் உங்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி உங்கள் வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொண்டு வருவதை உணர்வீர்கள்.

36.கோயில் பிரசாதங்களை நீங்கள் பெற்றுக் கொள்வது போல கனவில் கண்டால் உங்களுடைய தீராத பிரச்சனை எதுவாயினும் நீங்களே வியப்படையும் வகையில் தாமாகவே தீர்ந்து போய்விடும்.

—————————————————————————————————————

இதையும் படிக்கலாமே: இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்

—————————————————————————————————————————–

37. ஒரு குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருப்பது போல கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.

38. ஒரு குழந்தை அழுது கொண்டு ஓடுகிறது போலே கனவில் கண்டால் பொருளாதாரத்தில் நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாகலாம். எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்

39. உடம்பெல்லாம் அழுக்கு படிந்தகுழந்தையை கனவில் கண்டால் எதிர்பாராத வெற்றியை அடைவீர்கள்.

40. உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை கனவில் கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கை நடத்தப் போவதை உணர்த்தும் விதமாக அதனுடைய அர்த்தம். திறமையானவர்களும் உங்கள் அக்கறையாக கவனிக்கக்கூடிய ஆட்களும் உங்களுக்கு கிடைப்பார்கள்.

41. ஒரு குழந்தையை தொட்டிலிட்டு தாலாட்டுவது போல திருமணம் ஆகாதவர்கள் கனவு கண்டால் அவர் மனதை கவர்ந்துள்ள பெண்ணே மனைவியாக அமைவாள்.

42. குழந்தை இல்லாத வெறும் தொட்டிலை கனவில் கண்டால் முக்கியமான காரியத்திற்கு நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் மனிதர் கடைசி நேரத்தில் உங்களை கைவிடுவார்.

43. நீங்கள் ஒரு குழந்தையை முத்தமிடுவது போல கனவில் கண்டால் உங்களுக்கு புதிய வருவாய் ஒன்று ஏற்பட போகிறது என்று அர்த்தம்.


44. அப்போதுதான் பிறந்த குழந்தையை கனவில் கண்டால் முக்கியமான காரியங்களை தள்ளி போடக்கூடாது உடனே செய்ய வேண்டும் இல்லை என்றால் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணற வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

45. நீங்கள் ஒரு மாதா கோவிலை கனவில் கண்டால் நெடுங்கால ஆசை நிறைவேறும் மேலும் பெரும் வருவாயும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.

46. கோவிலில் பூஜை செய்யும் ஒருவரை கனவில் கண்டால் ஒரு மங்களகரமான செய்தியை கேட்பீர்கள்.

47. ஒரு உயரமான இடத்தை நோக்கி ஏறி செல்வது போல கனவில் கண்டால் நீங்கள் ஒரு உயர்ந்த முன்னேற்றத்தை அடையப்போவது உறுதி.

————————————————————————————————————–

இதையும் படிக்கலாமே: இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்

—————————————————————————————————————————-

48. நீங்கள் கட்டுசாதம் சாப்பிடுவது போல கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.

49. நீங்கள் மிட்டாய் கடைகளை கனவில் கண்டால் இதுவரையில் நீங்கள் அறியாத புதிய துறையில் நண்பரின் துணை கொண்டு இறங்குவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

50. ஒரு தேன்கூட்டை கனவில் கண்டால் சீக்கிரமே காதலில் விழப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *