14 பிரச்சனைகளைத் தீர்க்கும் வேர்க்கடலை ஒரு சிறந்த உணவு.
நிலக்கடலை என்று சொன்னாலும் அதற்கு வெவ்வேறு பெயர்களும் இருக்கிறது. நிலக்கடலை, வேர்க்கடலை, மல்லாட்டு, மல்லாக்கொட்டை, மணிலா கொட்டை இன்னும் பல பெயர்கள் இருக்கிறது. நிலக்கடலையில் கார்போஹைட்ரே ட், நார்ச்சத்து, இரும்பு சத்து, துத்தநாகம், மாங்கனீசு, விட்டமின், பாஸ்பரஸ், பொட்டாசியம் இன்னும் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன.
இப்படி நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதில் முக்கியமான 14 சத்துக்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
கொழுப்பைக் குறைக்கும்.
நிலக்கடலைய சாப்பிடும்பொழுது கொழுப்பு அதிகமாகிவிடும் என்பது பலரும் நினைப்பது. ஆனால் நிலக்கடலையில் இருக்கும் கொழுப்பு நல்ல கொழுப்பு. இது நமக்கு நன்மை பயக்கும் கொழுப்பு. நிலக்கடலையில் உள்ள காப்பர் ஜிங் போன்ற சத்துக்கள் என் டி எல் என்ற கெட்ட கொழுப்பைக் குறைத்து HDL என்ற நல்ல கொழுப்பை உயர்த்தும். பாதாமை ஒப்பிடும்பொழுது நிலக்கடலையில் தான் நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கிறது.
தசைகளை வலிமையாக்கும்
நிலக்கடலையில் விட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது இது உடலை வலிமையாக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நல்ல ஒரு சக்தியைக் கொடுக்கும்.
மன அழுத்தம் போக்கும்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட நிலக்கடலை ஒரு சிறந்த உணவாகும். நிலக்கடலையில் TRYPTOPHAN சத்து இருப்பதினால் செரோட்டின் உறுப்பு தூண்டப்படுகிறது இதனால் படபடப்பு மன அழுத்தம் குறைகிறது.
இதையும் படிக்கலாமே ; மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க
உடல் எடை குறைப்பு
நிலக்கடலை சாப்பிடுவதனால் உடல் பருமனாகி விடும் என்ற பயம் வேண்டாம். நிலக்கடலை சாப்பிடுவதனால் உடல் எடை குறையும் உடல் எடை பருமனாகாமல் அப்படியே இருக்கவும் செய்யும் இதில் உள்ள மெட்டபாலிசம் உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது நிலக்கடலை பசியை கட்டுப்படுத்தும் இதனால் தேவையற்ற உணவுகளைச் சாப்பிடும் எண்ணத்தைக் குறைக்கும். இதில் நார்ச்சத்து இருப்பதனால் நீண்ட நேரம் உங்களுக்குப் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்
நிலக்கடலை சாப்பிடுவதனால் நினைவாற்றல் தூண்டப்படுகிறது. மூளையில் செயல்பாட்டை அதிகரிக்கும் இது மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவும் டானிக்காகச் செயல்படும். முதுமை பருவத்தில் ஏற்படும் அல்சைமா நோய்க்கு மருந்தாகவும் நிலக்கடலை செயல்படும். நிலக்கடலை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது எழுவது சதவீதம் அல்சைமர் நோய் வராமல் கட்டுப்படுத்தும். நிலக்கடலை மூளை சுறுசுறுப்பாகவும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தைத் தங்கு தடையின்றி சீராகச் செல்லவும் உதவுகிறது
இதயம் காக்கும்
நிலக்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு இதயம் சீராகச் செயல்பட உதவுகிறது. இதய நோய் வராமல் தடுக்கவும் மாரடைப்பு வராமல் தடுப்பதற்கும் நிலக்கடலை பெரிதும் உதவுகிறது.
புரோட்டின் நிறைந்தது
நிலக்கடலையில் விட்டமின், புரோட்டின், மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து இன்னும் அதிகமான சத்துக்கள் இருக்கிறது. அசைவ உணவை விரும்பாதவர்கள் நிலக்கடலையில் உள்ள புரோட்டினை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்குக் கொடுப்பது உடல் வலிமை தரும் சீரான வளர்ச்சி பெரும்.
இளமையை பராமரித்தல்
சிலர் முதுமையிலும் இளமையாக இருப்பதற்கு நிலக்கடலை சாப்பிடுவது முக்கிய காரணம். இதில் இருக்கும் சத்துக்கள் உடலை இளமையாகவும் தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கிறது இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்தை நாம் பெறலாம்.
இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.
இனப்பெருக்கம்
நிலக்கடலையை சாப்பிட்டு வரும்பொழுது பெண்களுக்குக் கருவுறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கர்ப்பப்பை சீராக இயங்குவதோடு கர்ப்பப்பை கட்டி நீர்க்கட்டி வராமல் தடுக்கிறது. மார்பக கட்டிகள் வராமல் தடுக்கிறது. நிலக்கடலையில் இருக்கும் சத்துக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் மலட்டு தன்மை வராமல் தடுக்கிறது. நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகமாக இருக்கிறது கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் போலிக் ஆசிட் அதிகமாகத் தேவைப்படும் இதனால் வளரும் குழந்தைகளின் மூளை சீராக வளர்ச்சியடையும்.
பித்தப்பை கல்
சிலருக்கு பித்தப்பையில் கற்கள் ஏற்படலாம் நிலக்கடலையை சாப்பிடுவதனால் பித்தப்பையில் கல் வராமல் தடுத்து சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
எலும்புக்கு வலிமை
எலும்புகளில் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கும் எலும்பு வலிமையாக வைத்திருக்க உதவும் நிலக்கடலை தினமும் சாப்பிடுவதன் மூலம் எலும்பு உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நீரிலிவு நோய் வராமல் தடுக்கிறது
உடலில் ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க நிலக்கடலை செயல்படும். இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துச் செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
முடி உதிர்வது தடுக்க
நிலக்கடலையில் இருக்கும் விட்டமின் டி முடிவு உதிர்வதை தடுத்து உதிர்ந்த இடத்தில் முடி வளர உதவுகிறது.
இதையும் படிக்கலாமே ; ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும்
வயிற்று புற்றுநோய்
நிலக்கடலை இருக்கும் சில வேதி பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழித்து வயிற்றில் புற்று நோய் உருவாவதை தடுக்கிறது.அதனால் நாம் நலமுடன் வாழத் தினமும் நிலக்கடலை உட்கொள்வோம்.