100 கனவுகளின் பலன்கள். நன்மைகள் மற்றும் தீமைகள்.

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் பலன் உண்டு சிலர் நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு என்றும் மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடு கனவு என்றும் கூறுவர். எல்லா கனவுகளும் பலிப்பதில்லை மாறாக சில கனவுகள் வந்து மறையும் சில கனவுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். அதிலும் சிலருக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அதன் தொடர்பான விஷயங்களை கனவில் முன்னதாகவே காட்டிவிடும். கனவுகளின் பலன்கள். நன்மைகள் மற்றும் தீமைகள்

அலுவலகத்தில் பணியாற்றுவது போல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்று பொருள்

 அழகு இல்லாத பெண்ணை மனம் ஆகாத ஆடவன் கனவில் கண்டால் மிகவும் அழகான பெண் மனைவியாவாள் என்று பொருள் 

ஆசிரியர் கனவில் வந்தால் பொருள் வளம் அதிகரிக்கும் 

ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவது போல் கனவு வந்தால் செயல்களில் சிறு தடைகள் ஏற்பட்டு இறைவன் துணையால் நீங்கி வெற்றி பெறும் 

குறைந்த மாதாந்திர கட்டணத்தில் hosting வாங்கிட கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்
https://goviralhost.com/clientarea/aff.php?aff=2653

ஆலயமணி ஓசை ஒலிக்கும் இசை கேட்டால் சந்ததியற்றவர்களுக்கு குழந்தை செல்வம் உண்டாகும் 

இறந்த தாய் தந்தையர் கனவில் தோன்றினால் வர இருக்கும் ஆபத்தினை எச்சரிக்க வந்துள்ளனர் என்று பொருள். இது ஒரு விதத்தில் நன்மையே. 

இறந்தவருடன் உரையாடுவது போல் கனவு வந்தால் உயர், அதிகார பதவி கிடைக்கும் 

இறந்தவர்களை கனவில் கண்டால் சுப செய்தி வரும் என்பதை குறிக்கிறது 

இறந்தவர்களின் சடலங்களை கனவில் கண்டால் சுப செய்தி நிகழ்வு 

இனிப்பான பலகாரங்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் 

உழவுத் தொழில் செய்வதாக கனவில் கண்டால் அவரது வாழ்க்கைத் தரம் உயரும் 

எழுதிக் கொண்டிருப்பது போல் ஒருவர் கனவு கண்டால் நற்செய்திகள் விரைவில் அவரை நாடிவரும் 

கனவில் பாம்பு வந்தால் இது நிச்சயமாக நடக்கும்

ஏழ்மை நிலையை அடைந்து விட்டது போல் கனவு கண்டால் எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும் 

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும் 

ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதே அறிகுறியாகும் 

கடலை கனவில் கண்டால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும் 

கர்ப்பிணிப் பெண்ணை கனவில் கண்டால் பொருள் சேரும் 

ஆலமரத்தை கனவில் கண்டால் தொழில் அபிவிருத்தி அடையும் 

கனவில் எலும்பை கண்டால் விரைவில் அவர் செல்வந்தராக கூடும் பரம்பரை சொத்து கிடைக்கும் 

கனவில் உடை எறிவது போல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பெரியவர்கள் ஆவார்கள் 

கனவுகளின் பலன்கள். நன்மைகள் மற்றும் தீமைகள்.

கனவில் காதணிகளை கண்டால் பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும் 

கனவில் கிணற்றை காண்பது நல்லது திருமணம் கைகூடும். 

கனவில் தொழிற்சாலையை காண்போருக்கு பரம்பரை சொத்து கிடைக்கும் 

கிணற்றிலிருந்து நீர் இறைப்பது போல் கனவு கண்டால் நல்ல விஷயம் கை கூடும் கிணற்றை காண்பது நல்லதாகும் மனம் ஆகாதவர்களுக்கு மனம் ஆகும் 

குதிரை கழுதையை கனவில் கண்டால் வழக்குகளின் வெற்றி கிடைக்கும் 

கோவிலினை கனவில் காண புகழ் உண்டாகும் 

சண்டையில் பிறர் அடிப்பது போல் கனவு கண்டால் அவருக்கு விரோதிகள் விலகி விடுவார்கள் 

உப்பை கனவில் கண்டால் தன லாபம் உண்டாகும் 

எந்த கனவு நல்ல கனவு? எந்த கனவு கெட்ட கனவு?

சிறு குழந்தைகள் கனவில் வந்தால் பிணி நீங்கும் 

சுத்தமான நீர் ஊற்றை கனவில் கண்டால் அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது 

தவ யோகிகளை கனவில் கண்டால் பொதுநலத் தொண்டில் ஈடுபடுவார்கள்

 தற்கொலை செய்து கொள்வது போல் கனவு வந்தால் ஆபத்து நீங்கிவிடும் 

தான் பிறரை அடிப்பதாக கனவு கண்டால் புகழ் உண்டாகும் 

புதிய நண்பர்கள் உண்டாவார்கள் 

திருமண கோலத்தில் இருப்பது போல கனவு கண்டால் சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும் 

தேவலோக பெண்களை ஆண்கள் கனவில் கண்டால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் 

நிலவை கனவில் கண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்  

நீர் ஊற்றை கனவில் கண்டால் அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது 

உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் தீரும் 

நெசவு தொடர்பான கனவுகள் நன்மைகள் அளிக்கும் 

பசுவை காண்பது செல்வ வளத்தை உண்டாக்கும் 

பழங்கள் நிறைந்த மரத்தை கண்டால் பொருள் சேர்க்கையும் புத்திர பாக்கியமும் உண்டாகும் 

பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவில் வந்தால் செல்வம் பெருகும் திருமண தடை நீங்கும் 

புது துணிகள் வாங்குவது போல் கனவு வந்தால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 

பெரும் பதவியில் உள்ளவர்களை கனவில் கண்டால் அந்தஸ்தும் மதிப்பும் அதிகரிக்கும் 

 மலத்தை மிதிப்பது போல் கனவு வந்தால் சுப செலவுகள் உண்டாகும் 

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்

மயிலினை கனவில் கண்டால் கணவன் மனைவிக்கு இடையே  பரஸ்பரம் அதிகரிக்கும்.

மலர்கள் பூத்துக் குலுங்குவது போல் கனவு கண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் 

மனைவி இறந்துவிட்டார் போல் கனவு கண்டால் மனைவிக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதை குறிப்பிடும் 

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் 

மோதிரம் கனவில் வந்தால் சுப பலன்கள் உண்டாகும் 

யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும் மேலும் நல்ல காலம் பிறந்து இருப்பதை உணர்த்துவதாகும் 

யானை கனவில் வந்தால் அரசாங்க உதவி நெடுநாள் வழக்கில் தீர்ப்பு கிடைக்கும்

யானை மாலையிடுவது போல கனவு கண்டால் பதவி உயர்வு திருமணம் கைகூடும் 

வானவில்லை கனவில் கண்டால் பணம் செல்வாக்கு அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைக்கும் 

விருந்தில் உணவு உன்பது போல் கனவு கண்டால் திருமண தடை நீங்கும் வேலை உயர்வு கிடைக்கும் 

நெருப்பை கனவில் காண்பது பாக்கியம் உண்டாகும் என்பதை குறிக்கிறது 

ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதை குறிக்கிறது 

பூக்கள் நிறைந்த களத்தை கனவில் கண்டால் வருமானம் பெறுவோம் பொருளாதார வளம் ஏற்படும்

Click on the link below to purchase hosting at a low monthly fee
https://goviralhost.com/clientarea/aff.php?aff=2653

இடியுடன் மழை பொழிவதை கனவில் கண்டால் உறவினர் விரோதி ஆவர் 

இரும்பை தொட்டு எடுப்பது போல் கனவு காண்பது மிகவும் கெடுதலான சம்பவத்தை குறிக்கும் 

ஊனமாவது போல் கனவு வந்தால் துக்க செய்தி வரும் 

எண்ணை தேய்த்து குளிப்பதாக கனவு வந்தால் அவர் வெகுவிரைவில் நோயால் பாதிக்கப்படுவார் 

எதிரிகளை கனவில் கண்டால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 

எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெறுவார்கள் 

எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது 

எறும்புகளை கனவில் கண்டால் மனக்கஷ்டம் ஏற்படும் 

ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால் தீமை உண்டாகும் 

ஓசையை கேட்பது போல் வரும் கனவு வீண் சச்சரவுகள் ஏற்படுவதை குறிக்கும் 

கற்பூரம் எரிவது போல் கனவு கண்டால் மற்றொருவருக்காக சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம் 

இறந்தவர்கள் கனவில் வந்தால்

கனவில் ஆரஞ்சு பழத்தை காண்பவருக்கு எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படும் 

கனவில் இஞ்சியை கண்டால் நோயால் பாதிப்பு ஏற்படக்கூடும் 

கனவில் சீப்பை கண்டால் சிக்கல்கள் உண்டாகும் 

காகம் தலையில் அடிப்பதாக கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதை குறிக்கிறது 

காகம் கனவில் வந்தால் தொழில் அல்லது உத்தியோக பாதிப்பு உண்டாகும் 

கீழே விழுவது போல் கனவு கண்டால் பொருள் நஷ்டம் அடைய நேரிடும் 

குழந்தைகள் இறப்பது போல் கனவு காண்பது அவருக்கு வர இருக்கும் பேராபத்தை குறிக்கும் 

சாவிக்கொத்து காணாமல் போனால் பல வித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும் 

செருப்பினை கனவில் கண்டால் கெடுதிகள் ஏற்படும் 

தனித்து உண்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் உண்டாகும் தொழிலில் நஷ்டம் உண்டாகும் 

தேரோட்டம் திருவிழாக்களை கனவில் கண்டால் உடனடியாக உறவினர் ஒருவரின் மரண செய்தி வரலாம் 

கனவுகளின்-பலன்கள்.-நன்மைகள்-மற்றும்-தீமைகள்

தேனீக்கள் கொட்டுவது போல் கனவு வந்தால் வீண் செலவுகள் உண்டாகும் 

நண்டை கனவில் கண்டால் முயற்சிக்கும் செயல்களில் இடையூறுகள் உண்டாகும் 

நாய் கடிப்பது போல் கனவு வந்தால் தீமைகள் உண்டாகும் என்பதை குறிக்கிறது மேலும் நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளால் மனக்கசப்பு உண்டாகும் 

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால் அவமானம் தேடி வரும் 

நோய் உண்டாவது போல கனவு வந்தால் நண்பர்கள் ஏமாற்றுவார்கள் 

பசு கன்று போடுவதை கனவில் கண்டால் துன்பங்கள் வந்தடையும் 

பசு விரட்டுவது போல் கனவு வந்தால் நோய்கள் உண்டாகும் 

புயல் சூறாவளி கனவில் வந்தால் நோய் உண்டாகும் 

50 கனவுகளின் பலன்கள்

பூனையை கனவில் கண்டால் திடீர் நஷ்டம் ஏற்படும் 

மயானத்தை கனவில் கண்டால் காரிய தடங்கல் ஏற்படும் என்பதை குறிக்கிறது 

மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதை குறிக்கிறது 

முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும் 

முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் செல்வாக்கு சரியும் 

மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதை குறிக்கிறது 

வர்ணம் பூசுவதாக கனவு காண்பது கெடுதல் 

வாடிய மலர்களை கனவில் கண்டால் வியாதி உண்டாகும் 

வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு வந்தால் அவரது வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படக்கூடும் 

விந்தையான மனிதர் அல்லது நூதன பொருட்கள் கனவில் வந்தால் வரும் தீமையை சுட்டிக்காட்டும் புதிய வரை நம்ப வேண்டாம் 

இது வெறும் கனவோட பலன்கள் மட்டும் தான். இதே மாதிரி தான் நடக்கும்  கிடையாது நமக்கும் மேல கடவுள் இருக்கார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *