Natchathiram 27
நட்சத்திரத்தின்படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசய சக்தி என்ன தெரியுமா?
நமது ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் ஒரு குணமும் சக்தியும் உள்ளது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்தச் சக்திகள் அந்த நட்சத்திரத்திற்குரிய தேவர்கள் அல்லது தெய்வத்தின் சக்தியைப் பிரதிபலிப்பதாகும். இந்த நட்சத்திரக்காரர்களின் சக்தியைப் பற்றி கூறும் நூல் பைத்திய ரோயோ பரமாணம் என்பது ஆகும். உங்கள் நட்சத்திரத்திற்கு இருக்கும் சக்திகள் உங்களுக்குத் திறமைகளாக ஒளித்திருக்கும். அந்தச் சக்தி அல்லது திறமைகள் தேவையான நேரத்தில் உங்களுக்குத் தெரியாமல் வெளிப்படும். இந்தச் சக்தியை வெளிப்படுத்துவதற்கு முறையான இறை வழிபாடு அவசியமாகும். 27 நட்சத்திரங்களின் குணங்கள் மற்றும் ரகசியங்கள்.
இந்தப் பதிவில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இருக்கும் சக்தி என்னவென்று பார்க்கலாம்.
அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரம் இரட்டை குதிரை வீரர்களாக அஸ்வினி தேவர்களாக நிர்வாகிக்கப்படும் நட்சத்திரம் ஆகும். இவர்கள் எந்தக் காரியத்தையும் விரைவாக முடிக்கும் திறமை கொண்டவர்கள். மேலும் இவர்களின் அடிப்படை திறமை விரைவில் காயங்களைக் குணப்படுத்துவதாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் காயங்களுக்கு மருந்தாக இருப்பார்கள்.
பரணி
பரணி நட்சத்திரத்தை ஆள்வது மரணத்தின் கடவுளான எமன் ஆவார். அனைத்தையும் அப்புறப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு உள்ளது. எமதர்மனின் பணியே ஆன்மாவை உடலிலிருந்து பிரித்து மேல் உலகத்திற்கு அழைத்துச் செல்வதாகும். இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் எப்பொழுதும் மற்ற உலகத்துடன் தொடர்பு உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரம் நெருப்பின் கடவுளான அக்னி தேவனால் ஆளப்படுகின்றது. எரிக்கும் மற்றும் ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் வேலையை இவர் செய்கிறார். வெப்பமும் ஒளியும் இவர்களின் அடையாளம் ஆகும்.
ரோகினி
ரோகினி நட்சத்திரத்தை ஆள்பவர் பிரஜாபதி ஆவார். படைப்பின் ஆற்றல் ஆக இவர்கள் இருக்கிறார்கள். தாவரங்கள் மற்றும் நீரின் ஆதாரமாக இவர்தான் இருக்கிறார். இந்த நட்சத்திரம் கொண்டவர்கள் மற்றவர்கள்மீது அக்கறை கொண்டவர்களாகவும் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களாகவும் இருப்பார்கள்.
மிருகசீஷம்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தைச் சந்திரன் கடவுளும் அமிர்தத்தின் அதிபதியும் ஆன சேமான ஆள்கிறார். இவரின் ஆற்றல் பரிபூரண தன்மையை வழங்குவதாகும் தம் வாழ்க்கையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவது இவர்கள் தான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் இன்பம் நிறைந்திருக்கும்.
இதையும் படிக்கலாமே: திருஷ்டியை விரட்டும் கருடப்பார்வை
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானின் கோபமான இடியை பிரதிபலிக்கும். ருத்ரனால் ஆளப்படுகின்றது. இந்த நட்சத்திரம் இருப்பவர்கள் நெருப்பு போல இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும். இவர்களின் முயற்சியும் தேடலும் இவர்களை உயரத்திற்கு அழைத்து செல்லும்.
புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரம் தாய் தெய்வமான ஆதிவேலால் ஆளப்படுகின்றது இவர்களுக்குத் தேவையான பொருளும் புகழும் தானாக வந்துவிடும். அவர்கள் அதிக கற்பனை திறன் உடையவர்களாகவும் நண்பர்களிடையே அதிக செல்வாக்கு உடையவர்களாகவும் இருப்பார்கள்.
பூசம்
இவர்கள் இறை பக்தியில் சிறந்தவர்களாகவும் தியானம் செய்யத் தயங்காதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்குச் சிறந்த குருவாக இருப்பார்கள்.
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரம் நாக கடவுளால் ஆளப்படுவதாகும். இவர்கள் விஷத்தைச் செலுத்தும் தன்மை கொண்டவர்கள். இவர்களின் அணுகுமுறையும் பாம்பைப் போலவே இருக்கும். தவறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இவர்களுக்குள் இருக்கும். இவர்கள் தங்களின் எதிரிகள் தடையாக இருப்பவர்கள் என அனைவரையும் அழிக்க ஆற்றல் கொண்டவர்கள்.
மகம்
மகம் நட்சத்திரம் மூதாதையர்களால் ஆளப்படுகின்றது. இவர்கள் அதிக சோகத்திற்கு ஆளாகுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மூதாதைகளுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பூரம்
பூரம் நட்சத்திரத்தை ஆள்வது ஒன்பதங்களின் அதிபதியான ஆயிரமான் ஆவார் இவர்கள் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெண்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பவர்களாக இருப்பார்கள். சிவன் மற்றும் பார்வதியின் திருமணம் பூரா ஆண்டில் தான் நடந்தது.
ஹஸ்தம்
ஹஸ்த நட்சத்திரம் சவிதரால் ஆளப்படுகிறது. இவரின் சக்தி என்னவென்றால் தேடி செல்வத்தை நம் கைக்குக் கொண்டு வருவது. அதுபோலதான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இவர்கள் தேடிச் செல்லும் பொருள் இவர்களைத் தேடி வரும். குறை இல்லா வாழ்க்கை பெரும் வரம் பெற்றவர்கள் இவர்கள்.
உத்திரம்
உத்திரம் நட்சத்திரம் மகிழ்ச்சியின் கடவுளாக பாகவால் ஆளப்படுகிறது. இவர்களுக்குத் திருமணம் நடக்கும் பிறகு தான் வாழ்க்கை முன்னேற்ற மகிழ்ச்சி கிடைக்கும். இவர்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் இவர்கள் என்னென்ன பலன்களை அனுபவிப்பார்கள் இவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கு எந்தக் குறைச்சலும் இருக்காது.
சித்திரை
சித்திரை நட்சத்திர கைவினை யாதராகத் தவஸ் டீச்சர் ஆளுகிறார். தனக்காகத் தேவியை தனது திறமைமூலம் குவிக்கும் சக்தி கொண்டவர்கள் இவர்கள். தர்மத்தை கடைபிடிக்கும் இவர்கள் நேர்மையான வழியில் புகழை அடைவார்கள். இவர்களின் படைப்பாற்றல் இவர்களின் பெருமையைச் சேர்க்கும்.
சுவாதி
ஸ்வாதி நட்சத்திரம் காற்றின் கடவுளான வாயு பகவானால் ஆளப்படுகிறது. இவர்களின் வாழ்க்கை மணம் போகும் வழியில் பல்வேறு திசைகளில் பயணிக்கும். இவர்கள் வாழ்க்கை பல மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். இவர்கள் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு அதில் வெற்றி பெறும் ஆற்றல் கொண்டவர்கள்.
விசாகம்
விசாகம் நட்சத்திரத்தை ஆள்வது இந்திரனும் அக்னிதேவனும் ஆவார். இந்த இரண்டு சக்திகள் வாழ்ந்த கடவுள் இவர்களுக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் செய்யும் ஆற்றலை வழங்குகிறார்கள். குறித்த நேரத்தில் சொன்னதை செய்யும் பழக்கம் கொண்ட இவர்கள் வாழ்க்கையில் நினைத்த உயரத்தை நிச்சயம் அடைவார்கள்.
அனுஷம்,
அனுஷம் நட்சத்திரத்தைத் தெய்வீக நண்பரான மித்ரா ஆளுகிறார். இந்த நட்சத்திரத்திற்கு சொந்தக்காரர் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையிலும் மனநிலையிலும் எப்பொழுது ஒரு சமநிலை இருக்கும். இவர்களின் சக்தியினால் இவர்கள் எப்பொழுதும் அதிகாரம் மையமாகத் திகழ்வார்கள்.
கேட்டை
கேட்டை நட்சத்திர அதிபதியான இந்திரனால் ஆளப்படுகின்றது. எந்தச் சோதனையாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று எதிர்த்து போராடி வெற்றி பெறும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். தன்னை பாதுகாத்துக் கொள்வதை காட்டிலும் எதிரியைத் தாக்குவதிலும் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் அனைத்து தடைகளையும் தகர்க்கும் திறன் கொண்ட இவர்கள் தன்னுடைய நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மூலம்
மூல நட்சத்திர ஆல்வின் கடவுள் ஆன ரீதியினால் ஆளப்படுகின்றது அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். இவர்களால் அழிவைக் கூட அழிக்க முடியும் அழிவில் இருந்ததால் புதிய சக்திகள் இருக்கும் இவர்கள் அழிப்பது புதிய சக்திகளின் தொடக்கத்திற்கு வழிகாட்டும்.
பூராடம்
பூராடம் நட்சத்திரம் இவர்களின் சக்தி ஊக்கம் அளிப்பதாகும். இவர்களின் மிகப்பெரிய பலம் மனவலிமையாகும். கடலையும் கடக்கும் துணிவும் உறுதியும் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும்.
இதையும் படிக்கலாமே: எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவது ஏன்?
உத்தராடம்
உத்திராட நட்சத்திரம் விஸ்வராவதால் ஆளப்படுகிறது. சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவது இவர்களின் அடிப்படை குணமாகும். இவர்களால் அடைய முடியாத லட்சியம் என்று எதுவும் இல்லை. இவர்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் இவர்களைத் தேடி வரும். இவர்களின் வெற்றியை எவராலும் பறிக்க முடியாது.
திருவோணம்
திருவோண நட்சத்திரம் காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவால் ஆளப்படுகின்றது. வாழ்க்கையில் சரியான பாதையில் செல்வதன் மூலம் தானும் தன்னை சார்ந்தவர்களையும் முன்னேற்றும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள். இவர்களின் செயல்கள் இவர்களுக்கு நீடித்த புகழை பெற்றுத் தரும். இவர்கள் விரும்பாவிட்டாலும் இவர்களின் புகழைப் பாட ஒரு கூட்டம் எப்பொழுதுமே காத்திருக்கும்.
அவிட்டம்
பூமி கோளத்தைப் பாதுகாக்கும் அஸ்ட்ரோ அவர்களின் அவிட்ட நட்சத்திரத்தை ஆகிறார். இவர்களின் பணி சக்தியையும் புகழையும் தருவதாகும். இவர்கள் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்பொழுது மற்றவர்களின் வெற்றிக்குக் காரணமாக இருப்பதுடன் அனைவரின் கவனமும் இவர்கள்மீது இருக்கும் படி நடந்து கொள்வார்கள். அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள் இவர்கள்.
சதயம்
சதய நட்சத்திரம் வருண பகவானால் ஆளப்படுகின்றது. இவர்களின் ஆற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது. தன் வழியில் வரும் அனைத்து தடைகளையும் தவிர்த்து எதிர்த்து தனது லட்சியத்தை அடையும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள். பலவிதமான சில நேரங்களில் இவர்களுக்குப் பலமாக இருக்கும்.
பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தை அஜ ஏகாபதி ஆள்கிறார். இவர்களின் பார்வை எப்பொழுதும் இந்த உலக நன்மை சார்ந்ததாக இருக்கும். அதே சமயம் இவர்கள் மனதளவில் தூய்மையானவர்களாக இருப்பார்கள் இவர்களின் நல்ல எண்ணங்கள் இவர்களை வாழ்க்கையில் உயர்த்தும். நேர்மையும் வாய்மையும் இவர்களுக்குச் சிறந்த குணங்களாக இருக்கும்.
உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திர பகீர் முதல் வாயினால் ஆளப்படுகின்றது. இவர் கோபங்களை கட்டுப்படுத்தும் கடவுள் ஆவார். இவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சியும் செழிப்பும் சீராகக் கொண்டு இருக்கும். இவர்கள் தன்னை சார்ந்தவர்களுக்கு எப்பொழுதும் ஒரு அரணாக இருப்பார்கள்.
ரேவதி
ரேவதி நட்சத்திரம் பூசனால் ஆளப்படுகின்றது. இவர் சூரிய பகவானுக்கு தேவையான ஆற்றலை வழங்குபவர் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் வளர்ச்சிக்கு எப்பொழுதும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது. அதற்குக் காரணம் இவர்களின் குணம் தான்.